"DMK leaders' arrests being used as diversionary tactics": Karunanidhi | சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகிறது தி.மு.க.,: தி.மு.க.,வினரை குண்டர் சட்டத்தில் அடைக்க கூடாதாம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (74)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: தி.மு.க.,வினரை குண்டர் சட்டத்தில் அடைக்கக் கூடாது என வலியுறுத்தி, வரும் 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த, தி.மு.க., செயற்குழுவில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விலைவாசி உயர்வு மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க முன்வராமல், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளதால், விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அரசுக்கு எச்சரிக்கை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று கூடியது. அக்கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் முன்னணி நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் பேசும் போது, "தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு சுமத்தி, சிறையில் அடைத்து, பழி வாங்கப் படுகின்றனர். கைது படலத்தை அ.தி.மு.க., அரசு நிறுத்திக்கொள்ளும் வகையில், எழுச்சி மிக்க போராட்டத்தை நடத்த வேண்டும். அந்தப் போராட்டம் சிறை நிரப்பும் போராட்டம் என்றாலும், தொண்டர்கள் மனமுவந்து பங்கேற்க வேண்டும்' என பேசினர். தீர்மானம்: முன்னாள் அமைச்சர்கள் சிலர் பேசும் போது, "தங்களது மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை கலந்து கொள்ள வைப்போம்' என உறுதி அளித்தனர். மதியம் 1.30 மணியளவில் மாவட்டச் செயலர்கள் மட்டுமே தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். மீண்டும் மாலை 3.30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், இரவு வரை நீடித்தது. அக்கூட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் பேசி முடித்த பின், சிறை நிரப்பும் பேராõட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: தி.மு.க.,வினர் மீதும், கருணாநிதி மீதும் மாறாப் பகை, தீராக் காழ்ப்புணர்ச்சி கொண்டு, தி.மு.க.,வின் முன்னணியினர் மீதும் பூர்வாங்க அடிப்படை இல்லாத பொய்ப் புகார்களைப் புனைந்து, கைது, சிறை, அலைக்கழிப்பு, குண்டர் சட்டம், வீடுகளில் சோதனை, குடும்பப் பெண்களிடம் அத்துமீறல் என்ற கொடூரமான அடக்குமுறைகள்,

போலீசார் துணையுடன் ஏவி விடப்படுகின்றன.
கடும் கண்டனம்: தி.மு.க.,வை அழித்து விடலாம் என்ற நப்பாசையில், ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் புறம்பான நிகழ்வுகள் அரங்கேற்றப்படும் அட்டூழியத்திற்கு தி.மு.க., கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி டெல்டா பகுதிகளில் கனவாகிப் போன குறுவை சாகுபடி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களின் ஆரோக்கியமற்ற அணுகுமுறைகளால் நதி நீர்ப் பிரச்னைகள், அரிசி விலை உயர்வு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற நிர்வாகப் பிரச்னைகள், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. திசை திருப்பும் நடவடிக்கை: இந்த நெருக்கடியிலிருந்து திசை திருப்பும் தந்திரமாகவே, கட்சி நிர்வாகிகள் கைது, குண்டர் சட்டம் போன்றவற்றை அ.தி.மு.க., அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இம் என்றால் சிறைவாசம் என்ற ஜார் மன்னன் ஆட்சியை நினைவுப்படுத்துவது போல் கைது செய்வது, சிறையில் வைப்பது, குண்டர் சட்டத்தை ஏவுவது போன்ற இந்தப் பழி வாங்கும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் 4ம் தேதி, சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மக்கள் வாழ்வாதாரப் பிரச்னைகளான விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கி நிற்கின்றன.

Advertisement

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்லும் நிலை தொடருகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த முன்வராமல், தனது சொந்தக் கட்சியினரை குண்டர் சட்டத்தில் அடைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளதால், அரசியல் நோக்கர்கள் மத்தியில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மேலும், செயற்குழுவில் பேசிய ஸ்டாலின், சிறை செல்லும் கட்சியினருக்குத் தான், பதவி வழங்கப்படும் என பேசியிருப்பதால் பரபரப்பு எழுந்து உள்ளது. இந்த சூழ்நிலையில், சிறை நிரப்பும் போராட்டம் வெற்றி பெறுமா? இதற்கு, தி.மு.க., தொண்டர்கள் மத்தியிலே வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (74)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Raja - London,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-201200:03:18 IST Report Abuse
Ashok Raja அட கொக்க மக்கா மக்களை ஏமாத்த போட்டுருக்கிற முக மூடிய இப்படி டர்ருன்னு இவனுங்களே கிழிச்சு எறிஞ்சுடானுங்கலே. பண்டாரம் பரதேசியான கதை ஆகிடுச்சே.
Rate this:
Share this comment
Cancel
jas - Nellai,இந்தியா
23-ஜூன்-201211:04:03 IST Report Abuse
jas அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, இதுவரை பாராட்ட படவேண்டிய அளவுக்கு ஒரு சாதனை வேண்டாம் ஒரு திட்டம் நிறைவேற்ற பட்டு இருக்கிறதா? திமுக வினரை ஜெயிலில் அடைத்ததை தவிர்த்து. இன்று திமுக குடும்ப ஆதிக்கம் மற்றும் உழல் ஆட்சியால் மக்களின் மதிப்பை இழந்திருக்கலாம் ஆனால் ஒரு பிரிவினரின் ஆதிக்கம் மற்றும் தீண்டாமை இவற்றில் இருந்து மக்களை மீட்டு சுயமரியாதை வாழ்க்கையை மக்களுக்கு கொடுத்தது திமுக மட்டுமே
Rate this:
Share this comment
Cancel
MUTHUKUMARAN - தலைஞாயிறு , நாகை ,இந்தியா
23-ஜூன்-201210:47:36 IST Report Abuse
MUTHUKUMARAN மடியில் கனம் வழியில் பயம், ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் நம்ம கடிக்க வந்து விடுவாங்களோ, காப்பாத்துங்க காப்பாத்துங்க னு கத்த விட்டுருவங்களோ என்ற பயம், அதுக்கு இளிச்சவாய் தொண்டர் கள் ஊறுகாய், நடத்துங்க நடத்துங்க... ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கணும் (வக்கனையாய் எதுக்கெடுத்தாலும் இலக்கிய வார்த்தையுடன் பேசுபவர்) நெருப்பு இல்லாமல் புகையாது.... என்ற வார்த்தை ஞாபகம் இருக்கட்டும்...உன்மேல தப்பு இல்லை என்றால் ஏன் பயம்.... கோர்ட் போங்க உண்மையை.. சொல்லி வெளிய வாங்க...இந்த மாதிரி டைட்டில் இல் போராட்டம் நடத்தும்போதே தெரிஞ்சு போச்சு எங்க அப்பன் குதிர்க்குள் இல்லை என்று சொல்லும் வார்த்தை,,, குண்டர் களை குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் தியாகி மாதிரி கைது செய்யனுமா... போங்கயா போய் பிரணாப் வர போறார் ல அவர குஷி படுத்த எதாவது சிறப்பு மானாட மயிலாட ஏற்பாடு பண்ணுங்க, அப்படியே நீங்களும் மானாட மயிலாட பார்த்திட்டு.... தூங்குங்க ஒரு 4 வருஷம் கழிச்சி வாங்க (திருந்தி) அப்புறம் யோசிப்ப்போம் .... இப்படிக்கு தமிழ்நாடு வாழ் தமிழன்(திராவிடன் ன்னு சொன்னா உங்கள பாக்குற மாதிரி என்னையும் கேவலமா பார்க்கிறார்கள்) திராவிடன் என்கிற பேரையே கெடுத்து குட்டி சுவர் ஆக்கிட்டீங்களே ... எல்லாம் தலைவிதி...
Rate this:
Share this comment
Cancel
arkswamy - chennai,இந்தியா
23-ஜூன்-201210:19:38 IST Report Abuse
arkswamy மாவட்டம் தோறும் மக்கள் அறிவர் யார் எவ்வளவு நிலப்பறி செய்தார்கள் என்பது. ஆகவே மக்கள் ஆதரவு கிடைக்காது. திமுக தலைமை இதை புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201210:17:46 IST Report Abuse
Matt P தி மு க வின் நாட்கள் எண்ணப்பட்டுகொண்டிருகின்றன .மக்களால்...தி மு கவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருகின்றன....அதன் தலைவர்களால் ...தி மு க மறையப்பட்டு ...ஒரு புதிய கட்சி தோன்றி அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டால் ...அடுத்த கழுகு பார்வை ...அதிமுக மீதே இருக்கும்.....அழகிரி,குஷ்பு மிஸ்ஸிங் பொதுகுழுவில் .......அவர்கள் தனியாக பொதுக்குழு கூட்டி இருப்பார்களோ .......
Rate this:
Share this comment
Cancel
Amjath - Dammam,சவுதி அரேபியா
23-ஜூன்-201210:16:35 IST Report Abuse
Amjath தினமலருக்கு அப்படி என்ன கருணாநிதியின் மீதும் திமுக வின் மீதும் கோபம்..??? கருணாநிதி தங்களுடைய இனத்தை சேர்ந்தவரில்லை .. திமுக தங்களுடய இனத்தின் மேலாண்மையினை தமிழகத்தைவிட்டு துரத்திய இயக்கம்.. அதுதான் தினமலருக்கு உள்ள ஒரு குறை.. மக்கள் பிரச்சினையில் ஜெயலலிதாவின் அனுகுமுறை முந்தய ஆட்சியினை விட மிக மோஷம். அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்... அத்தனை விஷயங்களிலும் தற்போதைய அரசு முந்தைய அரசினை விட மோஷம்.. மேலும் வாசகர்கள் இங்கே கொடுத்துள்ள கருத்துகள் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் குறிக்காது..,சில சங்க்பரிவாரின் ஆதரவாளர்கள் மேலும் சில ஜெயலிதாவின் சினிமா ரசிகர்கள் மேலும் சில மேல்ஜாதி இனத்தை சேர்ந்தவர்களின் கருத்துகள் தமிழகத்தின் மொத்த கருத்து அல்ல.., ஆனால் அதுவும் தமிழகத்தின் சிலரின் கருத்துதான்.. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்.. ஜெயலலிதாவே தோல்வி கண்டவர்தான் .. மீதும் முதல்வர் ஆகவில்லையா???
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201209:58:32 IST Report Abuse
Kankatharan  நிலக்கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கூடாது மயிலிறகால் அடித்து தண்டனை கொடுத்து விரட்ட சட்டமூலம் தயாரிக்க சொல்லுறாரா . சிறைநிரப்பும் போராட்டத்துக்கு முதலில் கருணாவும் ஸ்டாலினும் கவிதாயினியும் தலைமை தாங்கி உள்ளே போகட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூன்-201209:54:00 IST Report Abuse
Yaro Oruvan பெருசு காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. அந்தம்மாதான் வரிசையா புடிச்சி உள்ளார குந்த வைக்குது. இந்த லட்சணத்துல இது எதுக்கு???
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
23-ஜூன்-201209:36:29 IST Report Abuse
JAY JAY சீரியசான விவாதங்களுக்கு மத்தியில், ஒரு ? கருத்துள்ள கற்பனை தத்துவ காமடி பாடல்.....சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....[ சாதனை மேல் சாதனை போதுமடா சாமி ] ... வழக்குகள் தான் வாழ்கை என்றால் தாங்காது கட்சி.....சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..... ... பதவிகள் இல்லையம்மா அதிகாரம் பண்ண - பணத்தினை தொட முடியலம்மா செலவுகள் பண்ண...[ 2 ] .....2G தனை தாங்கும் உள்ளம் குண்டாஸ் தாங்குமா - இடி போல வழக்கு பாஞ்சா கழகம் தாங்குமா..... சோதனை மேல்........ வீட்டுக்குள்ள பாத்தீங்கன்னா நாலஞ்சு ஹீரோ - அவங்க எல்லாரையும் கூட்டி பெருக்கினா வருவது ஜீரோ... [ 2 ] ....கனி யென்பேன்..தளபதி யென்பேன்..அழகு யென்பேன் - களி திங்க சொன்னால் மட்டும் என்னவென்பேன் ?......... சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... ....... [ இடையில் கொசுறு காட்சியில் , சூரமணி - " தல , காஞ்சி போன எங்கள போல கட்சிகள் எல்லாம் " வத்தாத " ஜீவ நதி போன்ற உங்க கட்சிய பாத்து " ஆறுதல் " பெறுவோம்... ஆனா அந்த வத்தாத உங்க கட்சியே " காஞ்சி " போனா, அதுக்கு யாரால தல " கஞ்சி " ஊத்த முடியும்....யாரால தல ................ { விம்மல் } ..... ] ... தானாட வில்லையம்மா சதையாடுது - அது திகார் என்றும் புழல் என்றும் ஊசலாடுது.....[ 2 ] ...மத்தியில வைக்கிறாங்க ரகசிய ஆப்பு - இங்கே மாநிலத்துல வைக்கிறாங்க சரவெடி ஆப்பு.... சோதனை ....மேல் ......சோதனை.... போதுமடா..... சாமி....
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
23-ஜூன்-201209:20:34 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் தமிழக சிறையில் இடம் இல்லை என்றால் அந்தமானில் வெள்ளைக்காரன் கட்டிய சிறை பாழடைந்து கிடக்கிறது. அங்கே அடைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.