திட்டக்குடி:திட்டக்குடியில் கோர்ட் இடமாற்றம் செய்ய உள்ள புதிய இடத்தை கடலூர் மாவட்ட நீதிபதி பார்வையிட்டார்.திட்டக்குடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நடுவர் நீதிமன்றங்கள் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. திட்டக்குடியில் தாலுகா அலுவலகம் புதிதாக கட்டப்பட்டதால் பழைய தாலுகா அலுவலகத்தை கோர்ட் வளாகமாக பயன்பாட்டிற்கு மாற்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று கோர்ட் வளாகமாக மாற்ற மாவட்ட நீதிபதி உத்திராபதி ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து நேற்று அவர் திட்டக்குடியில் உள்ள இடத்தினை பார்வையிட்டு கோர்ட் வளாகத்தினை புதிய இடத்திற்கு விரைந்து மாற்ற உத்தரவிட்டார்.திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஸ்ரீராம், தாசில்தார் மங்களம், துணை தாசில்தார் ராஜா, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்தழகன், செயலர் கருணாநிதி, பொருளாளர் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.