காங்கேயம்: சென்னையை சேர்ந்த பக்தருக்கு, ஆண்டவன் கொடுத்த உத்தரவின் பேரில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பட்டு வேட்டி, துண்டு ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவவாக்கிய சித்தர் வழிப்பட்ட தலம். பிரசித்தி பெற்ற இம்மலைக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் சன்னிதானம் அருகே, "ஆண்டவன் உ<த்தரவு பெட்டி' என்ற, பெட்டி உள்ளது.பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, குறிப்பிட்ட ஒரு பொருளை அந்த பெட்டியில் வைக்குமாறு கூறுவார். அந்தப் பொருளை கோவில் நிர்வாகத்திடம் பக்தர் ஒப்படைப்பார். பக்தர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, கருவறையில் அந்தப் பொருளை வைத்து, சுவாமியிடம், பூ போட்டு உத்தரவு கேட்கப்படும்.
உத்தரவு சரியென வந்தால், பக்தர் கொண்டு வந்த பொருள், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை, அந்தப் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடக்கும். இப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் அல்லது அது சம்பந்தப்பட்ட தொழிலில் முதலில் சரிவும், பின்னர் ஏற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
துப்பாக்கி குண்டு வைத்த போது, கார்கில் போரும், அதைத் தொடர்ந்து நம் தேசத்துக்கு வெற்றியும் கிடைத்தது. மூன்றாண்டுக்கு முன் எலுமிச்சை வைக்கப்பட்டபோது, எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்தது. தேங்காய் வைக்கப்பட்டபோது, அதன் விலை உயர்ந்தது. தென்னங்கன்று வைக்கப்பட்டபோது, "யூரியோபைட்' நோய் தாக்கப்பட்டு, தென்னை மரங்கள் அழிந்தன. நாட்டு சர்க்கரை வைத்தபோது, கரும்பு கொள்முதல் விலை, 1,800 ரூபாயாக உயர்ந்தது.
நடப்பாண்டு ஜன., 13ல், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியன் கொண்டு வந்த, ஆற்று நீர் ஒரு சொம்பில் வைக்கப்பட்டது. அப்போது, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையும், பழவேற்காடு ஏரி, ஈரோடு அருகே காவிரியாற்றில் மூழ்கி பலர் பலியான சம்பவமும் நடந்தது. பருவமழையும் ஏமாற்றி வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்தது.ஜூலை 2 ல், இக்கோவிலுக்கு வந்த, சென்னை, அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன், பட்டு வேட்டியும், துண்டும் கொண்டு வந்தார். மூலவர் உத்தரவு கிடைத்ததால், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பட்டு வேட்டி, துண்டு வைக்கப்பட்டது. இதன் மூலம், திருமணம் அதிகமாக நடப்பதுடன், ஜவுளித் தொழிலும், பட்டுத் தொழிலும் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என, பக்தர்கள் கருதுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
just sick and tired of this 1000 periyar comments. There is no one in this world who is more blind than these DK, DMK and ADMK followers. Just one Periyar is needed to correct these blind followers. In these parties there is no democracy. Only one person rules...and rest put Jalra. You cannot critisize a thalivar. Will Periyar come back to correct these blind followers?...
உடன் ஒரு பஸ் டிக்கெட், ஒரு செம்பு பால் , ஒரு மின்சாதனம், ஒரு அரசு கோப்பு, ஒரு பள்ளிகூட கட்டிடம், ஒரு மருத்துவர் ச்டேதேஸ்கோப்பு , ஒரு செம்பு குளத்து நீர், ஒரு செம்பு கடல் நீர், சில கருங்கல் சல்லி, ஒரு ரிப்பன் கட்டிட படம், ஒரு ஒட்டு போடும் எந்திரம், ஒரு போலீஸ் தொப்பி, கொஞ்சம் ஆத்து மண், ஒரு தமிழக / இந்திய படம், இதை வைத்து விட்டால் நல்லது . பஸ் கட்டணம் குறயும், பால் விலை குறைந்து போகும், மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கும், லஞ்சம் இல்லாமல் அரசு கோப்புகள் நகரும், கல்வி தரம் ஓயரந்து ஆசிரியர்கள் இடம் மாறுதல் லஞ்சம் இல்லாமல் கிடைக்கும், கிராமத்து மருத்துவ மனைகளில் சிகிச்சை கிடைக்க மருத்துவர் தாதியர் இருப்பார்கள், ஆக்ரமிக்க பட்ட குளம் குட்டைகள் திரும்ப வடிவம் பெறும், கடல் அரித்து நிலம் உள் வாங்காமல் இருக்கும், சாலைகள் குண்டு குழி நீங்கும் , சென்னை மாநகர கவுன்சிலர் ஆதிக்கம் ஒழியும்..இன்னும், லஞ்சம் வாங்காமல் வாக்கு அளிப்பார்கள் பணம் கொடுக்காமல் நேர்மயாய் தேர்தல் நடக்கும் அப்புறம், வேலி பயர் மேயும் காவல்துறை சீர்படும், அடவடி செய்து ஆத்து மண் கொள்ளை ஒளிந்து ஆறுகள் உயிர் பெறும் , ஒட்டு மொத்த தமிழகம்/ இந்தியா இந்த அரிசியல்வாதி அரசு அதிகாரிகள் வசமிருந்து விடுதலை பெற்று நலம் பெறும் . சாமிக்கு தலை சுத்தும்.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.