Scuffle in chennai bus: passenger affraid | மாநகர பஸ்சில் கல்லூரி மாணவர்கள் அடாவடி: பயணிகள் பாதி வழியில் ஓட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநகர பஸ்சில் கல்லூரி மாணவர்கள் அடாவடி: பயணிகள் பாதி வழியில் ஓட்டம்

Updated : ஜூலை 07, 2012 | Added : ஜூலை 05, 2012 | கருத்துகள் (70)
Advertisement

சென்னை: மாநில கல்லூரியைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் கட்டைகளுடனும், கற்களுடனும், மாநகர போக்குவரத்து பஸ்சில் ஆவேசமாக ஏறி அடாவடி செய்ததால், பயணிகள் பாதி வழியில் இறங்கி ஓட்டம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெசன்ட் நகரிலிருந்து சுங்கச்சாவடிக்கு சென்று கொண்டிருந்த பஸ்சில் (6டி), மாநில கல்லூரி மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர் ஏறினர். கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் ஆக்ரோஷமாக ஏறியதால், பயணிகள் அலறினர். சத்தம் போட்டால் அடி விழும் என, மிரட்டிய மாணவர்கள் யாரையோ பஸ்சில் தேடினர். அப்போது, பல மாணவர்கள் பஸ்சின் மேல் கூரையில் ஏறுவதும், கீழே இறங்குவதுமாக பயணிகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். இதனால், வள்ளலார் நகருக்கு செல்ல வேண்டிய பல பயணிகள் பாதியிலேயே, ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஓடினர்.


அலறல்: பஸ்சின் உள்ளே தைரியமாக உட்கார்ந்திருந்த சிலரும், மாணவர்கள் உள்ளே ஆடிய ஆட்டத்தால் பயந்து அலறினர். பஸ் வள்ளலார் நகர் வந்த போது, பஸ்சில் மாணவர்களின் அடாவடி அதிகரிக்கவே, சாலையோரம் நின்றவர்கள் இதை பார்த்துவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அருகில் போலீஸ் நிலையம் இருந்தும், 25 நிமிடம் கழித்து ஒரே ஒரு போலீஸ்காரர் வந்து, ஒரு ஓரமாக நின்று, மாணவர்களின் அடாவடியை வேடிக்கை பார்த்தார். அதன் பிறகு, மாணவர்கள் அவர்களாகவே பஸ்சில் எதையோ சாதித்துவிட்டு வருவது போல், ஹாயாக நடையைக் கட்டினர். போலீஸ்காரர் அங்கு எதுவுமே நடக்காதது போல, அவரும் அங்கிருந்து ஹாயாக திரும்பிச் சென்றார்.


பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், ""சென்னையில் பஸ்சில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது.பெற்றோர் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். படிப்பதில் காட்டும் ஆர்வத்தை விட, இப்படி அடாவடி செய்வதில் தான் தங்களுக்கு இஷ்டம் என்பது போல நடந்து கொள்வதை பார்க்கும்போது, வேதனையாக இருக்கிறது,'' என வருத்தத்துடன் கூறினார்.


இதுகுறித்து, பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், ""ஒவ்வொரு முறையும் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது, ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபடுவது போன்றவை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, மாணவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நேரங்களில் அவர்களின் கல்வி பாதிக்கப்படுமே என்று, தண்டனையை தவிர்ப்பது மாணவர்கள் மேலும் தவறு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்துவிடும் என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வது முக்கியம்,'' என்றார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Gopalan - Nouakchott,மொரிட்டானியா
07-ஜூலை-201200:12:53 IST Report Abuse
Balaji Gopalan என்ன கொடுமை இது ,,, மாணவர்கள் நம் நாட்டின் எதிர்கால தூண்கள் என்று பார் எங்கும் முழங்கும் நம் அப்துல் கலாம் அவதரித்த பூமியில் இந்த நிலைமை ,,, இந்த மாணவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் ,,, அய்யோ பாவம் இவர்களை வைத்து பாடம் நடத்தும் பேராசிரியர் நிலைமை என்னவாக இருக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
06-ஜூலை-201211:58:42 IST Report Abuse
Sathyamoorthy இதனாலதான் நான் சென்னையை வெறுக்கிறேன்... ரவுடிகளின் ஊர் அது...
Rate this:
Share this comment
Cancel
ice reuben - ice,ஐஸ்லாந்து
06-ஜூலை-201211:43:37 IST Report Abuse
ice reuben குடும்ப வன்முறை சமுதாய வன்முறை இவைகளுக்கு உணவு கட்டுப்பாடு அவசியம் ....கொலை செய்து உண்பதை தடுத்தாலே வன்முறை குறையும் ........இயற்கை பானங்களை தவிர செயற்கை பானங்களை தடுத்தால் பொறுமை கூடும் இதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
syed razakh - Vellore,இந்தியா
06-ஜூலை-201211:42:16 IST Report Abuse
syed razakh மாணவர்கள் யாரையும் அடிக்கவில்லையே பிறகு, ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ? ஒட்டுனற்கு தொந்தரவு அளித்தால் அவர் போலீசில் புகார் தெரிவித்து இருக்கலாம். அவ்வாறும் நடக்கவில்லை. பஸ்இல் உள்ள பயணிகள் அலறுவதற்காக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது தவறு. கட்டையும் கல்லும் வைதிரிந்தார்கள் ஆனால் பயன்படுத்தவில்லை. இப்படி எல்லாம் கோர்ட்டில் கேள்வி கேட்டு வழக்கை தள்ளுபடி செய்வார். இது ஒரு பொழப்பா.
Rate this:
Share this comment
Cancel
kurumbu - tirupur,இந்தியா
06-ஜூலை-201211:35:00 IST Report Abuse
kurumbu இதற்க்கு முழுக்காரணம் திரைப்படங்கள் தான்................................. எல்லா திரைப்படங்களையும் நான் கூறவில்லை.................. இந்த மாதிரியான மாணவர்களால் அந்த கல்லூரிக்கே அவப்பெயர்.........கண்டுகொள்ளுமா கல்லூரி நிர்வாகம் அரசும் காவல் துறையும் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.எத்தனையோ மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள்.......இந்த....வாயில அசிங்கமா வருது ..........................இவனுங்கள அந்த கல்லூரிய விட்டே நீக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
06-ஜூலை-201211:32:04 IST Report Abuse
குடியானவன்-Ryot ஸ்டாலின் போன்ற நல்ல உள்ளங்கள் படித்த கல்லுரி அப்படித்தானே இருக்கும்... இவர்கள் மெரினா கடல்கரையில் பண்ணும் அட்டுழியம் இருக்கே அப்பப்ப சொல்லி மாளாது
Rate this:
Share this comment
Cancel
karthik - Erode,இந்தியா
06-ஜூலை-201211:32:01 IST Report Abuse
karthik படிச்சு முடிச்சு வேலைக்கும் சோத்துக்கும் ரோடு ரோடா அலையரப்ப தெரியும்டா அந்த வலியும் வேதனையும்..
Rate this:
Share this comment
Cancel
Schoolboy - chennai,இந்தியா
06-ஜூலை-201211:01:58 IST Report Abuse
Schoolboy இந்த நாய்கள் எல்லாம் நாட்டுக்கு தேவை இல்லை.... சுட்டுகொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
g.saravanakumar.mappilaiyurani - tuticorin ,இந்தியா
06-ஜூலை-201210:53:46 IST Report Abuse
g.saravanakumar.mappilaiyurani சட்டம் சரியாக பராமரிக்கப் பட்டால் .. யாருக்கும் இந்த துணிவு வராது அம்மா அரசாங்கத்தில் இப்படியா நம்ப முடியவில்லை
Rate this:
Share this comment
Cancel
g.saravanakumar.mappilaiyurani - tuticorin ,இந்தியா
06-ஜூலை-201210:48:06 IST Report Abuse
g.saravanakumar.mappilaiyurani அம்மா கவனிக்கவும் கருணாநிதி நிலைமை உங்களுக்கு வந்துவிட போகுது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை