Dinamalar - No 1 Tamil News Paper

"டைடல் பார்க்' திறக்க ஆக.,2ல் முதல்வர் கோவை வருகை
 
 
  இ-பேப்பர்
AAnmeegam News
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail    Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,23:37 IST

கோவை : "டைடல் பார்க்'கை திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி, ஆக.,2 ம் தேதி கோவை வருகிறார்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, கோவை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு அருகில், அரசின் சார்பில் சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்துடன் கூடிய தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்க  அடிக்கல் நாட்டு விழா, 2007 பிப்.,24ல் கோவையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி, அடிக்கல் நாட்டினார். மொத்தம் 380 கோடி ரூபாய் மதிப்பில், 17 லட்சம் சதுரஅடி பரப்பில் 8 தளங்களுடன் கூடிய பிரமாண்டமான "டைடல் பார்க்' கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதன் துவக்கவிழாவை, வரும் ஆக.,2ல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. துணை முதல்வர் ஸ்டாலின் இதைத் திறந்து வைப்பதாக இருந்தது. தற்போது, அடிக்கல் நாட்டிய முதல்வர் கருணாநிதியே நேரில் வந்து திறந்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு, முதல்வரின் கோவை வருகை உறுதி செய்யப்பட்டது. அதே நாளில், இரவில் கோவையில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


 

மேலும் அரசியல் செய்திகள்:




வாசகர் கருத்து (2)
S.Dinakaran - Thanajvur,இந்தியா
2010-07-29 01:09:04 IST
சென்னையில்தான் ஐஐடி இருக்கிற‌தல்லவா? அதனால் ஐஐஐடியை தென் மாநிலங்களில் அமைக்க வேண்டியதுதானே. எல்லாவற்றையும் கொண்டு வந்து சென்னையை சுற்றியே அமைத்து கொள்வது என்பது தென்மாநில மக்களுக்கு செய்யும் அநீதி. பெரிய மாநகரில் அமைக்காமல் தஞ்சாவூர் அல்லது ராமநாதபுரம் அல்லது தூத்துக்குடி மாதிரி இரண்டாம் கட்ட நகரத்தில் அமைக்கவேண்டும்....
செந்தில் - India,இந்தியா
2010-07-29 01:07:40 IST
தொழில் நகரமான கோவையை அடுத்த கட்டமாக தகவல் தொழில்நுட்ப நகராகவும் ஆக்கும் இந்த அரசின் முயற்சிக்கு தமிழகமே தலை வணங்குகிறது,இதோடல்லாமல் மதுரை,திருச்சி மற்றும் நெல்லை போன்ற இடங்களிலும் இந்த திட்டம் உள்ளதால் இதனால் லட்சகணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெற்று பலனடைவார்கள்.இந்த மாதிரி நல்ல திட்டங்கள் தி.மு.க அரசால் மட்டுமே போட முடியும். வாழ்க கலைஞர்,வளாக ஸ்டாலின்,வளர்க தி.மு.க. கொசுறு விளக்கம்:- சிலர் எப்போதும் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டுடன் பாட்டியம்மா நடத்திய கோவை கூட்டத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்,அது தமிழுக்காக நடத்தப்பட்ட மாநாடு,அதில் கட்சி சார்பற்று பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்,காரணம் அது லட்சோப லட்சம் பேர் கூடக்கூடிய இடத்தில நடத்தப்பட்டது,அது தி.மு.க அரசால் நடத்தப்பட்டாலும் அங்கு ஒரு தி.மு.க கொடி கூட பறக்கவில்லை,. அங்கு யாருக்கும் இலவச பிரியாணி வழங்க படவில்லை,எல்லோரும் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டனர். ஆனால் தெரிந்தே கோவையில் நகருக்குள் உள்ள ஒரு சிறிய சர்கஸ் கூடாரம் போடும் இடத்தில் அதிகபட்சம் 30,000 பேர் கூடும் இடத்தில் கூட்டம் போட்டு 50,000 பேர் கூடியதால் அது உலக மஹா கூட்டம் ஆயிற்று!!!!...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
Your Name  :
Your Email Id :
Your city (or) location  :
Your country  :
Your Comment :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)