Tamilnadu should show its strong over Mullaperiyar dam issue: Karunanidhi | பெரியாறு பிரச்னை: தமிழகம் உறுதியாக இருக்க வேண்டும்: கருணாநிதி பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரியாறு பிரச்னை: தமிழகம் உறுதியாக இருக்க வேண்டும்: கருணாநிதி பேட்டி

Updated : ஜூலை 08, 2012 | Added : ஜூலை 06, 2012 | கருத்துகள் (55)
Advertisement

சென்னை: ""புதிய அணை கட்டப்பட்டே தீர வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறியிருக்கிறார். புதிய அணை கட்டப்படக் கூடாது என்பதில், தமிழகமும் உறுதியாக இருக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு குறித்து, நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கை, ஒரு தலைப்பட்சமாக உள்ளது என்றும், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், புதிய அணை கட்டப்பட்டே தீர வேண்டும் என்றும் உம்மன்சாண்டி கூறியிருக்கிறார். புதிய அணை கட்டப்படக் கூடாது என்பதில், தமிழகமும் உறுதியாக இருக்க வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு, தமிழகத்திலே பயிற்சி அளிக்கக் கூடாது என்று நீங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்களையெல்லாம், மத்திய அரசு, திரும்ப அனுப்பி விட்டது. அவர்களுக்கு, தமிழகத்திலே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால், அப்போது பார்ப்போம். டெசோ மாநாட்டிற்கு, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும், இலங்கையிலே உள்ள, தமிழ் எம்.பி.,க்களையும் அழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


நேர்மையாக பணியாற்றிய கலெக்டருக்கு காத்திருப்போர் பட்டியலா? ""விருதுநகர் கலெக்டர் நேர்மையாக பணியாற்றியதால், காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: சொத்துக்குவிப்பு வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரானதாக முடிந்து, அவர் பதவி விலக நேரிடும் என்பதாலேயே, தீர்ப்பை நெருங்க விடாமல் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒருவர் மாற்றி ஒருவர், தடை உத்தரவு கோரி, மனுத் தாக்கல் செய்தபடி இருக்கிறார்கள் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள். விருதுநகர் கலெக்டர் நேர்மையாக நடந்து கொண்டார் என்பதற்காக, திடீரென அவரை மாற்றி விட்டனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனத்தில், ஆளுங்கட்சிக்காரர்கள், லட்சக்கணக்கில் ரூபாய்களை வாங்கிக் கொண்டு, யார்? யார்? நியமிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்களோ, அவர்களை, அந்தப் பணியிலே நியமிக்க, கலெக்டர் மறுத்து விட்டார் என்பதைத்தான் எல்லா ஏடுகளுமே எழுதியிருக்கின்றன. ஆனால், இன்று வரை, அதற்கு ஆளுங்கட்சித் தரப்பில் இருந்தோ, முதல்வர் அலுவலகத்தில் இருந்தோ, எந்தப் பதிலும் இல்லை என்பதிலிருந்தே ஏடுகள் எழுதியது எல்லாம் உண்மை என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதிலே இன்னும் வெட்கக்கேடு என்னவென்றால், அவ்வாறு நேர்மையாகப் பணியாற்றிய அந்த அதிகாரிக்கு, அ.தி.மு.க., அரசு வேறு பணியிடம் கூட வழங்காமல், காத்திருப்போர் பட்டியலிலே வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meekannan - Chennai,இந்தியா
08-ஜூலை-201211:22:30 IST Report Abuse
meekannan இந்த தமிழ்நாட்டில் எது நடக்க வேண்டும் என்றாலும் அது கருணாநிதி தான் செய்யவேண்டும் எல்லோரும் கருணாநிதியை தான் எதிர்பார்கின்றனர் இதிலிருந்து என்ன புரியவருகிறது என்றால் தமிழ்நாடில் எது செய்ய வேண்டுமானாலும் கருணாநிதி தான் செய்யவேண்டும் கருணாநிதி மட்டுமே செய்யமுடியும் என்று அதித நம்பிக்கை தமிழக மக்கள் வைத்துள்ளனர் இது தான் அரசியல், நீங்கள் தேர்ந்தெடுத்த எதிர்க்கட்சி தலைவர் சட்டசபை சபை செல்லாமல் வெளியில் சுற்றிக்கொண்டிருகிறார் இன்று கருணாநிதியின் அத்தனை கேள்விகளும் போராட்டங்களும் கணைகளும் அவர் கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமத்த தமிழ்நாடில் உள்ள அனைத்து கட்சி மக்களுக்காகவும் கட்சி சாரா மக்களுக்குககவும் தான் என்று நீ உணரும் பொது தமிழகம் மலரும். இதை ஏற்க மறுக்கும் நீ விடியும் வரை காத்திரு
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
08-ஜூலை-201200:10:28 IST Report Abuse
babu எதனை முறை ஆட்சி க்கு வந்தாலும் தான் எதுவும் செய்ய போவதில்லை என்ற தன்னம்பிக்கையில் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டார். தூங்கி கெடுத்தவர்கள் இன்றும் பூச்சாண்டி காட்டுகின்றனர் உம்மன்சாண்டி எதோ புதிதாக கண்டு பிடித்தவர் போல் அணைக்கட்டு உடைந்து விடுவதாக கற்பனை யாக, ஒரு பாசனத்தில் இருக்கும் உரிமையை எவனும் தடுக்க முடியாது, எனவே ஆணை கட்டு மீது பழி போட்டு தங்கள் பக்கம் நீராதாரத்தை நிறுத்தி கொள்ள கருத்து கூறி கொண்டு இருகின்றார், ethuvume செய்யாமல் முதலமச்சர் ஒருவர் சினிமா கதை எழுதி வசனம் பேசி சினிமா விழாக்களை கொண்டாடி இருந்த போது தூங்கி கொண்டு தான் இருந்தனர், மற்றவருக்கு அறிவுரை கூற தான் தகுதி கொண்டவனா என்று முடிவு செய்யது அறிக்கை கொடுக்கலாம்,
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
07-ஜூலை-201216:55:28 IST Report Abuse
A R Parthasarathy இதைவிட, போட்டோ ஆல்பம், கார்டூன் போன்றவைகளுக்கு கருத்து போடபோகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா
07-ஜூலை-201215:07:46 IST Report Abuse
Kartheesan அய்யாவுக்கும், அம்மாவுக்கும், உறுதி, வெங்காயம் எல்லாம் வேண்டாம், ஒற்றுமை மட்டுமே வேண்டும். உங்களால் ஏன் ஒன்றுபட்டு ஒரே நாளில் ஒரு போராட்டம் நடத்தி பாருங்கள். தேனி மற்றும் கம்பத்தில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு நாள் போராட்டம் நடத்தி கேரளாவிற்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடி போராட்டம் நடத்துங்கள். அவர்கள் தானாகவே வழிக்கு வருவார்கள். இதை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்தீர்களானால் அவர்கள் மேலும் மேலும் புதிய அணை கட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். நீங்களும் யாருமே இல்லாத வீட்டில் யாருக்காக விளக்கு பிடித்து கொண்டு இருப்பீர்களோ
Rate this:
Share this comment
Cancel
mutharasu - puliangudi,tirunelveli,இந்தியா
07-ஜூலை-201214:37:21 IST Report Abuse
mutharasu சும்மா வாய்க்கு வந்தது வாழைபழம்னு எதையாவது சொல்ல வேண்டியது..
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
07-ஜூலை-201217:52:40 IST Report Abuse
K.Sugavanamஇப்ப அந்த சிறி லங்கன் ஏர்மேன்கள் பெங்களூருக்கு போய் விட்டனர்.இப்போ மஞ்சளார் என்ன செய்யிறாருன்னு பாப்போம்.அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற முடியுமா அவரால்? அல்லது அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் இதற்காக தெருவில் இறங்கி போராடுவார்களா? என்னால் தான் தாம்பரத்தை காலி செய்தார்கள் என்று தங்கள் தங்கள் டி வி க்களில் மார்தட்டவே நேரம் போதவில்லை. இதற்குமேல் அறிக்கை மேல் அறிக்கை வேறு. இவர் முதல்வராயிருந்த போது நெஞ்சை உயர்த்தி இருந்தால் இந்த காவிரி,பெரியாறு,பாலாறு பிரச்சனைகளே இவ்வளவு முற்றி இருக்காது.அதே நிலைமைதான் இலங்கை தமிழர்கள் விடயத்தில்.இப்போ டெசோ குசோ ன்னு வண்டி தள்ளுவதில் என்ன லாபம் அவர்களுக்கு.எந்த இலங்கை தமிழ் எம் பி டெசோ மாநாட்டுக்கு வருவார்.முதுகில் குத்திய பிறகு....
Rate this:
Share this comment
Cancel
Tirupur Truth - tirupur,இந்தியா
07-ஜூலை-201213:41:05 IST Report Abuse
Tirupur Truth "தினமும் ஒரு செய்தி" என்று, கலைஞர் இத்தளத்தில் செய்தி நாள்தோறும் கொடுக்கிறாரா.... இல்லை தினமலர் தேடி போய், கொண்டு வந்து கொடுக்குதான்னு தெரியல....( ஆனா துண்டுகாரர பத்தி ஒரு நியூஸ் படிக்காட்டி, தூக்கம் வருவது எல்லாருக்கும் குறைவு என்பது முற்றிலும் உண்மை தான்)
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
07-ஜூலை-201212:45:41 IST Report Abuse
N.Purushothaman என்னப்பா .....திடீர்ன்னு இவர் வெட்கக்கேடு பற்றி எல்லாம் பேசறார்.....நல்ல தமாஷ்.....
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
07-ஜூலை-201217:55:12 IST Report Abuse
K.Sugavanamஉபதேசமெல்லாம் அடுத்தவருக்கு தான்.அதுதான் அவர் சரித்திரம்.இவரை யாகவா முனி தான் காக்க வேண்டும்.மஞ்ச துண்டு யோசனை அவர் சொன்னதாகத்தான் கர்ண பரம்பரை செய்திகள் உண்டு....
Rate this:
Share this comment
Cancel
kurumbu - tirupur,இந்தியா
07-ஜூலை-201211:33:12 IST Report Abuse
kurumbu தாதா இந்த விசயத்தபத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்குனு நீ நினைக்கிற? நீங்க மத்தியில் ஆளும் கூட்டணிதானே கேரளாவிலும் ஆளுது.முதலில் பிரச்சினை ஆரம்பிக்கும் போதெல்லாம் வாயில் பூட்டை போட்டு விட்டார்களா உனக்கு? இப்போது வந்து பிதற்றுகிறீர்......... தயவுசெய்து நீங்க ஆணியே புடுங்கவேண்டாம் தாதா அதை தமிழர்களாகிய என் உடன்பிறவா சகோதரர்களும் & சகோதரிகளும் பார்த்துக்கொள்வார்கள்.........
Rate this:
Share this comment
Cancel
SUKUDE SUKUDE - kumari,இந்தியா
07-ஜூலை-201210:52:44 IST Report Abuse
SUKUDE SUKUDE சும்மா தானே இருக்கீங்க, பொழுது போகணும் இல்லையா ...? எதாவது சொல்லனுமே செய்தி தாள்களில் நித்தம் உங்கள் பெயர் புகைப்படம் இடம் பெற வேண்டும் அல்லவா ... நல்ல உறுதியா இருங்க தமிழ் இன தலைவரே அப்படியே ஒரு 10 கட்டு மரத்தை நிறுத்திட வேண்டியது தானே அதுவே அணை மாதிரி உறுதியா தண்ணிய புடிச்சி வெச்சுக்கும்
Rate this:
Share this comment
Cancel
manickam kannan - coimbatore,இந்தியா
07-ஜூலை-201210:05:53 IST Report Abuse
manickam kannan அவர் என்ன செய்வார். இவர் இன்னும் ஆட்சியில் இருப்பது போல் பேசுகிறார். ஆட்சியில் இருக்கும்போது தன்னுடைய டிவி வியாபாரம் போய்விடும் என்று பயந்து கொண்டிருந்தார். கடந்த மூன்று தடவைகளாக இவருடைய ஆட்கள்தான் மத்தியில் பதவியில் உள்ளார்கள். என்ன பயன்? நடக்கவேண்டிய வேலைகளை முட்டுக்கட்டை போடுவார்கள். இதுதான் தெரியும். நாட்டு மக்களைப்பற்றி இவர்களுக்கென்ன கவலை. அவர்கள் பைகள் நிரம்பினால் சரி. காமராஜ் காலதிற்கு பிறகு வளர்ச்சி திட்டங்கள் என்ன நிறைவேறின?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை