CMDA approves for change new seceretriate into Hospital | புதிய தலைமை செயலக கட்டடம் மருத்துவமனையாக்க சி.எம்.டி.ஏ., ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய தலைமை செயலக கட்டடம் மருத்துவமனையாக்க சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

Updated : ஜூலை 04, 2012 | Added : ஜூலை 03, 2012 | கருத்துகள் (23)
Advertisement

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவ மனையாக மாற்றும் பணிகளுக்கு, சி.எம்.டி.ஏ., திட்ட அனுமதி வழங்கி உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம், சட்டசபைக்கான கட்டடம் கட்டப் பட்டது. ஆட்சி மாறியதும், புனித ஜார்ஜ் கோட்டைக்கே, தலைமைச் செயலகம், சட்டசபை மாற்றப் பட்டது. "புதிய தலைமைச் செயலக கட்டடம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்,' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

வழக்கு: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐகோர்ட்டில், வீரமணி என்பவர் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், கட்டுமானத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என, இடைக்கால உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. "மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மாநில அளவிலான சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆய்வு ஆணையம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, கடந்த மே மாதம் 16ம் தேதி, ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, மத்திய சுற்றுப்புறச் சூழல் ஆணையத்திடம் இருந்து, தனியாக தான் ஒப்புதல் பெற வேண்டியதில்லை,' என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வழக்கு, வரும் 17ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கட்டடத்தில் மாற்றம் செய்வதற்கு, திட்ட அனுமதி வழங்க, அடுக்குமாடி கட்டட குழு அளித்த பரிந்துரைக்கு, வீட்டுவசதி துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. தீயணைப்புத் துறையிடம் இருந்து, புதிதாக தடையின்மை சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்காக, புதிதாக திட்ட அனுமதி கோரி, பொதுப்பணித்துறை சார்பில், சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

சி.எம்.டி.ஏ., அனுமதி: இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்காக, புதிய திட்ட அனுமதி கோரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சார்பில், விண்ணப்ப மனு அளிக்கப் பட்டிருந்தது. வளர்ச்சி விதிகள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்கு, திட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கடந்த மாதம் 18ம் தேதியிட்ட கடிதம், பொதுப்பணித் துறைக்கு அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
poiyyan - doha,கத்தார்
04-ஜூலை-201218:55:50 IST Report Abuse
poiyyan ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்காக, புதிய திட்ட அனுமதி தரக் கோரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சார்பில், மிரட்டல் மனு அளிக்கப் பட்டிருந்தது.காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்கு, திட்ட அனுமதி பெறப்பட்டு உள்ளது. இப்படி இருக்கவேண்டிய வசனம் மாற்றி பிரசுரிக்கப்பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
Mugundhan - Chennai,இந்தியா
04-ஜூலை-201218:11:55 IST Report Abuse
Mugundhan என் உடன் பிறவா அண்ணன் தம்பிகளே, வணக்கம். நம்மை யாரோ ஏமாற்றுகிறார்கள் - அது வேறு யாரும் இல்லை கருணாநிதியும் , ஜெயலலிதாவும் தான். 450 கோடி நம்முடைய பணம் , மக்கள் விருப்பம் கேட்கமால் இதனை பற்றி முடிவேடுபதுற்கு யாருக்கும் அருகதை இல்லை, என்னென்றால் அது அவர்கள் பணம் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-201217:47:19 IST Report Abuse
Appavi Tamilan என்ன அருமையான ஆட்சி...மக்கள் குறைகளை தீர்ப்பதில் என்ன ஒரு முன்னுரிமை? அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை எள்ளளவும் இல்லை...ஊழல் சிறிது கூட இல்லை...அமைச்சர்கள் எப்போதும் தொகுதி மக்களின் குறை கேட்பதும் அவற்றை தீர்பதுவுமாக உள்ளனர்...கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் இல்லவே இல்லை..கவுன்சிலர்கள் அராஜக ஆட்டம் போடுவதில்லை...இப்போது இந்த கட்டிடத்தை மாற்றுவது மிக முக்கியமானது..மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு முடிவு...த்த்தூஉ ..என்ன கேவலமான ஆட்சிடா இது...
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
04-ஜூலை-201217:27:45 IST Report Abuse
Divaharan ஈகோ நோயை இந்த மருத்துவமனையில் குணப்படுத்த முடியுமா ? இரு கழகங்களின் இடையில் சிக்கிக்கொண்டு அவஸ்தை படும் அரசாங்கத்திற்கு வைத்தியம் செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
04-ஜூலை-201214:31:24 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இந்த கட்டிடம் சென்னையில் ( இந்தியாவிலேயே ) உள்ள மிக அரிதான எண்ணிக்கையில் உள்ள பசுமை கட்டிடமாகும், இதன் அமைப்பை மாற்றுவது நல்லதும் அல்ல அது அவ்வளவு சுலபமானதும் அல்ல, பசுமை கட்டிடத்தை பற்றி தெரிந்தோருக்கே, இதன் அருமை புரிந், இந்த முன்னால் பச்சையம்மாவுக்கு, இதெல்லாம் புரியாது, " ECHO " மட்டுமே தெரிந்தவர். நம் தலைவிதி. ம்..ம் ..ம் ....
Rate this:
Share this comment
Cancel
Arasan - chennai,இந்தியா
04-ஜூலை-201214:21:18 IST Report Abuse
Arasan அநியாயம் அக்கிரமம் நடக்க போகிறது. தடுக்க யாரும் இல்லை. மக்கள் பணம் கொள்ளை போகப்போகிறது மக்களின் கண்முன்னே, யார் தடுப்பது. நல்லோர் யாரும் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
abdulrahim - dammam ,சவுதி அரேபியா
04-ஜூலை-201213:34:09 IST Report Abuse
abdulrahim அம்மையாரின் ஆட்சி காலத்திலும் சட்ட மன்றத்தை மாற்றி புதிய கட்டிடிடம் கட்ட முனைந்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா.. பல்லாண்டுகளாக பல பட்டதாரிகளை உருவாக்கி குன்றாத பெருமையுடன் திகழ்ந்து கொடிருக்கும் மிகபழமை வாய்ந்த பெருமை கொண்ட ராணி மேரி கல்லூரியை. இதற்க்கு அன்றைய எதிர்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதா அரசு அதை கை விட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் முந்தய அரசு பயனற்று கிடந்த ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டியது. தங்களால் முடியாத ஒன்று இவர்களால் சாத்தியமாகி புகழ் சேர்கிறதே என்ற காழ்ப்புணர்ச்சி தான் இந்த நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
04-ஜூலை-201212:15:00 IST Report Abuse
arabuthamilan அம்மாவின் முட்டாள் தனத்துக்கு கிடைத்த அனுமதி. வேறொன்றுமில்லை. இது இவருடைய வெறும் அறிக்கை போலத்தான் இருக்கும். நிறைவேற போவதில்லை. இவர் இதுவரை அறிக்கை கொடுத்து ஏதாவது நிறைவேறியிருக்கிறதா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-ஜூலை-201211:42:24 IST Report Abuse
villupuram jeevithan இப்போது தற்காலிக சிறைச்சாலையாக உபயோகித்துக் கொள்ளலாமல்லவா?
Rate this:
Share this comment
Cancel
ice reuben - ice,ஐஸ்லாந்து
04-ஜூலை-201211:37:22 IST Report Abuse
ice reuben இது ஆனாய் பிறந்து வளர்ந்தவரை ஆபரேஷன் மூலம் பெண்ணாய் மாற்றுவதை போல் உள்ளது .அதிமுக அரசுக்கு ஒரு புதிய மருத்துவமனை கட்ட இடம் கிடையாதா என்ன? இப்படி மக்களின் பணத்தை வீணாக்குகிறார்களே ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை