Dinamalar - No 1 Tamil News Paper

போலி என்கவுன்டர் ; மோடியை சிக்க வைக்க திட்டம் !
 
 
  இ-பேப்பர்
AAnmeegam News
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail    Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2010,16:36 IST

ஆமதாபாத்: போலி என் கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை விசாரிக்க சி.பி.ஐ., திட்டமிட்டிருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொராபுதீன் என்பவர் இவரது மனைவியுடன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். போலி என்கவுன்டர் செய்யப்பட்டதாக தாக்கனால மனுவின்படி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. வழக்கில் குஜராத் முதல்வர் மோடியின் நெருக்கமான அமைச்சர் அமீத்ஷாவை ஆஜராக வருமாறு கேட்டு தொடர்ந்து அவரை கைது செய்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் அப்ரூவராகியிருக்கிறார். அமீத்ஷாவிடம் சி.பி.ஐ., துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ., காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என பா.ஜ., மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முதல்வர் நரேந்திர மோடியையும் விசாரிக்க சி.பி.ஐ., திட்டமிட்டிருக்கிறது. என்கவுன்டர் நடந்த போது உள்துறையை மோடி கவனித்து வந்ததாகவும், இந்நேரத்தில் சி.ஐ.டி., போலீஸ் தலைவர் ரெய்ஜர் இட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சி.பி.ஐ.,க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநில முதல்வர் என்பதால் இவரிடம் விசாரனை நடத்த சி.பி.ஐ., மூத்த அதிகாரிகள் அனுமதி வேண்டும். இதனால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. உத்தரவு வந்தவுடன் மோடியை ஆஜராக கேட்டு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே மோடியிடம் சி.பி.ஐ., சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்க மோடி மறுக்கும் பட்சத்தில் அவரை கைது செய்யும் அளவிற்கு கூட செல்ல காங்., அரசு திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


 

மேலும் அரசியல் செய்திகள்:




வாசகர் கருத்து (10)
rajamohamed - Riyadh,சவுதி அரேபியா
2010-07-30 00:50:11 IST
மோடி குஜராத் மக்களோட வேலைக்காரர்.இந்தியாவுக்கு அவர் வருமானம் ஈட்டி குடுத்தாரா,ராக்கெட் விட்டாரா,உலக அளவில் இந்தியாவிற்காக ஏதும் சாதித்தாரா? பூஜ்யம்.மக்கள் ஆட்சி என்று சொல்கிறோம்.சாதாரண முதல்வர்தானே அவர் மன்னர் இல்லையே.!.அவர விஷாரிக்குரதுல என்ன முறை வேண்டி இருக்கு.உண்மையிலே அவர் நல்லவர்ந்னா அவராகவே இறங்கி வந்து விஷாரனைக்கு ஒத்துழைத்து ரெண்டுல ஒன்னு பாத்துருக்கணும்.நம்ம நாட்டில்தான் எல்லாமே அதிசியமா இருக்கு.இங்கிலாந்து பிரதமர பாருங்க .சின்ன புள்ளைகளோட கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கிறார்.அமெரிக்க அதிபராக இருந்த புஷ் அதிபராக இருக்கும் பொது,மேடையில் மைக் பின்ன கலட்டி சரிபண்ணி பேச்ச தொடர்ந்தார்.யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.என்ன நாடோ, என்ன சட்டமோ,தெரியல....
ராஜரமேஷ் ச - Chennai,இந்தியா
2010-07-29 23:52:13 IST
இந்த நாட்டுல ஒரே ஒரு ஆம்பிளை அரசியல்வாதி இருக்குறது பிடிக்கலையா என்ன?...
சஞ்சீவ் - bangalore,இந்தியா
2010-07-29 23:01:59 IST
அவரு ஒருத்தர்தான் நல்ல முதல்வரா இருந்தாரு, அவரையும் காங்கிரஸ் புண்ணியத்துல ஆப்பு அடிச்சு உக்கார வெச்சா என்னன்னு சொல்றது. குடும்பத்துடன் கொள்ளையடிப்பவர்களை சிபிஐ ஒன்னும் புடுங்காது , ஆனா யாராவது வேல பார்த்தா அவங்கள தடுக்கும்....
குமார் - Chennai,இந்தியா
2010-07-29 20:28:47 IST
சொராபுதீன் ஒரு நிழல் உலக தாதா....அவனை கொன்றதற்கு ஏதோ உத்தமரை கொன்றது போல் CBI (காங்கிரஸ் புலனாய்வு பிரிவு ) சிலிர்கிறது.....720 போலி encounter case இருக்கும் போது CBI இதை மட்டும் ஏன் இவ்வுளவு சிரத்தையுடன் வஞ்சனையாக கையாள்கிறது....எல்லாம் votebank அரசியல்.... ஒரு தாதாவை "தியாகி" ஆக்கி விட்டது சிபிஐ...
வள்ளுவன் - cbe,இந்தியா
2010-07-29 19:01:41 IST
மோடின்னு ஒரு தலைவர பா.ஜ.க. விற்கு கொடுத்த காங். அடுத்த தலைவரா அமித் ஷாவை கொடுத்திருக்கு.......
ashraf - chennai,இந்தியா
2010-07-29 18:29:08 IST
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் கடவுள் இருக்கிறார்...
Arun - Thanjavur,இந்தியா
2010-07-29 18:25:37 IST
நல்ல ஆட்சி எங்கு நடந்தாலும் அது காங்கிரசுக்குப் பிடிக்காது. கால காலமாக காங்கிரஸ் செய்துவரும் இந்த மாதிரி கொல்லைப்புற வழியாக வஞ்சம் தீர்க்கும் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. மேலும் மேலும் காங்கிரஸ் தவறு செய்து வருகிறது....
Babu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-29 18:09:12 IST
All crimenals should be punish apart from religion....
babu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-29 17:50:56 IST
சாதி மத வேருப்பாடில்லாமல் தவறு செய்த யாவரும் சட்டத்தின் முன் தண்டனை பெற வேண்டும்....
ramesh - chenna,இந்தியா
2010-07-29 17:46:26 IST
congress criminals will do all sort of nuisances when they get bad name among public.It is their life from freedom days....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
Your Name  :
Your Email Id :
Your city (or) location  :
Your country  :
Your Comment :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)