Chennai: Bus falls off a flyover, 45 injured | அண்ணா மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த நகர பேருந்து: 40 பேர் காயம் -போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணா மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த நகர பேருந்து: 40 பேர் காயம் -போக்குவரத்து பாதிப்பு

Updated : ஜூன் 28, 2012 | Added : ஜூன் 27, 2012 | கருத்துகள் (63)
Advertisement

சென்னை: சென்னை நகரில் அரசு நகரப்பேருந்து அண்ணா மேம்பாலத்திலிருந்து ‌வேகமாக சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 40-ம் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17-பி நம்பர் நகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது. மதியம் 2 மணியளவில் சென்னை அண்ணாமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது அப்போது பாலத்தில் இருந்து இறங்கி வளைந்து அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி கவிழ்ந்து கீழே சாலையில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்திலிருந்த கீழ‌ே விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் அலறினர்.

42 பேர் காயம்: இதில் பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பžஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பிரசாந்த், கண்டக்டர் ஹேமகுமார் ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக பஸ்சி்ல் பயணித்தவர்களை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர்.

இந்த சம்பவத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சக பயணிகள் கூறுகையில், பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வளைவு ஒன்றில் வேகமாக திரும்பி போது தான் பஸ் கவிழ்ந்தது என்றார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கூடுதலாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பாண்டிபஜார் பகுதி போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும்சிலர் பஸ்சில் சிக்கியிருக்கிறார்களா என தேடும் பணி நடக்கிறது.பஸ் கீழே விழுந்த போது சாலையில் வாகனங்கள், மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் அறிந்த அமைச்சர் வளர்மதி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman iyer - boston,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201222:54:54 IST Report Abuse
raman iyer மும்பை போன்ற நகரங்களில் எல்லாம் சீசன் டிக்கெட் வங்கி விட்டு எத்தனைமுறை வேண்டுமானாலும் எந்த ரயிலிலேயும் ஏறி மக்கள் பயணம் செய்வார்கள். அது போல் இரு நூற்று ரூபாய் செலுத்தினால் சென்னை மாநகரத்திற்குள் எந்த பஸ்சிலயும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்து ,இரு பக்கத்தினுடைய லாபங்களை கண்டறிய வேண்டும் , மக்களும் ஒரே பஸ்ஸூக்காக ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டாம் மக்களும் உடனே உடனே பயன்செய்வாரகள் மற்றும் சென்னையில் ஒரு கோடி ஜனங்கள் இந்த மாதிரி பாஸ் வங்கி விட்டால் ஒரே மாதத்தில் ,இருநூறு கோடி சென்னை மாநகர பஸ் துறைக்கு லாபம் கிடைக்கும் அந்த அதிக வருமானத்தால் டிரைவருக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும் அதிக நேரம் வேலை பார்த்து பணம் சம்பாதிச்சுத்தான் ஆவனும்நூம் இல்லை கை நிறைய சம்பளம் கொடுங்க ,ஒழுங்க ஓட்ட வில்லை என்றால் வேலைய விட்டு தூக்குங்க எல்லோருக்கும் பார்ட் டைம் வேல கொடுங்க நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் அதிகாரிகளே இத மொதல்ல செஞ்சு பாருங்க
Rate this:
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
28-ஜூன்-201202:03:24 IST Report Abuse
KAARTHIநல்ல ஐடியா அவுங்களுக்கு குடுத்துட்டீங்க ... அடுத்த தேர்தலுக்கு இதான் இலவசம்...அதுவரைக்கும் எதுவும் செய்யவும் மாட்டாங்க......
Rate this:
Share this comment
amohan1983 - DOHA,கத்தார்
28-ஜூன்-201202:05:57 IST Report Abuse
amohan1983சென்ற ஆண்டு மே மாதம், என் நண்பன் OMR சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். முன்னால் சென்ற வாகனம் நின்று விட, என் நண்பனும் உடனே நின்றுவிட்டான். நின்று சில மணித்துளிகள் ஆனா பிறகு, அவன் பின்னால் திரும்பி, ஏதோ ஒரு வண்டி வருகிறதோ என்று பார்த்த கணத்தில் , ஒரு மாநகர பேருந்து அவனை பலமாக மோதியது . அவனுக்கு இடுப்பு எலும்பு மூன்றாக நொறுங்கியது . OMR சாலையில் உள்ள Global Hospital - லில் 3 மாதங்கள் இருந்து 5 லட்சம் செலவு ஆனது . இன்னமும் முழுமையாக குணமாகவில்லை . அவனது எதிர்காலமும் பயத்துகுறியதே . ஆனால் அந்த பஸ் டிரைவர் எந்த சலனமும் இன்றி , பஸ்ஸை நிறுத்தாமல் சென்று விட்டான் . சென்னை மாநகர டிரைவர்களில் பெரும்பாலோர் சேரிபுரத்தை சேர்ந்தவர்கள் . சென்னை மாநகரம் கயவர்களின் கையில் சென்று கொண்டிருகிறது. சென்னையின் சேரிப்புற மக்களில் பெரும்பாலோர் காசுக்காக எதையும் செய்கின்றனர் . அவர்களுக்கு நியாயம், நேர்மை, சுய ஒழுக்கம் எதுவும் தேவையில்லை .மற்றும் சோம்பேறிகள். அவர்களுக்கு எல்லாம் இலவசமாக சுலபமாக கிடைக்க வேண்டும். இதை புரிந்து கொள்ள அவர்களுக்கு படிப்பறிவும் இல்லை. எந்த அரசுத்துறையிலும் திறமையான வேலையாட்கள் கிடையாது. இதற்கு முதல் காரணம் சாதிக்கு முன்னுரிமை அளிப்பதே. மேலும் ஊழல். பொது மக்களே ஊழல்வாதிகள் . தேர்தல் வந்தால் ,ஒட்டு போட பணம் கிடைக்குமென்று எதிர்பார்கின்றனர் . பிறகு அவர் எப்படி அவர்கள் தலைவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கலாம் .??? . சிந்தியுங்கள் . சென்னைக்காக , தமிழ்நாட்டுக்காக , இந்தியாவுக்காக ......
Rate this:
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
27-ஜூன்-201220:55:34 IST Report Abuse
SHivA சீரழிந்த நாட்டில் இதை எல்லாம் பார்த்து யாராவது திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தால் ..நடக்குமா.. அடுத்தவரை குறை சொல்வதை விட்டு நாம் ஒழுங்காக வண்டி ஓட்ட கத்துக்கிட்டு முறையாக பின்னர் licence வாங்கி சாலை விதிகளை (அது இன்னா என்று நிறைய பேருக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாது..) மதித்து நிதானமாக ஓட்ட வேண்டும்.. ஒழுக்கமற்ற காசை மட்டுமே குறியாக அலையும் கூட்டத்திடம் இருந்து விலகி நிற்போம்..
Rate this:
Share this comment
Cancel
Ramachandiran - Chennai,இந்தியா
27-ஜூன்-201220:06:58 IST Report Abuse
Ramachandiran பேருந்துகள் பராமரிப்பு பெயரளுவுக்குதான். மக்களின் உயிரோடு அரசாங்கமும் பேருந்து பணியாளர்களும் விளையாடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
G.SRINIVASA RAO - CHENNAI,இந்தியா
27-ஜூன்-201220:03:05 IST Report Abuse
G.SRINIVASA RAO போலிசும், உயரதிகாரிகலும் பாவம் எந்த ஓட்டுனர் அவர்களை மதிப்பது இல்லை
Rate this:
Share this comment
Cancel
Ramachandiran - Chennai,இந்தியா
27-ஜூன்-201219:55:44 IST Report Abuse
Ramachandiran மாநகர பேருந்து ஓட்டுனர்களில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை சிறிதளவுக்கூட பின்பற்றுவதில்லை. சிக்னல்களை மதிப்பதில்லை. ஆனால் போக்குவரத்து காவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதனாலதான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து காவலர்கள் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மீது காட்டும் அக்கறையை இவர்கள் மீதும் சிறிதளவு காட்டட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thilak - Chennai,இந்தியா
27-ஜூன்-201219:41:19 IST Report Abuse
Thilak மாநகர பேரூந்து இங்கு பெரும்பாலும் எமதர்மனின் வாகனமாகவே தெரிகிறது, சிக்னலில் நிற்பது கிடையாது, நிற்கும் பைக் ஓட்டுனர்களை ஒலிப்பானை அடித்து துரத்துவது, கடந்த ஒரு ஆண்டில் எத்தனை விபத்துகள், இதில் எதனை வழக்கு முடிந்தது ? போலீஸ் பேருந்து ஓட்டுனர் மேல் வழக்கு போட்டால் அவர்களின் ஒ சி பயணம் நிறுத்த படும், இல்லை என்றால் எல்லா பேருந்து ஓட்டுனர்களும் வேலை நிறுத்தம், போலீஸ் நண்பர்களே, உங்களுக்கு நிஜமாகவே வாங்கும் சம்பளம் செரிக்கிறதா ? என் தமிழகமே, நீ எங்கு செல்கிறாய் ?
Rate this:
Share this comment
Cancel
Javid N - Chennai,இந்தியா
27-ஜூன்-201219:40:26 IST Report Abuse
Javid N பஸ் விலையை உயர்த்திவிட்ட அரசு, பேருந்துகளையும் பேருந்து ஓட்டுனர்களையும் பழுது பார்க்க மறந்து விட்டதுதான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Sunil Roy - nagercoil,இந்தியா
27-ஜூன்-201219:20:54 IST Report Abuse
Sunil Roy I like the way people respond.. No one see what the root issue is, did anyone see why the Bus didnt stopped in guard rail or boundary fence. Accidents in Curbs is so common all over the world.. The guad rail should stop the vehicle.. Here in this case the Bus didnt stopped in the guard rail, whose mistake is that.. Poor quality guard rail, never crash tested.. see fix the root issue first..
Rate this:
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
27-ஜூன்-201219:05:33 IST Report Abuse
Dhanabal அரசு போக்குவரத்து கழகத்தின் பராமரிப்பு இல்லா பஸ் என்பதால், டிரைவரின் இருக்கை பகுதி முறிந்து விபத்து எனவும், டிரைவர் செல் போனில் பேசியபடி திருப்பத்தில் வண்டி ஓட்டியதால் விபத்து எனவும் காரணம் கூறப்படுகிறது.அதிக அளவில் பஸ் கட்டண உயர்வை செய்தும் கூட ,பஸ்கள் பராமரிக்கபடாத நிலை தொடர்ந்து நீடிப்பது புரியாத புதிர் . இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது ,செல் போனில் பேசிக்கொண்டே வண்டி ஒட்டுவோருக்கு ரூபாய் ஆயிரத்துக்கு குறையாமல் உடனடி அபராதம் , லைசன்ஸ் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்கா விட்டால் விபத்துக்கள் தொடர் கதையாகவே இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Rathinavel - chennai,இந்தியா
27-ஜூன்-201218:48:36 IST Report Abuse
Rathinavel சென்னை நகர பேருந்து ஓட்டுனர்கள் சரியாக ஒட்டுவதில்லை, வளைவுகளில் திரும்பும்போது மெதுவாக திரும்புவதில்லை. கடத்த வாரம் சனிகிழமை நியூ ஆவடி ரோடில் சென்னை நகர பேருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை இடித்துவிடு சென்றுவிட்டது. அந்த ஓட்டுனர் அவர்களுக்கு என்ன ஆயற்று என்று பார்க்காமல் சென்றுவிட்டான். இது அந்த ஓட்டுனரின் தவறு திருப்பதில் திரும்பும்போது மெதுவாக திரும்புவது இல்லை. சிக்னல்களை கடைபிடிப்பது கிடையாது. யாராவது சிக்னலில் நிற்கும்போது பின்னால் வந்து ஹாரன் அடித்து சிக்னல்களை கடைபிடிப்பவர்களையும் மீறி செல்ல செய்வது நகர பேருந்து ஓட்டுனர்களின் வேலை. இது சென்னை நகர பேருந்து என்பதைவிட நரக பேருந்து என்று சொல்லலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை