Advertisement
கருணாநிதி குடும்பத்துக்கு ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?ஆதாரம் தாக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2012,23:41 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 05,2012,23:44 IST

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு, 773 கோடி ரூபாய் எப்படி கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், நேற்று முன்தினம் ஆஜராகி, சாட்சியம் அளித்தனர்.அப்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஆதாயம் பெற்ற நிறுவனங்கள், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு, 223 கோடி மற்றும் 550 கோடி ரூபாய் என, தனித் தனியாக அளித்ததற்கான ஆதாரங்கள், தங்களிடம் உள்ளதாகக் கூறினர். அந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர்.


223 கோடி:கூட்டுக் குழுவிடம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி:அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிடம் இருந்து, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற டி.பி., குழும நிறுவனம், அதற்கு பிரதிபலனாக 223.55 கோடி ரூபாயை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது தொடர்பாக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டி.பி., குழுமத்திடம் இருந்து, கலைஞர்"டிவி'க்கு இந்த பணம், எந்த வழியில், எப்படி கைமாறியது என்பதற்கான பட்டியலையும் தாக்கல் செய்துள்ளோம்.


ஏர்செல் விவகாரம்:அடுத்ததாக, ஏர்செல் நிறுவனம், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனம், கருணாநிதியின் உறவினர் குடும்பத்துக்குச் சொந்தமான சன் டைரக்ட் "டிவி' லிட்., நிறுவனத்தில், 549.96 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இது தொடர்பாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. கடந்த மே மாதம், இது தொடர்பாக சி.பி.ஐ.,யுடன் இணைந்து, மலேசியாவில் விசாரணை நடத்தினோம். இன்னும் சிலமுக்கியமான தகவல்கள், மலேசிய அதிகாரிகளிடம் இருந்து வர வேண்டியுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (59)
rajamani - chennai,இந்தியா
18-ஆக-201203:09:08 IST Report Abuse
rajamani எல்லாம் துபாய்க்கு போயாச்சு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raman iyer - boston,யூ.எஸ்.ஏ
17-ஆக-201202:50:05 IST Report Abuse
raman iyer மகாபாரதம் முடிந்த பிறகு கிருஷ்ணா பகவான் இனி நான் கிளம்புகிறேன் என்று சொல்லி புறப்பட்டு விட்டாராம் ....ஏன் அப்படி புறப்பட்டு போகிறீர் என தொண்டர்கள் எல்லோரும் வினவ அதற்கு பதிலுரைத்தார் ,கலியுகம் பிறந்து விட்டது ,ஆகையால் நான் கிளம்புகிறேன் .யுகத்தின் கடமை முடிந்தது என்றாராம் கலியுகம் ஆரம்பித்தது என்று எப்படி கணித்து சொன்னீர் என்று கேட்டாராம் . அதற்கு ... ராஜர்களுக்கே திருடும் புத்தி வந்து விட்டது அல்லது திருடர்கல்லோரும் ராஜாவாக ஆசை பட்டுவிட்டார்கள் என்று சொல்லி இதுதான் கலி லக்ஷணம் என்று சொல்லி முடித்து விட்டார் ,......எத்தனையோ வருஷத்து முன்பாகவே நமது நூல்லில் கூறப்பட்டு விட்டது .. இப்பொழுது தான் தெள்ளதெளிவாக தெரிகிறது , பெரும் மஹா திருடன் தி மு க தான் ( திருட்டு முழுவதும் கடைபிடிக்கப்படும் )தட் இஸ் தி மு க . மக்கள்ள தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த ராஜாவை மக்களே எப்படியாவது இவரை அழிக்கவேண்டும் தொலை துறையை கயல் எடுத்துக்கொண்டு நாட்டையே பிச்சக்கார நாடாக ஆக்கிவிட்டரே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Balasubramanian - Chennai,இந்தியா
06-ஜூலை-201206:11:29 IST Report Abuse
Balasubramanian ஊழல் பழம் காலத்திலும் தெரிந்தும் தெரியாமலும் இருந்தது. பெயருக்கு இழுக்கு வரும் என்றும் சிலர் அடக்கி வாசித்தனர். ஆனால் கருணா ஆட்சிக்கு வந்த பிறகு விஞ்ஞான முறைப் படி லஞ்சம் பெறுவது எப்படி, தப்பிக்கும் வழிகள் என்னென்ன என்று IAS IPS அதிகார வர்க்கங்களை எப்படி உபயோகப்படுத்துவது போன்ற உத்திகளை சொல்லி கொடுத்த கருணா (உ) பல்கலை கழகம் தான். நீதிபதி சர்க்காரிய கமிஷன் கொடுத்த சான்றிதழ். மணியன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
razakhan - chennai,இந்தியா
05-ஜூலை-201213:34:26 IST Report Abuse
razakhan ஜெயா, மாயா, அப்புறம் பிஜேபி தலைவர்கள் எல்லோருமே ஊழல் வாதிகள்தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
05-ஜூலை-201213:09:55 IST Report Abuse
T.C.MAHENDRAN திருட்டு ரயிலேறி (?)சென்னைக்கு வந்த கருணாநிதியும் ,அவர் குடும்பத்தாரும் இன்று ஆசியா கண்டத்தில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார்கள் . தான் வகித்த முதலமைச்சர் பதவியில் அவர் சம்பளமாக வாங்கித்தான் இந்தளவுக்கு உயர்ந்துள்ளாரா ?. இல்லை அவர் மகன்கள் ஸ்டாலின் ,அழகிரி ,மகள் கனிமொழி ,பேரப்பிள்ளைகள் கலாநிதிமாறன் ,தயாநிதிமாறன் மற்றும் கொள்ளுப்பேரன்கள் எந்த பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து இந்த அளவுக்கு சொத்து சேர்த்தார்கள் ?. இல்லை அவர்கள் வகித்த பதவிகள்தான் என்னென்ன ?. கருணாநிதிக்கும் ,தி.மு.க.வுக்கும் கண்மூடித்தனமாக சொம்படிக்கும் வாசகர்களே கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா ?.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
G.Prabakaran - Chennai,இந்தியா
05-ஜூலை-201212:46:05 IST Report Abuse
G.Prabakaran நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதனை மறந்து விடக் கூடாது . யாரும் இங்கே தண்டிக்கப்பட மாட்டார்கள் இந்தியாவில் சாமான்ய மக்கள் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள் அரசியல்வாதிகள் அல்ல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Minor Kunju - Chennai,இந்தியா
05-ஜூலை-201212:18:46 IST Report Abuse
Minor Kunju எவ்வளவு தைரியம்? அமலாக்க அமைப்பு பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கிறது. இதை கண்டித்து இன்னொரு நிரப்பும் போராட்டம் நடத்த போகிறோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-ஜூலை-201212:54:13 IST Report Abuse
Nallavan Nallavanஆரிய அமலாக்கப் பிரிவுன்னு சேர்த்துச் சொன்னாத்தான் தொண்டர்கள் கூட்டம், சாரி...குண்டர்கள் கூட்டம் அணி திரளும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
05-ஜூலை-201212:16:12 IST Report Abuse
T.C.MAHENDRAN கொள்ளைகூட்டத்தின் தலைவியாக சோனியாவும் ,கொள்ளைகூட்டத்தலைவனாக கருணாநிதியும் இருக்கும் வரை இந்தியாவில் இதெல்லாம் சாதாரணமப்பா போய் அவங்கவுங்க வேலையப்பாருங்க நண்பர்களே .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Balakumar Nattamai - Madurai ,இந்தியா
05-ஜூலை-201211:34:02 IST Report Abuse
Balakumar Nattamai போங்கடா போங்க நீங்களும் உங்க விசாரணையும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sitaramenv - Hyderabad,இந்தியா
05-ஜூலை-201211:21:51 IST Report Abuse
sitaramenv போங்கடா.....துரோகிகளா.......திருக்குவளை கொள்ளை கூட்ட தலைவருடன் சி.பி.ஐ. கூட்டாமும் சேர்ந்து இழு இழு என்று இழுத்து கடைசியில் புஸ்வானம் ஆக்கவா.....விரைவில் பிடித்து குடும்பத்துடன் திஹார் சிறையில் தள்ளுங்கலப்பா...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.