Jagadish Shettar will be the new CM of Karnataka, says Gadkari | எடியூரப்பாவின் இடியில் சாய்ந்தார் கவுடா ! கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா !| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (32)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: மாஜி முதல்வர் எடியூரப்பாவின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியாமல் கட்சியின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் பதவியை சதானந்த கவுடா ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை கட்சி தலைவர் நிதின் கட்காரியிடம் கொடுத்தார். இன்றோ அல்லது நாளையோ கவர்னரை சந்தித்து கவுடா ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்.

இது தொடர்பாக பா.ஜ., கூட்டத்தின் ஆலேசானைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., கட்சி தலைவர் கட்காரி; கட்சியின் நலனுக்காகவே கட்சி எடுத்த முடிவின்படி பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், இவரது பணிக்காலத்தில் கவுடா சிறந்த பணியாற்றியதாகவும் கவுடாவை பாராட்டினார், மேலும் ஜெகதீஷ்ஷெட்டர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். பெங்களூரு:கர்நாடக முதல்வரான சதானந்த கவுடாவை மாற்றி விட்டு, புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமனம் செய்ய, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நீண்ட பிடிவாதத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. புது முதல்வராக ஷெட்டர் பதவி ஏற்க உள்ளார்.

தென் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், முதன் முறையாக அமைந்த பா.ஜ., ஆட்சி, கவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக, பா.ஜ., மேலிடம், பல கட்ட ஆலோசனைக்கு பின்னர், கர்நாடக முதல்வரை மாற்ற நேற்று முடிவு செய்தது. இதற்காக டில்லியிலுள்ள, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி வீட்டில் நேற்று நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வரை மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. முதல்வர் சதானந்த கவுடாவை, டில்லி வருமாறு உத்தரவிட்டனர். மேலிடத்தலைவர்களின் அழைப்பையேற்று, நேற்று பகல் 12.30 மணியளவில் முதல்வர் சதானந்த கவுடா டில்லி புறப்பட்டு சென்றார்.


கவுடா நேற்று அளித்த பேட்டி :டில்லியில் நிருபர்களிடம் சதானந்த கவுடா கூறியதாவது:பா.ஜ., மேலிட தலைவர்களின் அழைப்பை ஏற்று டில்லி வந்துள்ளேன். மேலிடம் என்ன முடிவெடுத்தாலும், அதற்கு கட்டுப்படுவேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். என்னால் எந்த தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக, உடனடியாக வந்தேன்.அரசியல் குழப்பத்தால், கர்நாடக மாநிலத்தில் அபிவிருத்தி பணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இவ்விஷயத்தில் மேலிடம்உடனடியாக முடிவெடுக்க வேண்டும். கர்நாடகாவில், 123 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. இதை கருத்தில் கொள்ள வேண்டும்.மேலிடம் பதவியில் நீடிக்க சொன்னால் நீடிக்கிறேன். இல்லையென்றால் மேலிட உத்தரவுபடி நடக்கிறேன் என்றார்.
எதிர்ப்பு: சதானந்த கவுடா மாற்றப்படுவதற்கு, கர்நாடகா ஒக்கலிக சங்க தலைவர் கெஞ்சப்ப கவுடா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ""முதல்வர் சதானந்த கவுடா என்ன தவறு செய்தார். எதற்காக அவரை மாற்ற வேண்டும். மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் முதல்வராகலாம்,'' என்று தெரிவித்தார்.

புதிய முதல்வராகும் ஜெகதீஷ் ஷெட்டர் யார்:கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ள ஜெகதீஷ் ஷெட்டர், 1955ம் ஆண்டு பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கெரூர் என்ற கிராமத்தில் பிறந்தார். வர்த்தகம் மற்றும் சட்டம் பயின்ற இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.ஆரம்பத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளில்

Advertisement

தீவிரமாக செயல்பட்ட இவர், 1990ல் ஹூப்ளி தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 1996ல் மாநில பா.ஜ.க., செயலராக தேர்வு செய்யப்பட்டார். 1999ல் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இவர், 2005ல் மாநில பா.ஜ., தலைவரானார். 2006ல் கர்நாடகாவின் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார்.2008ல், பா.ஜ.,விலிருந்து சபாநாயகராக பொறுப்பேற்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றார். 2009ல் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த இவர், எடியூரப்பா அமைச்சரவையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (32)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா
08-ஜூலை-201216:41:25 IST Report Abuse
Kartheesan பதவி வெறிபிடித்து இப்படி ஆடும் நபர்கள் கடைசியில் நிற்கும் இடம் தெருக்கோடி. எடியூரப்பா, ஏன்பா நீ கொண்டு வந்த ஆள் உன்னை அனுசரித்து போகவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் தொந்தரவு கொடுக்காதே. மீறினால் மக்கள் உனக்கு தொந்தரவு கொடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
innocent - india,இந்தியா
08-ஜூலை-201216:21:28 IST Report Abuse
innocent congress remote soniya, BJP remote Yediyurrappa
Rate this:
Share this comment
Cancel
Ashok Raja - London,யுனைடெட் கிங்டம்
08-ஜூலை-201216:04:19 IST Report Abuse
Ashok Raja தென் இந்தியாவில ஒரு மாநிலத்தில பா.ஜா.க நடத்துகிற நல்ல அரசியல் வைச்சு மற்ற மாநில மக்களையும் கவர்ந்து அதன் மூலம் ஆதாயம் தேடுறத விட்டுட்டு இப்படி சர்கஸ் வித்தை காண்பிக்கிரானுங்க....அடுத்த முறை சங்கு தாண்டியோவ்.
Rate this:
Share this comment
Cancel
Abdul Azees - Trichy/Chennai,இந்தியா
08-ஜூலை-201215:03:56 IST Report Abuse
Abdul Azees எந்த ஷெட்டர் வேண்டாம்கப்பா கர்நாடகவில் பிஜேபி ஷெட்டர இழுத்து மூடுங்கப்பா .. நாடு நல்ல இருக்கும் எடியூரப்பாவால் பெரும் இடையூறப்பா....
Rate this:
Share this comment
Cancel
indian - bangalore,இந்தியா
08-ஜூலை-201212:34:14 IST Report Abuse
indian எதுக்கு இந்த மனங்கேட்ட பொழப்பு ... கொஞ்சமாவது மனுசன்களாக நடந்துக்கோங்க ... உங்களிடம் சிக்கி தவிப்பது இந்த அப்பாவி மக்கள் ........இன்னும் எவ்வளவு ஊழல் பண்ணணுமோ பண்ணுங்க ..... செத்த பிறகு என்ன கொண்டு போவிங்க ..... ? சீ
Rate this:
Share this comment
Srinath - Coimbatore,இந்தியா
08-ஜூலை-201216:22:21 IST Report Abuse
Srinathஏற்கனவே நம்ம நாட்டு அரசியல்வாதிக பலரும், நரகலோகத்துல சுவிஸ் பேங்க் கிளை இருக்குதான்னு தேடிகிட்டு இருக்குறாங்களாம்....
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
08-ஜூலை-201211:58:43 IST Report Abuse
ஆனந்த் இப்போது கட்சி தலைமை முதல் அமைச்சரை மாற்றுகிறது.. வரும் நாட்களில் ஆளும் இந்த கட்சியை கர்நாடக மக்கள் மாற்றுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
jastephen - India,இந்தியா
08-ஜூலை-201210:35:05 IST Report Abuse
jastephen எடியுரப்பா பதவி விலகின போது அவரது ஆதரவாளரான சதானந்த கௌடாவை CM ஆக்க வேண்டும் என்று எடியுரப்பா கேட்டுகொண்டார். அப்போது எடி ஆதரவாளரான சதானந்த கௌடா தலைமையில் ஒரு கோஷ்டி உருவாகியுள்ளது. ஜகதீஷ் தலைமையில் இன்னொரு கோஷ்டி உருவாகும். அப்போது இதே எடியுரப்பா மீண்டும் முதல்வரை மாற்ற வேண்டும் என்பார்
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
08-ஜூலை-201209:47:05 IST Report Abuse
Sundeli Siththar இது ஒரு தற்கொலை முயற்சி... பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திட்ட எடியூரப்பாவே, இன்று அதன் வீழ்ச்சிக்கும் காரணமாகிறார். பாஜக தலைமை அவருக்கு துணை போவது, அந்த கட்சின் பலவீனத்தையே காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Jeyachandran - Chennai,இந்தியா
08-ஜூலை-201209:43:56 IST Report Abuse
Jeyachandran எதை செய்து வெற்றி கண்டு கொண்டார் இந்த ஊழல் மன்னன் எடியுரப்பா?
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
08-ஜூலை-201208:55:50 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் கர்நாடக பா.ஜ தற்போது எடுப்பார் கைப்பிள்ளையாக ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.