பாட்னா: நாட்டின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத், துவங்கிய வங்கி கணக்கு, அவர் இறந்து, 50 ஆண்டுகள் ஆன பின்னும், தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகவும், அவரது கணக்கில், 1,813 ரூபாய் இருப்பதாகவும் ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முதல் ஜனாதிபதியாக இருந்த பெருமை உடையவர், டாக்டர் ராஜேந்திர பிரசாத். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், 1952லிருந்து, 1962 வரை, தொடர்ந்து 2 முறை, ஜனாதிபதியாக பதவி வகித்தார். கடந்த 1963ல் காலமானார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன், பாட்னாவில், கண்காட்சி சாலையில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், பிரசாத், சேமிப்பு கணக்கை துவக்கினார். இதில், 500 ரூபாய் டிபாசிட் செய்தார். சில மாதங்களுக்கு பின், அவர் இறந்து விட்டார். ஆனாலும், அவரது நினைவாக, அவர் துவங்கிய இந்த வங்கி கணக்கை, தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதாக, வங்கியின் மேலாளர் எஸ்.எல்.குப்தா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பொதுவாக ஒருவர் இறந்து விட்டால், அவரது வங்கி கணக்கில் உள்ள தொகை, அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும். ஆனால், ராஜேந்திர பிரசாத்தின் வங்கி கணக்கிற்கு, யாரும் உரிமை கோரவில்லை. எனவே, அவரது நினைவாக, அவரின் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்கிறோம். இதற்கான வட்டியும், அவரது கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது கணக்கில், 1,818 ரூபாய் உள்ளது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அன்று 10 ஆண்டுகாலம் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தவர் தூய்மையான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார்.எனவே அவர் வங்கி கணக்கில் மிக மிக குறைவாக பணம் டெபாசிட் செய்துள்ளார். தற்போது 5 ஆண்டுகாலம் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தாலே போதும். ஆடம்பர கார். பல கோடிக்கு அதிபதி. வெள்ளையர் பிடியிலிருந்து விடுதலையான நமது நாடு தற்போது கொள்ளையர்கள் பிடியில் சிக்கி சீரழிவது வேதனைக்குரியது.
அடப்பாவிகளா. ஒரு காலத்துல ஜனாதிபதியா இருந்தவர் ஏதோ ஒரு குக்கிராமத்துல ஒரு சின்ன பேங்குல அக்கவுன்ட் இருந்தாலே போதும்னு நேனைச்சிருக்கார். இந்த காலத்து அரசியல்வாதிங்க இந்தியாவுல இருக்குற பேங்கை நிர்வாகம் பண்ணினாலும் நம்ம நாட்டு வங்கிகள நம்பாம சுவிஸ் பேங்குல கொண்டு போயி அக்கவுன்ட் ஆரம்பிக்கிறாங்க. இதுக்கு பேருதான் வெயிட்டு காமிக்கிறதா? என்ன கொடுமை சரவணா.
தற்போது உள்ள ஒரு வட்ட செயலாளர்களின் வங்கி கணக்கு என்ன ? இந்திய நாட்டின் அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொருளாதார கணக்கின் அவர்கள் சேமிப்பு என்ன என்று கணக்கிட முடியுமா . மக்களின் வோட்டு தலைவர்களின் வங்கி கணக்கை பெருக்குவதோடு பல தலைமுறை உழைக்காமல் சொகுசான வாழ்வுக்கு வழி வகுக்கும் திட்டம் அதற்க்கு துணைபோகும் சட்டம் இதுதான் இன்றைய நமது குடியாட்சி . காரணம் இறைவனை விடு, தலைவனை வணங்கு அவன் திருப்பாதம் தான் வாழ்வு தரும் என்ற மகத்தான மக்களின் அறிவுடைமை. . என்ன சொல்ல வாழ்க பாரதம் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.