சேலம்: ""உணவில் பல தவறான அணுகுமுறை நம்மிடையே உள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்த கொதிப்பு அதிகம் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியான உணவு முறை அவசியம்,'' என, எம்.ஜி., சர்க்கரை நோய் மருத்துவமனை டாக்டர் யுவராஜ் கூறினார். சேலத்தில் எம்.ஜி., சர்க்கரை நோய் மருத்துவமனையும், இந்திய சர்க்கரை நோய் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து சர்க்கரை நோயை குணப்படுத்துவது தொடர்பான மருத்துவ கருத்தரங்கு நடத்தின.
அதில், எம்.ஜி., சர்க்கரை நோய் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் யுவராஜ் கூறியதாவது: சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. சர்க்கரை நோயை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தால், 100 வயது வரை சந்தோஷமாக வாழலாம். சர்க்கரை நோய் பாதிப்பு 5 அல்லது 8 ஆண்டுகளுக்கு பின்னரே நோயாளிகளுக்கு அதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இதனால், பல சர்க்கரை நோயாளிகள் மாரடைப்புடன் கண்டுபிடிக்கப் படுகின்றனர். பலர் பக்கவாதம், காலில் புண் ஏற்பட்டு காலை இழக்கும்போதும், கண்களில் சர்க்கரை இறங்கி கண் குருடான பின்தான் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோயை கண்டுபிடித்து, எச்.பி.ஏ.1சி 7 சதவீதம் அளவுக்குள் வைத்திருப்பவர்களுக்கு பாதிப்புகள் அவ்வளவு எளிதாக ஏற்படுவதில்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு எச்.பி.ஏ.1சி அதிகமாக இருந்து ஒரு சதவீதம் குறைந்தால் கூட மாரடைப்பு வரும் வாய்ப்பு 14 சதவீதம், மரணம் ஏற்படுவது 21 சதவீதம், ரத்தக்குழாய் அடைப்பு 43 சதவீதம், கண், கிட்னி பாதிப்பு ஏற்படுவது 37 சதவீதம் குறைகிறது.தவிர, சரியான உணவு முறை, முறையான உடற்பயிற்சி, மருந்துகள், ரத்தப் பரிசோதனைகள் மூலம் தான் எச்.பி.ஏ.1சி-யை சரியாக வைத்திருக்க முடியும்.உணவில் பல தவறான அணுகுமுறை நம்மிடையே உள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்த கொதிப்பு அதிகம் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியான உணவு முறை அவசியம். அரிசி, கோதுமை அனைத்திலும் சர்க்கரை ஒரே அளவு தான் உள்ளது. தினமும் 40 கிராம் அளவு நார்ச்சத்து உள்ள உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரே வகையான உணவுமுறை உகந்தது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.கருத்தரங்கில் சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ஆனந்மாசஸ், அரசு மருத்துவ கல்லூரி சர்க்கரை நோய் இயக்குனர் ராஜேந்திரன், கோவை அரசு மருத்துவ கல்லூரி சர்க்கரை நோய் துறை பேராசிரியர் தர்மராஜ், இருதயநல மருத்துவர் ராஜ்பால் உட்பட சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.