பத்மநாப சுவாமி கோவில் பாதாள "ஏ' அறை திறப்பு: பொக்கிஷங்கள் மதிப்பீடு முடிய பல மாதமாகும்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலில் பூமிக்கடியில் உள்ள, பாதாள அறைகளில், "ஏ' அறை நேற்று காலை திறக்கப்பட்டது. அதிலுள்ள தங்க, வைர, ரத்தின, வைடூரிய நகைகள் குறித்தான மதிப்பீடு பணிகள் துவங்கின. இப்பணிகள் முடிவடைய பல மாதங்கள் ஆகலாம்.

கேரளா, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பூமிக்கடியில் ஆறு அறைகளில், பல நூற்றாண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, ரத்தின, வைடூரிய பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, தேசிய அருங்காட்சியக இயக்குனர் வேலாயுதன் நாயர் தலைமையில் மதிப்பீடு குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பாதாள அறைகளைத் திறந்து அவற்றிலுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், "எப்', "இ', "டி', "சி' அறைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு, அவற்றிலுள்ள பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு விட்டன. ஆனால், வைர, வைடூரிய நகைகளை மதிப்பீடு செய்வதற்கான வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள், மதிப்பீட்டுக் குழுவினரிடம் இல்லாததால், "ஏ' அறை திறக்கப்படாமல் இருந்தது.


வல்லுனர்கள் வரவழைப்பு: இந்த அறையில் தங்க, வைர, வைடூரிய, ரத்தின பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு, தோராயமாக 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, பல ஆண்டுகளாக கருதப்பட்டு வருகிறது. இந்த அறையில், பத்மநாப சுவாமி பூஜைக்கு பயன்படும் 300க்கும் மேற்பட்ட தங்கக் குடங்கள், 3,000க்கும் மேற்பட்ட இரட்டை வடம் மற்றும் அதற்கும் மேற்பட்ட வடங்களைக் கொண்ட தங்கச் சங்கிலிகள், வைர, வைடூரியம் பதிக்கப்பட்ட தங்க மாலைகள், தலா 25 கிலோ எடை கொண்ட தங்கத்திலான பெரிய உருளிகள் என, பல விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


நவீன கருவிகள்: தற்போது அந்த அறையைத் திறந்து, அவற்றிலுள்ள பொருட்களை மதிப்பீடு செய்வதற்கான, ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பக் கருவிகள், வல்லுனர்கள், கோவிலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். "ஏ' அறையில் உள்ள பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்தவுடன், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் அவை குறித்த அனைத்து விவரங்களும், இஸ்ரோ தயாரித்து அளித்துள்ள கணினியில் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்படும்.


"ஏ' அறை திறப்பு: இந்நிலையில், நேற்று காலை, மதிப்பீடு குழு தலைவர் வேலாயுதன் நாயர், மேற்பார்வை குழு தலைவர் நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வல்லுனர் குழு, "ஏ' அறையைத் திறந்தது. இரும்பு கம்பிகளால் ஆன இரண்டு கதவுகள், தொடர்ந்து, உருக்கு கம்பிகளால் ஆன கதவு ஆகியவை திறக்கப்பட்டு, மதிப்பீடு குழுவினர் அறைக்குள் சென்றனர். தொடர்ந்து அதிநவீன மதிப்பீட்டு கருவிகளைப் பயன்படுத்தி, பொக்கிஷ மதிப்பீடு பணி துவங்கியது. இந்த பணிகள் முடிவடைய பல மாதங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்குள்ள "பி' அறை, உச்சநீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகே திறந்து மதிப்பீடு பணி துவங்கும்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஜூலை-201200:34:08 IST Report Abuse
Nallavan Nallavan ada, இத்தாலிக்கு இன்னும் pack ஆவலியா????????????? சுருக்கால சோலிய முடிங்க
Rate this:
Share this comment
Cancel
Manavalan - bintulu,மலேஷியா
06-ஜூலை-201205:48:36 IST Report Abuse
Manavalan இதனால் நாட்டிற்கு என்ன பிரயோஜனம் என்று யாரவது சொன்னால் நன்றாக இருக்கும்?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஜூலை-201200:22:11 IST Report Abuse
Nallavan Nallavanஎதனால் நண்பரே?...
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthy - Michigan,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-201203:10:34 IST Report Abuse
Krishnamoorthy போச்சே போச்சே களியக்காவிளையோடு சேர்த்து திருவந்தபுரத்தையும் ஏதாவது அடாவடித்தனம் செய்து,கண்ணகி, சேர,சோழ,பாண்டியரின் பெயர்களை உபயோகப்படுத்தி தமிழ் நாட்டுடன் இணைத்திருந்தால் இந்து அறநிலையத்துறை மூலமாக பத்மநாபஸ்வாமி கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்து ஒரு நல்ல மானாட்டம்,மயிலாட்டம் போட முடியாமல் போய்விட்டதே என்ன செய்வேன் உடன்பிறப்பே.
Rate this:
Share this comment
Cancel
mano - milan,இத்தாலி
06-ஜூலை-201201:47:09 IST Report Abuse
mano கடவுளின் சொந்த நாடு கேரளா என்பது உண்மைதான் போலிருக்கிறது.. தமிழக கோயில்கள் எல்லாம் பெரும் செல்வ செழிப்புடன் இல்லையே..
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-201201:29:47 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) பகவானே, உன்னையே நம்பியிருக்கும் ஏழைகளுக்கு பதினாறு வகை செல்வங்களான புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், தைரியம், பொருட்செல்வம், உணவுதானியங்கள், மகிழ்ச்சி, அருள்கொடை, அறிவு, அழகு, நல்எண்ணங்கள், நெறிமுறை, ஆரோகியமான உடல், நீண்ட ஆயுள் போன்றவற்றை கொடுத்தருள வேண்டுகிறோம் இறைவா..
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-201201:07:44 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) பகவானே, உன்னை நம்பி இருக்கும் எத்தனையோ கோடி மக்கள் நன்மை அடைய, இந்தச் செல்வம் அவர்களை சென்றடைய வேண்டும். அதற்கு, நீயே அருள் புரிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
06-ஜூலை-201201:02:14 IST Report Abuse
Kunjumani சொக்கா... சொக்கா இது தெரியாம போச்சே... தெரிந்திருந்தால் இருப்பது ஒரு உயிர் அது போவது ஒரு முறை என்று சவடால் பேசி போராடி திருவனந்தபுரம் கோவிலை மட்டும் தமிழகத்துடன் இணைத்திருப்போமே.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
06-ஜூலை-201200:39:50 IST Report Abuse
Ab Cd அதாவது யார் யாருக்கு எவ்வளவு என்று செட்டில் பண்ணி முடிக்க பல மாதங்கள் ஆகும்
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூலை-201200:16:03 IST Report Abuse
Amanullah என்னது பல ஆயிரம் கோடிகள் கொண்ட பொக்கிஷமா??? வனத்துறையில் சாதித்தாகிவிட்டது...கப்பல் துறையில் சாதித்தாகிவிட்டது. சேது சமுத்திர திட்டத்தினையும் ஒரு கை பார்த்தாகி விட்டது..2ஜியில் வரலாறு படைத்து விட்டதால் நம் மீது அனைவரும் கொண்டுள்ள பொறாமை காரணமாக 3ஜி 4ஜி எல்லாம் தற்சமயத்துக்கு கிடைக்காது..எனவே இப்பொழுதைய டிரண்ட் அறநிலத்துறைதான்..தம்பி பாலுவுக்கு அந்த துறையினை அடம்பிடித்து கேட்டு வாங்கிவிட வேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்