சென்னை:கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிப்பதோடு, கடற்படை, கடலோர காவல் படைக்கும், வானிலை பற்றிய தகவல்களைத் தரும் வகையில், 9.82 கோடி ரூபாயில், கப்பல் போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை, சென்னைத் துறைமுகத்தில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்து பேசியதாவது:சென்னைத் துறைமுகத்தில், கப்பல் பயணத்தில் முக்கிய கட்டமாக, மூன்றாம் தலைமுறைக்கான தொழில்நுட்பு வசதிகளுடன் கூடிய, கப்பல் போக்குவரத்து மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தானியங்கி கண்காணிப்பு, மின்காந்த அலை அதிர்வறியும் ராடர், கப்பல்களுடனான, தகவல் பரிமாற்ற இணைப்பு வசதிகளும் உள்ளன.துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாக நடக்கவும், எந்த சூழலிலும், விபத்துகள், கப்பல் மோதல்கள் நேரிடாமல், வரும் முன் காக்க முடியும். கப்பல்களின் எண்ணெய் கசிவை கண்டறிதல், நீர்நிலைக்கடியில் கண்காணிக்கவும், இணையதள இணைப்புக்கு ஏற்ற வசதிகளையும் கொண்டுள்ளதால், கடற்படை, கடலோர காவல் படை, பைலட் பிரிவு போன்ற துறைமுக துணை நிறுவனங்களுக்கும், தகவல்களை தர முடியும். இது துறைமுக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.