தபால் துறையில் புதிய வசதி 40 கிலோ வரை பார்சல் அனுப்பலாம்!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருப்பூர் : திருப்பூரில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் 40 கிலோ எடையுள்ள பொருட்களை "பார்சல்' சர்வீஸ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பலாம். இதேபோல், வெளிநாடுகளுக்கும் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மொபைல்போன், இன்டர்நெட் என உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் சென்று கொண்டிருப்பதால், தபால் துறையின் கடித போக்குவரத்து அரிதாகி விட்டது. வருமானத்தை அதிகரிக்க, தபால் துறை - தனியாருடன் இணைந்து தங்க நாணயம் விற்பனை, "சோட்டா கூல்பிரிட்ஜ்' உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வரு
கிறது. தற்போது 40 கிலோ எடையுள்ள பொருட்களையும் "பார்சல்' அனுப்பும் வசதியை, இந்திய தபால் துறை ஏற்படுத்தியுள்ளது.தலைமை தபால் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் கூறிய
தாவது:ஒன்று முதல் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல, "பிளாட் ரேட் பார்சல்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொருட்களை கொண்டு செல்வதற்குரிய "பாக்ஸ்' தபால் அலுவலகத்தில் இருக்கும்.இந்தியாவுக்குள் பொருள் அனுப்ப ஒரு கிலோவுக்கு 125 ரூபாய்; 2.5 கிலோ 200; ஐந்து கிலோ 400 ரூபாய் செலுத்த வேண்டும். வெளிநாடுகளாக இருந்தால் ஒரு கிலோ 1,000 ரூபாய்; 2.5 கிலோ 1,500; ஐந்து கிலோ 2,500 ரூபாய் செலுத்த வேண்டும். அனுப்ப வேண்டிய பொருட்களை வாடிக்கையாளர்கள் கொண்டு வந்தால், தபால்
அலுவலகத்தில் "பேக்கிங்' செய்து விமானம் மூலம் பொருட்களை அனுப்புவோம்.
பாக்ஸில் அனுப்பியவர் முகவரி, பெறுபவர் முகவரி குறிப்பிடப்பட்டிருக்கும்; பில் தரும்போது பாக்ஸில் உள்ள சீரியல் நம்பர் வாடிக்கையாளரிடம் வழங்கப்படும். அந்த சீரியல்
நம்பரை சரிபார்த்து, பொருட்களை பெறுபவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
சிறிய பாக்ஸ்களை போல், பெரிய அளவில் 20 கிலோ
முதல் 60 கிலோ வரை பாக்ஸ் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்; பனியன், டவல்களை அனுப்ப "தனி பேக்கிங் கவர்' உள்ளது. இந்திய தபால் துறையின் நேரடி கட்டுப்பாட்டில்
இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், பொருட்களை நம்பி வழங்கலாம்.
பாதுகாப்பு காரணம் கருதி, கூர்மையான, எளிதில் தீப்பிடிக்க, வெடிக்கக்கூடிய பொருட்களை அனுப்ப வேண்டாம் என உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை விமான நிலையத்தில் "கஸ்டம்ஸ்' அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகே அனுப்பப்படும். பனியன் நிறுவனத்தினர் "சாம்பிள்' பீஸ் அனுப்ப இத்திட்டம் அருமையானது, என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூலை-201205:50:18 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க தபால் துறையினர் சரியாக செயல் பட்டிருந்தால் கொரியர் சேவை என்பதே வந்திருக்காதே? இவர்களின் அலட்சிய போக்கினால் மேற்படி சேவை கோடிகணக்கில் வருமானம் செல்வதை இவர்களால் தடுக்க முடியாது. மொத்தத்தில் இந்திய தபால் துறை தேவை இல்லாதது. இப்படி பொறுப்பற்ற தபால் துறை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? எல்லாம் ஒன்று தான். இந்த கருத்தை பொதுக்கூட்டங்களில் நான் எடுத்து கூற தயாராக இருக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
tamilselvan samuel - chennai,இந்தியா
09-ஜூலை-201210:51:00 IST Report Abuse
tamilselvan samuel who will see the piled up baggage in the central station
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
08-ஜூலை-201218:18:23 IST Report Abuse
maran மிகவும் கேவலமான துறை என்பதற்கு ஒரு சான்று-50 கிலோ பார்சல் சவூதியிலிருந்து அனுப்பினேன் இந்தியாவில் என் வீட்டில் தபால் துறை கொடுத்தோ 16 கிலோ .....இது ஒன்றே போதும் நம் தபால் துறையின் அவலம்
Rate this:
Share this comment
Cancel
vetriselvam - chennai,இந்தியா
08-ஜூலை-201215:04:22 IST Report Abuse
vetriselvam இந்திய தபால் துறைக்கு நன்றி. கா.வெற்றிசெல்வம்.ராமநாத புரம்.வன்னி வயல்.
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
08-ஜூலை-201212:18:14 IST Report Abuse
maran தபால் துறையா ? ..கேவலமாக இல்லை உங்களுக்கு .....ஏன் வெளிநாட்டில் வெயிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஏதோ சொந்தபந்தங்களுக்கு , பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கி ( நானும் ஒரு முட்டாள் )தபால் துறை மூலமாக அனுப்பினேன் ....( என் நண்பர் சொன்னார் -தனியார் துறையில் அனுப்பு-கரெக்டா போயிடும் என சொன்னார் .நான்தான் கேட்கவில்லை )...நம் கவேர்மென்ட் - தபால் துறை சிறந்த துறையின்னு ஒரு 50 -கிலோ அனுப்பினேன் .....நம் கேடு கெட்ட தபால் துறையில் வேலை செய்யும் நபர்கள் அதை திருடி -அவர்கள் குடும்பத்திற்கு எடுத்து சென்றுவிட்டார்கள் ....கடைசியாக என் வீட்டில் கொடுத்தோ 16 கிலோ 200 -கிராம் .....என் வீட்டில் உள்ளவர்களுக்கு பார்சல் வந்த மகிழ்ச்சியில் கையொப்பம் -இட்டு வாங்கிவிட்டார்கள் .....ஏன் பிரித்து இருக்கிறது என கேட்டதற்கு -எங்களுக்கு என்ன தெரியும் என சொல்லிவிட்டார்கள் ....இதே விவரம் அறிந்தவர்களாக இருந்து இருந்தால் பார்சலை திருப்பி அனுப்பி இருந்தால் சவுதி கவேர்மென்ட் இந்திய கவேர்மெண்டை கிழி கிழி -ன்னு கிழித்திருக்கும் ..தபால் துறையில் வேலை பார்க்கும் அந்த(மனித கழிவுகளை திங்கும் ) பன்னாடைகளை -அப்பா ..தனக்கு பிடித்ததை வாங்கி அனுப்பி இருக்கிறார் என ஆவலுடன் பிரித்து ஏமாந்த என் பிஞ்சு குழந்தையின் ஏக்கம் அதை திருடி தன வீட்டிற்கு எடுத்து சென்ற கயவர்களை தினமலர் போன்ற பத்திரிக்கை இந்த நியூஸ் -ய் பிரசுரித்து தபால் துறைக்கு உள்ள கெட்ட பெயரை நீக்க வேண்டுமென வெளிநாட்டு வாசகனின் மனக்குமுறல்.........
Rate this:
Share this comment
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
09-ஜூலை-201205:34:42 IST Report Abuse
Mohd. Riasஅரசாங்கத்தில் வேலை செய்யாமல் சுலபமாக சம்பளம் கிடைப்பதால், பெரும்பாலானோர் திருடர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்