கோவை: ""ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது நிறைவேறவில்லை,'' என, முன்னாள் ராணுவத்தினர் நல மைய விழாவில் கலெக்டர் கருணாகரன் உருக்கமாக கூறினார்.
கோவை முன்னாள் படை வீரர் நல மைய வளாகத்தில் ரூ. 1.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, புதிய அலுவலக கட்டடத்தை கலெக்டர் கருணாகரன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, கலெக்டர் பேசியதாவது: நான் இங்கு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். பள்ளியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையில் சேர்ந்தேன். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. சிறு வயதில் இருந்தே ராணுவத்தின் மீது ஈர்ப்பு இருந்ததால், இந்த கட்டடத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ராணுவத்தில் பணிபுரிந்து உயிர் தியாகம் செய்த வீரர்களின் விதவையர்கள், போரில் கை, கால், உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் பனிச்சிகரத்தில் கடுங்குளிரில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு, முன்னாள் படை வீரர்கள் நலத்துறை மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, கலெக்டர் கருணாகரன் பேசினார். விழாவில், முன்னார் ராணுவத்தினர் நான்கு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கொடி நாள் வசூலில் அதிக நிதி திரட்டிய மாநகராட்சி உதவி கமிஷனர் மற்றும் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, "கவர்னர் பதக்கம்' மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் கர்னல் ராதா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பழனிச்சாமி, ஏர்மார்ஷல் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.