சென்னை: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப்-4 தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று, 4,000 மையங்களில் நடந்தது. 10,793 காலிப் பணியிடங்களை நிரப்ப நடக்கும் தேர்வில், முதன் முறையாக இதுவரை இல்லாத அளவிற்கு 12 லட்சம் பேர் போட்டி போட்டனர். தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் - 4 பணியிடங்கள் மற்றும் குரூப் - 8ன் கீழ், இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10,793 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஏப்ரல் இறுதியில் டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. இணையதளம் மூலம், ஏப்ரல் 27ம் தேதியில் இருந்து, ஜூன் 4ம் தேதி வரை, போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்தனர். இதுவே முதன்முறை: பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்பதால், தேர்வாணைய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, 12,33,731 பேர் விண்ணப்பித்தனர். குரூப் - 4 தேர்வு, இன்று காலை, 10 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை நடந்தது. பொது அறிவு மற்றும்
பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை தேர்வாக நடக்கிறது. 200 கேள்விகளுக்கு, தலா ஒன்றரை மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. "அப்ஜக்டிவ்' வகையில் கேள்வித்தாள் இருக்கும். குரூப் - 8க்கான தேர்வு, பிற்பகல் 2.30 மணி முதல், மாலை 5.30 வரை நடந்தது. தேர்வாணையத்திற்கு சவால்: முதன் முறையாக, அதிகமான காலிப் பணியிடங்கள் மற்றும் இதற்கு 12 லட்சம் பேர் போட்டி போடுவதால், இத்தேர்வை நடத்துவது, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சவாலாக அமைந்தது. இதனால், அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, தேர்வாணையத்தலைவர் நடராஜ், தேர்வாணைய அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி, தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார். தேர்வு பணியில் 75 ஆயிரம் பேர்: மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடனும், நடராஜ் ஆலோசனை நடத்தி, எவ்வித முறைகேடும் நடக்காதபடி, தீவிர கண்காணிப்புடனும், பாதுகாப்புடனும் தேர்வு நடக்க ஏற்பாடு செய்தார். மாநிலம் முழுவதும், 4,309 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுப் பணியில், 75 ஆயிரம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
பறக்கும் படை ஏராளம்: மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர், தேர்வை கண்காணித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆர்த்த சபை நூற்றொருவர்ஆயிரத்தொன்றாம் புலவர்வார்த்தை பதினாயிரத்தொருவர்..இது பழஞ் செய்தி. இன்று லட்சத்துக்கு ஒருவருக்கு பணி..நடராஜ் மிகப் பெரும் பொறுப்பில் உண்மையும் வெளிப்படைத்தன்மையும் கோலோச்ச இடம் அளித்தால், அவரின் பாதம் பணிவோம். மாறாக,ஒரு துளி அளவு நடக்குமாயின், பதவி விலகி, நாட்டு மக்களுக்கு உண்மையை பேசாமல் சொல்லலாம். நல்லதே நடுக்கும்.நம்புவோம்
ஜெயலலிதா இம்முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செய்த ஒரே உருப்படியான காரியம், நடராஜை டி என் பி எஸ் சி கலைவவராக நியமித்தது தான். இத்தேர்வை வெற்றிகரமாக நடத்தி உண்மையான திறமையானவர்களுக்கு மனிதாபிமான payirchiyudan வேலை வாய்ப்பளித்தால் தமிழகம் வாழ்த்தும். aalumkatchiyinar அதற்கு இடம் கொடுப்பார்களா என்பது தான் மில்லன் டாலர் கேள்வி. ஆளும்கட்சியினரும் அரசு ஊழியர்களும் எவ்வித கட்டுப்பாடுமின்றி அராஜக தர்பார் நடத்தி கொண்டிருப்பதாக தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் ஊர்ஜித படுத்துகின்றன. உடனே முந்தைய ஆட்சியை குறை சொல்வோர் கூவலாம், அன்று ஹேஷ்யமாக சொன்ன குற்றசாட்டுகள் இன்று நிதர்சனமாகி இருப்பதாக நடுநிலையாளர்கள் சொல்ல கேள்வி படுகிறோம். வாய்மை சுடும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.