Internet blackout Monday: Check if your PC is infected | பெரும் பாதிப்பு இல்லாமல் முடிந்தது : டி.என்.எஸ்.,சேஞ்சர் ‌வைரஸ் அபாயம் விலகியது| Dinamalar

பெரும் பாதிப்பு இல்லாமல் முடிந்தது : டி.என்.எஸ்.,சேஞ்சர் ‌வைரஸ் அபாயம் விலகியது

Updated : ஜூலை 10, 2012 | Added : ஜூலை 07, 2012 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Internet blackout Monday: Check if your PC is infected, வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வ�

வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் 9 ம்தேதி அம்பேல்தான் என்றனர். ஆனால் எவ்வித பாதிப்‌பும் இல்லாமல் வைரஸ் செயல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் சிறிய அளவிலான கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டது, ஆனால் கடந்த மாதங்களில் ஏற்பட்ட பாதிப்பை விட மிக குறைவாக இருந்தது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். .

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். இன்று 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த

வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
08-ஜூலை-201210:44:55 IST Report Abuse
T.R.Radhakrishnan ஒன்னியும் புரியலை. ignorance is bliss.
Rate this:
Share this comment
Cancel
08-ஜூலை-201206:29:30 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் ஆண்டி வைரஸ்களை விற்பதற்காக அடிக்கடி இதுபோல உதார் விடுறாங்க. டூப்ளிகேட் சாப்ட்வேர் போட்டு பயன்படுத்தறவன்ககூட ஆண்டி வைரஸ் போட்டுடறாங்க பயத்துனாலதான். மத்தபடி தெரியாத வேப்சைட்டுகளிளிருந்து டவுன் லோடு செய்யும் பழக்கமில்லாதவங்களை இந்த வைரஸ் ஒன்றும் செய்யாது
Rate this:
Share this comment
Cancel
anbuthil - novena,சிங்கப்பூர்
08-ஜூலை-201202:47:39 IST Report Abuse
anbuthil இந்த பிரச்னை எல்லாம் என்னை போன்று லினக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு வராது என்று நினைக்கிறன்.மேலும் தகவலை பெற www .anbuthil .com
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-ஜூலை-201201:04:56 IST Report Abuse
Kasimani Baskaran ://www.dcwg.org/ இந்த இணையதளத்தில் சென்றால் எல்லா விவரங்களும் கிடைக்கும். ://www.fbi.gov/scams-safety/computer_protect சொல்லுவது போல செய்தால் இந்த குப்பை எல்லாம் உங்கள் கணினிக்கு வராது.
Rate this:
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
07-ஜூலை-201222:20:39 IST Report Abuse
Krish Technical Details சொல்ல நேரம் கிடைக்கவில்லை. சாரி.. சுருக்கமாக முதல்ல DNS என்பது ஒரு Computer அல்லது ஒரு intelligent router ராக கூட இருக்கலாம். அது செய்யும் வேலை என்னவென்றால், நீங்கள் யாரையும் அவர் வீட்டு அட்ரஸ் வைத்தோ அல்லது அவர்கள் ID Card Number வைத்து அழைப்தில்லை.. அவர்களுக்கு ஒரு பெயர் உண்டு.. அந்த பெயருக்கு என்ன Number / Address என்று தான் நம் மூளையில் பதியும். அது தான் DNS.. நமக்கு தெரிந்தது www.dinamalar.com என்ற முகவரி அவ்வளவுதான்.. ஆனால் அதன் பின்னால் இருக்கும் IP Address நாம் ஞாபகம் வைக்க தேவையில்லை, அந்த கடினத்தை, இந்த DNS Servers எடுத்துகொள்ளும். அப்போ, உங்கள் URL Resolving அதாவது internet website name to IP Address மாற்றம் செய்ய உங்கள் கணினியில், அந்த அந்த Service Provider like AirTel, BSNL, SingTel, StarHub, TATA - இவர்கள் தங்களுகென்று ஒரு Server அல்லது பல Servers நியமித்து அதை DNS சேவை செய்ய எப்போதும் உயிருடன் வைப்பார்கள். அந்த சர்வர் IP Address உங்கள் வீட்டு Router யில் தான் பதிவு செய்யப்படும். Computer யில் பதிவு செய்யும் வாய்ப்பு மிக குறைவு. ஆனால், Computer யில் DNS IP Address Section யில் வீட்டில் உள்ள Router பின்னால் உள்ள கணினியில், Automatic என்று தான் Set ஆகிருக்கும். அதை தான் இந்த malware / virus மாற்றி தங்குளுக்கு லாபம் தர கூடிய சர்வர் க்கு மாற்றிவிடும். இதில் பயப்பட ஒன்றுமில்லை. நல்ல Anti-Virus with internet security உபயோகம் செய்யுங்கள்.. நான் Avira உபயோகம் செய்கிறேன். ஒருவர் தனது கருத்தில் அதை மொக்கை என்று சொன்னார். கொஞ்சம் அதை அவர் நிருபித்தால் நல்லது. அப்படி உங்களுக்கு திடீர் என்று Internet வரவில்லை என்றால், பதட்டம் தேவையில்லை. உங்கள் Computer யில் உள்ள Internet Settings சென்று TCP/IP சென்று DNS Setting பாருங்கள். புதிதாக உங்களுக்கு சில IP Address அந்த Box யில் தெரிந்தால், அதை அழித்து விடுங்கள், Automatic என்று செட் செய்யுங்கள். உடனடியாக ஒரு Virus Scan செய்யுங்கள் . அதுவே போதும் என்று தான் நினைகிறேன். அதிகமாக பயபடவேண்டியது.. AirTel BSNL போன்ற சர்விஸ் ப்ரோவைடர் தான்.. காரணம் அவர்கள் DNS Server யிலும் அடுத்த DNS சர்வர் IP இருக்கும்.. அது கலைந்தால், அந்த சர்விஸ் ப்ரோவைடர் நம்பி இருக்கும் customers பாதிக்க படுவார்கள். அது அவர்கள் பரச்சனை, இந்நேரம் உஷார் ஆகிருப்பர்கள். Nothing to get panic. இதை சொன்ன உடனே Windows பற்றி குறை சொல்ல சில ஜீவன்கள் இங்கு குபீர் என்று தோன்றும்.. அவர்களுக்கு ஒரு விஷயம்.. வீட்டில் உள்ள Router DNS affect ஆச்சுனா, நாம் எதுவும் செய்ய முடியாது.. Factory Reset தான் செய்யணும். அதுக்கு பிறகு தான் கணினி Safety நினைத்து பார்க்க முடியும். Router க்கே ஆப்புனா..recovery நம் நேரத்தை விழுங்கும்
Rate this:
Share this comment
Cancel
Sridhar Kalaibala - Bangalore,இந்தியா
07-ஜூலை-201217:59:35 IST Report Abuse
Sridhar Kalaibala முற்றிலும் தவறான பயமுறுத்தல். இந்த வைரஸால் இன்டர்நெட் வைத்திருபவர்களுக்கு மட்டும் அட்டாக் செய்ய வாய்பிருக்கிறது.. மேலும் DATA திருட வாய்ப்புள்ளது. HARDWARE நாசம் செய்ய வழியே இல்லை. அப்படி அட்டாக் செய்தால் TEM LOWLEVEL FORMAT பண்ணினால் போது மானது. சும்மா எல்லாரையும் பயமுறுத்தாதிங்க சார்.
Rate this:
Share this comment
Cancel
service engineer - Chennai  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூலை-201216:29:52 IST Report Abuse
service engineer அவிரா antivirus ஒரு மொக்க சாஃப்ட்வேர். உங்களுடைய original antivirus software ஐ ஃபுல் அப்டேட்ல வையுங்க. ஏதும் பிரச்சனை வராது,dont worry, be happy .
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-201215:54:23 IST Report Abuse
Ramesh Rayen நன்றி நன்றி நன்றி
Rate this:
Share this comment
Cancel
Oruvan - Toronto,கனடா
07-ஜூலை-201215:47:12 IST Report Abuse
Oruvan இந்தியாவில் 90 சதவிகிதம் சாப்ட்வேர்கள் போலியானதே. license உள்ள OS அல்லது ofice சாப்ட்வேர் கள் மிகவும் குறைவு. வைரஸ் மற்றும் ஹாக்கிங் மிக எளிது. அது போக மக்களுக்கு facebook பைத்தியம் பிடித்திருக்கிறது. அதில் செலவிடும் நேரம் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
udhaya - madurai,இந்தியா
07-ஜூலை-201215:02:15 IST Report Abuse
udhaya கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுகாப்பாக உள்ளது. : இதற்கு என்ன அர்த்தம் புரியவில்லை
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
07-ஜூலை-201217:27:03 IST Report Abuse
K.Sugavanamஅந்த வெப் சைட் இல் லாக் செய்தவுடன் உங்கள் சிஸ்டம் டி என் எஸ் செஞ்சார் மால்வேறினால் பாதிக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்ற அறிவிப்பு இருக்கும். அதற்கு தகுந்தாற்போல அடுத்து என்ன செய்யவேண்டும் என்னும் இன்பர்மேஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். நீங்கள் உங்கள் கணினியில் ஏற்கெனவே தரமான அண்டி வைரஸ் பொருத்தி இருந்தால் அதுவே உங்கள் கணினி பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை அறிவிக்கும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை