Why not take decision over mercy petition: Kalam | கருணை மனுக்கள் மீது விரைவில் முடிவெடுக்க முடியாதது ஏன்?கலாம் விளக்கம்| Dinamalar

கருணை மனுக்கள் மீது விரைவில் முடிவெடுக்க முடியாதது ஏன்?கலாம் விளக்கம்

Updated : ஜூலை 02, 2012 | Added : ஜூலை 01, 2012 | கருத்துகள் (42)
Advertisement
 கருணை மனுக்கள் மீது விரைவில் முடிவெடுக்க முடியாதது ஏன்?:புதிய புத்தகத்தில் கலாம் விளக்கம்

புதுடில்லி:தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம். எந்த ஒரு ஜனாதிபதியுமே, இந்த பணியை, சந்தோஷமாகச் செய்வதில்லை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதியுள்ள, "டர்னிங் பாயின்ட்ஸ்' என்ற புத்தகத்தில் கூறியுள்ளதாவது:சிரமமானதுதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலித்து, அதில் முடிவெடுப்பது என்பது, மிகவும் சிரமமான விஷயம். இது தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்னை. எந்த ஜனாதிபதியுமே, இதை மகிழ்ச்சியுடன் செய்வதில்லை. குற்றத்தின் தீவிரம், தண்டனை பெற்றவரின் சமுதாயம் மற்றும் நிதி அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொள்வதுடன், இந்த விவகாரங்களைக் கையாளும் போது, சாதாரண மனிதன் என்ன நினைப்பான் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும்.

பல கருணை மனுக்கள் நிலுவையில் இருப்பதற்கு, இதுவே காரணம். பல கருணை மனுக்கள், ஜனாதிபதி மாளிகையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இவற்றை கையாளுவது மிகவும் சிரமம். தனஞ்செய் சட்டர்ஜி என்பவரின் மனுவை பரிசீலித்தபோது, அவரது குற்றத்தின் தீவிரம் கருதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, உறுதியாக நினைத்தேன்.இவ்வாறு அதில் அப்துல் கலாம் எழுதியுள்ளார்.

யாதவ் தாக்கு:இதற்கிடையே, "டர்னிங் பாயின்ட்ஸ்' புத்தகத்தில், "கடந்த 2004 லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், தன்னை பிரதமராக்கும்படி, சோனியா கோரியிருந்தால், அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியிருப்பேன்' என, அப்துல் கலாம் எழுதியுள்ளதை, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "கலாமின் மனசாட்சி மிகவும் தாமதமாக விழித்துக் கொண்டுள்ளது.

கலாம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், அவரது இந்த கருத்து, எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சோனியா பிரதமராகும் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து வதந்திகள் நிலவி வந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கலாம் மவுனமாக இருந்தது ஏன்? உயர்ந்த பதவியில் இருப்போர், எப்போது தேவையோ, அப்போது உண்மையை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
02-ஜூலை-201223:27:56 IST Report Abuse
babu குடியரசு தலைவர் பதவி ஒரு சுகமில்லாத பதவி சந்தோஷம் இல்லாத பதவி
Rate this:
Share this comment
Cancel
DR SURESHKUMAR - VIRGINIA,யூ.எஸ்.ஏ
02-ஜூலை-201220:23:39 IST Report Abuse
DR SURESHKUMAR Honourable Dr. Kalam, I huble ion is, these two points need not have ben published.
Rate this:
Share this comment
Cancel
SELVAKUMARAN C.P. - Auckland,நியூ சிலாந்து
02-ஜூலை-201217:17:45 IST Report Abuse
SELVAKUMARAN C.P. Whatever its, you have been as useless President in your term, how do you have justified and digested to say that you would have allowed Sonia as PM, if she wants to be as, shame on you. I am doubting you that you are Indian citizen, or some where else belong to, in what way she( Sonia ) is deserved to be our PM, what eligibility she keeps. You have tarnished your entire part of life, you are not deserved for any respec position.
Rate this:
Share this comment
Cancel
Victor Christopher - sanaa,ஏமன்
02-ஜூலை-201216:37:31 IST Report Abuse
Victor Christopher ஆகையால் தான் தூக்குத் தண்டனையை நிரந்தரமாக ஒழிக்க வேண்டுகிறோம். 141 நாடுகள்(ஆதாரம்: amnesty international) தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டது. தூக்குத் தண்டனைக்கு பதிலாக நிரந்தர ஆயூள் தண்டனை வழங்கலாம். with their expense, not food only rice & other raw materials. Criminals should take care of themselves by their account.
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
02-ஜூலை-201214:23:52 IST Report Abuse
babu தூக்கு தண்டனை என்பது பய முறுத்துவதற்காகவா. இல்லை சாக்கு போக்கு சொல்லி அரசு செலவீனத்தை வீணாக்கும் கால காரணியா. காரணம் இல்லாமலா சட்டத்தில் தூக்கு என்று ஒன்று போட பட்டுள்ளது, ராஜீவ் கொலை வழக்கில் அன்றே தூக்கு போடிருந்தால் விஷயம் முடிந்தது, ராஜீவ் கொலை வழக்கும் இல்லாமல் இங்கு அதரவு கட்சிகளும் நச்சி என்று சப்தம் போடாமல் இருந்து இருக்கும், நாட்டின் பிரதமரே கொலை செய திட்டமிட்ட வர்கள் அதற்க்கு துணை போனவர்கள் இன்றும் துணை போகிறவர்கள் எல்லாருமே குற்ற வாளிகளே, நாட்டுக்கு எல்லையில் எதிரியிடம் சண்டையிட்டு தனையும் மாய்த்து கொள்ளும் துணிவே இந்திய வீரனுக்கு, சரி அதே எதிரிகள் இந்தியாவுக்குல் நுழைந்து பகமை தனத்துடன் கூடி கொட்டமிட்டு கொலை பல செய்தவர்களுக்கு தூக்கு உடனடியாக நிறைவேற்ற சட்டம் கூறும் கருத்தை சற்றும் தாமதிக்காமல் நிறைவேற்றி இருக்க வேண்டும் நிறைவேறும் என்று நம்பிக்கை இருகின்றது, ரோடில் எத்தனையோ சாவுகள் நீதி இல்லாமல் போகிறது இந்த எதிரி நாய்களுக்கு கருணை என்பது நமது கோழை தனம் ஆகி விடும், ஜனாதிபதி தம்முடய காலத்தில் எடுக்கும் முடிவுகளை எதிர்பார்ப்புகளை வெளி இடுவது ஜனாதி பதி பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று சொல்லவே கூற முடியும், சில பதிவகளை நாம் பெரும் போது விளம்பரதிற்காக இல்லாமல் பொறுப்புள்ள மனிதராக தம்மை அடையாளம் காட்டி கொள்ள வேண்டும், தன்னுடைய நன் மதிப்பை கெடுப்பதற்கும் சொந்த நாவிலேயே சூனியம் வைத்து கொண்டது போல தான், ஒருமுறை பதவி பெற்றவர்கள் மறுமுறை வர கூடாது என்று நான் எழுதினேன், கலாமும் எல்லாருமே ஆதரவும் எதிர்ப்பும் எழுதிய போது வாய் மூடியாக இருந்து விட்டு மம்தா அறிவித்த பின் கல்தா கொடுத்தார், சொன்னவருக்கும் மரியாதை இல்லை, மிகவும் எளிதாக அறிக்கை ஆரம்பத்திலேயே விட்டு இருக்கலாம் மனதில் எடுத்த முடிவு சரிஆனதாக இருந்தால், கருணை மனு என்று வரும் போது இரட்டை ஆயுளாக மாற்றி சம்பத பட்டவன் வேண்டும் போது மரணம் ஆகி விடலாம்,
Rate this:
Share this comment
Cancel
hariharan vr - coimbatore,இந்தியா
02-ஜூலை-201214:11:22 IST Report Abuse
hariharan vr யாரும் எந்த ஆணியும் புடுங்கவேண்டம். நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை ஒழுங்காக நிறைவேற்றினால் போதும். கருணை மனு என்ற ஒன்று தேவை அற்றது. இவர்கள் ஒன்றும் தேச போராட்டத்தில் தண்டனை பெறவில்லை குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதி மன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-ஜூலை-201213:01:06 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ "தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம். எந்த ஒரு ஜனாதிபதியுமே, இந்த பணியை, சந்தோஷமாகச் செய்வதில்லை," //// இதில் சிக்கல் என்ன இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. ஜனாதிபதிக்கு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்க (அவன் எத்தகைய கொடூரத்தைச் செய்தவனாக இருந்தாலும்) முழு உரிமை உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம் காரணம் இந்தியக் குடிமகன்கள் / குடிமகள்கள் ஆகியோரில் அவரே தலையாயவர் அத்தகைய ஒரு பொறுப்பு, நம்பிக்கை வைக்கப்பட்டுள்ள ஒரு பதவி அது தனக்கு (ஜனாதிபதிக்கு) ஒரு கருணை மனு உள்துறையால் (அதுதான் நடைமுறை என்று கருதுகிறேன்) பரிசீலிக்கும்படி வேண்டுகோள் விடுத்து அனுப்பப்பட்டால் அதைப் பொறுப்புடன் ஆராய்ந்து குற்றச் செயலின் தன்மை, குற்றம் இழைத்தபோது குற்றவாளியின் மனநிலை, சூழ்நிலை, வழக்கு விசாரணை நடந்த மொத்த காலம், சட்டம் குற்றம் பற்றியும், தண்டனை பற்றியும் என்ன சொல்கிறது? ஆகிய அம்சங்களை ஆராய்ந்து குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கலாமா என்பது குறித்து அவர்தான் முடிவு செய்யவேண்டும் தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து என்ன என்றால் இதில் சட்டத்தின் நிலைப்பாடு என்ன என்றுதான் ஒரு ஜனாதிபதி பார்க்கவேண்டும் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தவோ அல்லது மன்னிக்கவோ, குற்றவாளியின் சாதி, மதம், எந்த இயக்கத்தைச் சார்ந்தவன் ஆகிய விவரங்களையும் ஆராய்ந்து பார்க்க விரும்புவது கால தாமதத்தைத் தான் ஏற்படுத்தும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும் குற்றவாளியின் குற்றப்பின்னணியை மட்டும் ஆராயாமல் குற்றவாளியின் சாதி, மதம், எந்த இயக்கத்தைச் சார்ந்தவன் ஆகிய அம்சங்களையும் எடுத்துக் கொண்டால் (சுருக்கமாகச் சொன்னால் அரசியல் ரீதியான, அல்லது அரசியல் பின்னணி சார்ந்த பரிசீலனை) குழப்பமும், காலதாமதமும் மட்டுமே ஏற்படும் இந்திய ஜனநாயகத்தில் ஜனாதிபதி என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று அரசியல் சட்டத்தால் வரையறுக்கப் பட்டிருந்தாலும் அவர் அரசியலுக்கு இரையாகாமல் ஓய்வு பெறுதல் என்பது குதிரைக் கொம்புதான்
Rate this:
Share this comment
Cancel
Pongutamil - chennai,இந்தியா
02-ஜூலை-201213:00:10 IST Report Abuse
Pongutamil ஐயா எனக்கு நெறைய குழப்பம் இருக்கு. ஒரு வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி இந்தியாவின் பிரதமர் ஆக முடியுமா?. சோனியா காந்திக்கு dual சிடிசன்ஷிப் இருக்குதா?. அப்படி இருந்தால் அவர் ஏன் இன்னும் இட்டாலியன் சிடிசன்ஷிப் ஐ கான்செல் பண்ணலே?. அப்படி பண்ணாத போது அவர்களை நீங்கே எப்படி பிரதமர் ஆவதற்கு அழைப்பு விடுக்க முடியும்? . ப்ரெசிடென்ட் ஒபாமா இந்தியாவின் பிரதமர் ஆகமுடியுமா?. மனசாட்சிபடி பாத்தா உலகத்துலே எந்த தப்புக்கும் யாருக்கும் தண்டனை கொடுக்க முடியாது. ஏன்னா, உலகத்துலே ஒவ்வொருத்தர் மனசாட்சியும் ஒவ்வொருமாதிரி இருக்கும். சட்டம் நு ஒன்னு இருந்தா இந்த மாதிரி பொறுப்புலே இருக்குறவங்க அதைத்தான் first லே பாக்கணும். ஒரு ரகசியம் சொல்றேன் உங்களுக்கு. தேவையான விஷயங்களை கூட தேவை இல்லாத நேரத்துலே பேசுறது பெரும் ஆபத்தை விளைவிக்கும். நீங்க கொஞ்சநாள் அரசியல் பத்தி பேசாமல் இருங்க. ஏன்னா உங்கமேலே இந்த நாட்டு மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையும் மதிப்பும் வெச்சிருக்காங்க. கருணாநிதி குடி போதையில் கலாம் என்றால் கலகம் என்று சொன்னதை உண்மையாக்கி விடாதீர்கள். ப்ளீஸ்.
Rate this:
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
02-ஜூலை-201212:24:07 IST Report Abuse
Hasan Abdullah பிஜேபி & அதிமுக அல்லக்கைகள் எல்லாம் கலாமை வானுயர புகழ்ந்து அத்தகைய நபரை மீண்டும் ஜனாதிபதியாக்க காங்கிரஸ் மறுத்து விட்டது என்று கூறி காங்கிரஸ்-யின் மீது வசை பாடி, கலாமை அளவிற்கு மீறி புகழ்ந்து தள்ளினார்கள், ஆனால் சோனியாவை பிரதமாராக தேர்ந்தெடுக்கும் விசயத்தில் தன் நிலைபாடை கலாம் தெரிவித்தும் வானுயர உயர்த்தியவர்கள் அப்படியே அவரை பொத்தென கீழே போட்டு விட்டனர், அப்படியெனில் அவரை இதுகாறும் புகழ்ந்தது, அவரின் விஞ்ஞான அறிவிற்க்காகவோ, அவரின் தூய்மையான நிலைபாட்டிற்கவோ அல்ல, மாறாக அவரின் சோனியாவிற்கு எதிரான செயல்பாட்டிற்கு தான் எனபது, உங்களை போன்றோரின் அரசியல் தூய்மையை காட்டுகிறது. ஆனால் நாங்கள் எப்போதும் கலாமின் துறை சார்ந்த பண்பின் மீதும் அவரின் நேர்மையும் மதிக்கிறோம், ஆனால் இது வரை இந்திய நாட்டில் யாரையும் ஒருமுறைக்கு மேல் ஜனாதிபதியாக ஆக்கியது இல்லை (என் சிறு அறிவிற்கு எட்டியது) என்கிற காரணத்தாலும், அவரை போல, மற்ற திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதாலும் தான் கடந்த முறையும், இம்முறையும் கலாமின் பெயர் பரிசிலிக்கப்படவில்லை, ஆனால் பிஜேபி சொம்புகள் ஜனாதிபதி தேர்தலிலும் தங்களின் அரசியல் புத்தியை காட்டிவிட்டனர் என்பது புரிகிறது, கலாமை இவ்வளவு புகழ்ந்த இந்த பிஜேபி சொம்புகள், காங்கிரஸ் தான் அவரை ஜனாதிபதியாக மறுத்து விட்டதால், பிஜேபியினர் கலாமை பிரதமராக்க ரெடியா? என நான் அன்றே கேட்டேன், அப்போதே இந்த பிஜேபி சொம்புகள் உங்களின் உண்மையான நிறம் வெளிப்பட்டுவிட்டது. உண்மையில் நீங்கள் தான் வேஷதாரிகள், அரிதாரம் இடாத நடிகர்கள், உங்களையும், உங்கள் தலைமைகளையும் மக்கள் மீண்டும் மறுப்பார்கள், மக்கள் ஏற்கனவே இருமுறை உங்களை வனவாசம் அனுப்பினார்கள், அது மீண்டும் நடக்கும். அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சி. அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் முன்றாம் அணி ஆட்சி. எப்படியும் பிஜேபியின் வனவாசம் இன்னும் முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Raja - Chennai,இந்தியா
02-ஜூலை-201212:15:50 IST Report Abuse
Raja சோனியா பிரதமர் ஆவதை கலாம் தடுத்தார் என சொன்னவர்கள் இப்போது என்ன சொல்வார்கள் ? இவ்வளவுக்கும் இப்போதுதான் காங்கிரஸ் கலாமை ஆதரிக்கவில்லை. எனவே இப்போது கலாம் சொல்வது கண்டிப்பாக உண்மையே. சோனியா தனக்கு வந்த பதவியை உதறி தள்ளி பி.ஜே.பி.யை , கதி கலங்க வைத்தது வரலாற்று உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை