Need action from TN Cmjayalalitha against Nithyananda: Aarthi rao | நித்யானந்தா மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்ட ஆர்த்தி ராவ்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (15)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை : நித்யானந்தாவுக்கு எதிராக, அமெரிக்க கோர்ட் அளித்துள்ள, தீர்ப்பை வரவேற்றுள்ள ஆர்த்தி ராவ், "நித்யானந்தா மீது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளார். நித்யானந்தாவால் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட ஆர்த்தி ராவ், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவருக்கு, அமெரிக்க கோர்ட்டில் நீதி கிடைத்துள்ளது. இதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அதே நேரம், அமெரிக்க கோர்ட்டால், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நித்யானந்தாவால், இனி, எதிர்காலத்தில், யாருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்.
இந்து மதத்தில் உள்ள, குரு தொடர்பான நம்பிக்கையைப் பயன்படுத்தி, உண்மையான குருவைப் போல வேஷமிட்டு அப்பாவிகளை, தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் நித்யானந்தா. அவர்களை பாலியல், பொருளாதாரம், மனம் என அனைத்து வகையிலும் சுரண்டி வருகிறார்.
ஏன் போராட்டம்?நான் ஒரு சாதாரண பெண். நித்யானந்தாவைப் போல பணபலமோ, செல்வாக்கோ எனக்கு கிடையாது. ஆனாலும், நான் அவரை எதிர்த்துப் போராடி வருகிறேன். நான் பாதிக்கப்பட்டது போல, எதிர்காலத்தில், இனி, யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் நான் போராடுகிறேன்.மக்கள் உண்மையான குருவைக் கண்டறிந்து, அவர்களிடம் செல்ல வேண்டும். நித்யானந்தாவின் அநியாயங்களைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
தேடப்படவில்லை:நான் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் பொய். என் வழக்கறிஞரிடம் இதுவரை, என்னைத் தேடி யாரும், அதிகாரபூர்வமாக வந்ததில்லை. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தான், நான் பாதுகாப்பான இடத்தில் உள்ளேன்.பெங்களூரு கோர்ட்டில் உள்ள, தன் மீதான முக்கிய வழக்கை சந்திக்க பயப்படும் நித்யானந்தா, அதை, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தாமதப்படுத்தி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டில், அவருக்கு எட்டு முறை கர்நாடக சி.பி.சி.ஐ.டி., போலீசார், சம்மன் அனுப்பியும், அவர் ஏன் நேரில் ஆஜராகவில்லை? இவர் குழந்தையா, ஆண்மையில்லாதவரா என்பதைக் கண்டறியும் சோதனைக்கு ஏன் நேரில் ஆஜராக மறுக்கிறார்? இவ்வாறு ஆர்த்தி ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நித்தியானந்தா மீது அமெரிக்க கோர்ட்டில்

புகார்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, மாவட்ட கோர்ட் ஒன்றில், நித்யானந்தா மீது, அவரது முன்னாள் சீடர் பொபட்லால் சாவ்லா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
9 கோடி ரூபாய்:கடந்த, 2005 முதல் 2010 வரை, நித்யானந்தாவின் சீடராக இருந்த சாவ்லா, 2007, 2008 ஆண்டுகளில், "நித்யானந்தா பவுண்டேஷன்' என்ற நிறுவனத்திற்கு, அவர் தனது சொந்தப் பணம், 9.35 கோடி ரூபாய் (1.7 மில்லியன் டாலர்) நன்கொடையாக அளித்திருந்தார். ரஞ்சிதா, "சிடி' வெளியான பின், அதிர்ச்சியடைந்து, ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.
"சிடி' விவகாரத்திற்குப் பின், அந்தப் பணத்தைத் திருப்பித் தரும்படி, சாவ்லா கேட்டிருந்தார். "சிடி' விவகாரத்தில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த நித்யானந்தா, அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து சாவ்லா, அமெரிக்க கோர்ட்டில், 2010, ஜூலையில், வழக்கு தொடுத்தார். நித்யானந்தா பவுண்டேஷன், அதன் பொறுப்பாளர்களான, மா நித்ய சதானந்தா, சிவ வல்லபனேனி, பக்தானந்தா ஆகியோர் மீது இவ்வழக்கு தொடுக்கப்பட்டது.
மோசடி நிறுவனம்:இவ்வழக்கை, நித்யானந்தா
தரப்பு, பல விதமாக இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், கடந்த ஜூன் மாதம் இறுதியில் துவங்கிய விசாரணை, ஒருவழியாக முடிவடைந்து, ஜூன் 29ம் தேதி, இறுதித் தீர்ப்பு வெளியானது. அதில், "நித்யானந்தா பவுண்டேஷன்' ஒரு மோசடி நிறுவனம் என்றும், நன்கொடையாக வசூலித்த பணத்தில், 8.63 கோடி ரூபாயை, பொபட்லால் சாவ்லாவுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், கோர்ட் உத்தரவிட்டது.
அபராதம் எவ்வளவு?மேலும், சாவ்லா மற்றும் அரசுத் தரப்புக்கு, "நித்யானந்தா பவுண்டேஷன்' தரப்பில், செலுத்த வேண்டிய அபராதத் தொகை குறித்து, வரும் 19ம் தேதி, கோர்ட் அறிவிக்க உள்ளது. அமெரிக்க சட்டங்களின்படி, மோசடி செய்தல், மிகத் தீவிர குற்றமாகக் கருதப்படும் என்பதால், அபராதத் தொகை, 10 மடங்கு கூட விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
யார் இந்த பொபட்லால்?* பொபட்லால் சாவ்லா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். "ரியல் எஸ்டேட்' தொழில் செய்பவர்.
* அமெரிக்காவில், நித்யானந்தாவுக்கு கிடைத்த, மிகப் பெரிய நன்கொடையாளர் இவர் தான். இவர் மூலம், பல நன்கொடைகளை நித்யானந்தா பெற்றுள்ளார்.
* 2005-2010 காலகட்டத்தில், நித்யானந்தாவின் நெருங்கிய சீடராக இருந்த இவர், அமெரிக்காவுக்கு,

Advertisement

நித்யானந்தா வரும்போதெல்லாம், அவரது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பார்.
* அமெரிக்காவில் வசித்து வரும், இந்திய வம்சாவளி இளைஞர்கள், இந்திய பண்பாட்டில் இருந்து விலகாமல் வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்.
* அதே நோக்கத்திற்காக வேதப் பல்கலைக் கழகம் ஒன்றை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அமைக்க விரும்புவதாக நித்யானந்தா கூறியவுடன், தயங்காமல், 1.7 மில்லியன் டாலரைத் தூக்கிக் கொடுத்தார்.
என்ன குற்றச்சாட்டு?* சீடர்களுடன் நித்யானந்தா செய்து கொண்ட, "செக்ஸ் ஒப்பந்தம்' எனப்படும் வெளிப்படையாக அறிவிக்கக் கூடாத ஒப்பந்தம் குறித்துக் கேள்விப்பட்ட உடன், பொபட்லால் அதிர்ச்சி அடைந்தார். அது உண்மையா என 2010, ஏப்ரலில் அவர் நித்யானந்தாவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்ஒப்புக் கொண்டார்.
* அதேபோல், 2010, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், நித்யானந்தாவுடன், பொபட்லால் தொடர்பு கொண்டு பேசிய போது, வேதப் பல்கலைக் கழகம் துவக்குவதாக எண்ணமே தனக்கு இல்லை என்பதையும், நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், 2007ல், அந்தக் காரணத்தைக் கூறித் தான், ஒன்பது கோடி ரூபாய் நன்கொடை வாங்கினார்.
* அமெரிக்காவில், "நித்யானந்தா பவுண்டேஷ'னுக்குத் தரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை, நித்யானந்தா, வேறு நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்துள்ளார். அவற்றில் கணிசமான தொகை, நித்யானந்தாவின் தம்பி கோபி என்ற நித்ய ஈஸ்வரானந்தா நடத்தி வந்த, "நித்யானந்தா எக்ஸ்போர்ட் அண்டு இம்போர்ட்' நிறுவனத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
* மத உபதேசம் செய்வதற்காக வாங்கிய விசாவில், அமெரிக்காவிற்கு வந்த நித்யானந்தா, அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமாக அங்கு தன் பெயரில், "ஹெட்ஜ் பண்ட்' நிறுவனம் ஒன்றைத் துவக்கியுள்ளார்.
* மேலும், அமெரிக்க விசாவில், தன் பிறந்த தேதியை 1978, ஜனவரி 1 என அளித்துள்ள நித்யானந்தா, தனது பாஸ்போர்ட்டில், 1977, மார்ச் 13 என அளித்துள்ளார். இதன் மூலம், இரு நாட்டு அரசுகளுக்கும் தவறான தகவல்களை அளித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தான் பொபட்லால் சாவ்லா, நித்யானந்தா மீது, அமெரிக்க கோர்ட்டில் அளித்துள்ள, "முதல் தகவல் அறிக்கை'யில் தெரிவித்துள்ளார்.-நமது நிருபர்-
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
11-ஜூலை-201204:44:35 IST Report Abuse
P. Kannan பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முறை இவர் எங்கள் ஊருக்கு வந்தார், ஒரு இருபது பேர் அமர்ந்து இருந்தோம், அதை ஏற்பாடு செய்தவரால் அதற்கு மேல் பெரிதாக செய்ய முடியவில்லை போலும். இவரது அடிபொடிகள் அரைமணி நேரம் முன்பே வந்து செட் அப் எல்லாம் சரியா என்று பார்த்தார்கள். எல்லோரும் (ஆண்களும் பெண்களும்) ஒய்ட் அண்ட் ஒய்ட் தான். பார்த்தால் பக்தர்கள் போல் தெரியவில்லை, அவருடைய வேலை ஆட்கள் போல்தான் தெரிந்தது. நித்தி எல்லா விசயத்திலும் ஒரு ஸ்டாண்டர்ட் முறையை எப்பொழுதும் கையாளுபவர் என நான் நினைக்கிறேன், ஏன் எனில் எல்லாம் துல்லியமாக, கட்சிதமாக இருந்தது அவரதும், அடிபொடிகள் நடவடிக்கையும். அல்லது வடநாட்டில் இது போல் நிறைய போலி சாமியார்கள் உண்டு, அதை இவர் பின்பற்றியும் இருக்கலாம், அல்லது ஒரு போலியிடமே நிறைய நாட்கள்(சிறுவனாக இருந்தது முதல்) வேலை செய்து இருக்கலாம். ஆகவே பழகியதை இங்குவந்து தெரியாத இடத்தில் கடை விரிக்கிறார். தோரனை எல்லாம் ஏதோ முக்தி அடைந்தவர் போலதான் இருக்கும், எல்லோரையும் ஆசீவதிப்பார், மத சடங்குகளுக்கு புது புது விளக்கங்கள் கொடுப்பார். அடிபொடிகள் இப்போது வருவார், இன்னும் சற்று நேரத்தில் வருவார் என்று அவர் ஏதோ ரெம்ப பிசியாக இருப்பது போல் அரசியல் வாதி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கொண்டு இருந்தார்கள். இதில் மண்டை காய்ந்த அன்பர் ஒருவர் சற்று வெளியே போய் வந்து எல்லோரிடமும். நித்தி வெளியே காருக்குள் உற்கார்ந்து இருக்கிறார் இவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்றாரே பார்க்கலாம். உடனே நித்தி ஆஜர் ஆனார். ஆனால் அன்று இந்த கெட் அப் , செல்வசெழிப்பு எல்லாம் இல்லை, ரெம்ப ஏழ்மையில் இருந்தது போல் தெரிந்தது. வழிச் செலவிற்கு கூட அமைபாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு சென்றார். மறுபடியும் யாராவது அழைக்க விரும்பினால் இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும் என்று வேறு சொன்னார்கள். மறுபடியும் இப்பொழுது நித்தியை பார்த்தவுடன் , அவரா இவர், ஏதோ நாடகத்தில் ராஜபார்ட்டில் நடிப்பவர் போன்று வேஷம் போட்டுகொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். இவர் ஒரு பிராடு அரசுவின் தலையாய வேலை இவரை போன்றவர்களை வெளியே நடமாட விடக்கூடாது. பிரேம்மாந்தா விற்கும் இவருக்கும் என்ன வித்தியாசம். அமெரிக்காவை முந்தினால் இந்த பழியில் இருந்து அரசு தப்பிக்கும்...........?????? ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஓட்டை பற்றியெல்லாம் சிந்திக்கக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
aniyayathuku nallavan - madurai,இந்தியா
06-ஜூலை-201211:31:54 IST Report Abuse
aniyayathuku nallavan எல்லோரையும் எப்போதும் ஏமாற்றி கொண்டிருக்கமுடியாது .பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் .
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
06-ஜூலை-201205:00:32 IST Report Abuse
s.maria alphonse pandian தமிழக அரசின் ஆதரவு தனக்குள்ளதாக நித்தியே கூறியுள்ளார்.....
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
06-ஜூலை-201201:20:41 IST Report Abuse
Srinath இத்தனை தூரம் இந்த பித்ததலாட்ட சாமியாரின் அட்டகாசங்கள் நடந்தாலும், எவ்வளவு பேர் புகார், குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தாலும் கூட மத்திய மாநில அரசாங்கங்கள் தொடர்ந்து அமைதி காப்பது மக்களின் மீது அரசாங்கங்களுக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. இனி மக்களைக் காக்க அந்த இறைவனே பத்தாவது அவதாரம் எடுத்து வந்து அயோக்கியர்களைச் சம்ஹாரம் செய்தால்தான் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
06-ஜூலை-201200:57:13 IST Report Abuse
மதுர முனியாண்டி குஷ்பூவுக்கு அடுத்ததா சிலை வைக்க வேண்டிய ஆளு நீதாம்மா....
Rate this:
Share this comment
Cancel
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
06-ஜூலை-201200:56:33 IST Report Abuse
மதுர முனியாண்டி தாலி கட்டியவனை விட்டு ஓடி வந்து இவனோட ஓட்டிகிட்டு அதுவும் ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை வருட கணக்கில் இப்போ குத்துதே குடையுதேன்னா போ....வேற சாமியார் எவன்னா கெடைக்கிரானான்னு பாரு...போ..போ...போயிட்டே இரு....
Rate this:
Share this comment
Cancel
suresh - கோயம்புத்தூர் ,இந்தியா
06-ஜூலை-201200:08:35 IST Report Abuse
suresh இத்தனைக்கும் காரணம் அந்த மதுரை ஆதீனம் தான்.அவனை பிடிங்க சார் முதல்ல.
Rate this:
Share this comment
Cancel
rajamanickam.D - palani  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூலை-201223:29:59 IST Report Abuse
rajamanickam.D இவங்கள என்னத்த பண்றது
Rate this:
Share this comment
Cancel
madhan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூலை-201218:31:55 IST Report Abuse
madhan தமிழக முதல்வரின் அமைதி் வருத்தத்தி்ற்குறியது
Rate this:
Share this comment
தமிழன் - சென்னை,இந்தியா
06-ஜூலை-201202:49:05 IST Report Abuse
தமிழன்இவர் கூர்ந்து கவனிக்கப்படுகிறார் என்றே தோன்றுகிறது....
Rate this:
Share this comment
Cancel
Diviya Rathi - jeddah,சவுதி அரேபியா
05-ஜூலை-201212:07:09 IST Report Abuse
Diviya Rathi இன்னுமா இவனை நம்புறீங்க ..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.