district news | தஞ்சையில் 23வது கருட சேவை பெருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சையில் 23வது கருட சேவை பெருவிழா

Added : ஜூன் 10, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கருடசேவை பெருவிழா 77 ஆண்டாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 78வது ஆண்டு கருட சேவை பெருவிழா கோலாகலமாக நடந்தது.
இந்த விழா தஞ்சாவூரில் உள்ள பள்ளியக்கரஹாரம் பகுதியில் வாழ்ந்த துவாதாச கருடாழ்வார் தாசர் என்பரால் ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் அனுமதியோடு கருட சேவை விழாவை ஸ்ரீ ராமானுஜ தர்சன சபையினர் நடத்தி வருகின்றனர்.


தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவில்களுள் தஞ்சாவூர் மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் மூன்றாவதாக விளங்குவதுமான மேலசிங்க பெருமாள், நீலமேகப்பெருமாள், மணிகுன்ற பெருமாள் கோவில்களில் துவாதச கருட சேவை நேற்று காலை ஆறு மணிக்கு நடந்தது.
வீரநரசிம்மர் கோவில் திருமங்கை ஆழ்வார் அன்னவாகனத்தில் எம்பெருமானை தொழுத வண்ணம் முதலில் வர நீலமேக பெருமாள் ஆண்டாளுடன் மற்றும் நரசிம்ம பெருமாள், மணிகுன்றபெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், வெண்ணாற்றாங்கரை கல்யாண வெங்கடேச பெருமாள். கரந்தை யாதவ கண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரச்சிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வரதராஜ பெருமாள், அய்யங்கடைதெரு பஜார்ராமசாமி பெருமாள், எல்லையம்மன் கோவில் தெரு ஜனாரத்தன பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள். கோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கள் ரெங்கநாத பெருமாள், மேலவீதி விஜயராமர் பெருமாள், நவநீதி கிருஷ்ணன், பூலோக கிருஷ்ணன், மானம்புச்சாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்கரஹாரம்
கோதண்டராமர் சுவாமி.
சுங்க திடல் லட்சுமிநாராயணன் பெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள் ஆகிய 23 பெருமாள்களும் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்து அடைந்த பின் பெருமாள்கள் வரிசையாக கருட வாகனத்தில் நான்கு ராஜ வீதிகள் வழியாக மீண்டும் அவரவர் கோவில்களை வந்தடைந்தனர்.
இன்று நவநீத சேவை நடக்கிறது. 11ம் தேதி விடையாற்றி விழா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், அரவிந்தன், குணசேகரன், மற்றும் ராமானுஜ தர்சன சபையினர் செய்திருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X