Advertisement
திருச்சி - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த வாரம் இயக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2012
23:32

திருச்சி: திருச்சியிலிருந்து பகல் நேரத்தில் திருநெல்வேலிக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற, தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை, விரைவில் இயக்கப்படவுள்ள, "திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில் மூலம் நிறைவேற உள்ளது. இது, திருச்சி, நெல்லை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


தவிப்பு: தென் மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர், திருச்சியில் வசிக்கின்றனர். அவர்கள் சொந்த தொழில் செய்தும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்தும் வருகின்றனர். அதேபோல், திருச்சியைச் சேர்ந்தவர்கள் தினமும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலிக்கு பல்வேறு வேலை மற்றும் தொழில் விஷயமாக செல்கின்றனர். ஆனால் இவர்கள், திருநெல்வேலிக்குச் சென்று வர, பகல் நேரத்தில் நேரடியாக ரயில், பஸ் வசதி இல்லாத நிலை உள்ளது. சென்னையிலிருந்து வரும் பஸ்சையோ, ரயிலையோ நம்பியிருக்கும் சூழல் இருந்தது. திருச்சியிலிருந்து, திருநெல்வேலிக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என, திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்ட மக்கள், பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கைக்கு, சில மாதங்களுக்கு முன் மாநில அரசு செவி சாய்த்து, பகல் நேரத்தில் இரு பஸ்களை இயக்கி வருகிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை.


இன்டர்சிட்டி: சில மாதங்களுக்கு முன் ரயில்வே பட்ஜெட்டில், திருச்சி-திருநெல்வேலி இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது, திருநெல்வேலி, திருச்சி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, திருச்சி-திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்னும் ஒரு வாரத்தில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கால அட்டவணையும், தெற்கு ரயில்வேவால் வெளியிடப் பட்டுள்ளது. காலை 7.10 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திண்டுக்கல், மதுரை, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி வழியாக, மதியம் 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அங்கிருந்து, பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8 மணிக்கு திருச்சி வந்தடையும். இந்த ரயிலில், திருச்சி-நெல்லைக்கு கட்டணம் 161 ரூபாய்.


வரவேற்பு: புதிய ரயில் இயக்கப்படுவது, திருநெல்வேலி, திருச்சி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், திருச்சியிலிருந்து நெல்லைக்கு பஸ்சில் செல்ல சாதாரண கட்டணம் 180 ரூபாயாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில், 205 ரூபாயாகவும் உள்ளது. ஆனால், புதிதாக இயக்கப்படவுள்ள, திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம், பஸ் கட்டணத்தை விட, 20 ரூபாய் குறைவாக வசூலிக்கப் படவுள்ளது. இதுவும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியிலிருந்து, நெல்லைக்கு பாசஞ்சர் ரயிலில், 46 ரூபாயும், எக்ஸ்பிரஸ் ரயிலில், 75 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புதிய ரயிலால், திருச்சியிலிருந்து, தினமும் பல்வேறு காரணங்களுக்காக, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் செல்வோருக்கு, இந்த ரயில் வசதியாக இருக்கும். திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம், 21 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதில் பொதுப் பெட்டி, மகளிர், ஏ.சி., உள்ளிட்ட அனைத்து வகையான பெட்டிகளும் இருக்கும். இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக, பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட 17 பெட்டிகள், திருச்சிக்கு வந்து சேர்ந்துள்ளன.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu. M - tirupur,இந்தியா
07-ஜூலை-201214:56:12 IST Report Abuse
Babu. M சொன்னால் அசிங்கம் மாவட்ட தலை nagar தூத்துக்குடி. ஆனால் இங்கு இருந்து செல்லும் ரயில் இரண்டு மட்டும் தான். சென்னை கு பகலில் ரயில் இயக்க வேண்டும் எனபது அனைவரின் கோரிக்கை நிறைவேறுமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
c raviganesh - kumbakoanam,இந்தியா
07-ஜூலை-201214:14:53 IST Report Abuse
c raviganesh சாமி நன்று செய்த ஆசாமி வாழ்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
C.Jayabalan - chennai ambathur,இந்தியா
07-ஜூலை-201212:46:49 IST Report Abuse
C.Jayabalan Now that the dindigul-palani section is guage converted, it is high time that southern railway operated the long felt need of many passengers bound for the famous hilltop shrine, Palani from chennai,chingleput,villupuram and other areas.Even the present CM has assured to the voters of tamilnadu during her election campaign speech in 2011 that she would have adequate steps to operate this express train connection between Egmore and palani at convenient times. Once the guage conversion is completed beyond palani and pollachi, onward to palghat, a train service between velankanni and ernakulam via tiruvarur,trichy,dindigul,pollachi,palghat shall be commenced so that pilgrims from kerala will benefit largely.A day time superfast express between madurai and coimbatore shall also be commissioned.If and only proper fund allocation was granted, namakkal-karur section will immensely help trade,cargo,parcel behind passenger network so that tirunelveli /tuticorin and salem express train service is feasible.Moreover, kanyakumari/ tuticorin/rameshwaram to bangalore via tirunelveli,madurai,dindigul,karur,namakkal,salem,hosur will benefit several lakhs of passengers between these regions.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
C.Jayabalan - chennai ambathur,இந்தியா
07-ஜூலை-201212:24:23 IST Report Abuse
C.Jayabalan A long felt desire and need of southern tamilnadu passengers has been answered. Like this,yet another long felt need of chennai based passengers is running a jan shatabdhi exps between Egmore and madurai,preferably to start from chennai at 6.00a.m and reaching madurai by 1.15pm, similarly, departing from madurai at 2.00pm, arriving at Egmore by 9.30pm. This train will definitely facilitate many passengers bound for Villupuram,ulundurpet and trichy in the day time besides many passengers from madurai, didndigul and Trichy in the return trip as the timing is quite convenient for a day/evening time arrival at chennai to board north bound super fast express trains from Central station. Another express needed very badly is to operate a similar jan shatabdhi express train from Kumbakonam to Egmore , departing from kumbakonam at 6.30am via mayiladuthurai,chidambaram,villupuram arriving at egmore by 1.30pm, in the return trip, leaving egmore at 2.30pm, reaching at Kumbakonam by 9.15pm.In the same plan, a day time express between trichy-bangalore via karur-namakkal,salem once the namakkal -karur route is d by railway authorities. This Trichy-bangalore express shall be operated like Chennai-Bangalore brindhavan express, leaving in the morning and returning by night ,with chair car seats,preferably same day return to base type operation. C.Balasubramanian.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Unmai Vilambi - Ambasamudram,இந்தியா
07-ஜூலை-201211:49:15 IST Report Abuse
Unmai Vilambi அப்போ அம்பாசமுத்திரத்துக்கு ரயில் அடுத்த வருஷந்தானா சரியாப் போச்சு. இது உங்களுக்கே நியாயமாப்படலியா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
alex - trivandrum,இந்தியா
07-ஜூலை-201210:32:25 IST Report Abuse
alex நல்லது. ஆனால் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்ல புதிய ரயில் கேட்டு கேட்டு நாங்கள் அலுத்து போய் விட்டோம். ஒரு டிக்கெட் கிடைப்பதற்கே படாத பாடு படுகிறோம். இதில் ஒரு குடும்பம் செல்ல எப்படி முடியும் ? முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 12 மணி நேரம் மூச்சு திணறித்தான் செல்கின்றனர். தயவு கூர்ந்து தென்னக ரயில்வே, மதுரை டிவிசனும் பரணி எக்ஸ்பிரஸ் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அது கரூர், சேலம் வழியாக இருந்தாலும் சரி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
raja gopal - bangalore,இந்தியா
07-ஜூலை-201210:20:33 IST Report Abuse
raja gopal அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் என்பதை விடுத்தது தேதியை ரயில்வே நிவாகம் அறிவிக்கட்டும். எத்தனையோ ரயில்கள் அறிவிப்போடு நிற்கின்றன.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Praveen Kumar S - bangalore,இந்தியா
07-ஜூலை-201208:58:10 IST Report Abuse
Praveen Kumar S இந்த ரயில் உட்காரும் வசதி கொண்ட பகல் நேர ரயில். எனவே திருச்சி திருநெல்வேலி இடையேயான 317 கி மீ க்கு முன்பதிவிற்கு 91 ரூபாய் மட்டுமே கட்டணம். முன்பதிவில்லாத இருக்கை வெறும் 76 ருபாய் மட்டுமே . மேலும் ரயில்வே அறிவிப்பின் படி இந்த ரயிலில் 15 பெட்டிகள் மட்டுமே இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Jack1982 - Hongkong,சீனா
07-ஜூலை-201207:53:01 IST Report Abuse
Jack1982 @Innocent. You guys never happy with new trains those oprate between ORGIN & DESTANATION. Always need extenction to NCJ/CAPE/MAS or MS. Already have lots of trains from NCJ/CAPE to MS/MAS still neeed more?????...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஜூலை-201207:00:26 IST Report Abuse
g.s,rajan More intercity expresses should be introduced with in Tamilnadu.More short distance express trains with fully unreserved compartments must be operated by posting enough railway conductors,in order to avoid heavy rush in unreserved compartments.The railway conductors can also give tickets at the train itself and also check for ticketless travel.Will the railways kindly look in to this? g.s.rajan,chennai.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.