Dinamalar - No 1 Tamil News Paper

அதே இடத்தில் பொதுக்கூட்டம்; அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., பதிலடி
 
 
  இ-பேப்பர்
AAnmeegam News
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2010,23:30 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 31,2010,02:21 IST

கோவை : அ.தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோவையில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது.


கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதற்குப் போட்டியாக, கடந்த 13ம் தேதி ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க.,வினர் பிரமாண்டமாக நடத்திக் காட்டினர். கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தில் எந்த ஒரு பொதுக்கூட்டத்துக்கும் வராத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்தைத் திரட்டினர். இதனால், செம்மொழி மாநாட்டினால் மக்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பு, திசைமாறியது. இந்த சூழலில், கோவையில், "டைடல் பார்க்' பணி முடிந்து, திறப்பு விழா நடத்த ஏற்பாடு நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, இதை திறக்கவிருப்பதாக அறிவிக்கப் பட்டது. அதற்கு முந்தைய நாளில், திருப்பூரில் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நடத்தும் பாராட்டு விழாவிலும் அவர் பங்கேற்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, முதல்வர் கருணாநிதியே, கோவை, "டைடல் பார்க்'கை திறந்து வைப்பதாக, நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திடீரென முதல்வர் வருவதாக நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டிருப்பது, அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திறப்புவிழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதுடன், அதே நாளில் கோவையில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தவும் தி.மு.க., அதிரடியாக ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்றால், கோவை சிவானந்தா காலனியில் நடத்தப்படுவதே வழக்கம். ஆனால், இந்த முறை கோவை வ.உ.சி., பூங்காவில் பொதுக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.


எந்த பட்டியல் ஜெயிக்கும்?: கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, விலைவாசி உயர்வையும், பிரச்னைகளையும் பட்டியலிட்டு ஜெயலலிதா பேசியது, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு, கருணாநிதி எப்படி பதிலடி கொடுக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கோவையில் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு நடந்த வளர்ச்சிப் பணிகள், செம்மொழிப் பூங்கா, 100 கோடி ரூபாய் பாலம் போன்றவற்றைப் பட்டியலிடலாம்.


பிரம்மாண்ட வரவேற்பு: 4 மாவட்ட தி.மு.க., முடிவு: முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தி.மு.க., செயலர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இதில், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆக., 1ல் துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆக., 2ல் முதல்வர் கருணாநிதிக்கும் கோவை விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. இருவரும் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாகக் கலந்து கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும், லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களைத் திரட்ட வேண்டுமென்று வலியுறுத்தினர். எந்தெந்த மாவட்டத்திலிருந்து எவ்வளவு தொண்டர்களை அழைத்து வர வேண்டுமென்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது. வாகன ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.


 

மேலும் அரசியல் செய்திகள்:




வாசகர் கருத்து (79)
ஜெயா குமார் - newcastle,இந்தியா
2010-08-18 03:57:40 IST
தமிழ் நாட்டை இந்த பாடுங்க ஆளாளுக்கு பங்கு போட்டு சாப்பிடறதுக்கு பதிலா நான் தமிழ் நாட்டை இங்கிலாந்து கு வித்துடலாம்னு நினைக்கறேன் .. குறஞ்சது நல்ல நிர்வாகம் ஆச்சும் இருக்கும் .. நீங்க என்ன நினைக்கறீங்க?...
lenin - erode,இந்தியா
2010-08-03 11:13:48 IST
பதிலடி யார் யாருக்கு தருவார்கள் எனபது போக போக தெரியும் ....
sivaraj - kuwait,இந்தியா
2010-08-03 07:23:50 IST
தமிழ்நாட்டுல கருணாநிதி குடும்ப அரசியல் பண்றார்...
ganesh - singapore,சிங்கப்பூர்
2010-07-31 14:46:46 IST
Tamil nadu future ??????. people pls must identified our cheating government and our C.M........
சதீஷ்குமார் - THIRUPUR,இந்தியா
2010-07-31 00:15:48 IST
ஏனுங்க கருணா அய்யா ,சின்ன அய்யா ஸ்டாலின் , நாங்க என்ன பாவாம் செய்தோம் இங்கு வந்து வந்து மக்களை தொல்லை செய்கிறிர்கள் .அதான் உங்களுக்கு என்று ஒரு நகரத்தை (சென்னை )விட்டுகொடுத்துல்லோமே ?இங்கு வந்து கோவை நகரத்தின் புனிதத்தை கெடுக்காதிர்கள் .அந்த அம்மா (ஜெயா)கோவை கூட்டிய கூட்டம் உங்களுக்கு நிச்சயம் துக்கம் போயிருக் கிறது என்பது உங்களின் அறிக்கை ,பேட்டி,பொதுக் கூட்டம் முலம் தெளிவாக தெரிகிறது உங்கள் மக்கள் சேவையை தொடர்வதை விட்டு இப்போழுது கூட்டத்தை காட்டுகிறேன் என்று மக்களிடம் கெட்டபெயர் வாங்குவதுதான் மிச்சம் . திருப்பூர் நகரத்தில் உங்களின் கட்அவுட் ,டிஜிட்டல் போர்டு என சாலைகளில் வைத்து மக்கள் வாகனங்கள் ஓட்ட முடியாது அவதி படுவது உங்களுக்கு தெரியாதா? திருப்பூர் மாவட்ட திமுக தலைவர்கள் கட்டபஞ்சாயத்து ,அடாவடி ,அரசியல் தான் செய்கின்றனர் .இதையும் நீங்கள் கண்டிக்கவில்லை என்பது வேதனையான உண்மை .எப்படி இங்கு தி மு க வளரும் ?? நீங்கள் நான்கு வருட ஆட்சியின் நல்ல பெயர் கடைசி ஒரு வருடத்தில் காணமல் போவது உண்மை . எப்பொழுது நீங்கள் கோவை அ தி மு க கூட்டத்தை பார்த்து அதே மைதானத்தில் போட்டி கூட்டம் போடுகிறேரோ அப்பொழுதே உங்களின் பயம் தோல்வி பயம் நன்றாக தெரிகிறது .உங்களின் பயமே உங்களின் கூட்டணியின் பலவீனம் . இந்த குடும்ப ஆட்சிக்கு தானே ஒரு இனத்தை பலி கொடுத்தீர் .?...
punal - kovai,இந்தியா
2010-07-30 22:43:27 IST
தேவையா இந்த பொதுக்கூட்டம்? செம்மொழி மாநாட்டிற்காக போட்ட தார் ரோடு எல்லாம் பேந்து வருது. (சலிவன் வீதிய பார்த்தாலே தெரியும் எவ்வளவு மோசமான தார் ரோட்ன்னு). சுத்தமா இருந்த சுவர் எல்லாம் கட்சி சமாசாரம் ஆயிடிச்சு (பைக்காரா ஆபீஸ் சுவர்) இப்படி எவ்வளவோ. கோவை அழகு மீண்டும் பாழாகி வருகிறது. தமிழை மறந்து மீண்டும் எல்லோர் நாவிலும் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மார்வாரி, பெங்காலி, ஒரியா என டவுனுக்குள் எல்லா வீதிகளிலும் கேட்கிறது.... ஆமாம் பலூனுக்கு, சர்கஸ்க்கு தமிழில் என்ன வார்த்தைகள்?...
சத்ரியன் - U.A.E,இந்தியா
2010-07-30 22:41:21 IST
ஜாக்பாட்!!உடன்பிறப்புக்களுக்கு இன்னும் ஒரு இலவச பிரியாணி!, கொஞ்சம் பணம்! ஜமாயங்கடா!...
Raja - Singapore,சிங்கப்பூர்
2010-07-30 21:04:01 IST
புலியை பார்த்து பூனை சுடுபோட்டுக்கிட கதைதான் இந்த பெரிய மனிதனோட கதை. . சுயமா ஒரு முடிவெடுக்க தெரியாத ஒரு முதலமைச்சர் நமக்கு ....
ஷக்தி - lusaka,ஜாம்பியா
2010-07-30 20:47:15 IST
அடபாவிங்களா எப்பிடிடா இதுக்கெலாம் மூளை வேலைசெயுதொட ....ஏன்டா அங்கங்க பவர் கட்டலா மக்கள் அவதிபடுறான் அதுக்கு எதாவது பன்னுங்கடான மாநாடு போடுறிங்க ,பொதுக்கூட்டம் போடுறிங்க .....குடும்பமா சேர்ந்து எப்பிடி இன்னும் பணம் சுருட்டலாம் திட்டம் போடுறிங்க .....நல்ல இருங்கடா......
ராம்ஸ் - tirupur,இந்தியா
2010-07-30 20:35:20 IST
2011 admk வின். அது கருணாநிதிக்கே தெரியும். பின்ன ஏன் விணாக மக்கள் பணத்தே துளைகிறார்கள்....
raja - saudi,இந்தியா
2010-07-30 20:29:03 IST
அய்யாவும் வேண்டாம் அம்மாவும் வேண்டாம் புதிதாக ஒருவருக்கு வாக்குஅளிப்போமே மக்கள் பணம் கொள்ளை போகவேண்டாமே....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-07-30 20:21:28 IST
87 வயது ஆனாலும் அரசியல் முதிர்ச்சி கொஞ்சமும் கருணாநிதிக்கு இல்லை என்பதை இந்த போட்டி கூட்டம் நிருபித்து விட்டது.கூட்டம் வந்தாலும் அது செயற்கை ஆகத்தான் இருக்கும்.கோவையில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்க தி மு க உடன் பிறப்புகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு....
jegan - Chennai,இந்தியா
2010-07-30 20:06:31 IST
ada ethula erukkira போட்டி, nalla kaariyangalai செய்யறதுல இருந்தா naadum நல்ல இருக்கே kannugala...
esspee - trichirapalli,இந்தியா
2010-07-30 20:04:51 IST
வேற வேலையே முதல்வருக்கு இல்லையா ? சும்மா லாவணி பாடிக்கிட்டு அந்த அம்மாவுக்கு பதில் சொல்லுறத தவிர எதாவது உருப்படியா செய்யலாமில்ல. ஏன் பயம் வந்து விட்டதா ? இந்த நாலு வருசதல பாராட்டு விழா பார்த்து பார்த்து, ஜால்ரா சத்தத்துல நாடு எப்படி ஆகி போச்சுன்னு பாக்க முடியல, மத்திய, மாநில பதவிகளில் நம்ம ஆட்கள் அடித்த சம்பாத்தியத்தை கணக்கு பாக்க முடியல, இப்போ மக்களின் வெறுப்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க நேரம் வந்தாச்சு . கொஞ்சமாச்சும் வேலைவெட்டி பாக்காம என்னத்துக்கு அந்த அம்மாக்கு பதில் கொடுக்கவேண்டீருக்கு ....
sekarbabu - coimbatore,இந்தியா
2010-07-30 19:25:18 IST
It is mere waste of public money. All political parties are paying money and offer liquour, briyani etc., to the people to come in large number for this kind of gatherings. People should realise that, it is our money being spent for unnecessary and useless activities. Then only our country will develop. Otherwise it will remain as such even after 20 years. All People should be educated to save our country....
vignesh - madurai,இந்தியா
2010-07-30 19:22:03 IST
தலைக்கு 1000 ரூபாய் குடுத்தாலும் நல்ல தமிழ் மகன் உங்கள் கூடத்துக்கு வர மாட்டான் !!!...
மோகன் - newyork,இந்தியா
2010-07-30 19:09:13 IST
இதற்கு எல்லாம் கொங்கு முன்னற்ற பேரவைக்கு தான் நன்றி சொல்லணும் .. அவர்கள் தான் கோவை பக்கம் அரசியலை திருப்பியது ... அடுத்த தேர்தலில் KMP- 2 சீட் வாங்கினால் கூட கோவைக்கு நல்ல காலம் என்று சொல்ல வேண்டும்...
எ.anand - Bangalore,இந்தியா
2010-07-30 18:21:26 IST
முட்டாள் மக்களே எல்லாரும் போங்கே. சில்லறை 1000 ருபாய் ஆவது கிடைக்கும். கூச்ச பட வேண்டம். எல்லாம் நம்ம டாஸ்மார்க்-க்கு நாம் கொடுத்த பணம் தான் நமக்கு கொடுப்பார்கள். சரக்கும் கிடைக்கும். ஜெயித்தால் பிறகு 100 மடங்கு நம் இடம் வாங்கி விடுவார்கள். வெக்கம் கெட்ட தி. மு.க அரசு....
ragusivan - chennai,இந்தியா
2010-07-30 17:57:39 IST
கோயம்புத்தூர் டாஸ்மாக் சேல்ஸ் எதாவது டார்கெட் வச்சி இருக்கீங்களா எனகேன்னேமோ மைல்டா டவுட் வருது சாமி...
bala - try,இந்தியா
2010-07-30 17:36:48 IST
அயா கலைஜேற தமிழ்நாடு என்ன உங்க பட்டா போட்ட எடமா . அடுதவங்ககுளுக்கும் சான்ஸ் koddunga sir...
2010-07-30 17:36:02 IST
ஆயிரத்தில் ஒம்போது ஏன்டா தினமலரோட கருத்து சொல்லும் பகுதியை வீணடிக்கிறே......
ர.ர.பிரவீன் குமார் - Chennai,இந்தியா
2010-07-30 17:27:04 IST
ஏம்பா சந்தோஷ், அது எப்டிப்பா எல்லா எடத்துலயும் வெக்கமே இல்லாம சொன்னதையே சொல்லி கிட்டு இருக்க? அது சரி உங்க பச்சை அம்மாவுக்கும் சுய புதி இல்ல, அப்புறம் உங்களுக்கு எப்டி இருக்கும்?...
Rajavin Parvaiyel.......... - Madurai.,இந்தியா
2010-07-30 17:21:47 IST
அபு - chidambaram,இந்தியா எந்த வளர்ச்சி இல் தமிழ் நாடு மூன்றாம் இடத்தில உள்ளது என சொல்ல mudiuma எனக்கு தெரிந்து தொழில் வளர்ச்சி இல் கடைசியல் இருந்து மூன்றாம் இடம் கல்வியல் கடைசியல் இருந்து இரண்டாம் இடம் உற்பத்தியல்........... இது போல் எல்லாமே தலை கிழ் நிலைமை இது என்னோட ரிப்போர்ட் இல்லப்பா உங்க ஆதரவோட Sorry பேருக்கு உங்களையும் கூட வச்சிருக்க மத்திய அரசு ரிலீஸ் பண்ண Statistical Reportla இருக்கு போய் பாருங்கள் pls.......... போட்டி பொதுக் கூட்டம் நடத்துங்க, போட்டி ஆர்ப்பாட்டம் நடத்துங்க ஆனால் மக்கள் ஏமாற மாட்டங்க இங்க எழுதுற உங்க அடிமைகள் கூட எதாவது ஒரு வகையில் உங்கனால பாதிக்க படும் போதுதான் அவங்க தவறை உணர்ந்து திருத்துவாங்க.......... இலவசம் மட்டுமே கொடுத்து வளர்ச்சி பின் தள்ளிய இவர்களை மக்களும் பின் தள்ளுவார்கள் இது காலத்தின் கட்டாயம்....
ஸ்டார்வார்ஸ் - pakistann,இந்தியா
2010-07-30 17:18:48 IST
சொப்பா.....இப்ப வேய் .....கண்ண...கட்டு தே ...!!!!!!!! heyy politicians ...dont come to our Dreamland..COIMBATORE..we r not liking u......better stay were u are...COIMBATOREANS ..are brainy peoples... they wont ..dance according to ur tune....they juz watch u like JOKER in auditorium..and they will go.Dont thnk .they will vote u..Bcoz of croud..if any one read this pls forward to DMK......
கே. ஜீவிதன் - Villupuram,இந்தியா
2010-07-30 17:05:17 IST
வாசகர்களே, இலவசம் என்று சொல்லாதீர்கள். லஞ்சம் என்பது தான் சரியான வார்த்தை....
மதுரை muthu - chennai,இந்தியா
2010-07-30 16:39:52 IST
aandava!... intha peaikalidam irrundu engaalai kaappatru!.. enga nattai nanga parthukirom... ivan, appavi pothu makkal....
thiruppa - cimbatore,இந்தியா
2010-07-30 16:20:02 IST
நாங்க ஊர்ல நிம்மதியா வாழ்றது உங்களுக்கு புடிக்கலையா? உங்க குடும்பம் இங்க தா ஷிப்ட் ஆகா போகுதாம் ?சீக்கிரம் நாங்க ஊற காலி பண்ண வேயண்டியதுதான் ...!...
அபு - chidambaram,இந்தியா
2010-07-30 16:19:30 IST
இன்னும் என்ன தான் வேண்டும். எல்லாம் வாங்கிகொண்டு பின்னால் பேசும் நம் சமுதாயம் என்று தான் மாறுமோ. இலவசம் எல்லாம் இல்லை என்று வழ்பவர்களுக்தான். இன்று தமிழகம் வளர்ச்சி இல் மூன்ராம் இடத்தில் உள்ளது. தயவு செய்து தமிழகம் கடைசி இடத்தில் போக வழி காண வேண்டாம். மத்திய அரசு உதவியுடன் இருக்கும் அரசு தான் வளர முடியும். எல்லா விசயங்களிலும் முருண்டு பிடிக்கும் ஜெயலிலிதா நல்லா அரசு அமைக்கை முடியாது....
sivan - villupuram,இந்தியா
2010-07-30 16:02:05 IST
அறிவு நமக்கு இருக்கோணும் யாரையும் குறைகூறுவது தவறு புத்தியாக செயல்பட்டு நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் ஓகே ...பணம் , பரிசுக்கு ஒட்டு போடாதிர்கள் ............
குமார்.M - Mumbai,இந்தியா
2010-07-30 15:36:44 IST
செந்தில், குஜராத் - ஹிந்தி படிக்கிறது, பேசுறது ஏல்லாம் முதல்வர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தம். தமிழ்நாட்டு மட தமிழன்களுக்கு ஏல்லாம் கிடையாது....
பாலசுப்ரமணியன் - Trichy,இந்தியா
2010-07-30 15:18:47 IST
தனது சாதனைகளை தினம் தோறும் பட்டித்யளிடும் மு க, அது உண்மையெனில் ADMK வை பார்த்து ஏன் பயப்பட வேண்டும். இதிலிருந்தே தி மு க வின் அரசு தோற்றுவிட்டது தெரிகிறது...
கே.சுபாஷ் - uralpattiudumalaippettai,இந்தியா
2010-07-30 15:15:51 IST
இந்தப் பயங்கரப் போட்டியால் மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!! எதற்கும் கோவணம் பத்திரமாக இருக்கட்டும்!.......
நத்தம் suresh - chennai,இந்தியா
2010-07-30 14:13:11 IST
இந்த அறிவிப்பு என்ன சொல்கிறது என்றால் ஐயாவுக்கு அம்மாகிட்ட பயம் வந்த்டுசுன்னு சொல்லுது. ஐயாவோ அம்மாவோ பாதிக்கபடுவது பாவம் கோவை மக்கள்தான்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....
KANNAN - VELLOE,இந்தியா
2010-07-30 13:48:27 IST
தேர்தல் நேரத்தில் அமெரிக்காவை போல இங்கும் டெலிவிஷனில் அம்மாவையும், தலைவரையும் நேருக்கு நேர் லைவாக மோத விடன்ய்ம் அப்பா தெரியும் கூட்டமெல்லாம் வெறும் வெத்து வேட்டுன்னு,...
deva - puducherry,இந்தியா
2010-07-30 13:06:22 IST
இப்படியே ஏட்டிக்கு போட்டி செய்யுங்க தயவு செய்து மக்களுக்கு எதுவும் செய்ய கூடாது ஒ.கே....
கே. விஜிகுமார் - Villupuram,இந்தியா
2010-07-30 12:55:27 IST
ஐயோ, இந்த சிறு பிள்ளை போட்டி அரசியலை பார்க்க வேதனையாக இருக்கிறது. ஏண்டா, இந்த தமிழ்நாட்டில் வாழுகிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது....
சி.ராமசாமி - tup,இந்தியா
2010-07-30 12:27:02 IST
போட்டி கூட்டமோ,பொட்டி பொட்டியா செலவு பண்ணுன கூட்டமோ,போறது நம்ம வரிப்பணம்தான்...ஆனா நல்லா பொழுது போகுதுங்க....ஏனுங்க சரிதானுங்களே....i...
Vaithianathan - Muscat,ஓமன்
2010-07-30 12:07:59 IST
இனிமே திமுகவுக்கு கஷ்ட காலம் தான். இனி ஒரு பதிலடியும் எடுபடாது. ஏதோ அரசாங்க பணத்தை வீணடிக்க போறான் கருணாநிதி....
jj - india,இந்தியா
2010-07-30 11:59:09 IST
both party total expences itself we can change Kovai to number one city in Tamilnadu. Readers & Writers think ????? and comment !!!!!...
sripriya - Thirupur,இந்தியா
2010-07-30 11:51:00 IST
ரொம்போ கஷ்டம் கோவை மக்களுக்கு...ஸ்கூல், பிசினஸ் எல்லாம் பாதிக்கும் .......
செந்தில் குமார் - coimbatore,இந்தியா
2010-07-30 11:50:08 IST
எங்க ஊர அழிக்க போட்டி போடறாங்க ??...
king - chennai,இந்தியா
2010-07-30 11:46:31 IST
மக்களே , திமுக ஒரு கட்சியே அல்ல ..அது ஒரு குடும்பதேன் பெயர் ...எந்த ஒரு எஹிற்பருபும் எல்லா ஜெயா எங்கே >? தன குண்டும்பமே முக்கியம் என உள்ள கெழவன் எங்கே ...சிந்திப்பீர்...
நிரஞ்சன் குகன் - Madras,இந்தியா
2010-07-30 11:40:15 IST
அன்பு தினமலர் வாசகர்களுக்கு திரு கைப்புள்ள அவர்களின் கருத்து வேடிக்கை, கேளிக்கை மற்றும் நகைச்சுவை நிறைந்ததது. அவருடைய கருத்துக்களையும் ஆதங்கத்தையும் விரும்பி படிப்பேன். அதே போன்று மற்ற வாசகர்களின் கருத்துக்களையும் படிக்கிறேன் நிறைவடைந்திருகிறேன் . திரு கைப்புள்ள அவர்களை அன்புடன் வேண்டுவது, பண்புபோடு ஆலோசனைகளையும் வழங்கி விமர்சித்தால் நன்றாக இருக்கும். இதே போன்று மற்ற தினமலர் வாசகர்களிடமும் வெளிபட்டால் நன்றாக இருக்கும். கைப்புள்ள அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
2010-07-30 11:34:59 IST
ஆயிரத்தில் ஒன்னு..நீ ஆம்பளையா இல்லை பொம்பளையா...இல்லை ஒம்போதா..நீயும் மாஞ்சு மாஞ்சு கருத்து சொல்ற...ஒரு எழவும் புரிய மாட்டேங்குது..ஏன் தினமலரோட கருத்து சொல்லும் பகுதியை வீணடிக்கிறே...கட்சி சார்பாவோ இல்லை நடுநிலையாவோ கருத்து சொன்னால் கூட நாலு பேருக்கு புரியிற மாதிரி சொல்லுய்யா/சொல்லும்மா/சொல்லு..ஆ....ஆ...
கந்தசாமி - Tirupur,இந்தியா
2010-07-30 11:32:32 IST
வாசகர்கள் தங்கள் கருத்தை சொல்ல உரிமை உண்டு.ஆனால் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்களை மரியாதை குறைவாக குறிப்பிடக்கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். தி.கந்தசாமி திருப்பூர்...
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-30 10:58:02 IST
எப்படியோ மஞ்சள் துண்டு கோவையில் மண்ணை கவ்வ போகிறார். மன்னிக்கவும் ஒரு மண்ணை கூட கவ்வ முடியாது. மக்கள் மனம் மாறி ரொம்ப நாளாச்சு. எதோ 2006 -இல் பல பித்தலாட்டங்களை பண்ணி ஆட்சியை பிடித்தீர்கள்.இந்த முறை நடக்காது. நான் ஏற்கனவே கூறியபடி அதிமுக மிக பெரிய மக்கள் இயக்கம். ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி. மக்கள் தானாக முன்வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். தி மு கவில் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே பல பேரை குவாட்டர், கோழி பிரியாணி போட்டு வளர்க்கிறார்கள். இதில் பாதி பேர் ஜெயிலில் இருந்து தப்பிக்க விட பட்டவர்கள். பத்திரிகை கேமரா மேன்களிடம் சொல்லி வாட்ச் பண்ண சொன்னால் தெரியும். எல்லா தி மு க பொது கூட்டத்துக்கும் ஒரே ஆட்கள்தான். செம்மொழி மாநாட்டில் பார்த்த பெரும்பான்மையோரை இங்கும் பார்க்கலாம். இதில் பல பேர் சரக்கு அடிச்சிட்டு PSG கல்லூரியில் உறங்கியதையும் பல பேர் மாநாட்டு பந்தலிலே தல்லாடியதையும் தினமலர் படம் பிடித்து காட்டியதை நினைவில் கொள்க. இந்த முறை அட்டூழியங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஏன் என்றால் செம்மொழி மாநாடு என்பதால் இவர்களுக்கு பல கட்டுபாடுகள் இருந்தது. இப்போது எந்த கட்டு பாடும் இல்லை. கோவை மக்களே! உச்ச கட்ட உசாரில் இருங்கள்....
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-07-30 10:56:34 IST
யார் கூட்டம் அதிகமாக வருகின்றது என்பது பெரிதல்ல, மக்களுக்கு குறிப்பாக விவசயிகளுக்கு ,நடுத்தர,ஏழை மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும். அடுத்த ஐந்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது. இனி வரும் முக்கிய பிரச்சனைகள் என்ன தெரியுமா, உணவு பஞ்சம்,குடி தண்ணீர்,சுற்று புற சுழல்,வேலை இல்லா திண்டாட்டம்,பெரிய நோய்களின் ஆபத்து. மற்றும் பல..... ஆனால் இவைகளை பற்றி அம்மாவிற்கும் சரி,அய்யாவிற்கும் சரி கவலை இல்லை. அவர்கள் குறிக்கோள் ஒன்றுதான் பணம்,பதவி,புகழ்,துதி பாடல்,காலில் விழுவது,தன் குடும்பத்திற்கும்,தன் தோழி குடும்பத்திற்கும் கோடி கோடியாய் பணம்.சினிமா என்ற போர்வையில் கோடி கோடியாய் பணம்,டிவி சேனல்கள் மூலம் வரும் பல கோடி கணக்கான திறமையான பெண்களை வளரவிடாமல் சீரியல் என்ற பெயரில் அவர்களின் மூளையை மழுங்க வைத்து,தமிழ்நாட்டின் கலச்சாரத்தை கெடுத்து, டிவி சேனல்கள் மூலம் எப்படி கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதற்கு இரண்டு கட்சிகளுமே நல்ல உதாரணம். மக்கள்தான் திருந்தவேண்டும்..............
கார்த்திக் - chennai,இந்தியா
2010-07-30 10:36:29 IST
முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் (கடைசி) பொதுக்கூட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.......
Rangarajan - Chennai,இந்தியா
2010-07-30 10:34:01 IST
இவங்க பதிலடி குடுக்கனும்ம்னா அறிக்கையிலேயே குடுக்கலாமே. எதுக்கு இந்த மாநாடு. இவருக்கு ஊழலை பத்தி பேச என்ன யோக்யதை இருக்கு? உலகமகா ஊழலான spectrum ஊழல் இவர் செய்த்தது. உலகத்திலேயே இல்லாத அளவுக்கு ஊழலினால் சொத்து சேர்த்து ஓட்டுகளை பணம் மற்றும் பிரியாணி மற்றும் சாராயம் கொடுத்து விலைக்கு வாங்குவது என்ன ரொம்ப நல்ல செயல்களா. ஒரு generation மக்கள் குடிகாரர்களாக மற்றும் சோம்பேறிகளாக மாறுவதற்கு வழி செய்தது. இதை சொல்லிய பதிலடி கொடுக்க போகிறார்? இவர் எண்ணத்தை சொல்லி பதிலடி கொடுக்க போகிறார். மொத்தத்தில் கோவை மக்களுடைய நிம்மதி சிறிது காலமாக தொலைந்து வருகிறது இந்த மஞ்ச துண்டு ஊழல் பேயினால். கோவை மக்களுக்கு எனது அனுதாபங்கள். சென்னைவாசிகள் நாங்கள் பழகி கொண்டு விட்டோம் நீங்களும் பழகி கொள்ளுங்கள்....
senthil - gujarat,இந்தியா
2010-07-30 10:22:51 IST
எனக்கு பயம் வந்து விட்டது தமிழ்நாட்டில் வாழ்வது மிகவும் கடினம். இவர பார்க்கும்போது உண்மையிலேயே காமராஜர்,அண்ணா, கக்கன் போன்றோர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்களா என்று சந்தேகம் வருது. இவர்கள் இருவரும் சேர்ந்து சுடுகாடாக்காமல் விட மாட்டார்கள். மட மக்களே நீங்கள் 5 அறிவு படைத்த மிருகமா ? ஏன் இப்படி 100 ருபாகும், சோத்துக்கும் அலையிறிங்க. அவுங்க அப்பா வீட்டு காசை எவனும் கொடுக்கல எல்லாம் நம்ம பணம். நான் இங்கு வந்து ஹிந்தி தெரியாம எவ்வளவு அசிங்க பட்டேன்னு எனக்கு தான் தெரியும். மனசுல கைய வச்சு சொல்லுங்க ஒரு தமிழன் தமிழ்நாட்ட விட்டு இந்தியாவுள்ள வேற எங்கயும் போக முடியுமா மொழி தெரியாம. வேறு மொழி தெரிந்து கொள்வது தப்பே இல்லை. நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு அதை விட்டுட்டு மாநாடு ரொம்ப முக்கியமா? நீ உன் கடமையை செய்தால் பலன் தானாக வரும். இப்படிக்கு வேறு மாநிலத்தில் மொழி தெரியாமல் அசிங்க படும் தமிழன்...
Palanivelu - trichy,இந்தியா
2010-07-30 10:17:39 IST
USELESS... Peoples......
லிங்கம் - Chennai,இந்தியா
2010-07-30 10:15:07 IST
அந்தோ பரிதாபம்....அப்பனுக்கே பரிதாபம்... ”வலுவிலந்து போன, பலவீனப்பட்ட, நோஞ்சானான, 2011 தேர்தலுக்குப் பின் காணாமல் போகப் போகின்ற், தொண்டர்கள் செல்வாக்கில்லாத, செல்லாக்காசாகப் போகின்ற, தூண் போன்ற ‘மாபெரும் தலைவர்களை’ இழந்து விட்ட, அரசியல் முடிவுரை எழுதப்பட்ட, இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோன,மக்கள் செல்வாக்கிழந்த” ஒரு எதிர்க்கட்சியுடனா தி.மு.க போட்டி போட வேண்டும்? அவமானம், அவமானம்....தி.மு.க இனிமேல் போட்டியாகக் கருத வேண்டியது அமெரிக்க ஜன்நாயக்கட்சியைத்தானே....கருணாநிதிக்கும், மகன்களுக்கும் அதிமுக-விடம் இன்னும் என்ன பயம்? அய்யோ பரிதாபம்...அப்பனும் பரிதாபம்....அவன் புள்ளைகளும் பரிதாபம்...
குமரன் - Cuddalore,இந்தியா
2010-07-30 10:08:52 IST
என்ன செய்தாலும் நீ (கருணாநிதி) தொக்க போவது உறுதி இந்த வயசிலேயும் உனக்கு இந்த ஆட்சி ஆச போகலையே...
கந்தசாமி - Tirupur,இந்தியா
2010-07-30 09:51:19 IST
Readers have right to criticise. But give respect to chief minister as well as former chief minister. This is my humble request....
மோகன்ராஜ் - coimbatore,இந்தியா
2010-07-30 09:47:56 IST
தீமூகா அனுதாபிகளே உங்க அய்யா மஞ்சத்துண்டு அம்மாக்கு எதிரா போட்டி கூட்டம் போடுறத விட்டுவிட்டு அம்மா கூட்டதுல கேட்டாங்களே கேள்வி போலி மருந்துகள் விற்பனைகள் செய்வதில் மஞ்சத்துண்டு குடும்ப உறவினர்க்கு பங்கு உள்ளது என்று அதற்கு பதில் சொல்ல சொல்லுங்கள் spectrum ஊழல் கு பதில் சொல்லுங்கள் விலைவாசி உயர ஏன் நீங்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தீர்கள் ஹோர்லிக்ஸ் பாட்டில்களை திருடி ஆண்டிபட்டியில் இலவச மருதுவமுகம்களை நடத்திய மகனின் கேவலமான செயலுக்கு தமிழக ஆண்டிபட்டி மக்களிடம் மன்னிபுகேக்க சொல்லுங்கள் இப்படி எல்லாம் ஊரன்சொத்த அமுக்கி இலவசம் கொடுப்பதை நிறுத்த சொல்லுங்கள் கண்டிப்பாக போட்டி கூடம் நடத்துவதால் உங்கள் டீமுக கண்டிப்பாக ஒரு தொகுதியும் கூட கோவைல வெற்றி பெறாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் மீண்டும் இரட்டை இல்லை மலரும் உதய சூரியன் மறையும் நாள் வெகு தொலைவில் இல்லை...
செந்தில் - India,இந்தியா
2010-07-30 09:39:15 IST
சந்தோஸ் இப்பவும் சொல்றேன் அந்த இடத்தில 50,000 பேர் கூடினாலே அது அதிகம்தான்,எனவே இப்போதும் அதே அளவு கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கலாம்! ஆனால் எதற்கு என்று யோசியுங்கள்!இங்கே காரியம் சாதித்தவர் கூட்டம் போடுறார்! சமீபத்தில் கோவையில் செம்மொழி மாநாட்டுக்காக நடந்த முன்னேற்ற பணிகள்,இப்போது திறக்கப்படும் "டைடல் பார்க்" இதெல்லாம் உங்கள் கோட்டையான கோவையில் நீங்களா செய்தீர்கள்? வெறும் கூட்டத்தை கூட்டுவது இரு கட்சிகளாலும் முடியும்!இன்னும் இதையெல்லாம் ஓட்டாக மாறும் என்று நம்புகிறீர்களா?...
கண்ணன் - chennai,இந்தியா
2010-07-30 09:01:23 IST
This is the heights of the selfish and egotistical behavior of KK and his cronies. They cannot stomach the fact that JJ had attracted record crowds in Kovai and now they have to (ab)use the official machinery to do something similar. By doing all these useless things KK is just proving JJ's point that the crowds for the Semmozhi Maanadu were not all that great given the amount of government misuse. This KK government has to go for TN to improve its standing and image in India and across the world...
KKB Karthik - NOTHINGTOSAY...,சிங்கப்பூர்
2010-07-30 08:55:58 IST
நோதிங் டு செ...
JOHN - TIRUPUR,இந்தியா
2010-07-30 08:29:30 IST
FOONGAIYA...
ம்.ராம் - coimbatore,இந்தியா
2010-07-30 08:28:56 IST
சூப்பர் dmk முதல்வர் அய்யா தமிழ் நாடு புல் வரும் அய்யா . அய்யா வாலுக...
சந்தான வடிவேலன் - chennai,இந்தியா
2010-07-30 08:01:52 IST
சபாஷ் சரியான போட்டி! வெல்வது கருணாநிதியே !!!...
2010-07-30 07:40:41 IST
தேவையில்லாமல் கூட்டத்தைக் கூட்டி, மனித உழைப்பையும், பொருளாதாரத்தையும் வீணடிப்பவர்களை குண்டர் சட்டத்தில் தூக்கிப் போட்டாலென்ன !...
ஆயிரத்தில் ஒன்னு - Vellore,இந்தியா
2010-07-30 07:07:00 IST
அடப்பாவிங்களா.. நீங்களும் அதே எடத்துல பொது கூட்டம் போடுறீங்களா? போடுங்க. ஆனா நீங்க ஒரு "மருத்துவமனை" கட்டிட்டு ஒரு பொது கூட்டம், ஒரு "டைடல் பார்க்" கட்டிட்டு ஒரு பொது கூட்டம்னு மக்களுக்கு நல்லது செஞ்சிட்டு தான் பொது கூட்டம் போடுவீங்க. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? ஆனா எங்க செல்வி. அம்மா அவர்கள் ஆட்சியில இருக்கும் போது ஒன்னுமே செய்யாம இருந்துட்டு ஆட்சி போனப்புறமும் 4 வருஷம் வெட்டியா காலத்தை ஓட்டிட்டு தேர்தல் வந்ததும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அதாவது தில்லா பொது கூட்டம் போடுவாங்க. சரி சரி. போட்டுக்குங்கோ. ஆனா கூட்டத்தை வச்சி எல்லாம் ஓட்டு வந்துடாது அதை மொதல்ல தெரிஞ்சுக்குங்கோ. என்னாடா இவன் திடீர்னு இப்படி சொல்றானேன்னு நெனைக்கிறீங்களா. விஷயம் இருக்கு. எங்களுக்கு இங்கு கருத்து சொல்வதில் மட்டும் பேராதரவு கொடுத்து வரும் பா.ஜ.க கட்சியின் தலைவர் அண்ணாத்த பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் தான் எங்களுக்கு இதை புரிய வச்சாரு எப்படீன்னு கேக்குறீங்களா? சொல்றேன். மூணு நாலு முன்னால தினமலர்ல அண்ணாத்த பங்கேற்ற பொது கூட்டம் போட்டோவை பாத்தீங்களா? அவரு என்ன சொல்ல வர்றாரு புரியலையா? "யோவ் சராசரியா தொகுதிக்கு 100 ஓட்டு வாங்குற நாங்களே சுமார் 1000 பேரை கூட்டிடோம். அப்போ உங்க செல்வி. அம்மாவுக்கு 50000 பேரு வந்தாங்கன்னா 5000 ஓட்டு தானேடா கெடைக்க போவுது. இதுக்கேன்யா இப்படி கூவுறீங்கோன்னு" நெத்தியடியா புரிய வச்சுட்டாரு. என்னா இருந்தாலும் பெரிய மனுஷன் தான் அவரு. இப்போ புரியுதா கூட்டத்துக்கும் ஓட்டுக்கும் சம்பந்தமில்லைன்னு....
சாம் - Pune,இந்தியா
2010-07-30 03:02:18 IST
காபி கிங் தி மு க...நீங்க ஒரு ஆணியையும் புடுகேங்க வேணாம்.....2011 அ தி மு...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-30 02:45:05 IST
அய்யா மஞ்சள் துண்டு, தயவு செய்து அம்மா வாய்தாவை கண்டித்து மாநாட்டில் ஒரு பெரிய விஷயமாக பேசுங்கள்.... நீங்கள் அவ்வாறு பேசினால் தான் அதிமுகவுக்கு அனுதாப அலை ஏற்படும். எப்படியும் எங்களை வெற்றி பெறசெய்திடுவீர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது....
tamimul ansari - jeddahsaudi,இந்தியா
2010-07-30 02:27:49 IST
keduketta arasiyal nadathum arsiyal viyaathigale makkalukku nalla thittangalai kondu varuvathil போட்டிபோடுங்கள், athai vittu ippadi makkal panathai veenaakka pottipodatheergal, arivirunthal sinthiyungal arasiyal viyaathigale, oho ungalukkuthan athu illaiye....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-07-30 02:07:30 IST
தலிவா, எனக்கென்னாமோ எல்லாம் முடிஞ்சு போனாப்போல தான் தெரிது தலிவா. நீயே பாரேன், அந்தம்மா பல வருசமா ஆட்சில இல்ல, பலபேரு ஓடி புட்டானுக, கூட்டணியும் ஒன்னும் சரி இல்ல, இடைதேர்தல்ல டெபாசிட் காலி, அந்தம்மா நாலு வருசமா வெளில தல காட்டல, சட்டசபைக்கும் வரல. சிம்ப்ளா சொல்லனும்னா எதுவுமே சரி இல்ல. ஆனாலும் இன்னிக்கு ரேஞ்சுக்கு அந்தம்மா வருதுன்னு சொன்னா போதும், உடனே எப்படி கும்பல் கும்பலா கூடிடுராணுக பாத்தியா? ஒண்ணுமே பண்ணவேண்டாம், சும்மா வருது ன்னு சொன்ன போதும். உடனே கூட்டம். அந்த ஸ்டார் பவர் நம்ம கூட்டத்துல யாருக்குமே இல்லியே தலிவா. நீயோ, இல்ல நம்ம தளபதியோ, யாரு வந்தாலும் சரி, தானா ஒரு பயலும் வரமாட்டேன்கிறான். நம்ம ஆளுங்கள தேடிதேடி புடிச்சு காசு கொடுத்தான் வராங்க. அதுவும் முக்காவாசி காசு கொடுத்து கூட்டிட்டு வர கூட்டம்தான் தென்படுது. தானா பாக்க வர கூட்டம் ஒன்னியுமே காணோமே தலிவா. என்னமோ தலிவா இப்படி சும்மா வெறும் குவாட்டரையும், பிரியாணியையும், காசையும் நம்பித்தான் நாம பொழப்பே ஓடுது. ஹ்ம்ம்... சரி, போடுங்க கூட்டத்தை. அப்புறம் எதாச்சும் வளச்சு வளச்சு அறிக்கை வுட்டு சமாளிப்போம். ஹையோ... ஹையோ... என்னிக்குதான் இதுக்கொரு விடிவு காலம் பொறக்குமோ....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-30 02:04:02 IST
இப்படியும் ஒரு முதல்வரா? சுய புத்தியே இல்லாத ஒரு முதல்வர், ஜெயலலிதாவுக்கு போட்டியாகவே எதையும் செய்றார், அடுத்து எங்கே? திருச்சி தான், வெட்கமாக உள்ளது. என்னையா செந்தில் அதே கோவை நூறு அடி சாலையில் கூட்டத்தை கூட்டி கான்பிக்கபோரீரோ? உங்கள் கருத்து படி அதிமுக கூட்டம் நடந்த அந்த மைதானம் ஒரு சின்ன மைதானம் அல்லவா, சின்ன மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது என்று நாங்கள் போட்டோம் என்று நீங்கள் சொன்னீர்கள், இப்போ நீங்களும் அந்த மைதானத்தில் நடத்தி கூட்டத்தை காண்பிக்க போறீரோ? பதில் கூறும். அது எப்படி எல்லா திறப்பு விழாவும் அவசர அவசரமாக், அரை குறையாக திறந்து வைக்கபடுகிறது? முதல்வர் ஓடி ஓடி அடிக்கல் நாட்டுகிறார், ஓடி ஓடி திறப்பு விழா நடத்துகிறார், என்ன அவசரம் என்று புரியவில்லை, தேர்தல் பயம் தான். அய்யா மஞ்சள் துண்டு மகராசா, நீ என்ன தான் உருண்டு பிரண்டாலும் கள்ள வோட்டு போடாமல், காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல், பணம் கொடுக்காமல் உங்களால் ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியாது, நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை முறை கோவைக்கு விசிட் அடிச்சாலும் உங்களால ஒரு ஆணையும் பிடுங்க முடியாது. கோவை மக்களுக்கு நன்றாக தெரியும் உங்கள் குறுக்கு புத்தி, ஏட்டிக்கு போட்டி, வரும் தேர்தலில் தெரியும் உங்கள் லட்சணம்.. கோவை மக்கள் MGR என்ற மந்திரத்தை ஓதுபவர்கள், கருணாநிதி என்ற துஷ்ட மந்திரத்தை ஒரு போதும் ஓத மாட்டார்கள். நீங்கள் கோவையில் மாநாடு முடித்தவுடன் மறுபடியும் அம்மா மாநாடு நடத்த சக்தி உள்ளது, உங்களுக்கு அந்த சக்தி உள்ளதா, இதற்கே உங்களை தூக்கி நிப்பாட்ட பத்து ஆள் தேவைப்படும், கவுத்து போட்ட கரப்பான் பூச்சி நீங்க....
தமிழன் - USA,யூ.எஸ்.ஏ
2010-07-30 02:03:06 IST
ஆகா பலே வெல்லய தேவா... செய்ங்கடா எப்படி தான் யோசிப்பாங்களோ. முதல மஞ்சள் அப்புறம் பச்சை அப்புறம் மஞ்சள் அப்புறம் பச்சை யடா ? இப்படி மாதி மாதி ஒரே இடத்தில புதுசா ஏதும் சொல்ல போறிங்களா ? எங்கள பார்த்தா பாவமா தெரியலையாடா உங்களுக்கு ? வேணாண்டா எங்களால முடியல வலிகிது. இப்படி போட்டி போட்டு மக்களுக்கு நல்லது பண்ண ஒருத்தரயும் காணோம் சுமா வெட்டி கூட்டம் வெட்டி செலவு. கடவுள் தான் எங்கல காபதணும். நீங்க பண்றது வடிவேலு கமெடி டி கடைல உட்காந்து பேப்பர் படிச்சிட்டு அனானுக்கு ஒரு ஹோர்லிக்ஸ் நு ஆர்டர் பண்ணி கீழ விழுற காமடி தான் நினைவுக்கு வருது. ஹயோ..... ஹயோ ........
மல்லிக் - Dubai,இந்தியா
2010-07-30 01:57:27 IST
ஒரு காலத்தில் கருணாநிதிக்கு கூட்டம் சேரும் ஆனால் ஜெயிப்பது எம்ஜியாரகத்தான் இருக்கும்,தற்போது தலைகீழ் கூட்டம் சேருவது அம்மையாருக்கு ஜெயிப்பது அய்யா. மல்லிக் , துபாய்...
Selva - Kovilpatti,இந்தியா
2010-07-30 01:57:24 IST
என்ன தான் காக்க ஒயர ஒயர பறந்தாலும் ஒன்னும் ஆகாது அப்பு ... உங்க ஆட்சி அவ்வளவுதான்...
Thangaraj - Salem,இந்தியா
2010-07-30 01:56:07 IST
மணல் கொள்ளை .ரௌடிசம் , ரேசன் ஊழல் ...உடன் பிறப்புகள் அடாவடி .. இதை தான் பட்டியலிட வேணும்...
வெங்கடேசன் - Richmond,யூ.எஸ்.ஏ
2010-07-30 01:20:25 IST
கோவை மக்கள் ரொம்ப பாவாம். ஏற்க்கனவே அவங்க தி.மு.க மேல செமை கடுப்புல இருக்காங்க, இன்னும் கடுப்பு எகிற போகுது....
மு. அமானுல்லா - Dubai,உகான்டா
2010-07-30 01:18:15 IST
போட்டி ஆர்ப்பாட்டம்.... போட்டி பொதுக் கூட்டம்....கலக்குங்க உடன்பிறப்புகளே... ஜெ. கோவையில் கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே தவறாமல் பதில் தருவது தான் நீங்கள் அதிமுகவுக்கு கொடுக்கும் உண்மையான நெத்தியடியாக இருக்கும். ஆனால் அது நிச்சயம் நடக்காது. ஏற்கனவே ஜெ. கேட்ட பல கேள்விகளுக்கு உருப்படியான பதில் உங்களிடம் இருந்து இல்லை. 1லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம், பல நூறு கோடிகளை கொண்ட இதர ஊழலினை பற்றி ஜெ. பேசினால் சிறுதாவூர், கொடநாடு பங்களாக்களும் (என்ன ஒரு 20 கோடி தேறுமா?) டான்சி நிலமும் (5 லட்சம் மதிப்புடையவை) ஜெ. வாங்கிய 1 ரூபாய் சம்பளமும் தான் உங்கள் பதிலாக இருக்கும். உங்கள் குடும்ப அரசியலினை பற்றி விமர்சித்தால் வளர்ப்பு மகன் திருமணமும் மன்னார்குடி குடும்பமும் தான் உங்கள் விளக்கவுரையாக இருக்கும். மற்றும் இதர குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் இந்த சாக்கு பதில் கூட உங்களிடம் இல்லை. இன்னும் எத்தணை காலம் தான் 1991-1996 ஜெ. ஆட்சியினை பற்றி விமர்சித்து கொண்டிருப்பீர்கள். கடைசியாக கோவை மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-07-30 01:02:02 IST
கொங்கு மக்களே, உங்க பாஷைல சொல்லனும்னா, யென்ன கெரகம்டா இது? எங்கயோ சுத்திட்டு இருந்த கெரகம், என்னமோ தெரில கொஞ்ச நாளாவே நம்ம ஊர புடிச்சு ஆட்டுது. கட்டிதீனி, எவன் கண்ணு பட்டிச்சோ, ஊர்ல இருக்கிற கெரகம் பூரா நம்ம ஊரு மேல வந்து ஏறுது. இது ஏதோ சாமி குத்தம் போல தெரியிது. எல்லோரும் சேர்ந்து கருமாரியாத்தாளுக்கு பொங்கல் வெச்சு ஊத்துங்க. நம்ம புடிச்ச கெரகம் தொலையட்டும். ஹிஹி... ஹிஹி... அட நாராயணா, டேய் நாராயணா, எனக்கு இவங்களோட படபடப்பையும், எல்லாமே முடிஞ்சு போனமாறி, கால்ல வெந்தண்ணி கொட்டினாமாறி அங்கயும் இங்கயும் ஓடுறதையும், பறந்து பறந்து அறிக்கை விடுறதையும் பார்த்தா...... என்ன நாராயணா, பொங்குல மாட்டின எலி மாறி ஆய்டிச்சு இவங்க நிலைமை. ரொம்ப டெஸ்பரேட்டா எப்படியாச்சும் நிலைமை மாறிடாதான்னு காத்துல மாட்டின பலூன் மாறி அலையிறத பாத்தா ரொம்ப சந்தோசமா இருக்குடா நாராயணா. என்ன ஆவுமோ ஏது ஆவுமோ ன்னு இருதல்லை கொல்லி எரும்புமாறி தவிக்கிறத பார்த்தா ரொம்ப ஜாலியா இருக்கு நாராயணா. ஸ்டார்ட் மீசிக்... டமுக்கு டக்கான் டம்... டுமுக்கு டாக்கா டும்.... நான் வரட்டா நாராயணா......
இப்ராகிம் - Chennai,இந்தியா
2010-07-30 00:56:47 IST
தோல்வி பயம் இப்போதே தொற்றிக்கொண்டது.உலககோப்பை ஹாலந்து கதி தான் தி மு க உக்கு...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
Your Name  :
Your Email Id :
Your city (or) location  :
Your country  :
Your Comment :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)