Sonia was Constitutionally eligible to be PM: Kalam | “ சோனியா பிரதமராக தகுதி படைத்தவர்” - சொல்கிறார் கலாம் | Dinamalar
Advertisement
“ சோனியா பிரதமராக தகுதி படைத்தவர்” - சொல்கிறார் கலாம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: இந்திய குடியுரிமை பெற்றிருப்பதால் சட்டப்படி சோனியா பிரதமராகும் தகுதி அவருக்கு உள்ளது என்று நொய்டாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல்கலாம் நிருபர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். இவர் கூறியதாவது: காங்., தலைவர் சோனியாவை பொறுத்தவரை அவர் இந்திய குடியுரிமை பெற்ற பிரஜை. இதனை சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக்கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பான கோர்ட் ஒத்துக்கொண்டதன்படி சோனியா பிரதமராகும் தகுதி உள்ளவர்.


மெஜாரிட்டி பெற்ற ஒரு அரசியல் கட்சியாக இருந்ததால் அவரை பிரதமராக்கிட முடிவு செய்தது. ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மன்மோகன்சிங்கை அமர்த்தினார். இது குறித்து நான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன் என்றார்.


ஏற்கனவே இவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும் தமது கருத்தை மீண்டும் ஆழமாக கூறியுள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velmurugan Subramanian - kudankulam,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-201222:06:32 IST Report Abuse
Velmurugan Subramanian இது தமிழின் வார்த்தை பிரயோக பிழையா அல்லது தர்க்கமற்ற பேச்சா? இவர் ஏன் 110 கோடி இந்தியர்களை பற்றி பேசவில்லை? குடியுரிமை தேவையான ஒன்று அதுவே போதுமானது அல்ல தகுதியை கொடுப்பதற்கு. சோனியா பிரதமராக எத்தனை MP க்களின் ஆதரவு உள்ளது?. எத்தனை MP க்கள் அவரை முன்னிறுத்தி தான் MP க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் ? காங்கிரசுக்கு ஆதரவு என்பதற்கும் சோனியாவிற்கு ஆதரவு என்பதற்கும் வேறுபாடுகள் இல்லையா? கலாம் எந்த ஒரு இந்தியனும் பிரதமர் ஆகலாம் என்ற சாதாரண விஷயத்தை மைக் பிடித்து கூற விரும்பினால் தான் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டிருந்தால் சோனியாவின் பெயரை குறிப்பிடாமல் கூறலாம். அல்லது பலமுறை குடும்ப முதலமைச்சராக இருந்து அரசியல் அனுபவம் பெற்ற ஒரு தலைவரையோ, ஏமாற்றம் செய்தாவது மத்திய அமைச்சராக பல முறை இருந்து வரும் இன்னொருவரையோ பற்றி பேசியிருக்கலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Murali - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-201222:00:21 IST Report Abuse
Murali முத்தமிழ் அறிஞர் அவர்களின் கூற்று உண்மையோ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
sureshkrish - tirunelveli,இந்தியா
03-ஜூலை-201220:58:37 IST Report Abuse
sureshkrish ஜால்ரா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Karthikeyan Murugesan - Chennai,இந்தியா
03-ஜூலை-201220:42:30 IST Report Abuse
Karthikeyan Murugesan வி அக்ரீ யுவர் points
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
buvan - bangalore,இந்தியா
03-ஜூலை-201220:15:52 IST Report Abuse
buvan சட்டப்படி அது சரின்னு தானே சொல்லிருக்காரு. இதுல என்னயிருக்கு. இந்தியாவுல பொறக்குற ஆடு மாடு நாய் கூட இந்தியப்பிரஜை தான், அது தவிர சட்டப்டடி கூட பிரஜை ஆகமுடியும். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகள்ல, இங்கே பொறந்த பல தமிழர்கள் அங்கே பிரஜைகள் ஆகலையா? பல இந்தியர்கள் டூயல்-சிடிசன்சிப் வச்சுக்கலயா? நமக்கு அன்னை சோனியா ஆகாதுங்குறது வேற விஷயம். கொளப்பிக்காதீங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Navas ahamed Shahib - riyadh,சவுதி அரேபியா
04-ஜூலை-201201:36:59 IST Report Abuse
Navas ahamed Shahibபுவன் கரெக்டா சொன்னிங்க, சங்மா தோற்க போறதுனால இந்த செய்தியை பெருசாகி கலாம் அவர்களின் பெயரை கேட்ட பெயர் ஆக்குகிறார்கள்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
abdulrahim - dammam ,சவுதி அரேபியா
08-ஜூலை-201209:48:15 IST Report Abuse
abdulrahimநேபாளத்தின் பிரதமர் இந்தியர், அமெரிக்க தீவுகளில் ஒன்றான பிஜி தீவின் அதிபர் இந்திய வம்ச வழியை சேர்ந்தவர், அமெரிக்க செனட் சபையின் உறுப்பினாராக ஒரு இந்தியர், ஆக வேறு நாட்டு பிரஜை ஆனா இந்தியன் அங்கெல்லாம் ஆளலாம் ஆனால் இந்தியனை ஆள்வதற்கு மட்டும் இந்தியன், இந்தியன் என்ற வெற்று கோஷம் நல்ல நியாயம்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
03-ஜூலை-201218:57:05 IST Report Abuse
aymaa midas=vison2023 அய்யா கலாம் அவர்களே தங்களுக்கு என்னாயிற்று... தேவையில்லாமல் பிதற்றாதீர். இரட்டை குடியுரிமை உள்ளவர் சும்மாவே அவர் உறவினர்களை வைத்து ஏகமா ஆட்டைய போட்டு இருக்கார். இன்னும் அதிகாரத்தை கொடுத்தா நிச்சயம் மீண்டும் ஒரு முறை இந்தியா அடிமைப்பட வேண்டிவரும், அய்யா நீங்க தான் இந்த கருத்தை சொன்னீர்களா. இந்த சொம்பு தினமலர் இட்டுகட்டி எழுதுதானு சந்தேகமாக இருக்கு. உங்கள் கருத்தை தேச பற்று உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் பதவி ஒன்னும் காட்பரெட் கம்பெனி சேர்மன் பதவி அல்ல என்பதை உணர்ந்து பேசுங்கள், முடியல ஆமாம் சொல்லிபுட்டேன், வீணா உங்க நன்மதிப்பை கெடுத்துக்கொண்டு வடிவேலு லெவலுக்கு போய்டாதீங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
03-ஜூலை-201217:50:24 IST Report Abuse
s.maria alphonse pandian கொண்டுள்ள கருத்தில் உறுதியாக இருக்கும் கலாம் பாராட்டுக்குரியவர்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
03-ஜூலை-201217:34:28 IST Report Abuse
Babu. M கலாம் இது இந்தியா, இத்தாலி இல்லை. அவர் ஊரில் அவர் ஆகட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
03-ஜூலை-201217:12:59 IST Report Abuse
GURU.INDIAN நம் நாட்டில் யார் கோர்ட்டையும் அரசியல் அமைப்பு சட்டத்தையும் ஏற்கிறார்கள் ? மதிக்கிறார்கள் ? அந்த நீதிபதிகளும்கூட இப்போது ஊழலில் மிதக்கிறார்களே .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pambanathaan - Jeddah,சவுதி அரேபியா
03-ஜூலை-201217:08:56 IST Report Abuse
Pambanathaan இவர் கூறியுள்ள உண்மை பலருக்கு ஏன் எரிச்சலை ஏற்படுத்துகின்றது? பல மாதங்களுக்கு முன் அல்லது வருடத்திற்கு முன் புத்தகம் எழுதும்போது சொல்லப்பட்டது. இப்போதைய சூழ்நிலைக்காக சொல்லப்பட்டதல்ல. சட்டப்படி பிரதமர் பதவிக்கு சோனியா தகுதியானவரே. அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் வீண் பிரச்சினை வேண்டாம் என்றே ஒதுங்கினார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்