New complaint against Nithyananda | கதறி அழைத்தும் வர மறுத்த சீடர்: நித்யானந்தா மீது பெற்றோர் பகீர் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதறி அழைத்தும் வர மறுத்த சீடர்: நித்யானந்தா மீது பெற்றோர் பகீர் புகார்

Updated : ஜூலை 07, 2012 | Added : ஜூலை 05, 2012 | கருத்துகள் (13)
Advertisement

பெங்களூரு: நித்யானந்தா சீடரான சந்தோஷ், பெற்றோருடன் செல்வதற்கு, நீதிபதி முன்னிலையிலேயே மறுப்பு தெரிவித்து, ஆசிரமத்துக்கு திரும்பி சென்று விட்டார்.

முன்னூர் கிருஷ்ணமூர்த்தி - ஜெயந்தி தம்பதியினரின் மகன் சந்தோஷ். அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். பணியை விடுத்து, நித்யானந்தா சீடராக இருந்து வருகிறார். ஆசிரமத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டதால், கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர், சந்தோஷை வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சந்தோஷ், "வரமுடியாத சூழ்நிலையில் உள்ளேன்' எனக் கூறியுள்ளார். இதனால், தங்கள் மகன், ஆசிரமத்தில் ஆபத்தில் இருப்பதாகவும், அவனை மீட்டு தருமாறும் பிடதி போலீசில் புகார் செய்தனர். ஆனால், போலீஸ் நிலையம் வந்த சந்தோஷ், "ஆசிரமத்தை விட்டு நான் வர முடியாது' எனக் கூறி விட்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, "என் மகனை, நித்யானந்தா, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். மகனை மீட்டு தாருங்கள்' எனக் கோரியிருந்தார். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆசிரமத்திலிருந்து சந்தோஷ் நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது நீதிபதி, "நித்யானந்தா ஆசிரமத்தில் உங்களை அடைத்து வைத்துள்ளனரா, உங்கள் பெற்றோருடன் செல்ல விரும்புகிறீர்களா?' என கேட்டார். அதற்கு சந்தோஷ், "நான் ஆசிரமத்தில் இருக்க விரும்புகிறேன். பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை. ஆசிரமத்தில் எந்தவித பிரச்னையும் இன்றி சுதந்திரமாக உள்ளேன்' என்றார். இதையடுத்து நீதிபதி, "உங்கள் விருப்பப்படி ஆசிரமத்திற்கு செல்லலாம்' எனக் கூறி, மனு மீதான தீர்பை ஒத்தி வைத்தார்.


நீதிமன்றம் வந்த சந்தோஷ், காவி உடையணிந்து, மொட்டை அடித்திருந்தார். அவரை பார்த்த பெற்றோர், கண்ணீர் விட்டு கதறி, வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், சந்தோஷ் அவர்களை கண்டு கொள்ளவில்லை. சந்தோஷ் தந்தை கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ""அப்பா, அம்மாவுடன் செல்ல மாட்டேன் என்று கூறும் அளவுக்கு, நித்யானந்தா, என் மகன் மனதை மாற்றி விட்டார். நித்யானந்தா தேச துரோகம் செய்து வருகிறார். குடும்ப உறவை பிரித்து வைத்துள்ளார். அவருக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்,'' என்றார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
07-ஜூலை-201201:40:25 IST Report Abuse
Khalil இறைவன் என்றல் யார் ? அந்த ஏக இறைவனின் தன்மைகள் என்ன? போன்ற அடிப்படை தெரியாததால்தான் இந்த கோளாறுகள் ஏற்படுகின்றன. மனிதன் எந்த நிலையிலும் தெய்வ நிலை அடையமுடியாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்தவொரு ப்ரோக்கருக்கும் வேலை இல்லை. ஒரு மனிதன் மூலமாகத்தான் இறைவனை அணுக முடியும் என்பது அந்த இறைவனுக்கு கொச்சை படுத்துவதாகும். எந்த ஒரு மகானாக இருந்தாலும் பாபாவாக இருந்தாலும் அனைத்து மனிதரைபோல்தான் அவராலும் இருக்க முடியும். சாப்பிடுவது, உறங்குவது, கழிப்பிடம் செல்வது இது எல்லாமே அவர்களும் செய்கிறார்கள். அப்புறம் என்ன?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஜூலை-201200:21:30 IST Report Abuse
Nallavan Nallavan டேய், அவனா நீ?
Rate this:
Share this comment
Cancel
Muhammad Sirhan - chennai ,இந்தியா
06-ஜூலை-201205:28:12 IST Report Abuse
Muhammad Sirhan ருசிகண்ட பூனை
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
06-ஜூலை-201205:20:02 IST Report Abuse
Samy Chinnathambi போன வாரம்தான் அமெரிக்க நீதிமன்றம் நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண்களுடன் செக்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டதை உறுதி செய்து அமெரிக்காவில் நித்தியானந்தா ஆசிரமம் வசூல் செய்த சுமார் 8000 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்த ஆணை இட்டுள்ளது. நான் ஏற்கனவே கூறி இருந்தேன் பெண் சம்பந்தம் இல்லாமல் நிதியானந்தாவால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சம்பாதிக்க முடியாது என்று. ஆசிரமங்களில் இளம் பெண்களும் வி.ஐ.பிக்களும் ஈ மொய்ப்பது போல் மொய்க்கின்றனர் என்றால் என்ன நடக்கிறந்து என்று யாருக்கு தெரியாது. சாதாரண மக்கள் திரளாக செல்கின்றனர் என்றால் அங்கே பக்தி இருக்கின்றது என்று அர்த்தம். ஹைடெக் மனிதர்கள் குழுமுகிறார்கள் என்றால் அங்கே வேறு விதமான பார்டி நடக்கின்றது என்று தெளிவாக தெரியும். திருப்பதி வருமானத்தை விட இவனது வருமானம் பெரிது என்றால் யார் காரணம்? நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ளவர்கள் இரண்டு வர்க்கத்தினர்தான். ஒன்று ரவுடிகள் சீடர்கள் போர்வையில் பாதுகாப்பிற்கு. மற்றொன்று நன்றாக படித்த பன்னாட்டு கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்களும், ஆண்களும், வெளி நாட்டினரும் தான். இவர்கள் பூஜை செய்வதற்கு. ராத்திரி நேரத்து பூஜையில், ரகசிய தரிசன ஆசையில்...ஹங் ஹாங் இது ஆராதனை...டொய்ன் டொய்ன்..
Rate this:
Share this comment
Cancel
anbarasu.swaminathan - Riyadh,சவுதி அரேபியா
06-ஜூலை-201205:13:35 IST Report Abuse
anbarasu.swaminathan தினமலர் போன்ற நடுநிலை பத்திரிக்கைகள் இதை மக்கள் மன்ற சார்பாக அணுகி நடவடிக்கை எடுக்கலாமே. பூனைக்கு யார் மணி கட்டுவது? குரங்கிற்கு யார் மாலை போட்டு ஜெயிப்பது?
Rate this:
Share this comment
Cancel
anbarasu.swaminathan - Riyadh,சவுதி அரேபியா
06-ஜூலை-201205:09:30 IST Report Abuse
anbarasu.swaminathan எந்த ஊரிலும் இந்த மாதிரி ஒரு கண்டுகொள்ளாத போக்கை பார்க்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தருகிறார்கள்,ஊடகங்களில் அவை வெளியாகிறது, சீடி வந்தது,அமெரிக்காவில் தீர்ப்பு கொடுத்து விட்டான்,இவன் ஓடி ஒளிந்து விளையாடுகிறான், சட்டம் என்ன யாராவது வழக்கு போட்டால் தான் நடவடிக்கை எடுக்குமா என்ன? மதபோர்வையில்,பணம் சேர்த்த திமிரில் அவனுக்கென்று ஒரு பார்முலா வைத்துகொண்டு ரவுண்டு கட்டும் அவன் கூடாரத்தில் அறியாமையில் படித்தவர்கள் கூட அறிவு மழுங்கி அவதி படும் நிலை நம் திரு நாட்டில் விட்டால் வேறெங்கும் காண முடியாது இந்த கூத்தை அன்பரசு சுவாமி சவுதி arabia கிடக்கும் நிலையில்,ஜாமீன் வாங்கி சட்டத்தையே ஏளனம் செய்யும் இவனை போல் ஒருவன்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-ஜூலை-201204:43:38 IST Report Abuse
Kasimani Baskaran நிதிக்கு மட்டும் பல பக்தைகள் - ஆனால் அவரது சீடருக்கு மட்டும் காவியா? அக்கிரமாக இல்லை?
Rate this:
Share this comment
Cancel
blackcat - Chennai,இந்தியா
06-ஜூலை-201202:44:24 IST Report Abuse
blackcat நித்தி உங்க மகனோட மனச மாத்திடாருன்னு சொல்றீங்களே.... அப்படி மாத்த தெரிஞ்ச, இப்ப ஆர்த்தி ராவோட மனச மாத்தி இருக்க மாட்டாரா.... அந்தாளே ஒரு வெத்து வேட்டுங்க.... எனக்கென்னமோ உங்க மகன் மேலயும் சில குற்றம் இருக்கும்ன்னு நினைக்கறேன், வெளிய வந்தா அதெல்லாம் நித்தி சொல்லிடுவாருன்னு பயப்படலாம்.....
Rate this:
Share this comment
Cancel
Chandrasekar Raghavan - chennai,இந்தியா
06-ஜூலை-201201:27:44 IST Report Abuse
Chandrasekar Raghavan கஞ்சா, காஞ்சனா,தேவையெல்லாம் கிடைக்கும் ,,
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
06-ஜூலை-201201:21:45 IST Report Abuse
Thangairaja அவரு தான் நீதிமன்றத்திலேயே வர முடியாதுன்னு செல்லிட்டரே, இதில நித்திய திட்டி என்ன பிரயோஜனம். முள்ளில சேலைய போட்டுட்டு முள்ளை குறை சொல்லி காரியமில்லை. இனியுள்ள பெற்றோர், குடும்பத்தார் கணவன்மார்களாவது சேராத இடம்தனில் சேர விடாமல் தங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்க வேண்டும். கடவுளை தரிசிக்க வேண்டுமென்றால் கோவிலுக்கு போகச்சொல்லுங்கள், எந்த சாமியாரிடமும் தெய்வமென நினைத்து போகவிட்டால் இந்த கதி தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை