இலங்கை வீரர்களுக்கு நாட்டில் எப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது: ஜெ., திட்டவட்டம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""இலங்கை வீரர்களுக்கு, நாட்டில் எப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது,'' என, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ""இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெற வேண்டும். அதுவரை, பிற நாடுகளுடன் இணைந்து, இலங்கை மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது, மவுனியாக உள்ளது மத்திய அரசு. ஆனால், தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் ஓன்பது விமானப் படை வீரர்களுக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஏற்கனவே கண்டனத்தை தெரிவித்து இருந்தேன். தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், இதுபோன்ற செயல்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தேன். தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளன. 'தமிழர்களுக்காகவே பாடுபடுகிறேன் எனக் கூறும் தலைவர், அந்த செய்தி உண்மையானால், அது கண்டிக்கத் தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக திருப்பி அனுப்பவதே சரியாக இருக்கும்' என, பட்டும் படாமல் கூறியிருந்தார். எனினும், இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை, ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தாம்பரத்திலிருந்த ஒன்பது இலங்கை வீரர்களை, பெங்களூருவில் உள்ள, எலகங்கா விமான படைத் தளத்தில், பயிற்சி அளிக்க, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதன்மூலம், தமிழர்களுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஐ.நா., சபை மூலம், "போர்க் குற்றவாளிகள்' என அறிவித்து, இலங்கை அரசு மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, தமிழக மக்களின் விருப்பம். இந்நிலையில், சென்னையில், இலங்கை வீரர்களுக்கு, பயிற்சி அளிப்பதை தவிர்த்து, பெங்களூருவில் பயிற்சி அளிப்பதை, தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். இலங்கை வீரர்கள் எவருக்கும், இந்திய மண்ணில், பயிற்சி அளிக்கக் கூடாது. அவர்களை, உடனடியாக நாட்டை விட்டு திருப்பி அனுப்ப வேண்டும் என, மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (52)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shabaaz - Vellore,இந்தியா
07-ஜூலை-201214:48:47 IST Report Abuse
Shabaaz இலங்கை படையினருக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது. போர் என்றால் மக்கள் சாவது என்பது தவிர்க்க முடியாதது என்று சொன்ன ஜெயாவுக்கு இந்திய மண்ணில் தமிழ்நாட்டை ஆளும் அதிகாரம் கிடையாது. நீலி கண்ணீர் வடிக்கும் ஜெயாவுக்கு காலம் ஒரு நாள் பதில் சொல்லும். .
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
07-ஜூலை-201213:36:45 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran தமிழர்களின் தலைவர் என்று ஊரை ஏமாற்றி உலையில் போட்டுகொண்டிருந்த மஞ்சத்துண்டு இதற்கு என்ன செய்யபோகிறார் ? தன் வினை தன்னை சுடும். மத்திய அரசிலிருந்து விலகினால் ரெண்டு பக்கமும் அடி.
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
07-ஜூலை-201213:33:56 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் இந்திய மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளவில்லை. அல்லது மதிக்கவில்லை. இல்லை என்றால் மும்பை வீதிகளில் இந்திய மக்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று தெரிந்த பின்னும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.இந்த வெக்கம் கெட்ட மத்திய அரசு இருக்கும்வரை கொள்ளையடித்து நம் நாட்டை அந்நியரிடம் தாரை வார்க்க தயங்க மாட்டார்கள். இதில் ராஜதந்திரம் என்ற பேச்சு வேறு. அதாவது இலங்கையை இந்தியா பகைத்துகொண்டால் சீனா அங்கு நுழைந்துவிடும் என்பதால் இந்தியா இலங்கையை அரவணைத்து செல்லவேண்டும் என்று சொல்லுகிறார்கள். இப்படியே தமிழர்களை இவர்கள் அவமதித்து கொண்டிருந்தால் இந்தியா தமிழகத்தை இழக்க நேரிடும் என்பதே உண்மை..இந்த மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு துண்டாடபடுகிறது என்பதே உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Thajudeen - London,யுனைடெட் கிங்டம்
07-ஜூலை-201213:06:36 IST Report Abuse
Thajudeen ஜெயா அரசியலுக்காக ஆட்டம் போடாதே, இந்திய நாடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா. உனக்கு யார் எழுதி கொடுத்தது இந்த அறிக்கையை.
Rate this:
Share this comment
Cancel
shewak - Jaffna,இலங்கை
07-ஜூலை-201212:55:01 IST Report Abuse
shewak தமிழ் நாட்டு தன்மான சின்னம்களா ......உங்களின் கதையும் நண்டினுடைய கதையும் ஒண்ணுதான் ....முதல்ல உங்க இந்தியாவுல ...எந்த ஒரு மாநிலமும் ஒற்றுமையா இருக்கா ......உங்களுக்கு முதல்ல கேரளாவுல இருந்தும் கர்நாடகா வில இருந்தும் குடிக்க தண்ணி கொடுவந்து உங்க நாடு ஒருமைப்பாட காடுங்க சொம்புகளா .....இலங்கையில் தமிழன் நிம்மதியாகவே வாழ்கிறான்...வைகோ ...திருமா ....சீமான் போன்றவர்களின் கூக்குரல் இங்கு வாழும் தமிழர்களை மேலும் நெருக்கடிக்கு உண்டு பண்ணும்...... சொம்புகளா இவ்வலவு பீத்திக்கொள்ளும் நீங்கள் ...உங்க தமிழ் நாட்டிலே உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு ...என்னத்த செஞ்சிங்க.....முதல்ல உங்கட அசிங்கத்த கழுவுங்க. அப்புறம் மத்தவனோட அசிங்கத்த பத்தி யோசிக்கலாம்.......கூத்தாடிகள நம் தலைவர்களாகிய நீங்களும் கூத்தாடிகள் தானே.......தயவுசெஞ்சு இத புப்ளிஷ் பண்ணுங்க.....இலங்கையில் இருந்து ஒரு தமிழன்......
Rate this:
Share this comment
Cancel
Anand - Chennai,இந்தியா
07-ஜூலை-201212:47:25 IST Report Abuse
Anand மேனன் கள் இருக்கும் வரை பிரச்சனைதான்.
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Chennai,இந்தியா
07-ஜூலை-201212:42:09 IST Report Abuse
sivakumar பாட்டி, வாயை மூடிகிட்டு கொட நாட்டில் தூங்கு. ஆக வேண்டிய காரியத்தை பாரு. இவங்க பெங்களூர் கோர்டுக்கு நீ போகும்போது உன்னை தாக்குவாங்களா? நீங்கதான் கோர்டுக்கு போக மாட்டீங்களே. பயம் வேண்டாம். இரண்டு நாடுகள் உறவை கெடுக்காதே.
Rate this:
Share this comment
Cancel
Maheswaran.V.P - Warri ,நைஜீரியா
07-ஜூலை-201209:54:08 IST Report Abuse
Maheswaran.V.P உலகின் எந்த மூலையிலும் இலங்கை வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
07-ஜூலை-201209:48:00 IST Report Abuse
P. Kannan நமது பாதுகாப்பு துறை தானே இலங்கை போருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியது. இங்கு பயிற்சி அளிப்பதால் பெரிய மாற்றம் ஒன்றும் வந்து விடாது. அரசியல் வாதிகளின் அறிக்கை போர் மக்களுக்கு ஒரு பொழுது போக்கு. மக்கள் யாரும் இதை பற்றி கவலை படவில்லை. தமிழக மீனவர்கள் கட்சத்தீவை தாண்டிப்போய் அவர்களது மீனை திருடாமல் இருந்தால் சரி. நான் சொல்லுறது தப்புன்னா இலங்கைக்கு தாரைவார்த்த் கச்சத்தீவை திரும்ப பெறவேண்டிய நடவடிக்கையை எடுங்கப்பு.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
07-ஜூலை-201209:36:00 IST Report Abuse
krishna சேகரன் கிட்ட கருணாநிதி சொல்லி இருக்கார், சிங்கள இராணுவத்தினரை கர்நாடகா அனுப்ப சொல்லி இருக்கேன் என்று. இந்த சேகரனின் கற்பனைக்கு அளவே இல்லை. அம்மையாரின் ஜால்ரா சேகரன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்