ஈரோடு: பசுவின் கோமியம் மற்றும் சாணத்திலிருந்து, மருந்துப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில், ஈரோடு மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.
ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த விவசாயிகள், மெதுவாக இயற்கை வேளாண்மைக்கு மாறுகின்றனர்.
பஞ்ச கவ்யம் தயாரிப்பு:விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஈரோடு மாவட்டத்திலும், ஏராளமான விவசாயிகள், ரசாயன உரத்தை தவிர்த்து, பால், தயிர், மோர், நெய், சாணம், கோமியம் ஆகிய, மாட்டின் பொருட்களை வைத்து "பஞ்ச கவ்யம்' தயாரித்தும், சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றால் "ஜீவாமிர்தம்' தயாரித்தும், பயிர்களுக்கு தெளித்து, நல்ல மகசூல் காண்கின்றனர். நாட்டுப் பசுவை, ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையாகவே, ஈரோடு விவசாயிகள் கருதுகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக, நாட்டுப் பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து, பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஈரோடு, சாவடிப்பாளையம், லக்காபுரம், கோபி, குட்டப்பாளையம் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்களால், கோசாலைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும், 350 முதல், 500 நாட்டுப் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.இவற்றிடம் இருந்து பெறப்படும் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு, காய்ச்சி வடிக்கப்பட்ட கோமியம், குளியல் சோப்பு, விபூதி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஷாம்பு, ஹேர் ஆயில், பினாயில் உட்பட, ஏராளமான பொருட்களை தயாரிக்கின்றனர்.
"அரசு உதவ வேண்டும்':பஞ்ச கவ்யப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் முன்னோடி விவசாயிகள், கவுந்தப்பாடி பாலசுப்பிரமணியம், வெப்படை முரளி, முத்தூர் முத்துசாமி, கோபி கணேசன் கூறியதாவது:கோசாலைகள் தவிர, 25க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பஞ்சகவ்யா, அர்க் (கோமியம்), சோப்பு, சாம்பிராணி, விபூதி உள்ளிட்டவற்றைத் தயாரிக்கின்றனர். காய்ச்சி வடித்த கோமியத்தை, நாள்தோறும் இருவேளையும், ஐந்து மி.லி., குடித்தால், சகல நோய்களுக்கும் உடலில் இடமிருக்காது. குறிப்பாக, கேன்சருக்கு சிறப்பான நிவாரணியாக உள்ளது. இதுபோல், ஒவ்வொரு தயாரிப்பும் தனிச் சிறப்பு வாய்ந்தது. இப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சந்தைப்படுத்தவும், அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது ஒரு உண்மையற்ற மூடநம்பிக்கை செய்தி. கோமியமாம் மருந்தாம் அதுவும் கேன்சருக்கு மருந்தாம். ஒரு கேன்சர் ( புற்றுநோய் ) மருந்து ஆராய்ச்சியாளர் என்ற முறையில் கூறுகிறேன். பசு மட்டுமல்ல எந்த மிருகத்தின் சிறுநீரும் மனிதனை போன்று சிறுநீர்தான். இப்படி எல்லாம் காமெடி பண்ணி இந்தியாவை பார்த்து வெளிநாட்டினர் சிரிக்கும் நிலையை உருவாக்காதீர்கள். சாணம் மற்றும் சிறுநீர் இயற்கை உரம் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அது இந்திய பசு மட்டுமல்ல வெளிநாட்டு பசுவின் சாணம் மற்றும் சிறுநீரும் இயற்கை உரம் தான். Dr கிருஷ்ணன், USA
கோமியத்தில் urea இருக்கு.அதுதான் கிருமி நாசினி.அதற்காக இந்த காலத்திலும் இப்படியா? மேலை நாட்டவர் நமது பாரம்பரியத்தில் நானோடெக்னாலஜி அறிந்து எங்கோ போய்ட்டாங்க .நாம இன்னும் இப்படியே இருக்கோம்.
ஒன்னு சொல்றேன் ... என்ன மாற்றம் செய்தாலும்.சாணி சாணி தான்.
நம்ம ஊரில் முதலில் வீட்டு கழிவு நீரில் விவசாயம் செய்யும் திட்டத்தை செயல் படுத்தவேண்டும்.பின்னல் கழிவு நீரில் மருந்து கண்டுபிடிக்கட்டும்.
இஸ்லாத்திலும் ஒட்டக சிறுநீரில் நன்மை பயப்பதாக நம்பிக்கை இருக்கிறது. உண்மையை அறிந்தவர்கள் மேன்மக்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. The Prophet (peace and blessings of Allaah be upon him) told them to drink the milk and urine of camels, and they recovered and grew fat. In the story it also says that they apostatized and ed the camel-herder, then the Muslims caught them and uted them. Narrated by al-Bukhaari (2855) and Muslim (1671). ஆகையால் உண்மையை தெரியாமல் யாரும் மற்றவர்களை இகழ்ச்சியாக பேச கூடாது.
முழுக்க முழுக்க மருத்துவ குணம் கொண்டது பசுவின் கோமியமும், சாணமும். நம்முடைய முன்னோர்கள் "பஞ்ச காவியம்" என்னும் ஐந்து விதமான பசுவிநிடமிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரித்து உடல் சுத்திக்காக வழங்கி வந்தார்கள். பஞ்சகவ்யம் இன்றும் கூட சில ஆச்சாரமான குடும்பங்களில் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வழ்ந்துவந்தத்தர்க்கு அதுவும் ஒரு காரணம். இதுபோன்ற
எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்கள் காலபோக்கில் மாறிவிட்டன. மனிதர்கள் மீண்டும் பழைய முறைகளுக்கு
மாறுவது ஆரோகியமான வாழ்விற்கு மிகவும் பயன்தரும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.