புதுடில்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக கோல்கீப்பர் பரத் சேத்ரி நியமிக்கப்பட்டார். லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில் 8 முறை தங்கம் வென்ற பெருமைமிக்க இந்திய ஹாக்கி அணி பங்கேற்கிறது. இதற்கான 16 பேர் கொண்ட அணியை "ஹாக்கி இந்தியா' அமைப்பு நேற்று அறிவித்தது. யுவராஜ் வால்மீகி, ருபிந்தர் பால் சிங் நீக்கப்பட்டு, அனுபவ வீரர்களான இக்னேஸ் டர்க்கி, குர்விந்தர் சிங் சாண்டி வாய்ப்பு பெற்றனர். சர்வன்ஜீத் சிங், கோத்தாஜித் சிங்கும் ஆகிய இருவரும் லண்டன் செல்வர். 16 பேரில் யாருக்காவது பெரிய அளவில் காயம் ஏற்பட்டால், இவர்கள் அணியில் சேர்க்கப்படுவர்.16 வீரர்கள் கொண்ட அணி:பரத் சேத்ரி(கேப்டன்), சர்தார் சிங்( துணைக் கேப்டன்), சுனில், சந்தீப் சிங், ஸ்ரீஜஸ், ரகுநாத், இக்னேஸ் டர்க்கி, குர்பாஜ் சிங், பிரேந்த்ரா லக்ரா, மன்பீரித் சிங், சிவேந்திரா சிங், குர்விந்தர் சிங் சாண்டி, டேனிஷ் முஜ்தபா, துஷார் கண்டேகர், தரம்வீர் சிங், உத்தப்பா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.