லக்னோ:புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதிர்ச்சியடைந்த மணமகள், தன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்ற சம்பவம், உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னார்வ அமைப்பின் மூலம், கழிப்பறை கட்டிய பின்னரே, தன் கணவருடன் வாழ, மணமகள் சம்மதம் தெரிவித்தார்.
உ.பி., மாநிலம், கோரக்பூர் அடுத்த, மகாராஜ் கஞ்ச் விஷ்ணுபூர் கிராமத்தை சேர்ந்தவர் அமர்ஜித். சமீபத்தில், இவருக்கும், பிரியங்கா பாரதி என்பவருக்கும், திருமணம் நடந்தது.
கழிப்பறை எங்கே?:புகுந்த வீட்டிற்கு சென்ற பிரியங்கா, கழிப்பறை எங்கே என்று, தன் கணவரிடம் கேட்டுள்ளார். நாங்கள் எல்லோரும், திறந்த வெளியில் தான் சென்று வருகிறோம்; நம் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்றார். அதிர்ச்சியடைந்த பிரியங்கா, தன் கணவரிடம், கழிப்பறையை கட்டிய பின், என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறி விட்டு, அங்கிருந்து, தன் பிறந்த வீட்டிற்கே சென்று விட்டார். இதனால், அமர்ஜித் வீட்டில், எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின், இந்த தகவல் எல்லோருக்கும் தெரிய வரவே, அந்தக் கிராமத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, "சுலாப்' என்ற தன்னார்வ அமைப்பு, பிரியங்காவின் வேண்டுகோளை ஏற்று, கழிப்பறையை கட்டித்தர முன்வந்தது.
திறப்பு விழா:சமீபத்தில், இந்தக் கழிப்பறையின் திறப்பு விழா, மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, அந்தக் கிராமமே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. பிரியங்கா பாரதியைப் போலவே, ஜோதி என்பவரும், கழிப்பறை இல்லாத வீட்டில் குடியிருக்க மாட்டேன் என குரல் எழுப்பியதை அடுத்து, இப்பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சரி தான் செய்தது,அன்றைய தினமே என் கருத்தை கூறியுள்ளேன். ஒரு கழிப்பறைக்கு கூட வசதி இல்லாத குடும்பம் நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
எனது நண்பர் அமெரிக்காவில் சொல்வர் எனது மகள்கள் இந்தியாவுக்கு சென்றால் உடனே அமெரிக்க போகணும் என்று சொல்வாளாம் ,அவருக்கும் புரியவில்லை ,காலப்போக்கில் தெரிந்தது என்னவென்றால் ஒரு கழிப்பறை கூட இந்தியாவில் வசதியாக இல்லை அது தான் காரணம் .அதை தந்தையிடம் கூற வெட்கப்பட்டு ஒன்றுமில்லை ஒன்றுமில்ல என்றே சொல்லியுள்ளாள் .....இப்படி இருக்கு நம்ம நாட்டோடு நெலமை .தலைஎழுத்து .ஒட்டு மொத்தமா திறந்த வெளியில் காலைக்கடனை முடித்ததால்.ஊரே நாறித்தான் போகும் ,சுகாதாராமும் நன்றாகவே கெடும் ,மத்திய அரசுதான் முடிவு கட்டவேண்டும் ,அவர்கள் தான் பொறுப்பு ,அவர்களுக்கு பக்க பலமாக இருப்பவர்களும் பொறுப்பு
புருஷனை விட்டு ஓட ஒரு காரணம் அவ்வளவுதான்.நாட்டில் பெரும்பான்மையான பெண்களின் மனநிலை இன்று இப்படித்தான் உள்ளது.ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி ஓட நேரமும் சாக்கும் பார்த்துக்கொண்டுள்ளார்கள் இன்றைய பெண்களில் சிலர்.மேற்படி இந்த பெண்ணுக்காக கழிப்பறை கட்டி கொடுத்தற்கு பதிலாக,அந்த தொண்டு நிறுவனம் அந்த ஆணுக்கு வேறு பெண்ணை கட்டி கொடுத்து இருக்கலாம்.அதுதான் சரியான தீர்வு,மாறாக கழிப்பறை கட்டி கொடுத்து நல்லதல்ல.இன்னும் சில நாளில் அந்த பெண் வேறு காரணம் சொல்லி ஓடுவாள் அப்போது என்ன செய்ய போகின்றது இந்த தொண்டு நிறுவனம் தெரியவில்லை??ஓட தொடங்கிய பெண் ஒவ்வென்றுக்கும் ஓடிக்கொண்டேதான் இருப்பாள்,புருஷன் வீட்டிலிருந்து ஓட தொடங்கிய கால் ஓட கொண்டேதான் இருக்கும்.அதல்லாம் ஆணின் தலை எழுத்து(மாற்றி எழுதி கொள்ளலாம்)
புருஷன் வீடு என்பதே கற்கால நாகரீகத்தின் வெளிப்பாடு. பலர் பார்க்க வெட்டவெளியில் மலம் கழிப்பதை எந்த மானமுள்ள பெண்ணும் ஒப்புக் கொள்ளமாட்டாள். அது ஒரு சுகாதாரக் கேடும் கூட. .எத்தனையோ மாப்பிள்ளைகள் உப்புப் பெறாத காரணங்ககளுக்காக மாமனார் வீட்டைத் தவிர்க்கின்றனரே அவர்களை ஒடுகாலன் எனவா திட்டுகிறீர்கள். செல்போனுக்கு செலவு செய்யும் குடும்பங்கள் கழிப்பறையை ஆடம்பரமாகக் கருதுவதை இப்போது இளம் பெண்கள் தைரியமாக எதிர்க்கின்றனர். அவர்களுக்கு பல அரசு,மற்றும் சமூக நிறுவனங்கள் பாராட்டு, பரிசுகளைத் தருகின்றன. உங்கள் எழுத்தில் உங்களுக்களிக்கப்பட ஆணாதிக்க மதக் கருத்துக்கள் தொனிக்கின்றன. அப்படிப் போதிப்பவர்களைத் தவிரூங்கள் கழிப்பறை ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் அடிப்படை மானப் பிரச்னை உங்கள் வீட்டுப் பெண்களை அப்படி வெட்டவெளியில் கழிக்கவிடுவதை விரும்புவீர்களா? வெட்கக்கேடு...
@MADUKKUR S.M.SAJAHAN உங்களது கருத்து மிகவும் கண்டிக்க தக்கது.... இன்னும் எவ்வளவு நாள் தான் பெண்களை இம்மாதிரி குற்றச்சாட்டு சொல்லி சொல்லி குட்டபோகிரீர்கள்?? உங்களை மாதிரி ஆட்களுக்கெல்லாம் நன்கு தெரிந்திருக்கிறது எப்பேர்பட்ட தைரியசாலி பெண்ணாக இருந்தாலும் அவளை குறைந்த பட்சம் ஒரு அரைமணி நேரத்திற்கு செயலிழக்க செய்ய வேண்டுமானால் அவளது ஒழுக்கத்தை சந்தேகப்பட்டு பேசினால் போதும் என்று.. ஒருவேளை பெண்கள் கழிப்பறையை பயன் படுத்த கூடாது திறந்தவெளியை தான் பயன்படுத்த வேண்டும் என்று இறைவன் சொல்லியிருக்கிறார் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்.. உங்களை மாதிரி கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆட்களெல்லாம் காணாமல் போகும் காலம் விரைவில் வரும்.. அந்த பெண்ணால் இன்று ஒரு குடும்பமே கழிப்பறையை பயன் படுத்த போகிறது அதை பார்த்து பல குடும்பங்கள் திருந்த போகிறது.. உண்மையில் அந்த பெண்ணை பாராட்ட வேண்டும்.....
கழிப்பறை மிகவும் முக்கியம் நண்பரே. திறந்தவெளியில் பெண்களுக்கு மிகவும் சிரமம். கேரளாவில் பெரும்பான்மையோர் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளது. மழை காலங்களில் மிகவும் சிரமம். எவ்ளவோ வீண் செலவுகள் செய்கின்றோம். கழிப்பறை கட்டிகொள்வதில் அதிகம் செலவாக போவதில்லை. நாம் தற்பொழுது கல் காலத்தில் இல்லை. நண்பர் ஷாஜகான் புரிந்துகொள்ள வேண்டும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.