ஜமீன் நிலமோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜமீன் நிலமோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

Added : ஜூலை 28, 2010

தேனி : போலி ஆவணங்களை உருவாக்கி, ஜமீன் நிலத்தை மோசடி செய்த இருவரை கைது செய்ய, தனிப்படை போலீசார் ஹைதராபாத், டில்லி சென்றுள்ளனர். தேனி மாவட்டம், கண்டமனூர் ஜமீன் நிலம் 2500 ஏக்கருக்கு, ஜமீன் வாரிசு சுந்தரவடிவேலிடம் பவர் பத்திரம் செய்து வில்லங்கம் உருவாக்கி பணம் பறித்து வருவதாக போலீசார் தனுஷ்கோடி, பாலகிருஷ்ணன், ஜவகர்லால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சுந்தரவடிவேல், பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர். தனுஷ்கோடி ஹைதராபாத்திற்கும், ஜவகர்லால் டெல்லிக்கும் தப்பிச்சென்று விட்டனர். இவர்களை கைது செய்ய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தற்போது ஹைதராபாத், டெல்லிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் வில்லங்கம் உருவாக்கி நிலத்தின் தற்போதைய உரிமையாளர்களிடம், இக்கும்பல் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதும், பலருக்கு நிலத்தை விற்பனை செய்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஜமீன் சொத்துக்கு சொந்தமான வீரபாண்டியில் உள்ள 70 ஏக்கர் நிலத்தை முன்னாள் ராணுவ வீரர் பவுஜிவாலா (65) முறைகேடாக விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது போன்று யார், யாருடைய நிலம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X