Today drugs oppose day | பாதை மாற்றும் போதை:இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினம் | Dinamalar
Advertisement
பாதை மாற்றும் போதை:இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 26ம் தேதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


போதைப்பொருள், அதை பயன்படுத்துபவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமுதாயத்தையும் பாதிக்கிறது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் தான். சிலர் இதற்கு அடிமையாக மாறியிருப்பது கவலைக்குரியது.


மூன்றாவது இடம்:உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது. இது போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போதைப் பொருட்களை கடத்துகின்றனர்.


பலவிதம்:ஹெராயின், அபின் , கஞ்சா, புகையிலை, மது , ஊக்க மருந்து, ஒயிட்னர், கொக்கைன், தின்னர், பீடி, சிகரட், வலி நிவாரணிகள், மயக்க, தூக்க மருந்துகள் உள்ளிட்ட பல வகையான போதைப்பொருட்கள் உலகில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு இளைஞர்கள்ள், மாணவர்களும் அடிமையாவது வருத்தமான விஷயம். இம்மாதிரியானவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Coimbatore,இந்தியா
26-ஜூன்-201210:01:44 IST Report Abuse
sundaram போதைபொருட்களை ஒழிக்க அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை. தமிழ் திரைஉலகின் (மறைந்த) பிரபல நடிகர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர். ஆனால் காவல் துறை அவரை ஒன்றுமே செய்யவில்லை. அவர் மனைவி துணைவி வீடுகளுக்கு தவறாமல் சென்று வந்தவர். போதைப்பொருட்களுக்கு அடிமை என்பதையே ஒரு விளம்பரமாக பயன்படுத்திக்கொண்டார். அதேபோல மும்பை பட உலகிலும் ஒரு பிரபல நடிகர் போதைப்பொருளுக்கு அடிமையானவர். அவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆகவும் அமைச்சராகவும் இருந்ததால் மகனின் போதைப்பொருட்கள் பயன்பாடு காவல் துறையின் பார்வைக்கு குற்றமாக தெரியவில்லை. பிரபலங்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருந்து விளம்பரம் தேடி குற்றங்களில் இருந்து சுலபமாக தப்பித்துவிடுகின்றனர். அவர்கள் நேரடியாக கொள்முதல் செய்யமுடியாது. பல இடைத்தரகர்கள் மூலமே அவர்களுக்கு போதை பொருட்கள் கிடைக்கின்றன. அந்த பிரபலங்களைப்பிடித்து சிறையில் அடைத்து விசாரித்திருந்தால் ஓரளவுக்காவது இந்த போதைப்பொருள் மார்க்கெட்டை கட்டுப்படுத்தி இருக்கலாம். காவல் துறையின் கண்களுக்கு நடைபாதைகளில் திரிந்து பயன்படுத்தும் அன்னாடம் காய்ச்சிகள் தான் தென்படுவார்கள். வெளிச்சம் போட்டு போதைப்பொருள் பயன்படுத்தும் பிரபலங்கள் தெரிவதில்லை. போதைப்பொருட்கள் மது மாது போன்று நேரடியாக கிடைப்பதில்லை. பல இடைத்தரகர்கள் வணிகர்கள் உள்ளனர். பயன்பெறும் பிரபலங்களை பிடித்து சிறையில் அடைத்து விசாரிப்பதால் மட்டுமே கொள்முதல் செய்வோர் முதல் விற்பனை செய்வோர் வரை அனைவரையும் பிடிக்க முடியும். (இப்போதும் தமிழ் திரை உலகில் பல நடிகர்களும் நடிகைகளும் போதை பொருட்கள் பயன்படுத்துவது அவ்வப்போது ஊடகங்களில் கிசு கிசு செய்திகளாக வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
26-ஜூன்-201209:56:48 IST Report Abuse
itashokkumar டாஸ்மாக் தயவில் இலவசங்களை தந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இன்று என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள். ஒன்ன்ன்னன்றும் செய்ய மாட்டார்கள். இன்று ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை மூடி இருக்கலாம். அதையெல்லாம் செய்ய இது என்ன gulf country ஆ இல்லை இல்லை. சன நாயக நாடுங்கோஓஓஓஓஓஓஓஓ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sundaram - Coimbatore,இந்தியா
26-ஜூன்-201213:42:31 IST Report Abuse
sundaramவளைகுடா நாடுகளைப்பற்றி உங்கள் மனதில் நல்ல விதமாக நினைத்துக்கொண்டிருப்பதுவே இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு மாபெரும் வெற்றி. உண்மையில் நீங்கள் நினைப்பதுபோல வளைகுடா நாடுகள் இல்லை என்பதை என்னால் நிரூபித்துக் காட்ட முடியும். ( நம் நாட்டில் குற்றங்கள் அனைத்தையும் பயமின்றி செய்கிறார்கள். இங்கு பயந்து பயந்து செய்கிறார்கள் அவ்வளவே. இரண்டு இடங்களிலும் குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன )...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
itashokkumar - Trichy,இந்தியா
26-ஜூன்-201215:54:01 IST Report Abuse
itashokkumarஉங்கள் கருத்துக்கு நன்றி, இங்கு குற்றங்களும்,முடிவுக்கு வராத வழக்குகளும்,அரசியல் குற்றங்களும், ஊழல்களும் அதிகமாக உள்ளது. கள்ள சாராயம் விற்கப்பட்டால் அது சட்டப்படி குற்றம் அல்லவா. ஆனால் டாஸ்மாக் கில் எப்போதும் கிடைக்கும் என்றால் அது சரியா. GULF COUNTRY ல் ஆட்சியாளர்களும் நீதி துறையும் இங்குள்ளது போல இருக்கிறதா என்ன ?. எனக்கு தெரியவில்லை....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-201209:45:17 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. திருடனுக்கு திருட்டு புடிக்காமல் போக வேண்டுமானால், நிறைய தேள் கொட்ட வேண்டும். மது குடிப்போருக்கு, மதுவிலேயே மருந்து கலக்கி குடுக்க வேண்டும். புகையிலை விளைவிக்கும் விவசாயிகளும் அதனை கைவிட முன்வரவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
s.barathidasan - trichy,இந்தியா
26-ஜூன்-201206:00:27 IST Report Abuse
s.barathidasan போதையினால் வரும் கேடுகளை விளக்கி எத்தனை சினிமாக்கள் வந்தாலும் போதை மனிதர்கள் திருந்த மாட்டார்கள். போதை மனிதர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ் த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்