தொடர் விபத்துக்கு காரணம் சதியா? அனல் மின் நிலையங்களில் நீடிக்கும் மர்மம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மேட்டூர் அனல் மின் நிலையத்தில், தீ விபத்து நடந்து, ஒன்றரை மாதமே ஆகியுள்ள நிலையில், அது போன்ற மற்றொரு விபத்து, நேற்று முன்தினம் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நடந்துள்ளதால், விபத்துக்கு காரணம் சதியா என்ற சந்தேகம், ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை, எண்ணூர் ஆகிய நான்கு இடங்களில் உள்ள, அனல் மின் நிலையங்கள் மூலம், 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். இதில், மேட்டூரில், 840, தூத்துக்குடியில், 1,050, வடசென்னையில், 630, எண்ணூரில், 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்.

மேட்டூரில் 160 மீட்டர் சேதம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில், கடந்த 10ம் தேதி, நிகழ்ந்த தீ விபத்தில், 160 மீட்டர் நீளமுள்ள, "கன்வேயர் பெல்ட்' எரிந்து சேதமானது. மொத்தம், 10 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 20 நாள் மின் உற்பத்தி பாதித்தது. 7 கோடி ரூபாய் செலவில், சேதமான பகுதி சீரமைக்கப்பட்டது. விபத்து காரணமாக, மின் கழகத்துக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.கடந்த மே 26ல், மேட்டூர் அனல் மின் நிலைய, "கன்வேயர் பெல்ட்' சீரமைப்பு பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான, ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், "மேட்டூரை போல, இதர அனல் மின் நிலையங்களில் விபத்து நடக்காமல் இருக்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

தூத்துக்குடியில் ரூ.12 கோடி நாசம்:ஆனால், மேட்டூரில் விபத்து நடந்து ஒன்றரை மாதமே ஆகியுள்ள நிலையில், நேற்று முன்தினம், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், அதே நிலக்கரி கையாளும் பகுதியில், "கன்வேயர் பெல்ட்' தீ விபத்தில் கருகி, 12 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.இது போன்று ஏற்படுவது, விபத்தா அல்லது சதியா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பணியாளர்கள் சிலர் கூறியதாவது:மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நடந்த தீ விபத்தால், கழகத்துக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. எனினும், விபத்துக்கு என்ன காரணம், அதற்கு யார் பொறுப்பு என ஆராயாமல், 20 நாளில், சீரமைப்பு பணியை முடித்து விட்டதாக கூறிய அதிகாரிகளுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாராட்டுக்கு கொடுத்த முக்கியத்துவத்தால், விபத்து, நஷ்டம் போன்ற விஷயங்கள் மறைக்கப்பட்டு விட்டன.

பணியில் அலட்சியம்:விபத்து தொடர்பாக மேல்நடவடிக்கை எதுவும் இல்லாதது, அனல் மின் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கும், சில பணியாளர்களுக்கு பணி அலட்சியத்தை அதிகரித்துள்ளது. முதல் சம்பவத்தின்போது, விபத்துக்கு காரணமானவர்கள் மீது, கழகத்தில் சார்பில், துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருந்தால், தூத்துக்குடியில் விபத்து நடந்திருக்க வாய்ப்பு இல்லை.மேட்டூரில் விபத்து நடந்த பின்பும், இதர அனல் மின் நிலையங்களில் "கன்வேயர் பெல்ட்' பகுதியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கபடவில்லை. பணி செய்யும் ஊழியர்களையும், அதிகாரிகள் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை. "சம்பளம் கிடைக்கிறதா, அது போதும்' என்ற மன நிலையில் அதிகாரிகள் இருப்பதும் ஒரு காரணம்.

திட்டமிட்ட சதி?மேலும், அனல் மின் நிலையங்களில், "கன்வேயர் பெல்ட்'டை ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்க, ஏராளமான தனியார் நிறுவனங்களுக்கு மத்தியில், போட்டி நடக்கிறது. விபத்து நடக்கும் பட்சத்தில், "கன்வேயர் பெல்ட்' பகுதி பராமரிப்பு, தனியாருக்கு விட வாய்ப்புள்ளது என்பதால், இதுபோன்ற விபத்துகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது.விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது. "கன்வேயர் பெல்ட்' பகுதியில், பராமரிப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஊழியர்கள் நியமித்துள்ள நிலையில், தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதற்கு காரணம், ஊழியர்கள் அலட்சியம் அல்லது சதி இரண்டில் ஒன்று மட்டுமே காரணமாக இருக்கும். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - சென்னை,இந்தியா
06-ஜூலை-201202:02:57 IST Report Abuse
தமிழன் எனக்கு மேட்டூர் விஷயத்திலேயே லேசான சந்தேகம் இருந்தது. அது என்னவெனில், ஒரு வேளை காற்றாலை அதிபர்கள் கமுக்கமாக சேர்ந்து செய்த சதியோ என்பது தான் அது. காற்று அதிகம் வீசும் காலம் பார்த்து இது மாதிரி விபத்துகளை அனல் மின் நிலையங்களில் ஏற்படுத்தினால் காற்றாலை மின்சாரத்தின் கொள்முதல் பல மடங்கு அதிகரிக்கும். இல்லாவிட்டால், குறிப்பிட்ட அளிவிலேயே இருக்கும். இதற்கு மின் நிலையங்களின் உள்ளேயே இருக்கும் யாராவது துணை போயிருக்க வாய்ப்பும் உண்டு. முக்கிய இடங்களில் 24 நேரமும் கேமரா மூலம் கண்காணித்துப் பதிவு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
05-ஜூலை-201219:16:59 IST Report Abuse
கோமனத்தாண்டி கை புண்ணுக்கு கண்ணாடி வேணுமா, அடிச்சு துவைங்க உண்மை வெளிவரும், நைய புடை ,,,
Rate this:
Share this comment
Cancel
Tea Coffee - melbourne,ஆஸ்திரேலியா
05-ஜூலை-201214:55:00 IST Report Abuse
Tea Coffee இதர அனல் மின் நிலையங்களில் விபத்து நடக்காமல் இருக்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, விபத்தா அல்லது சதியா ? கட்டிங் வேண்டும் என சிம்பலிக்காக ... விபத்து, நஷ்டம் போன்ற விஷயங்கள் மறைக்கப்பட்டு விட்டந ... அலட்சியம் அல்லது சதி இரண்டில் ஒன்று மட்டுமே காரணமாக இருக்கும். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறும்..
Rate this:
Share this comment
Cancel
Sam Raj - Gun tur,இந்தியா
05-ஜூலை-201212:47:10 IST Report Abuse
Sam Raj ஜால்ராவின் தீய எண்ணம் புரிகிறது.நிர்வாகம் செய்ய வேண்டிய மன்னவன் கொடநாட்டில் தூங்கினால், இப்படிதான் நிகழும்.
Rate this:
Share this comment
Cancel
Asokaraj - Doha,கத்தார்
05-ஜூலை-201211:51:56 IST Report Abuse
Asokaraj மொத்தமாக மின் துறையிலும், பால்வளத்துறையிலும், போக்குவரத்து துறையிலும் மேலதிகாரிகள், பராமரிப்பு என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட்டு பராமரிப்பு செய்ததுபோல கணக்கு காட்டிவிடுகிறார்கள். பகுதி சதவிகிதம் அமைச்சர்களுக்கும் போய் விடுகிறது. அப்புறம் எங்கே நடவடிக்கை? நிர்வாகத்தை சீர்ப்படுத்தாமல் ஊழலை கண்டுக் கொள்ளாமல் விட எல்லாமே விலை உயர்வு. இந்த அறிவுரை அந்த அமைச்சர்களும் அதிகாரிகளுமே அரசுக்கு தருகிறார்கள். இப்படி எல்லாமே விலை உயர்த்தி அரசை நடத்தலாம் என்றால் நமக்கு ஆட்சியாளர்கள் எதுக்கு? தேர்த்தல் எதுக்கு. நாமே அரசாளலாமே. இந்த அரசியல் வியாதி எங்கிற ஜாதி எதுக்கு. மக்கள்தான் யோசிக்கனும். ஆனால் அதுதான் நம் மக்களிடம் கிடையாதே.
Rate this:
Share this comment
Cancel
manokaran - kanchipuram,இந்தியா
05-ஜூலை-201210:23:29 IST Report Abuse
manokaran விபத்து நடந்த இடத்தில கண்காணிப்பு கேமரா பொருத்தி கன்வேயர் பெல்ட் நகரும் இடங்கள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கபடவேண்டும் ,அத்துமீறி தவறு செய்பவர்களை வேலையைவிட்டே நீக்கவேண்டும் மேலும் கன்வேயர்பெல்ட்டின் தரத்தையும் முறைப்படி தர நிர்ணயம் செய்தால் நல்லது ... கந்தன்,சென்னை
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
05-ஜூலை-201210:20:33 IST Report Abuse
Chenduraan என்ன சதி என்றால் புதிய கண்டைநேர் பெல்ட்டுக்கு பதிலாக பழைய பெல்டை பாதி விலைக்கு வாங்கி 25 % லஞ்சம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை சுருட்டிவிட்டு தெரிந்துவிடும் என்பதற்காக முழுவதுமாக கொளுத்திவிட்டால் திரும்பவும் ஒரு ரௌண்டு அடிக்கலாம் இல்லையா .
Rate this:
Share this comment
Cancel
arignaranna - Bangalore,இந்தியா
05-ஜூலை-201209:25:12 IST Report Abuse
arignaranna குறித்து வைத்துக்கொள்ளுங்க ... நிச்சயம் இது ஒரு அரசியல் சாணக்கியனின் வேலைதான் இது தொடர் திருட்டு, கொள்ளை, கொலை, தீ விபத்து இப்படி பல கோணன்கிளில் மக்களின் கவனம் திரும்ப இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு செயல்படுத்துகிறார்கள். சீக்கிரம் உண்மை வெளி வரும். கடவுள் ஒன்றும் மடயனில்லை. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும்
Rate this:
Share this comment
Cancel
SRIHARAN - coimbatore,இந்தியா
05-ஜூலை-201208:29:46 IST Report Abuse
SRIHARAN நாங்கள் வெளியே தள்ளப்பட்டாலும் எங்கள் அடியாட்களும் பொடியாட்களும் இன்னும் அங்கேயே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எப்படி பொடி வேலை செய்வது என்று. நிம்மதியாக இருக்க விடமாட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
05-ஜூலை-201208:20:09 IST Report Abuse
T.R.Radhakrishnan தி.மு.க. கட்சியினரை விட, அவர்கள் ஆதரவு அரசு ஊழியர்கள் எதையும் செய்ய துணிந்தவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்