"தனியார் மயத்தில் தாராளம் வேண்டும்': ஐ.ஜே.கே., தலைவர் பாரிவேந்தர்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை: ""தமிழகத்தின் வளர்ச்சிக்கு தாராள தனியார் மயம் வேண்டும்,'' என, ஐ.ஜே.கே., தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: ஐ.ஜே.கே., துவங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. துவங்கிய 8 வது மாதத்தில், பொதுத்தேர்தலை சந்தித்தோம். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கூட்டணியை தவிர்த்தோம். தமிழக மக்களின் ஆட்சி தேர்வு, ஜனநாயகப்படி நடப்பதில்லை. பணம் கொடுத்து, ஓட்டுகளை பெறுகின்றனர். இதனால், மக்களும் ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர். மதுவிற்பனையில் ரூ.21 ஆயிரம் கோடி வருவாயை அரசு எதிர்பார்த்துள்ளது. இது, ரூ. 40 ஆயிரம் கோடியாக உயரும் போது, தமிழகத்தில 70 சதவீதம் பேர் மது அருந்துவர். இலவசத்தை தவிர்த்தால், மது வருவாய் தேவையில்லை. கல்வி நிறுவனம் நடத்தும் எனக்கு, அரசியல் தேவையில்லை. மோசமான அரசியல் சூழ்நிலையை, வேடிக்கை பார்க்க மனமின்றி அரசியலுக்கு வந்தேன். தமிழகத்தில் அறிவிக்கும் திட்டங்களை, நடைமுறைப்படுத்துவதில்லை. தனியார் ஊக்குவிப்பால், மும்பை, குஜராத் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழக வளர்ச்சிக்கு தாராள தனியார் மயம் வேண்டும். வடக்கிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதால், சிங்களர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. பார்லி., தேர்தலில் பா.ஜ.,வை ஆதரிப்போம். காங்., உடன் ஒப்பிடும் போது, பா.ஜ.,வில் ஊழல் மிகக்குறைவு. அதை தொழில் ரீதியாக உணர்ந்துள்ளேன். பா.ஜ.,வில் "மதவாதம்' இல்லை, என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - chennai,இந்தியா
08-ஜூலை-201220:44:38 IST Report Abuse
Natarajan Ramanathan மொதல்ல SRM காலேஜில் அடிக்கும் கொள்ளையை நிறுத்து பச்சமுத்து. உன் காலேஜில் எல்லா student sum drug addict. அது தெரியுமா உனக்கு?
Rate this:
Share this comment
Cancel
arul - chennai,இந்தியா
07-ஜூலை-201217:33:13 IST Report Abuse
arul குமார் திருட்டு ரயிலில் வந்தவர்கள் முதல்வர், நீ ஏற்று கொள்வாய். ஆனால் உடையார் மது விற்றல் தவறா, இன்று அரசு மது விற்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
07-ஜூலை-201215:40:08 IST Report Abuse
Srinath இந்தியத் தனியார் துறை என்பது பேராசை மற்றும் மோசடி மனம் படைத்தது. என்னதான் உலகளவில் தனியார் மயம் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவில் அது படுதொல்வியடையக் காரணம் தனியார் தொழில் நிறுவனங்களும், அதன் முதலாளிகளுமே. இந்தியத் தொழிற்துறை ஓரளவு நிலைத்து நிற்கக் காரணமே மத்திய அரசு நிறுவனங்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ONGC, BHEL, BEL போன்றவை சில உதாரணங்கள். டாடா, பிர்லா, கோயங்கோக்கள் மற்றும் ஜிண்டால் போன்றவர்களைத்தவிர பெருமளவு நம்பகத் தன்மை வாய்ந்த தொழில் நிறுவனங்கள் இல்லை என்றே கூறலாம். வெறும் அராஜகம், ரவுடித்தனம் மூலமே வளர்ந்தவர்கள் அம்பானி, சுனில் மிட்டல் போன்றோர்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-201214:02:17 IST Report Abuse
Kasimani Baskaran நேர்மையான அளவில் ( அதாவது கமிசன் கொடுக்காமல் ) இயங்கும் நிறுவனம் நிச்சயமாக நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதம். TVS போன்ற அப்படிப்பட்ட தொண்டை பல காலமாக செய்து வருகின்றன. அரசு நிறுவனங்களில் இதை போன்றவர்கள் முதலீடு செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இன்னும் நல்லது. நேரடியாக தனியாருக்கு விடுவதை போன்ற முட்டாள் தனங்கள் கிடையாது. அப்படி செய்யும் பட்சத்தில் முக, சசிகலா போன்ற கூட்டம் நாட்டில் பாதி நிறுவங்களை விலைக்கு வாங்கி விடும்.
Rate this:
Share this comment
Cancel
Sivaramakrishnan M B - Chennai,இந்தியா
07-ஜூலை-201213:25:33 IST Report Abuse
Sivaramakrishnan M B இலவசமாக கல்வி அளிக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு சொன்னார். ஆனால் தனது கல்வி நிறுவனங்களில் படிக்க லட்சம் ருபாய் வரை வாங்குவதாக செய்தி படித்துள்ளேன். மேலும் புதிய மாணவர்களை சேர்க்க பழைய மாணவர்களுக்கு கமிஷன் அளிப்பதகவும் சில பத்திரிகைகளில் நான் படித்ததுண்டு. தமிழ் நாட்டில் பா ஜ க செல்வாக்கு இல்லாத கட்சிதான். ஆனால் இவர் ஆதரவை நாடும் அளவுக்கு மோசம் இல்லை. இவர் வேண்டும் என்றால் டி ஆர் கட்சி உடன் கூட்டணி வெச்சுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
trp - coimbatore,இந்தியா
07-ஜூலை-201212:41:40 IST Report Abuse
trp எல்லாம் தலை எழுத்து. அப்படி இப்படி சம்பாரிச்ச சொத்த காப்பாத்த கட்சி நடத்தும் பிரபலங்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னென்றால் நம் நாடு ஜனநாயக நாடு அல்லவா ?
Rate this:
Share this comment
Cancel
Balraj Malai Arasu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-201212:02:19 IST Report Abuse
Balraj Malai Arasu நல்ல யோசனை இந்த அரசியல் வியாதிகள் இன்னும் கொள்ளை அடிக்கலாம் :)
Rate this:
Share this comment
Cancel
Veera Vanniyar Peravai Villupuram - Villupram,இந்தியா
07-ஜூலை-201211:54:18 IST Report Abuse
Veera Vanniyar Peravai Villupuram வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கூட்டணியை தவிர்த்தோம், நீங்க புதுக்கோட்டை தேர்தலில் எவ்வளவு ஒட்டு வாங்குனிங்க?
Rate this:
Share this comment
Cancel
Thina Thee - Kualalumpur,மலேஷியா
07-ஜூலை-201210:12:41 IST Report Abuse
Thina Thee மாதம் எண்ணுற்று ஐம்பது ரூபாய் ட்யூஷன் எடுத்து சம்பதிதவருக்கு இவ்வளவு சொத்து எப்படி? ராமாவரத்தில் சுடுகாட்டில் எஸ்.ஆர்.எம்.வேலி போட்டது எப்படி? காட்டன் கொளத்தூர் நிலம் எப்படி வந்தது?வை.கோ.பச்சமுத்து தொடர்ப்பு என்ன? பணத்தை காக்க கட்சி ஆரம்பித்தவர் இந்த வருடம் விஸ்காமிற்கு மூணு லக்ஷம் பயோ டெக்னாலஜிக்கு ஏழு லக்சம் ரசீது இல்லாமல் வாங்கி போடும் நேர்மை என்ன? இதெல்லாம் நான் கேட்கலை ? பி.ஜே.பி.மதவாதம் இல்லையாம்? வடிவேலு மாதிரி சிரிக்க வைக்கும் பாரிவேந்தர் எத்தனை முல்லைக்கு தேர் தந்தீர்
Rate this:
Share this comment
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
07-ஜூலை-201204:45:01 IST Report Abuse
aymaa midas=vison2023 கட்டு படுத்தப்பட்ட தனியார் மயம் கொள்கை கொண்டு வரப்பட வேண்டும். முதலாளிகளின் மூக்கநாங்கயிறு அரசிடம் இருக்கவேண்டும். அந்த அரசை நடதுவவர் நல்ல யோக்கியனா இருக்க வேண்டும். நம்ம தமிழக அரசியல் வாதிகளில் சல்லட போட்டு சலிச்சி பார்த்தாலும் ஒரு பய கூட தேற மாட்டன். பொறம்போக்கும் ஈத்தர பயபுள்ளையும் தானே அரசியலில் இருக்கு
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
07-ஜூலை-201210:10:26 IST Report Abuse
Karam chand Gandhi சரியாக சொன்னீர். அப்புறம் பாரி வேந்தர் மாதிரி கல்வி விற்பனர்களின் பின்புல (background ) ஆராய்ச்சி அதன் ஆவணங்கள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். கல்வி இலவசமாக இருக்கும்படி செய்ய வேண்டும். இதற்கு அரசியல் வாதி மனசாட்சி உள்ளவனா இருக்க வேண்டும். நடக்குமா? கனவுதான்?...
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-201213:21:01 IST Report Abuse
Kasimani Baskaranஅத்தைக்கு மீசை முளைத்த பின்னர் பார்க்கலாம்....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஜூலை-201215:16:31 IST Report Abuse
Nallavan Nallavanநன்றே சொன்னீர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்