district news | தோணி மலையை பன்றிமலை ஊராட்சியில் இணைக்க பரிந்துரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தோணி மலையை பன்றிமலை ஊராட்சியில் இணைக்க பரிந்துரை

Added : ஜூன் 17, 2012

திண்டுக்கல்: "கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட தோணிமலையை பன்றிமலை ஊராட்சியில் இணைக்க பரிந்துரை செய்யப்படும்,' என கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட தோணிமலையில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., பெருமாள் முன்னிலை வகித்தார். பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் குறித்த கண்காட்சி இடம்பெற்றிருந்தது. கலெக்டர் பேசியதாவது: தோணிமலை கிராமமக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற கன்னிவாடிக்கு செல்லவேண்டியதுள்ளது. கிராமமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, அடிப்படை பணிகள் கன்னிவாடி பேரூராட்சி மூலம் செயல்படுத்துவது சிரமமாக உள்ளது, என இங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, கன்னிவாடி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற செய்து, தோணிமலையை பிரித்து பன்றிமலை ஊராட்சியுடன் இணைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும், என்றார். கால்நடைபராமரிப்பு துணை இணைஇயக்குனர் சுப்பையா, மகளிர் திட்ட அலுவலர் பிரேமா, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பூங்கொடி, மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், பேரூராட்சித்தலைவர் லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X