புதுடில்லி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்களுக்கான உணவு தயாரிக்கும் அசுத்தமான "கிட்ச்சனில்' கரப்பான் பூச்சிகள் தாராளமாக ஓடுகிறதாம். இப்படி உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், பதக்க கனவு எப்படி நனவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் புனே, போபால், சோனேபட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இங்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து பயிற்சி முகாம்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள முன்னாள் வீரர் கஜான் சிங், அரியானாவின் சோனேபட் பயிற்சி முகாமில் திடீரென சோதனை மேற்கொண்டார். இங்கு தான் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுப்பது சோதனையில் அம்பலமானது.இது குறித்து 1985ல் நடந்த ஆசிய விளையாட்டு நீச்சலில் வெள்ளி வென்ற கஜான் சிங் கூறியது: பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். "கிட்ச்சன்' மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது. இக்குறைகளை சுஷில் குமார் போன்ற முன்னணி வீரர் கூட எடுத்துச் சொல்ல தயங்கியது வியப்பு அளித்தது. குறை சொன்னால், அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட வீரர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்த பயம் காரணமாகவே எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றனர்.நான் ஆய்வு செய்த போது, "மெனு'வில் குறிப்பிடப்பட்டிருந்த <உணவுகள் எதுவுமே பரிமாறப்படவில்லை. இந்த முகாமிற்கான சமையல்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில், பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு கஜான் சிங் கூறினார்.சமையல் ஒப்பந்தம் பெற்றவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து சோனேபட் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் சஞ்சீவ் சர்மா கூறுகையில்,""சமையல் ஒப்பந்தக்காரர் ஜெயினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். நினைத்த நேரத்தில் ஒப்பந்தக்காரரை வெளியேற்ற முடியாது,''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அட மு.... பசங்கலா , சட்டம்னா நம்ம போட்ட அக்ரீமென்ட் தானே, அந்த அக்ரிமென்டில் உடனடியாக அக்ரிமென்டை கான்செல் பண்ண எந்த சரத்தும் இல்லையா. நீங்க உடனே கான்செல் பண்ண வில்லை என்றால் ஒலிம்பிக் முடிந்துவிடும். எல்லாம் லஞ்ச லாவண்யம் பண்ணுகிற வேலை.. என்றைக்கு ஒளிரப்போகிரோம் என்று தெரிய வில்லை. கொஞ்சம் ஒளிர்ந்து கொண்டிருக்கிற வீரர்களைக்கூட இந்த சுயநலவாதிகள் அனைத்து விடுவார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.