Dinamalar - No 1 Tamil News Paper

இடதுசாரிகள் இன்று ஆர்ப்பாட்டம்
 
 
  இ-பேப்பர்
AAnmeegam News
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail    Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,23:12 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 29,2010,00:39 IST

புதுடில்லி :  விலைவாசி பிரச்னையை முன்னிறுத்தி, பார்லிமென்டின் முன்பு, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.,க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று லோக்சபாவில் விலைவாசி பிரச்னை குறித்து இடதுசாரிகள் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் சபாநாயகர் மீரா குமார்,"தற்போது நாட்டில் நிலவும் சூழலுக்கு பொருத்தமாக இல்லாததால், ஒத்திவைப்பு  தீர்மானத்துக்கு அனுமதியளிக்க முடியாது' என்று மறுத்து விட்டார். சபாநாயகரின் முடிவை எதிர்த்து, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.ஐ.,(எம்) தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா,"நாளை (இன்று) பார்லிமென்டின் பிரதான நுழைவாயிலில் இடதுசாரி உறுப்பினர்கள் விலைவாசி பிரச்னையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். இந்த ஆர்ப்பாட்டம் பார்லிமென்டின் உள்ளேயும், வெளியேயும் நடக்கும்' என்று தெரிவித்தார்.


 

மேலும் அரசியல் செய்திகள்:




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய
Your Name  :
Your Email Id :
Your city (or) location  :
Your country  :
Your Comment :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)