மருத்துவம் பயில ஆசைப்படும் மாணவர்களுக்கு நல்ல செய்தி:3,595 எம்.பி.பி.எஸ்., இடங்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது. இந்த ஆண்டு மருத்துவக் கல்வித் துறை புதிதாக 3,595 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள்ளது.

இதில், புதிதாக துவக்கப்படும் 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,400 மாணவர்களைச் சேர்க்க, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர, ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 1,195 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எம்.பி.பி.எஸ்., படிப்பில் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கூடுதலாக 3,595 மாணவர்கள் சேரலாம்.

எய்ம்ஸ் நிறுவனங்கள்:புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களில், 300 இடங்கள், பல மாநிலங்களில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் துவங்கும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற, ஆறு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர, புதிதாக 1,442 முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களையும், இந்திய மருத்துவக் கவுன்சில் உருவாக்கியுள்ளது. இவற்றில், எம்.டி., - எம்.எஸ்., என, தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1,326 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற 116 இடங்கள், டி.எம்., - எம்.சி.எச்., ஆகும்.

அரசு துறையில் ஒன்பது:இந்திய மருத்துவக் கவுன்சிலால் புதிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 20 மருத்துவக் கல்லூரிகளில், ஒன்பது கல்லூரிகள் அரசுத் துறை சார்ந்தவை; 11 கல்லூரிகள் தனியார் துறை சார்ந்தவை. புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் செயல்பாட்டிற்கு வந்தால், நாட்டில் மொத்தம் 355 மருத்துவக் கல்லூரிகள் இயங்கும். அவற்றில், 45 ஆயிரத்து 569 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருக்கும்.கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள்ளதன் மூலம், நாட்டில் டாக்டர்கள், நோயாளிகள் வீதம் தற்போதுள்ள 1:2000 என்ற அளவிலிருந்து வரும் 2021ம் ஆண்டில், 1:1000 என்ற அளவில் குறையும். அத்துடன் வரும் 2021ம் ஆண்டிற்குள், எம்.பி.பி.எஸ்., இடங்கள், தற்போதுள்ள 41 ஆயிரத்து 569லிருந்து, 80 ஆயிரமாக உயரும். முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள், 22 ஆயிரத்து 194லிருந்து, 45 ஆயிரமாக அதிகரிக்கும். தற்போது டாக்டர்களின் பற்றாக்குறை எட்டு லட்சம் என்ற அளவில் உள்ளது. அதைப் போக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

66 சதவீதம் :அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் உள்ள தற்போதுள்ள 355 மருத்துவக் கல்லூரிகளில், 66 சதவீத கல்லூரிகளும், மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களில் 69 சதவீத இடங்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ளன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pachaitamizhan Indian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூலை-201218:41:40 IST Report Abuse
Pachaitamizhan Indian இன்றைய நிலையில் வெறும் MBBS படித்துவிட்டு பெரிதாக ஒன்றும் சம்பாதித்து விட முடியாது. பெண்கள் DGO , ஆண்கள் MD , MS ,DCH , DLO ,DPM என்று எதாவது SPECILISATION செய்தால்தான் ஓரளவு மதிப்பும் வருமானமும். அரசு கல்லூரிகளில் இந்த படிப்புகளுக்கு இடமும் கம்மி , போட்டியும் அதிகம். பணம் செலவழித்து , படித்து ஒரு டாக்டர் நன்றாக சம்பாதிக்க ஆரம்பிக்கவே 30 வயது ஆகிவிடும். அதுவரை கல்யாணம் ,குழந்தை என்று தாக்குபிடிக்க வசதியான பின்புலம் வேண்டும். இதில் கைராசி என்ற பேர் எடுக்க வேண்டும். அவர்கள் பாடும் திண்டாட்டம்தான். டாக்டர்களின் எண்ணிகையை வேண்டுமானால் பெருக்கலாம் . என்ஜினியர்கள் மாதிரி பல்கி பெருகட்டும். திறமை உள்ளவர்கள் முன்னேறுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Safiullah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூலை-201213:04:04 IST Report Abuse
Safiullah நல்ல செய்தி ஆனால் சேவை மனப்பான்மை உள்ள மருத்துவர்கள் கிடைப்பார்களா???? என்ன செய்வது ஏற்கனவே மருத்துவர்கள் நோயை பணமாக்கி(blood /urine /xray /scan /ecg test .............Medicine) ரணமாக்கி(Side -effect ) குணமாக்கி(சரியாகும் ஆனால் நிரந்தரம் அல்ல) இறுதியாக ?????? மரணிக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
02-ஜூலை-201212:07:51 IST Report Abuse
ஆனந்த் கோடிகளை கையில் வைத்து காத்து கொண்டு இருக்கும் பல பெற்றோருக்கு ஒரு இனிப்பான செய்தி..கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எவனோ ஒருவனுக்கு மருத்துவ படிப்பு என்ற பெயரில் தானமாக கொடுப்பது பெரிய விஷயம். மருத்துவ கல்லூரிகள் நடத்தும் வியாபாரிகளுக்கு நல்ல வேட்டைதான்
Rate this:
Share this comment
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூலை-201211:30:05 IST Report Abuse
gummanguthu gopi மொத்தமுள்ள 45 ,569 இடங்களில் சுமார் 36000 இடங்கள் தனியார் கல்லூரிகளில் உள்ளன. ஒரு சீட்டிற்கு 50 லட்சம் என்றால் 18000 கோடி கருப்பு பணம். ஆனாலும் mmc இல் பயின்றவருக்கு மிகப்பெரிய தனியார் மருத்துவ மனையில் மாத வருமானம் சுமார் 5000 மட்டுமே
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
02-ஜூலை-201209:44:46 IST Report Abuse
Tamilan மக்கள் வரி பணத்தில் படித்து விட்டு ............. வெளி நாட்டிற்க்கு பறக்கும் மகத்தானவர்கள்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
02-ஜூலை-201207:59:57 IST Report Abuse
rajan ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன் எனும் பழமொழி உண்மையாகும். இந்த தனியார் கோட்டாவில காசு கொட்டி படித்தவன் டாக்டர் ஆகி எதனை பேரிடம் எப்படி எல்லாம் வசூல் பண்ண போரனோ தெரியல்லே. எல்லாம் வசூல் ராஜா கதையாகி விட்டது
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
02-ஜூலை-201207:56:27 IST Report Abuse
rajan பொறியியல் கல்வி வியாபாரம் முடிஞ்சு இப்போ மருத்துவ கல்வி வியாபாரம் துவங்கியாச்சு. ஒவ்வொரு சீட்டுக்கும் லட்சம் கோடின்னு கருப்பு பணம் புழங்கும் அப்புறமேல போய் நாட்டின் வளர்ச்சி குறையுது அது குறையுதுன்னு புலம்புரதுல என அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
02-ஜூலை-201207:49:33 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN T.G.Balasubramanian., Australia. மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப் படுவது வரவேற்கத்தகுந்ததே. மருத்துவர்களின் தேவையை சரி செய்யும் நோக்கும் நல்லதே. பெரும்பாலான வெளி நாடுகளிலும் மருத்துவக் கல்வி என்பது விரும்புபவர்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. மருத்துவர்களின் பற்றாக்குறை நீடிக்கும்வரை சேவை தரமும் குறைவாகவே இருக்கும். மருத்துவச் செலவும் அதிகமாகவே இருக்கும். ஏட்டுப்படிப்பு குறைந்து தரமான கல்வி அறிவு உள்ளவர்கள் மருத்துவத் துறைக்கு வந்தால் திறமை அதிகரிப்பதோடு சேவை மனப்பான்மையும் கூடும். லஞ்சமும் ஓரளவு குறையும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
02-ஜூலை-201207:00:57 IST Report Abuse
ஆரூர் ரங இருக்கும் பெரும்பாலான கல்லூரிகளின் ஆசிரியர்கள் கிடையாது. சடலங்கள் பற்றாக்குறை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளையே காணோம். அதிக இடங்கள் யாருக்கு?
Rate this:
Share this comment
Cancel
stanislas - vailankanni,இந்தியா
02-ஜூலை-201205:50:35 IST Report Abuse
stanislas மருத்துவக் கல்லூரிகளின் மவுசைக் குறைக்க அதன் எண்ணிக்கையை கூட்டுவதும் தனியார் கல்லூரிகளின் பெருக்கத்தை அனுமதிப்பதும் அவசியம். தரம் பற்றி பேசவில்லை..தவிர,மக்கள் பெருக்கத்திற்கேற்ப மருத்துவர்கள் இல்லை என்பதும் அறிந்த செய்தி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்