Rescuers reach Mahi, likely to pull her out from borewell | 4 நாட்கள் போராட்டம் நடத்தியும் குழந்தை மகி பலி: உயிருடன் மீட்க முடியாத பரிதாபம்| Dinamalar

4 நாட்கள் போராட்டம் நடத்தியும் குழந்தை மகி பலி: உயிருடன் மீட்க முடியாத பரிதாபம்

Updated : ஜூன் 24, 2012 | Added : ஜூன் 24, 2012 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

குட்காவுன் : கடந்த 4 நாட்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது சிறுமி மகியை ராணுவத்தினர் ‌போராடி மீட்டனர். 85 மணிநேரமாக மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் மதியம் 1.45 மணியளவில் மகி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட குழந்தை அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மகியின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அரியானா மாநிலம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மகி, 4 என்ற சிறுமி, கடந்த 20ம் தேதி இரவு, தன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அருகில் இருந்த 70 அடி ஆழமுள்ள ஆழ் துளை கிணற்றில், தவறி விழுந்து விட்டாள். இந்த தகவல் தெரிய வந்ததும், மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ராணுவ வீரர்களும், அங்கு வந்தனர். சிறுமி விழுந்த இடத்துக்கு சற்று அருகில், மீட்பு குழுவினர் மிகப் பெரிய பள்ளத்தை தோண்டி மீட்புப்பணியை மேற்கொண்டனர்.. ஆழ் துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் தோண்டப்படும் இந்த பள்ளத்தின் வாயிலாக, சிறுமி இருக்கும் இடத்துக்கு சென்று, அவளை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆக்சிஜன் செலுத்தப்பட்டது: சிறுமி, சுவாசிப்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்குள், "ஆக்சிஜன்' செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலையில், "இன்னும் சில மணி நேரத்தில் சிறுமியை மீட்டு விடுவோம்' என, மீட்பு குழுவினர் தெரிவித்தார். மாலையில் நிலைமை தலைகீழானது. சிறுமி விழுந்த துளையில் அருகில் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டும் இடத்தில், கடினமான பாறைகள் நிறைந்திருப்பதால், விரைவாக பள்ளம் தோண்ட முடியவில்லை. இதனால், கடந்த நான்கு நாட்களாக 70 அடி பள்ளத்தில் சிக்கியிருக்கும் மகியின் கதி என்ன ஆகும் என கவலை உருவானது.

மீட்பில் தாமதம்: மகியை நெருங்க சில அடி தூரம் இருந்த நிலையில் அங்கு கடுமையான பாறைகள் இருந்ததால் மீட்டு பணியில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் நடந்த மீட்பு முயற்சிக்குப்பின்னர் கடந்த 85 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மதியம் 1.45 மணியளவில் மகி மீட்கப்பட்டார். பின்னர் சிறுமி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி சிகி்ச்சைக்காக தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸ் வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் கண்டனம்: இதற்கிடையே அரியானா மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் , மகி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவத்திற்கு காரணமான கிணற்றின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டால் பணி முடிந்தவுடன் உடனடியாக மூட வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி அரியானா தலைமைச்செயலர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun - Singapore  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-201206:35:39 IST Report Abuse
Arun it is very sad a small child sacrificed her life for someone's ignorance to protect the borewell left unused. I am not sure how this can be protected as thousands of such borewell could be left unattended. but why not goverment provide fund to invent an equipment to pull the person from borewell which can save lives.
Rate this:
Share this comment
Cancel
panaieari - Maldives,மாலத்தீவு
25-ஜூன்-201200:24:59 IST Report Abuse
panaieari குழந்தையை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் போதுமானது இல்லை என்பது உண்மை. ஆனால் குழந்தையை எடுத்த பின் அந்த வீரர்கள் ஓடிய ஓட்டம் நெஞ்சை பதற வைத்தது. அந்த ராணுவ வீரர்களுக்கு சிரம் தாழத்திய வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Sri - Chennai  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-201220:55:01 IST Report Abuse
Sri A small mistake cause a lot. Why did the landlord left the bore well uncovered? why did her parents allow her to play outside at late night? I am not able to sleep for the last 3 days due to this? Even the army person who took her outside gasped for breath. How did the cute little one suffered inside 70 feet borewell ? It is painful while visualising.Mahi you will live in our hearts...RIP
Rate this:
Share this comment
Cancel
Saravanan Siva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூன்-201216:34:24 IST Report Abuse
Saravanan Siva மழலையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோமாக ....
Rate this:
Share this comment
Cancel
kadar mohideen - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூன்-201216:33:43 IST Report Abuse
kadar mohideen இந்த செய்தியை படித்த அனைவருமே ஒரு நிமிடம் கண்ணீர் விட்டு இருப்பார்கள், படிக்க படிக்க அழுகைவந்தது, இந்த பிஞ்ச ஆண்டவன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துகிட்டான்... மக்களே திருந்துங்கள்... குழந்தைகளிடம் அலட்சியத்தோடு இருக்காதீர்கள்... குழந்தைகள் நம் செல்வங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Deepak - Nellai,இந்தியா
24-ஜூன்-201216:16:05 IST Report Abuse
Deepak அரசியவாதிகளையும், அதிகாரிகளையும் நாக்கை பிடுங்கி கொள்வது போல் நானும் கேள்வி கேட்டுவிட்டு, அடுத்த சம்பவம் இது போல் நடக்கும் வரை அனைத்தையும் மறந்துவிடுகிறேன். என்னால் முடிந்தது இது மட்டும்தான்
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Maskat ,ஓமன்
24-ஜூன்-201216:01:44 IST Report Abuse
Tamilnesan இதற்கு காரணமான அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் சாகும்வரை தூக்கிலிடப்பட வேண்டும். செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
Hari Shankar - Chennai,இந்தியா
24-ஜூன்-201216:00:33 IST Report Abuse
Hari Shankar ஏண்டா தெருப்பொருக்கிகளா.. 70000 செலவு பண்ணி போர் போட்டிங்கள்ள? 70 ரூபா செலவு பண்ணி ஒரு தகர டப்பா போட்டிருந்தைன்னா இப்படி ஒரு எவ்வளவு விழுந்திருக்காதுள்ள? ஒரு அஞ்சு நிமிஷம் கவர்மெண்ட்டு பஸ்சு இஞ்சின் பக்கத்துல ஒக்காந்து பாருங்கடா.. அப்பத்தான் கஷ்டம்னா என்னான்னு தெரியும். தயவு பண்ணி யாரும் கவர்மென்ட்ட இந்த விசயத்துல கொற சொல்லாதிங்க.. அறிவு கெட்டவனுகளுக்கு போர் ஒரு கேடா... கவர்மென்ட் எல்லா விசயத்துக்கும், எல்லார் வீட்டுக்கும் வந்து வேல செய்யிறது சாத்தியமில்லா காரியம்.
Rate this:
Share this comment
panaieari - Maldives,மாலத்தீவு
25-ஜூன்-201200:15:42 IST Report Abuse
panaieariகவர்மென்ட் எல்லா விசயத்துக்கும், எல்லார் வீட்டுக்கும் வந்து வேல செய்யிறது சாத்தியமில்லா காரியம்தான், ஆனால் அரசு நிர்வாகம் ஒழுங்காக இருந்தால் ஒப்பந்தகாரர் ஒழுங்காக வேலயை செய்து மூடி எல்லாம் பொருத்தி முடிதிதிருப்பாங்க. நாம தான் ஓட்டு போடுகிற ஆசாமி கைநாட்டும் மொள்ளமறியும் மோடிச்சரயையும் வெற்றி பெற செய்தால் அவர்களுக்கு நாட்டின் நலனும் பெருசு இல்ல கூட இருக்கிற மக்கள் நலம் பெருசு இல்ல கொள்ளை ஒன்று தான் குறிக்கோள். நாம் தவறு செய்தால் பாவம் அறியாத குழந்தைகளிடம் முடிகிறது...
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
24-ஜூன்-201215:55:43 IST Report Abuse
A R Parthasarathy எழுபதடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த குழந்தை பிழைக்கவில்லை நான்கு நாள் போரட்டத்திற்கு பிறகும். இதுதான் விதி என்பது. ஆனால், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த குழந்தை அந்த ஆழ்துளை கிணற்றில் வந்து விழும் வரை யாருமேவா கவனிக்காமல் விட்டு விட்டார்கள்? பொறுப்பற்ற மனிதர்கள். கிணறு தோண்டி நீர் இல்லை என்றவுடன் அதனை மூடாமல் விட்ட கிணற்றின் சொந்தாகாரனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும். நீதி மன்ற உத்தரவு இருந்ததும் மூடாமல் விட்டது தவறல்லவா?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-ஜூன்-201215:51:14 IST Report Abuse
Nallavan Nallavan கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் இதுபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து மீடியாக்கள் மூலம் அறிந்து வருகிறேன் சில குழந்தைகள் இறந்தும் உள்ளனர் ஆயினும் இச்சம்பவங்கள் ஒரு முடிவுக்கு வராதது, இதுபோன்ற அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களே என்று உணர்த்துகின்றன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை