Dinamalar - No 1 Tamil News Paper

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் கருணாநிதி முடிவு
 
 
  இ-பேப்பர்
AAnmeegam News
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail    Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2010,23:32 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 31,2010,02:20 IST

சென்னை : "தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், ஒவ்வொரு ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். அவர் வைத்துள்ள கோரிக்கையில் இருக்கும் அடிப்படை நியாயங்களைப் பற்றி எல்லாம் இந்தத் தருணத்தில் நான் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. "தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது' என சுப்ரீம் கோர்ட்டில், 1994ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.


அந்த இடைக்காலத் தீர்ப்பில், "ஒரு மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால், அதை நியாயப்படுத்துவதற்குத் தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்' எனச் சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளித்து, அந்த ஆணையம் நாம் அளிக்கும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து, இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு, நமக்கு ஜாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள, 400 கோடி ரூபாய் தேவை. இந்த நிதியை, மத்திய அரசிடம் பெறலாம் என, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.


சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும். அப்படிச் செய்தால் தான், சட்டப்படி அந்த முடிவுகள் செல்லுபடியாகும். வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பிரச்னையில், அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்பு இடம் தரவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு, நமது மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து, அதற்குப் பிறகு தனி ஒதுக்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் சட்டப்படியான அணுகுமுறையாக அமையும். இதில் அவசரம் காட்டினால், பிரச்னை திசை திரும்பிவிடக் கூடும் என்பதாலும், இருப்பதையும் இழந்துவிடக் கூடாது என்பதாலும், தொடர்புடைய அனைவரும் இந்தப் பிரச்னையில் இணக்கமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். எனவே, இருப்பதை இழக்காமல் இடஒதுக்கீடு அமைய இணைந்து செயல்படுவோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


 

மேலும் அரசியல் செய்திகள்:




வாசகர் கருத்து (71)
raaki - Chennai,இந்தியா
2010-08-01 22:43:41 IST
சந்திர சேகரேந்திரன்-Chennai,இந்தியா, நன்றி, நன்றி, நன்றி, மிக அருமையான கேள்வி. நெத்தியிலே அடித்து விட்டீர்கள். நான் கூட கொஞ்சம் தயங்கினேன், நேரடியாக சொல்ல. பிரிவை துவக்கியவர்கள் இன்று அந்த பாவத்தாலே பாதிக்க படும் நிலை தான் இன்று. தன் வினை தன்னை சுடும். உண்மையிலே இந்த அறிவாளர்கள்,சாதி ஒழிக்க முயல வேண்டும். அதை விட்டு வந்து விட்டார்கள் வாய் கிழிய பேச, உலகுக்கு உபதேசம் பண்ண. சாதி வேண்டுமாம், ஆனால் சாதி கணக்கு எடுக்க கூடாதாம். சாங்கியத்தில் ஒதுக்கீடு வேண்டும் ஆனால் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு கூடாதாம்....
கே.விஜிகுமார் - Villupuram,இந்தியா
2010-08-01 20:19:10 IST
கணக்கெடுக்கும் போது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் கேட்டு ஜாதியை பதிவு செய்ய வேண்டும். தந்தையின் ஜாதியை மட்டும் வைத்துக்கொள்ளக்கூடாது....
2010-07-31 22:16:31 IST
இடஒதுக்கீடு என்பது ஒருபக்கம் இருக்கட்டும். வீட்டில் உள்ள ஆடு, மாடு, செல்ஃபோன் பற்றி எல்லாம் கணக்கெடுக்கும்போது ஜாதியை பற்றி கணக்கெடுப்பது அவசியமல்லவா? ஏனென்றால் இந்த நாட்டில் மாற்ற முடியாத ஒரே விஷயம் ஜாதி மட்டும்தான். மதம் கூட மாறமுடியும், ஆனால் ஜாதி மட்டும் சாஸ்வதமானது. அப்படி இருக்கும்போது ஜாதியை விட்டுவிட்டு கணக்கெடுப்பு என்பது பருப்பு இல்லாத வடை போலதான். ஜாதிவாரி கணக்கெடுப்பு தவிர்க்கப்படவேண்டும் என்று வெளியில் பேசுபவர்கள் முதலில் தங்கள் பூணூலை துறப்பார்களா? ஜாதியை வலியுறுத்தும் மனுஸ்மிருதி, கீதை ஆகியவற்றை தடைசெய்யச்சொல்வார்களா? இதை செய்தால் அவர்கள் உண்மையிலேயே ஜாதி ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் என்று சொல்லலாம்....
raj - sanjose,கோஸ்டாரிகா
2010-07-30 23:28:49 IST
God please save tamil nadu...dont divide the people...please step away from politics. you enjoyed the throne for too long...
magi - dubai,இந்தியா
2010-07-30 23:10:43 IST
என் தமிழ் மக்களே சாதி ஒழிய சாதி மாறி திருமணம் செய்யுக்கள்- தமிழன்...
துரைராஜு ரெ - TRICHY,இந்தியா
2010-07-30 22:30:21 IST
நாம் அனைவரும் ஒரு ஜோடியில் இருந்து வந்தவர்கள் என்பது உண்மையானால், நாம் அனைவரும் ஒரே ஜாதிதான். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். நம்முடைய ஒட்டுமொத்த மனமாற்றமே ஜாதியையும், ஊழல் அரசியலையும் ஒழிக்க உதவும். நான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என என் தந்தை சான்றிதழ் பெற்றுள்ளார். எனது குழந்தைகள் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என சான்று பெற, தனது குழந்தைகளுக்கு அவ்வாறு குறுக்கு வழியில் சான்றிதழ் பெற்ற நண்பர் உதவுவதாக கூறினார். நான் எனது குழந்தைகளின் கல்வித்தரத்தில் நம்பிக்கை வைத்து மறுத்துவிட்டேன்....
vijayabaskaran - singapore,சிங்கப்பூர்
2010-07-30 22:26:18 IST
ஜாதிகள் இல்லை அடி பாப்பா என்று பாரதி சொன்னது பாப்பாக்களுக்கு மட்டும் தான் என்று நீணைத்து விட்டார்கள் இந்த தாதாக்கள்...
RAMASWAMY S - chennai,இந்தியா
2010-07-30 22:02:45 IST
THE PEOPLE OF TAMIL NADU FROM ALL CASTS VOTED FOR POWER TO OUR BELOVED CM. ESPECIALLY THE SO CALLED FORWARD COMMUNITY PEOPLE VOTE FOR DMK FOR THE LAST 5 ELECTION S BUT THEY HAVE NOT GET EVEN A SINGLE PERSENT RESERVATION. THEY ARE UNDER NEW SC ST CASTE. THEY SHOULD BE PROVIDED WITH PROPER RESERVATION. THEY VERY ECONOMICALLY BELOW THE POVERTY LINE. THEY CONDITION IN TAMIL NADU IS VERY WORST. THEY EVEN TODAY ALSO SUPPORT OUR CM AND THEY SEEKING LIFE FORM OUR CM. WE HOPE OUR CM SHOULD DO JUSTICE TO FORWARD COMMUNITY PEOPLE....
டேவிட் - Sattur,இந்தியா
2010-07-30 21:47:26 IST
Bull shit...this will make much worst and induce caste related fights between people...this is what politicians want.. Let them go to hell and leave the common people to live peacefully without any caste or religious fights......
anniyan - chennai,இந்தியா
2010-07-30 21:35:55 IST
ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை இல்லாத ஒன்று. ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் இருந்தால் என்ன? அதை தெரிந்து இப்போ என்ன தீண்டாமை ஒழிய போகிறதா? இன்னும் தீண்டாமை மக்கள் மனதில் வேரூன்றும். யார் யார் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அப்பட்டமாக தெரியும். எனவே தாழ்த்தப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே வைத்திருக்க இந்த அரசாங்கம் சதி செய்கிறது. கருணாநிதி என்றாவது தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தி இருக்காரா? இன்னும் தீண்டாமை கிராமங்களில் இருகிறதே , ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி இதை ஒழிக்கணும்னு முயற்சி செய்திருகாரா? மக்களே சிந்தியுங்கள்....
ர.செந்தில்குமார். - MONDAIKADU,இந்தியா
2010-07-30 21:11:46 IST
இது சரியான முடிவு .சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும்.அல்லது சதியை ஒழித்து கல்வி,வேலை வாய்ப்பில் ஓபன் முறையை கொண்டு வர வேண்டும்.அப்போது தான் திறம்யனவர்க்கு வேலை கிடைக்கும். அவன் எந்த சாதி இருந்தால் என்ன . இதில் எதாவது ஒன்றை அரசு pinpatta வேண்டும்....
இளவரசு - Gingee,இந்தியா
2010-07-30 21:04:48 IST
சமுதயதல அனைத்து மக்களும் சரியான vazhikai தேவை. மக்கள் முன்னேற sc / st போன்று வன்னியர் மற்றும் அனைத்து ஜாதி மக்களும் தேவையன்ன மற்றும் முக்கியமானதும்...
த.சித்திவினாயகம் - agartala,இந்தியா
2010-07-30 20:53:47 IST
Thanks Honourable leader your assessment always correct...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-07-30 20:33:35 IST
தமிழ் நாட்டை அடியோடு நாசம் செய்யாமல் விடுவதில்லை என்று சபதம் எடுத்துள்ள கருணாநிதியை யார் தண்டிப்பது?மக்கள் தான் தண்டிக்க வேண்டும்.செய்வார்களா?...
raja - saudi,இந்தியா
2010-07-30 20:10:51 IST
மதம் இனம் சாதி என வேறுபடாமல் இந்தியன் என ஒருபிரிவின் கீழ் வந்தால் மட்டுமே இந்திய வல்லரசுக முடியும் ராமதாசு போன்ட்ற்ற ஜாதி வெறிபிடித்தவர் மிரடல்லுகு பயப்பட வேண்டாமே....
Kavitha - Salem,இந்தியா
2010-07-30 19:34:23 IST
பாரதியாரும், பெரியாரும் ஜாதிய ஒழிக்க பட்ட பாடு இந்த ராமதாஸ்க்கு பதில் சொல்ல காத்துல பரக்கவிட்டச்சா? இல்ல 400 கோடி ஆட்டயபோட வழிக்கண்டுபிடிச்சச்சா?...
ப ரவிச்வாமி - Raipur(C.G).,இந்தியா
2010-07-30 19:11:22 IST
வேண்டாம் தலைவரே இனி ஒரு ரத்த ஆறு உங்களால் ஓட்டவேண்டாம். இதில் உங்கள் சுயநலம் இருப்பது தெளிவாக தெரிகிறது. உங்கள் ஒட்டு எண்ணிக்கை கணக்கே சாதியை வைத்துதான?. ஒரு மூதறிஞரின் தெளிவான சிந்தனையா. வேண்டாம் எங்களுக்குள் பாகுபாடு உங்களால்....
bal - chennai,இந்தியா
2010-07-30 19:07:08 IST
கடைசியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்த முதல்வருக்கு நன்றி சொல்லவேண்டும் ஏன் எனில் அணைத்து ஜாதி மக்களும் இட ஒடுகிடு கேட்கின்றனர் இடு வரவேற்க தக ஒன்று...
manohar - cbe,இந்தியா
2010-07-30 18:53:42 IST
எந்த ஜாதியிலே எத்தனை பேர் இருக்கங்கன்னே தெரியல்லே. ஆனால் , அளாளுக்கு இட ஒதுக்கீடு கேக்கிறாங்க...... ஜாதி கூடாதுதான்.... ஆனால் சரியான முறையில் இட ஒதுக்கீடு செய்ய, இதுதான் சிறந்த வழி....
s.raman - mumbai,இந்தியா
2010-07-30 18:53:32 IST
sure, he will make money on that also. what ever it is he is creating problem for the people. may be he has to follow cast base but let him look at the condition of the people. there is only two cast in india rich and poor. he is very very very rich cast........
manohar - cbe,இந்தியா
2010-07-30 18:49:59 IST
ஆளாளுக்கு சாதிப்படி இடஒதுக்கீடு கேட்டுக்கிட்டே இருந்தா, இதுதான் சரியான வழி. யார் யாரு, எந்தனை பேர் இருக்காங்க என்பதனை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சரியாக தெரியவரும். இதில் உள்ள உண்மை தெரியாமல் யாரும் குழம்ப வேண்டாம்....... .... பிரச்சினை பெரிசானால் கடைசியில், கணக்கெடுப்பு எடுத்தால் பரவாயில்லையே என்று தோன்றும்.......... அரசு முடிவு சரி.......
மாரிஸ்.கே - chennai.,இந்தியா
2010-07-30 18:29:03 IST
இந்த ராமதாசுதான் அறிவு இல்லாம, அரசியல் பண்றதுக்கு வழியே இல்லாம... நொந்து நூலாகி கடைசியில வன்னியருக்கு இடஒதுக்கீடு ன்னு சொல்லிக்கிட்டு இப்ப வந்திருக்கான். வன்னிய மக்களே உங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிகிறேன். இனிமேலும் இந்தமாதிரி பஞ்சோந்தி பயல நம்பி மோசம் போகாந்தீங்க. ஒழுங்கா ஒழச்சி பொழைக்கிற வழிய பாருங்க.. ஐயா பெரியவரே நீங்க ரொம்ப நல்லவருன்னு நாங்க ஊரு முழுதும் சொல்லிக்கிட்டு இருக்கோம். சாமீ மறுபடியுமா தமிழ்நாட்டு மக்க தலையில மன்ன அள்ளி போட்டுராதீங்க. உங்களுக்கு ராமதாசு எல்லாம் ஒரு ஆளா. போகட்டும் விட்டுருங்க சாமீ....
K. Kirubaa - Singapore,இந்தியா
2010-07-30 18:26:35 IST
Ji.Pannadai pandian - wuxi,சீனா அவர்களின் கருத்து உண்மையாகவே மிகவும் அருமையானது. இட ஒதுக்கீட்டின் உண்மையான பயன் அப்போது தான் நாட்டின் சமத்துவத்திற்கு முழுமையாக உதவும். இட ஒதுக்கீடு இருக்கட்டும். அது அவசியம் தான். ஆனால் அதற்கு "வருமான உச்ச வரம்பு" நிர்ணயிக்கலாம். பொருளாதார ரீதியாக மக்களை வகைபடுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பது உண்மை தான், பணக்காரன் ஏழையாவதும், ஏழை பணக்காரனாவதும் சில ஆண்டுகளில் நிகழ்ந்து விட வாய்ப்பிருக்கிறது என்பதால். (இது ஒன்று தான் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வேறுவழியின்றி ஏற்று கொள்ள இது நாள் வரை காரணமாக இருக்கிறது) ஆனால் சவால் எதில் தான் இல்லை? எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். தனிநபர் வருமானத்தை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் இதை செய்யலாம். தனி சிறப்பு அடையாள அட்டைகளை முறையாக நிர்வகித்தால் இதுவும் சாத்தியமே!...
ம.சுவாமி - chennai,இந்தியா
2010-07-30 18:19:47 IST
இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு என்ற முறை எத்தனை துறும் சரியாய் இர்க்கும்? அடிசிகிட்டு சாகபூறோம்....
ஜெகன் - Chennai,இந்தியா
2010-07-30 17:45:06 IST
ரொம்ப நல்ல இருக்கு உங்க விளக்கம், என்ன தமிழாக்கத்தை ஏனையா இப்படி arasiyalukku, நாசம் பண்றீர்! மனுஷனுக்கு வயசாயிடுத்து, புத்தியும் மலுங்கிடுது அம்ம்புட்டுதான்! எவனுக்கைய ஜாதி venum, எதுக்கு ஜாதி வேணும், இந்த ஜாதி எப்படி வந்தது, அவனவன் செய்த வேலையின் adippadaiyil உண்டான இதை எதுக்கைய அரசியலுக்கு உபயோக படுத்தறே பெருசு! உங்க JATHI ENNAANU யாரவது உங்ககிட்ட கேட்டாகள!...
ABCD - chennai,இந்தியா
2010-07-30 17:29:38 IST
ஒரு பக்கம் ஜாதி ஒழிக்க போராட்டம். மறுபக்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு??? கலப்புத் திருமணம் செய்தோரை எப்படி, எந்த ஜாதியில் சேர்ப்பிர்கள்??? அல்லது அது ஒரு தனி ஜாதியா??...
bash - Riyadh,சா டோம்
2010-07-30 17:16:28 IST
எல்லா ஜாதியை சேர்ந்தவர்களையும் சமமாக பார்க்கும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் வரட்டும் பிறகு அரசு ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கிட்டை நிககுவது குறித்து யோசிக்கலாம்...
indian - india,இந்தியா
2010-07-30 16:58:54 IST
வாழ்க ஜாதி ப ம க கட்சி...
ராம் - BLR,இந்தியா
2010-07-30 16:56:27 IST
This is non sense...! Still playing politics with cast.. divide and rule..?...
முருகராஜ் ச - tirupur,இந்தியா
2010-07-30 16:47:23 IST
ஜாதி வாரி கணக்கெடுப்பு என்ற முடிவு சரியானதே ஏன் என்றல் தற்போதைய சூழ்நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் ஆகிறது எல்லா ஜாதியினரும் இட ஒதுக்கீடு கேட்டால் எப்படி கொடுப்பது எனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து சரியான % படி இட ஒதுக்கீடு கொடுத்தால் அணைத்து ஜாதியும் வளரும்...
சுல்தான் - chennai,இந்தியா
2010-07-30 15:46:56 IST
ஜாதி பாக்கக்கூடத்துன்னு சொல்லுறவங்க எல்லாம் சும்மா வாயலவில்தான் சொல்லுரங்க. அப்படி சொல்லுறவங்க தன்னோட புள்ளங்கள அடுத்த ஜாதிகாரனுக்கு கட்டி வைப்பாங்களா? அரசு உத்தியோகத்தில இருக்குற அதிகமானவங்க அவங்க ஜாதிக்காரன் அப்படின்னா, உடனே வேலை போட்டு கொடுக்கிறான். மேலும் அவன் ஜாதிக்காரன் சம்மந்தப்பட்ட வேலையை உடனே முடிச்சி கொடுக்கிறான். அடுத்த ஜாதிக்காரன், வேண்டாதவன் அப்படின்னா வேலைய இழுத்தடிக்கிறான், மேலும் இலஞ்சத்தில் உறுதியாக இருக்கிறான். இவை எல்லாம் மாற வேண்டும் அப்படின்னா ஜாதி வாரியாக கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல வேலை கொடுக்க வேண்டும். சும்மா ஜாதி பாக்கக்கூடாது ஜாதி பாக்கக்கூடாதுன்னு பித்தலாட்டம் பேசக்கூடாது....
palanisamy - chennai,இந்தியா
2010-07-30 15:34:51 IST
சபாஷ் ! முதலமைச்சரின் முடிவு சரியான முடிவு !. இத்தனை நாள் கிடப்பில் போட்டு விட்டு பதவி அதிகாரம் எல்லாம் போனவுடன் பழையபடி ஆரம்பித்துவிட்டார் ராமதாஸ். வன்னியர் இட ஒதுக்கீடு என்று எல்லா மக்களையும் முட்டளாக்குவதே இவருக்கு பிழைப்பாக போய்விட்டது.உண்மையிலேயே ஒவ்வொரு ஜாதிஇனருக்கும் அவர்களின் சதவிகிதத்தை பொருத்து இட ஒதுக்கீடு செய்து விடுவதுதான் நல்லது!...
ர.ர.பிரவீன் குமார் - Chennai,இந்தியா
2010-07-30 14:52:59 IST
ஏம்பா சந்தோஷ், எல்லா விஷயத்துலயும் உங்க அம்மா ஆட்சிக்கு வருவாங்க அப்பிடின்னு எழுதுறியே, எதுக்கு உனக்கே நம்பிக்கை இல்லாம தன திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி கிட்டு இருக்கே. இந்த சவுடால் எல்லாம் ஓரங்கட்டி வெச்சிட்டு ஆட்சி பிடிக்க முயற்சி பண்ணுங்க. இல்லன போன நாடாளுமன்ற தேர்தல்ல பாமாகா வாங்குன மாதிரி பெரிய bulb வாங்கிட போறீங்க....
VI.K.LOGANATHAN - REDHILLSVilangadupakkam.,இந்தியா
2010-07-30 14:46:57 IST
jaadhi enru sollamal, pirivu (gruop) enru sollungal.A,B,C,D enra naangu pirivugalil ellaarum cherthukkolla vendum....
gs - Khartoum,சூடான்
2010-07-30 14:23:00 IST
பாதாள சாக்கடைல மனிதர்கள் இறங்குவது ஏன் என்று கோர்ட்ல கேட்ட போது மஞ்ச துண்டு ஆளும் அரசாங்க அதிகாரியால் வேற வழி இல்லைன்னு சொன்னங்க. ஆனா மேல ஒக்காந்து இருக்கற வெள்ளை வெட்டி சட்டை மனுசங்க இட ஒதுக்கீடு போட்டு பல்லக்குல போறாங்க. சாக்கடைல இறங்கினவன் பேரை சொல்லி இவங்க கொள்ளை அடிக்கறாங்க. பாவம் அவன் தான் விஷ வாயு தாக்கி செத்து போறான். அவன மத்திரி பாவப்பட்டவன மேல தூக்கி உடுங்க....
natrajan - salem,இந்தியா
2010-07-30 14:18:29 IST
we can here these types of music everyday until the next general election is over. what a true patriotic leader we have. god bless this country....
senthilkumar - chinnasalem,இந்தியா
2010-07-30 13:01:21 IST
எப்பதான் meritikku முக்கியத்துவம் கொடுப்பீங்க?மஞ்சத்துண்டு............
சி.ராமசாமி - tup,இந்தியா
2010-07-30 12:52:02 IST
இட ஒதுக்கிடு இருக்குதோ இல்லியோ,முதல்ல எத்தனை சாதி எத்தனை பேரு கணக்கெடுங்க...அவனவன் ரெண்டு கோடி மூணு கோடின்னு பீலா விட்டுட்டு இருக்கான்..இவனுக சொல்றத பார்த்தா மொத்தம் பன்னண்டு கோடி மக்கள்தொகை கணக்கு வருது...ஆனா ஆறு கோடி பேர்தான் தமிழ் நாட்டுலேயே இருக்காங்க.......
செந்தில் குமார் - singapore,இந்தியா
2010-07-30 12:29:37 IST
மகா மட்டமான அரசு என்பதனை அடிக்கடி நினைவு கூர்கிறார் ... உதாரணம் .. பல உண்டு .... ஜாதி வெறி பிடித்து அலையும் உங்களை (கருணாநிதி, ராமதாஸ்)போன்ற அரசியல் வாதிகளின் தமிழகம் படும் பாடு .... பாவம் மக்கள் ... இறைவா இந்த கயவர் களிடம் இருந்து எங்களை காப்பாற்று.. எனியாவது மக்கள் நல்ல ஒரு அரசை தேர்ந்து yendungal .....
பாலாசுப்ரமணியன் - KulamangalamPudukkottai,இந்தியா
2010-07-30 12:26:15 IST
எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் நாம்? இந்தியாவை எத்தனை புத்தர், விவேகனந்தர், பாரதியார் பிறந்தாலும் நம்மை திருத்த முடிடாது..... குவட்டருக்கும் பிரியாணிக்கும், 500 ரூபாய் பணத்துக்கும் ஒட்டு போடும் நாம் இதைப்பற்றியெல்லாம் பேசகூடாது... இங்கே கருத்து எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களும் அவர்கள் குடும்பமும் 49o விதிமுறையை பயன்படுத்தி உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.. அதை மடவருக்களும் பரப்ப செய்யுங்கள்......
siva - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-30 12:24:15 IST
hello, these politicians needs community seperation , otherwise they can't able to come for power. May be, they will take calculation , again it will divide. For kalignar, it is good for his family for retained his power. kalignar policy is divide the people....
24 ம் புலிகேசி - madurai,இந்தியா
2010-07-30 12:20:11 IST
போடா பேக்வேர்டு என்று யாராவது திட்டினால் கோபப்படும் ஒரு மனிதன், அதே வார்த்தையை ஒரு அரசாங்கம் அதிகார பூர்வமாக அறிவித்து அந்த மனிதனை ஒதுக்கீடுகள் கொடுத்து ஒதுக்கும்போது மகிழ்கிறான். நமது இந்த இரட்டை நிலைதான் அரசியல்வாதிக்கு தேவைப்படுகிறது..ஒரு பக்கம் நமது ஜாதியை குறித்து பெருமை பேசி ஓட்டு வாங்குவது...இன்னொரு பக்கம் ஒதுக்கீடுகள் கொடுத்து கொடுத்து நம் அறிவு வளர்ச்சியை முடக்குவது...தற்காலிகமாக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் இப்படி முடிவேயில்லாமல் போவது சர்வதேச அளவில் நம்மை மிகவும் கேலிக்குள்ளாக்குகிறது.....
ஆனந்த் - bangalore,இந்தியா
2010-07-30 12:18:29 IST
கலைஞர் ஐயா, ஜாதிகள் இல்லையடி பாப்பா, என்று பள்ளியில் மட்டும் தான் சொல்ல வைபிங்கள, என்னைக்கு இந்த தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் ஒளியும்....
saran - singapore.,இந்தியா
2010-07-30 11:57:43 IST
ஜாதி வேண்டாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் இட ஒதுக்கீடும் நீக்கப்படவேண்டும். இதுக்கு அனைவரும் ஓகேன்ன அதுக்கும் ஓகே. ஒரு பொருளை பங்கு வைப்பதென்று முடிவாகிவிட்டால் அது எத்தனை பேரென்று தெரியவேண்டாமா? வெளிநாடுகளிலெல்லாம் வருமானம் தான் ஒதுக்கீடுகளுக்கு கணக்கில் கொள்ளபடுகிறது. அதையே நாமும் பின்பற்றினால் ஜாதி தானாக காணாமல் போய்விடும்....
சுறா - vietnam,இந்தியா
2010-07-30 11:41:40 IST
ஜாதியாவது தூதியாவது அறிவு இருக்கறவன் முயற்சி இர்ருகறவன் முன்னேறட்டும் இதுலே ஜாதிய ஏன்யா செர்கீரிங்க இந்த இவனுங்களுக்கு இப்போ வேற ஒன்னும் பொழப்பு இல்லே இத வச்சி கொஞ்சம் நாள் ஓட்டுவானுங்க இந்தத் அறிவு கேட்ட முட்டாள் ஜனக திருந்ததுன்கப்பா...
R.VASUDEVAN - DOHA,கத்தார்
2010-07-30 11:38:07 IST
Next it will lead to quotas in Hospital bed, bus seat, train reservation,and even in cremation ground as per caste.If your quota is over you have to wait. Next each hospital will have caste wise doctors as per quota. They will demand caste wise bus service. The list will continue to grow ....
koyalle - bangalore,இந்தியா
2010-07-30 11:04:20 IST
வாழ்க கலைஞர் வளர்க அவரது தொண்டு...
குமார் - Tuticorin,இந்தியா
2010-07-30 11:03:03 IST
இனம், மதம்,,ஜாதி ஒழிக்கும இந்த நாட்டிலே முதல்வர் அவரே ஜாதி பற்றி பேசுவதா? என்ன கொடுமை சார்....
பொ.மணிகண்டன் - Masurai,இந்தியா
2010-07-30 10:51:00 IST
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடினார் அனால் இன்று ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்று கடித வேந்தன் கூறுகிறார் இந்த கூற்று மிகவும் சிறப்பாக உள்ளது.வாழ்க ஜாதி சங்கங்கள்....
கலைச்செல்வன் - Pandalgudi,இந்தியா
2010-07-30 10:48:27 IST
ஜாதி சான்றிதல் கொடுத்து ஜாதி ஒதுக்கீட்டு சீட் வாங்கி "ஜாதி இல்லையடி பாப்பா" என்று படிப்போம். வாழ்க தமிழ்நாடு...
ர முரளிதரன் - Coimbatore,இந்தியா
2010-07-30 10:27:57 IST
அரசியல் சட்டத்தை உருவாக்கிய தீர்கதரிசி மேதையான Dr அம்பேத்கர் என்ன கூறினார் தெரியுமா? If reservation continues forever, it will be a bane on society and country...
விஜய் - Bangalore,இந்தியா
2010-07-30 10:21:30 IST
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மற்றுமொரு முட்டுக்கட்டை...
வண்டு முருகன் - Nagapattinam,இந்தியா
2010-07-30 10:10:54 IST
ஆஹா மஞ்ச துண்டுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. உடனே 400 கோடி ரூபாயை ஆட்டைய போடா ஒரு கூட்டம் போட்டு முடிவு எடுக்க வேண்டியதுதான். நல்லவேளை பாரதியார் உயிருடன் இல்லை, இருந்திருந்தால் இதற்காகவே இறந்திருப்பார் இன்னுமொரு முறை. வாழ்க மஞ்ச துண்டு வளர்க அவர் ஜாதி வெறி. கருணாநிதியின் மன்னர் ஆட்சியில் தன் அமைச்சர்களிடம் :- அமைச்சர்களே நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்கி கொள்கிறார்கள். மு க கடுப்பேத்தறார் மை லார்ட். !...
khan - chennai,இந்தியா
2010-07-30 10:09:38 IST
ஜாதிவாரியா கணக்கு எடுத்தாதானே அந்த அந்த தொகுதியில எந்த ஜாதி அதிகம்மோ அந்த ஜாதிகாரண நிறுத்தி ஒட்டு வாங்கலாம்ல. அப்போ தானே ஜாதி இல்லாத சமத்துவபுரம் அமைக்க முடியும்.. சூப்பர் லாஜிக் அய்யா....
REGHU - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-30 10:03:04 IST
Govt's decision is unfortunate.Public money should be spent for useful deeds.Hereafter it is better do not talk about Mahakavi Bharathi. Remove all quota system. Extend help for economically previlaged.Govt should adopt the system of No religion No caste in Govt records. Do not spoil future generations please....
arul - nagercoil,இந்தியா
2010-07-30 09:58:59 IST
அய்யா மஞ்சத்துண்டு பெரியவரே சமத்துவபுர நாயகனே நீங்க இதகூட செய்யலான எப்படி. சரி உங்க குடும்பத்தை எத்தனை ஜாதியில் சேர்ப்பது என்பதை முதலில் முடிவு செய்யுங்கள் தேர்தல் வரும் நேரம் எதையாவது பிதட்டமல் இருங்கள் அல்லது ஒய்வு எடுத்து ஜாதிகள் எத்தனை உண்டு என்று ஆராய்ச்சி செய்து எதாவது சினிமா எடுங்கள் ...
Murugadasan - Nellore,இந்தியா
2010-07-30 09:57:37 IST
ஜாதியை ஒழிப்போம் ஒழிப்போம்னு கூச்சல் மட்டும் போடுவோம்...ஆனால் ஆரம்ப பள்ளியிலிருந்து சுடுகாடு வரை ஜாதியை பெயரை வைத்து "இட ஒதுக்கீடு" என்ற பெயரில் ஜா"தீ"யை மூட்டி குளிர் காய்வோம் எப்பொழுது திருந்த போகிறீர்கள்?...
vairav - Jeddah,சவுதி அரேபியா
2010-07-30 09:22:55 IST
ஜாதியை ஒழிப்போம் ஒழிப்போம்னு கூச்சல் மட்டும் போடுவோம்...ஆனால் ஆரம்ப பள்ளியிலிருந்து சுடுகாடு வரை ஜாதியை பெயரை வைத்து "இட ஒதுக்கீடு" என்ற பெயரில் ஜா"தீ"யை மூட்டி குளிர் காய்வோம் இது தான் நமது கொள்கை...
கே.JEEVITHAN - Villupuram,இந்தியா
2010-07-30 08:41:44 IST
சபாஷ், நானூறு கோடி திட்டம் உருவாகிறது. தமிழ்நாட்டுக்கு மட்டும் செலவாகும் தொகை இது. ஒழுங்காக திட்டமிட்டிருந்தால் சென்சஸ் எடுக்கும்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்திருக்கலாமே? இந்த அரசியல்வாதிகளுக்கு மனசாட்சியே இல்லையா? நானூறு கோடி சிறு தொகையா? கொள்ளை அடிப்பதற்கே திட்டங்கள்....
paramsrini - chennai,இந்தியா
2010-07-30 08:35:17 IST
ஐயா தமில் மக்கள் முன்னேறக்கூடாதுநு ஒரு முடிவூட இருப்பீங்க போல கொறஞ்சு வார பாகுபாடுகள நீங்க த்டுகிறீங்க.... இது இந்திய தேசத்துக்கு கொஞ்சம் கூட நல்லது இல்ல சொல்லிபுட்டேன் ஆமா...
Ji.Pannadai pandian - wuxi,சீனா
2010-07-30 08:19:46 IST
You decided to take the census according to castes. Welcome, but have you decided to enlist those who are rich and poor under these caste census. This will enable the quota system to really be effective to uplift the downtroden masses. All those who are economically advanced in these castes must be removed from quata benefits. And those who are really economically below poverty line must be extended quata benefits who ever he or she may be ie brahmins, muslims, christians....
மணி.வி - Chennai,இந்தியா
2010-07-30 07:16:25 IST
ஜாதியை ஒழிக்குமா இந்தப் பெரிசு? ஓட்டு வாங்க வேணாம்? மருத்துவர் போராடப் போகிறார்ன்னு, மிகவும் பிற்பட்ட சாதி லிஸ்ட் கொண்டுவந்தாரூ .. அப்ப மொதல்ல தன் சாதியதான் சேர்த்தார் இந்த ஆளு. அதெப்படி . இதனை மந்திரி , CM ஆபீசரெல்லாம் இருக்கற சாதி MBC பட்டியல்ல? ன்னு மருத்துவர் கேட்டதுக்கு வந்தது கோபம் மஞ்சத்துண்டுக்கு! பிரச்சன வேண்டாம் தலீவரே.உங்களுக்குப் பிடிக்காத 'அந்த' சாதி தவிர எல்லாருமே பிற்பட்டவங்கன்னு சொல்லிடுங்க. ஓட்டும் விழும். பிரச்னையும் தீரும்!...
singam - namakkal,இந்தியா
2010-07-30 06:59:57 IST
பாரதியார் படம் ,சிலை ,பள்ளியில் பாரதியார் பற்றிய பாடம் எல்லாவற்றயும் நீக்கி விடுங்கள் .... ஜாதி வெறி பிடித்து அலையும் உம்மை போன்ற அரசியல் வாதிகளின் பாடத்தை பிள்ளைகள் படிக்கட்டும் ....அவர்களும் ஜாதி வெறி பிடித்து ஒருத்தருக்கு ஒருத்தர் வெட்டி கொண்டு அழியட்டும் ..........வாழ்க ஜாதி ....வளர்க ஜாதி பிரச்னை ............
sathish - chicago,உஸ்பெகிஸ்தான்
2010-07-30 05:18:01 IST
எல்லா ஜாதிக்கும் இட ஒதிக்கீடு கொடுதிகிட்டே இருந்தா 225 % வரப்போகுது. எப்பதான் meritikku முக்கியத்துவம் கொடுப்பீங்க?. எல்லா brahmins தமிழ்நாட விட்டு போனதுகுஅப்பரம் மெரிட்டிக்கு முக்கியத்துவம் கொடுபிங்கனு நினைக்கிறேன். அப்பயாவது மெரிட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தா செரி....
Mohan - China,இந்தியா
2010-07-30 05:08:45 IST
சபாஷ், ஜாதி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் இப்படிக்கு முதல்வர் கருணாநிதி....
rajesh - tutucorin,இந்தியா
2010-07-30 04:46:42 IST
சாதிகல் இல்லை அனைவரும் ஒன்று என்று குரியவரே சாதி வரியாக கனேகேடுப்புன இது சரியாய் ....
முஹம்மத் KJM - Madurai,இந்தியா
2010-07-30 03:59:16 IST
கலைஞர் நிதனாமாக, அறிவுபூர்வமாக, ஆழமாக, சாதுர்யமாக, தெளிந்த சிந்தனையாக, உணர்ச்சிபூர்வமாக, விவரமாக, விவேகமாக (அதாவது பகுத்தறிவு) துல்லியமாக, சட்டபூர்வமாக, கண்ணும் கருத்துமாக எடுத்துரைத்த இந்த முடிவு. டாக்டர் ராமதாஸ் அவர்கள் உள்பட அனைவரும் பாராட்ட தக்க முடிவு. டாக்டர் அவர்கள் இதற்க்கு ஆதரவும் தர வேண்டும். அரசியல், நிர்வாகம், தேர்தல் வியூகம் உள்பட அனைத்து துறையிலும் கலைஞரின் செயல்பாடு இறைவனின் பேரருள் என்றே சொல்லலாம். அரசியல், நிர்வாகம், உள்பட அனைத்து நிலைகளிலும், மேலும் அவரது நிலைமை மற்ற அரசியல் வாதிகளை விட மேலோங்கி இருக்க நமது நல் வாழ்த்துக்கள். அரசியலில் நிலை குலைந்து. நொண்டி சாக்கு போக்கு சொல்லும், மக்கள் நலனில் அக்கறை காட்டாது, பதவி ஒன்றையே குறிகோளாக கொண்டிருக்கும், சோக்காளிகளாக, அல்லும் பகலும் தவறான தகவல்களை மக்களுக்கு கொடுத்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகளை விட கலைஞர் எவ்வளவோ மேல். கலைஞர் அவர்களுக்கு நமது நல் வாழ்த்துக்கள்....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-30 02:50:16 IST
சமீப காலாமாகவே ஓடி ஓடி அடிக்கல் நாட்டுகிறார், ஓடி ஓடி அரை குறையாக அவசர அவசரமாக திறப்பு விழா வைக்கிறார், யாருக்கும் புரியாத அறிக்கை விடுறார், பயம் வந்து விட்டது... வரும் தேர்தலில் ஜெயலலிதா எப்படி காய் நகர்தபோகிறார் என்று எல்லாரும் பார்க்கதானே போகிறோம். எப்படியும் காங்கிரஸ் கழண்டுவிடுவார்கள், திமுக பினாமி கட்சிக்காரன் தான் இவ்வளவுக்கும் காரணம், அவன் மட்டும் போன தேர்தலில் நிற்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இது போன்ற துன்பங்கள் தமிழ்நாடிற்கு ஏற்பட்டிருக்காது, பார்க்கலாம், இந்த முறை அதிமுக ஏழு கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும். திமுகவுடன் மிஞ்சிருப்பது முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், முடிந்தால் பா.ம.க. வரும் தேர்தலில் திமுகவால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-07-30 02:32:28 IST
அய்யா பெரியோர்களே, தாய்மார்களே, இருக்கின்ற ஜாதிகளின் எண்ணிக்கையை குறைத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஜாதிகள் இல்லாத தமிழ்நாட்டை கொண்டுவர முடியாதா? இது என்ன, நாம இப்படி போய்கொண்டு இருக்கிறோம். இருக்கிற மனுசனுகள விட ஜாதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே. இதை வெச்சே நம்மள ஒண்ணுக்கும் ஆகாம பண்ணிட்டு இருக்காங்களே. ஜாதி இல்ல ஜாதி இல்லன்னு சொல்லிட்டே இப்படி ஜாதி வெறி புடிச்சு அலையுறாங்களே. இதுக்கு ஒரு நல்லதா நாலு பேரு சேந்து எதாச்சும் ஒரு ஐடியா போடா கூடாதா? நாள் ஆகஆக இந்த ஜாதி பிரச்சினை வந்து நாடு கலவர பூமியாகி நாம எல்லோரும் மீண்டும் அடிமை ஆகிடுவோம் போல இருக்கே. இந்த ஜாதிய விட்டுட்டு பொலைக்கிரதுக்கு எதாச்சும் வழி இருக்கான்னு பாத்தா என்ன? ஜாதிய சொல்லி ஒருத்தனுகொருத்தன் அடிச்சுகிட்டு சாவுறத விட, ஜாதிய விட்டொழிச்சிட்டு ஒன்னோட ஒண்ணா ஒத்துமையா வாழ்ந்தா என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க மக்களே. ஓ இளைஞர்களே, நீங்களாச்சும் இந்த ஜாதி தீயில் இருந்து வெளியே வந்து ஒரு நல்ல சமுதாயத்தை வரும் தலைமுறைக்கு ஏற்படுத்தி கொடுங்க செல்வங்களே. இந்த ஜாதி வெறி நமக்கு வேண்டாம் கண்மணிகளே....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
Your Name  :
Your Email Id :
Your city (or) location  :
Your country  :
Your Comment :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)