மறதிக்கு மருந்தாகுமா காபி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

"வயசு ஆயிடுச்சுல... அதான் மறந்துட்டேன்'.. என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். காபியை குறிப்பிட்ட அளவு தினமும் குடித்து வந்தால் மறதிக்கு ஒரு காரணமான"அல்சீமர்' எனும் நோய் வராது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


"அல்சீமர்':வயதாக ஆக மூளையின் செயல்பாடும், நினைவுத்திறனும் மங்கும். இது "டிமன்சியா' (மறதிநோய்) எனப்படும். நாளடைவில் இது வளர்ச்சி அடைந்து, முழுமையான அறிவாற்றல் இழப்பை ஏற்படும். இது, "அல்சீமர்' எனப்படும். 1906ம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த மனநல மருத்துவரான அலாய்ஸ் அல்சீமர் இதைக் கண்டுபிடித்தார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது. 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 27 மில்லியன் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2050க்குள் இது 100 மில்லியனை தொடும் எனவும் தெரிகிறது.


காபியால் போகும் மறதி:அமெரிக்காவில் உள்ள சவுத் புளோரிடா மற்றும் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், காபியில் உள்ள "காபின்' மூலக்கூறுகளை ஆராய்ந்தனர். "அல்சீமர்' நோயால் பாதிக்கப்பட்ட எலிக்கு தினமும் குறிப்பிட்ட அளவு காபி கொடுத்து செய்த ஆய்வின் முடிவில், அல்சீமர் நோய் குணமாவது தெரிந்தது. பின், 60 வயதிற்கு மேற்பட்ட 125 பேரிடம் இதே ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அவர்களுக்கு தினமும் 3 கப் காபி கொடுக்கப்பட்டது. இறுதியில், அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்திருப்பது தெரிந்தது. மறதி ஏற்படுவதாக தெரிந்தால் வயதானவர்கள், தினமும் காபி எடுத்துக் கொள்ளலாம்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALAMURUGAN - chennai,இந்தியா
27-ஜூன்-201211:38:12 IST Report Abuse
BALAMURUGAN என்னையா ஒரே குழப்பமா இருக்கு. காப்பிய குடிக்காத, டீய குடி நல்லதுன்னு ஒருத்தன் சொல்றான். பால் குடிக்காதன்னு ஒருத்தன் சொல்றான், பால் குடி நல்லதுன்னு ஒருத்தன் சொல்றான். டீல பால கலக்காதன்னு ஒருத்தன் சொல்றான். கிரீன் டி குடி நல்லதுன்னு ஒருத்தன் சொல்றான். இப்போ காபி குடி நல்லதுன்னு சொல்றான். ஆக மொத்ததுல குடிக்கவா? வேணாமா?
Rate this:
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
27-ஜூன்-201213:52:08 IST Report Abuse
Sathyamoorthyஎது இருக்குதோ அத குடிங்க ... பாலா......
Rate this:
Share this comment
Cancel
AXN PRABHU - Chennai ,இந்தியா
27-ஜூன்-201208:34:12 IST Report Abuse
AXN PRABHU பார்த்தசாரதி.. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ?
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
27-ஜூன்-201205:24:57 IST Report Abuse
A R Parthasarathy சிறப்பான ஆராய்ச்சி. வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். முன்று கப் காபியை எப்போது சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லையே? மூன்று கப்பையும் ஒரே சமயத்திலா? வெவேறு நேரத்திலா? இரவு படுக்கபோகும்போது காபி சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்