Mumbai attack Terrorist abu zindal statement | மும்பை தாக்குதல் பயங்கரவாதி அபு ஜுண்டால் பரபரப்பு வாக்குமூலம்| Dinamalar

மும்பை தாக்குதல் பயங்கரவாதி அபு ஜுண்டால் பரபரப்பு வாக்குமூலம்

Added : ஜூன் 26, 2012 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அபு ஜுண்டால் பரபரப்பு வாக்குமூலம்,Mumbai attack Terrorist abu zindal  statement

புதுடில்லி:சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட, பயங்கரவாதி சையது ஜப்லுதீன் என்ற அபு ஜுண்டால், மும்பையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, கராச்சியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து, அங்கிருந்து பயங்கரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததையும், அதற்கு முன்னதாக பயங்கரவாதிகள் 10 பேருக்கும் இந்தி பேச கற்றுக் கொடுத்ததும் உண்மையே என, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


டில்லி போலீஸ் காவலில் இருக்கும், அபுஜுண்டாலிடம், கடந்த ஐந்து நாட்களாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது அவர் கூறியுள்ளதாவது:
கடந்த 2008ல், மும்பையில் தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக, லஷ்கர் அமைப்பின் முக்கிய தலைவர்கள் என்னை அழைத்துப் பேசினர். 10 இளைஞர்களுக்கு, இந்தி மொழி பேச கற்றுக் கொடுக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர். என்னிடம் இந்தி பேச கற்றுக் கொண்டவர்கள் தான் மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.


பொதுவான வார்த்தைகள்:அதுமட்டுமின்றி, மும்பை தாக்குதலுக்கு சில நாட்கள் முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் இருந்த என்னை, அந்தத் தலைவர்கள் மீண்டும் அழைத்தனர். அப்போது, மும்பையில் பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை அந்த 10 இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுக்கும்படி கூறினர். மும்பைவாசி போல தோற்றம் அளிப்பது எப்படி என்று தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.


தலைவர்கள் பீதி:நான் சொன்ன யோசனையின் பேரில், அந்த பயங்கரவாதிகள் 10 பேரின் கையில், புனித கயிறு கட்டப்பட்டது. அவர்களை மாணவர்களைப் போல மாற்றினோம். மும்பை தாக்குதல், 24 மணி நேரத்திற்குள் முடிவடைந்து விடும் என, லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் நம்பினர். ஆனால், மும்பையில் தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில், அஜ்மல் கசாப் மட்டும் கைதானது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானவுடன், லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஜாகிர் உர் ரகுமான் மாலிக் உட்பட அந்த அமைப்பின் பல தலைவர்களையும் கவலை அடையச் செய்தது. கராச்சியில் செயல்பட்ட எங்களின் கட்டுப்பாட்டு அறையில் ஒரு விதமான பீதி நிலவியது.


சவுதி செல்ல உத்தரவு :மும்பை தாக்குதல் நடந்த மறுநாள், கராச்சியில் செயல்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்த எங்களுக்கு, லஷ்கர் அமைப்பின் தலைவரான லக்வியிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. அவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்த அபு குகாபா, அபு அல்குமா, சாஜித் மஜித் மற்றும் சர்தார் ஷாவையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, முசாபராபாத்தில் இருக்கும் மறைவிடத்தில் சென்று ஒளிந்து கொள்ளும்படி தெரிவித்தார். என்னை சவுதி அரேபியா சென்று, அங்கு லஷ்கர் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணிகளை பார்க்கும்படி கூறினார். குறிப்பாக, கேரளா மற்றும் ஆந்திராவிலிருந்து வருபவர்களை, அமைப்பில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.


பாஸ்போர்ட் :நான் 2006ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறினேன். வங்கதேசம் வழியாக பாகிஸ்தானின் கராச்சி நகர் சென்றடைந்தேன். அங்கு, எனக்கு ரியாசத் அலி என்ற பெயரில், பாகிஸ்தான் பாஸ்போர்ட் பெற, லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் ஏற்பாடு செய்தனர். அந்த பாஸ்போர்ட் அடிப்படையில் தான், நான் கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் கைதானேன். எனது புகைப்படங்கள் ஒத்துப் போகவில்லை என்பதால், சில குழப்பங்கள் உருவாகின. அதுவரை நான் சிறையில் இருந்தேன். பின்னர் டி.என்.ஏ., மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, நான் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னரே சவுதி நிர்வாகத்தினரிடம் நான் உண்மையை ஒப்புக் கொண்டேன். அதன் பின்னரே என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் துவங்கின.இவ்வாறு அபு ஜுண்டால் கூறியுள்ளார்.


மகாராஷ்டிர அமைச்சர் மறுப்பு: ""பயங்கரவாதி அபு ஜுண்டாலுக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதுதொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்,'' என, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர மாநில பெண் அமைச்சருமான பவுசியா கான் தெரிவித்துள்ளார்.


மாநில கல்வி அமைச்சரான அவர் மேலும் கூறுகையில், ""அபு ஜுண்டால் யார், அவர் எங்கிருந்து வந்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் பயங்கரவாதி என்றால், நாட்டுக்கு எதிராக செயல்படுபவர் என்றால், அவர் கைது செய்யப்பட்டது நல்ல செய்தியே. விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். இதுதொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்க தயார்.பயங்கரவாதி அபு ஜுண்டால், அமைச்சர் பவுசியா கானின், எம்.எல்.ஏ., விடுதி அறையில் தங்கியிருந்தார் என, வெளியான செய்தியை அடுத்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார். "எனது அரசு வீட்டில் பலர் தங்குகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரின் நம்பகத்தன்மை பற்றியும் நான் அறிந்து கொள்ள முடியாது' என்றும் தெரிவித்தார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padman - Chennai,இந்தியா
27-ஜூன்-201220:05:47 IST Report Abuse
Padman இப்போ எல்லா உண்மைகள் வரும் கொஞ்ச நாள் போன உடனே , ஐயா நன் சினிமா நடிக்க வந்தேன் என்னை இப்படி பிடிச்சி போட்டுட்டாங்க என்னக்கு நீதி வேண்டும் அப்பிடி இப்படின்னு சொல்லவன் , நம்பளும் இத கேட்டுகிட்டு , மறுபடியும் சில கமெண்ட்ஸ் எழுதுவோம் , என்ன பொழப்பு ....?????????? ஐயோ ஐயோ....
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201218:38:39 IST Report Abuse
Rajasekaran Palaniswamy பவுசியா கான்..... பெயரே போதுமே இவருக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று.......
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-ஜூன்-201200:23:14 IST Report Abuse
Nallavan NallavanBlood is thicker than water....
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
27-ஜூன்-201217:52:11 IST Report Abuse
maran எத்தனை உயிர் போனது .....என்னடா பேட்டியா கொடுக்குறே? எவ்வளவு தயிரியமா பேட்டி கொடுக்குறான் ......அதுவும் கேரளா ,ஆந்திரா என சொல்றான் .......ஏனப்பா ...கேரளா ஆந்திரா மக்களே .உங்களை செலக்ட் பண்ண காரணம் என்ன ...? நீங்களும் இந்தியா-வில் தானே பிறந்தீங்க ?இந்தியன் என்ற உணர்வு எங்கடா போயிற்று ?
Rate this:
Share this comment
Cancel
Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா
27-ஜூன்-201216:39:11 IST Report Abuse
Kartheesan சவுதி இருந்து நாடு கடத்தப்படவில்லை, இந்திய உளவுத்துறை மிக திறமையாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு கொடுத்த அல்வா அது. இந்திய உளவுத்துறைக்கு பாராட்டுக்கள். பாகிஸ்தான் அரசிற்கும் தீவிரவாதத்திற்கும் ஊறிப்போன தொடர்பு இருப்பது தெரிந்தும் இந்தியா இந்த நாய்களை விட்டு வைத்திருக்கிறது. காலமும் சூழ்நிலையும் கூடி வந்தால் பாகிஸ்தான் மண்ணோடு மண்ணாகும்.
Rate this:
Share this comment
Cancel
Navas ahamed Shahib - riyadh,சவுதி அரேபியா
27-ஜூன்-201214:34:32 IST Report Abuse
Navas ahamed Shahib திரு செழிய அவர்களே, மலோகன் குண்டு வெடிப்பு மற்றும் பல குண்டு வெடிப்பு ஏன் காந்தியை கொன்றதுவரை இந்து தீவிரவாதிகள் செய்து உள்ளனர். அதனால் மதத்தை தவறு சொல்லாதிர்கள், இந்து, முஸ்லிம், கிருத்துவன் இது இல்லாமல் தீவிரவாதி என்றும் ஒரு மதம் இருக்கிறது , இதில் அனைத்து மததினவரும் இருப்பார்கள். தீவிரவாதம் ஒரு தனி மதம், இஸ்லாம் மதத்தில் போர் புரிந்தாலும் பெண்களுக்கோ, வயதனவர்களுகோ , செருவர்களுகோ எந்த தண்டனயும், தொந்தரவும் குடுக்க கூடாது என்று சொல்லியது மட்டும் இல்லாமல் செய்தும் காட்டினார்கள் நம் முஹம்மது அவர்கள்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-ஜூன்-201200:38:43 IST Report Abuse
Nallavan Nallavanமாலேகாவ் குண்டு வெடிப்பு தோசையை இன்னும் எத்தனை வருசத்துக்குத் திருப்பித் திருப்பிப் போடுவீங்க பாஸ். ஏற்கனவே தீஞ்சு போச்சு பாருங்க. இந்துத் தீவிரவாதம் என்று எதுவும் கிடையாது. இஸ்லாமியத் தீவிரவாதிகளைத் தவிர வேறு யாரும் மதத்தின் பெயரால் செய்கிறேன் என்று வெறிக்கூச்சல் இடுவதில்லை. கோட்சே எப்போதோ ஆர்.எஸ்.எஸ். சில் இருந்து விலகிப் பின்னரே காந்தியைக் கொன்றுள்ளான். காரணம் தேசப்பிரிவினைதான். இந்து துரோகி என்று காந்தியை நினைத்து அல்ல...
Rate this:
Share this comment
Navas ahamed Shahib - riyadh,சவுதி அரேபியா
30-ஜூன்-201201:20:48 IST Report Abuse
Navas ahamed Shahibபோலீஸ் கண்டு பிடித்தவுடன் அவர் RSS இல் இருந்து விலகிவிட்டான் என்று சொல்வீர்கள், அப்படியானால் இவளவு நாள் RSS இல் இருந்த பொது குண்டு வைக்கத்தான் கற்று கொண்டிருந்தானா? எத்தனை தடவை முஸ்லிம்களை தீவிரவாதிகள் ஆக்குகிரிகளோ அதனை தடவை இந்து தீவிரவாதிகள் செய்த குண்டு வெடிப்பை( வெளியில் தெரிந்த குண்டுவெடிப்பை ) சொல்லி கொண்டு தான் இருப்போம், இந்து தீவிரவாதிகள் செய்தது நெறைய உள்ளது, நீங்கள் திருப்பி போட அவசியம் இல்லை, எண்ணில் அடங்க தோசைகளை திருப்பி போடமள்ளே சாபிடலாம். எந்த முஸ்லிமாவது உங்களிடம் வந்து நான் முஸ்லிம் நான் 10 அப்பாவிகளை கொள்வேன் என்று சொன்னனா? குரானின் வசனம் - நி ஒரு மனிதனை காப்பாற்றினால், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை காப்பாற்றியதற்கு சமம் , நி ஓர் மனிதனை கொன்றால் மனித இனத்தையே கொன்றதுக்கு சமம்...
Rate this:
Share this comment
Cancel
Gokul - Bangalore,இந்தியா
27-ஜூன்-201214:21:08 IST Report Abuse
Gokul வருடம் : 2052 , "விசாரணை முடிந்தது...குற்றவாளிகள் கண்டுபிடிப்பு..விரைவு நீதி மன்றம் தூக்கு தண்டனை வழங்கியது..குடியரசு தலைவர் இவர்களின் கருணை மனுக்களை பற்றிய முடிவு எடுக்க படவில்லை"...ஹ்ம்ம்ம் அப்புறம்..." இது எந்த செய்தி தாத்தா? இதுவாடா பேராண்டி, நாங்க எல்லாம் சின்ன வயசுல இருக்கும் போது நடந்த கேஸ் டா..இப்போ 40 வருசமா இதே கதை தாண்ட வருது...அப்போ எல்லாம் மரியா அக்கா கூட சண்டை, சேகர் சேகரன் கூட வம்பு அப்படி இப்படின்னு ஒரே ரகளைய போகும் டா...அது சரி தாத்தா, அது என்ன கலைஞர் அப்படின்னு ஒருத்தர் இது தான் நான் போட்டி இடுற கடைசி தேர்தல் ன்னு சொல்லி இருக்கார்..அது எங்க அப்பா சின்ன வயசுல இருக்கும் போது இருந்து அவர் அப்படிதான் சொல்லிக்கிட்டு இருக்காருப்பா..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜூன்-201214:10:08 IST Report Abuse
Nallavan Nallavan அஜ்மல் கசாபையும், சையது ஜப்லுதீன் என்ற அபு ஜுண்டால்-லையும் எந்த சக்தி / பாசப்பிணைப்பு இணைக்கிறதோ அது போன்ற force குப்பனையும், சுப்பனையும் இணைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sunil - chennai,இந்தியா
27-ஜூன்-201212:22:30 IST Report Abuse
sunil என்ன பாசு, நேத்து அவன் இவன்னு எழுதுனீங்க, இப்ப அவர் இவர்ன்னு முழு மரியாதையோட எழுதுறீங்க?. அவ்வளவு பயமா?
Rate this:
Share this comment
Cancel
imam ali.dammam.ksa - dammam,சவுதி அரேபியா
27-ஜூன்-201212:16:42 IST Report Abuse
imam ali.dammam.ksa mr.thangairaja writing good
Rate this:
Share this comment
Cancel
v.senthur velmurugan - virudhunagar,இந்தியா
27-ஜூன்-201211:50:36 IST Report Abuse
v.senthur velmurugan குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை மிகவும் அவசியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை