நன்கொடைகளை முறைகேடாக பயன்படுத்துகிறார் நித்யானந்தா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு : ""நித்யானந்தா பெறும் நன்கொடை, முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள கால்நடைகளுக்கு, சரியாக உணவு அளிக்காமல் துன்புறுத்துகின்றனர்,'' என்று, "ஸ்பந்தனா' அசோசியேஷன் பொது செயலர் வீணா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக பார் கவுன்சில், கால்நடை பராமரிப்புத் துறை, வருமான வரித்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, இந்து அறநிலையத் துறை ஆகியவற்றுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து, பெங்களூரு பிரஸ் கிளப்பில், "ஸ்பந்தனா' அசோசியேஷன் பொது செயலர் வீணா கூறியதாவது:கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, பல ஆண்டுகள் பணியாற்றிய ரவிநாயக், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராம்நகர் நீதிமன்ற வளாகத்தில், நித்யானந்தாவுடன் சென்றது அதிர்ச்சியளிக்கிறது. நடுநிலையாக பணியாற்ற வேண்டியவர், வழக்கறிஞராக மீண்டும் பணி செய்வது, நியாயத்துக்கு புறம்பானது. எனவே, உறுப்பினர் பதவியிலிருந்து, கர்நாடக பார் கவுன்சில், அவரை விலக்க வேண்டும்.

பரிசோதிக்க வேண்டும்:நித்யானந்தா பீடத்திலுள்ள அனைத்து கால்நடைகளையும் பரிசோதிக்க வேண்டும். சரியான உணவு, மருத்துவ வசதி அளிப்பதில்லை. அனைத்தையும், நெருக்கமாக ஒரே இடத்தில் வைத்திருப்பது பற்றி விசாரணை நடத்தி, அனைத்து கால்நடைகளையும், கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், அரசு கொண்டு வர வேண்டும்.பொது மக்களிடமிருந்து, ஏராளமான நன்கொடையை, நித்யானந்தா பெற்று வருகிறார். இப்பணத்தை, தன் சொந்த செலவுக்கு பயன்படுத்துகின்றார். நன்கொடை யாரிடமிருந்து வருகிறது, எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து, வருமான வரி துறை ஆய்வு செய்ய வேண்டும். நித்யானந்தா பெயரில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதற்கான அனைத்து ஆவணங்களும், என்னிடம் உள்ளன. இந்த நிறுவனங்கள் குறித்து, வருமான வரித்துறை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இந்நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளதால், வரும் பணத்தை டாலராக பெறுகின்றனர். அவரது வங்கி கணக்குகளை சோதனையிட வேண்டும். நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கும் பணத்தை, தன் சொந்த செலவுக்காக பயன்படுத்துவது, வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து விசாரிக்க வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல்:பிடதி ஆசிரமத்தில், பக்தர்கள் என்ற பெயரில், ஏராளமான பெண்கள், குழந்தைகளை அடைத்து, ஒப்பந்தம் என்ற பெயரில், பெண்களிடம் கையெழுத்து வாங்கி, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நடக்கிறது. நமது நாட்டு சட்டப்படி, இது போன்ற ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. 18 வயதுக்குட்பட்ட பெண்கள், குழந்தைகள், மாந்திரீக செயல்பாடு பரிசோதனைக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.ஆபாச வழிபாடுகளில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், உடல் ரீதியாகவும், மன அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கொடூரங்கள் குறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறையினர் தலையிட்டு, நித்யானந்தா ஆசிரமத்தில் உடனடியாக சோதனையிட வேண்டும்.

பக்தர்களை ஏமாற்றுகிறார்:கோவில்கள் பெயரில் வசூலிக்கும் நன்கொடைகளை, நித்யானந்தா தவறாக பயன்படுத்துகிறார். ஆசிரமத்தின் பொது நன்கொடை, அவர் நடத்தும் முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களை ஏமாற்றி முக்தி அளிப்பதாகவும், துறவற வாழ்க்கையில் ஞானமளிப்பதாகவும் கூறி ஏமாற்றுகிறார். பெண் பக்தர்கள், ஆசிரம ஊழியர்களை தவறாக பயன்படுத்துகிறார். நித்யானந்தா ஆசிரமத்தில் நுழையும் பெண்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர். இது குறித்து, இந்து அறநிலையத் துறை கமிஷனர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வீணா கூறினார்.

5 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா நித்யானந்தா?""நித்யானந்தா, ஆசிரமம் நடத்துகிறாரா அல்லது வர்த்தகம் நடத்துகிறாரா? அவர் உண்மையான சன்னியாசியா என்பது உட்பட ஐந்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்,'' என்று, ஸ்பந்தனா அசோசியேஷன் வீணா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு பிரஸ் கிளப்பில், அவர் கூறியதாவது:
*நித்யானந்தா ஆசிரமம் நடத்துகிறாரா அல்லது வர்த்தகம் நடத்துகிறாரா?
*நீங்கள் (நித்யானந்தா) ஐந்து வயது குழந்தை என அறிவித்தீர்களா?
*உண்மையான சன்னியாசி அல்லது குரு என்றால் காவிஉடை அணிந்து, சாதாரண, உண்மையான வாழ்க்கை வாழ வேண்டும். ஆனால், விதவிதமான ஆடைகள், நகைகள் அணிவது ஏன்? உண்மையான சுவாமிகளா?
*மருத்துவப் பரிசோதனைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும், அதை வாங்காமல் தப்பிக்க நினைப்பது ஏன்?
*தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில், "சிடி'யில் இருப்பது போலி மற்றும் மார்பிங் செய்யப்பட்டது என்று செய்தித் துறையினரிடம் தெரிவித்துள்ளீர்கள். ஆனால், இந்தியாவிலுள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், "சிடி' உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. நமது நாட்டின் ஆய்வு தவறா?
மேற்கண்ட ஐந்து கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க வேண்டும்.

ஸ்பந்தனாஅசோசியேஷன் பணி?பெங்களூரு, பசவேஸ்வர நகர் காயத்ரி லே-அவுட்டைச் சேர்ந்த, "ஸ்பந்தனா அசோசியேஷன்' ஒன்பது ஆண்டுகளாக பல அமைப்புகளின் முறைகேடுகளுக்கு எதிராக போராடி வருகிறது."நித்யானந்தா ஆர்கனைசேஷன்' போலியானது என்று அமெரிக்கா கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளிப்படுத்த, "ஸ்பந்தனா அசோசியேஷன்' பொதுச் செயலர் வீணா முடிவு செய்தார்.இதையடுத்து, நித்யானந்தாவுக்கு எதிராக போராடி வரும் லெனின் கருப்பனுடன் கைகோர்த்தார். இருவரும் பெங்களூரு பிரஸ் கிளப்பில் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem Jey - Bangalore,இந்தியா
08-ஜூலை-201212:06:36 IST Report Abuse
Prem Jey ஒரே ஜெலஸ் மச்சி ஒரே ஜெலஸ்....
Rate this:
Share this comment
Cancel
08-ஜூலை-201205:22:45 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க கிணறு வெட்டுனா பூதம் தான் கிளம்பும்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா இங்கே என்னடான்னா பூதம், பிசாசு, முனி, காட்டேரி, கொள்ளி வாய் பிசாசு இப்படி ஏகப்பட்ட துஷ்ட தேவதைகள் கிளம்பும்னு யாரும் எதிர்பார்க்கவில்லை. இவனுக்கு அவ்வளவு சீக்கிரம் தண்டனை கிடைக்க கூடாது. அணு அணுவாக எப்போ என்ன வருமோ, எந்த நேரத்திலே போலீஸ், கோர்ட் கேசுன்னு, அலைய வேண்டி வருமோன்னு எந்த நிமசமும் பயந்துக்கிட்டே இருக்கணும், நிம்மதியான சாப்பாடு கிடைக்க கூடாது. நிம்மதியான தூக்கம் வரக்கூடாது. ராத்திரில எந்த நேரத்திலையும் போலீஸ் விசாரணை என்ற பேருல அர்ரெஸ்ட் பண்ணி கூட்டுகிட்டு போகணும்.
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
08-ஜூலை-201202:47:13 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை நாம எல்லாம் பண்றததானே நித்தியானந்தாவும் பண்ணுனார் , இதுல என்ன தப்பு ?
Rate this:
Share this comment
Ananthanarayanan Sankaran - chennai,இந்தியா
08-ஜூலை-201207:32:50 IST Report Abuse
Ananthanarayanan SankaranMr. குஞ்சுமணி, நாம் வெகுஜன மக்களாக இருந்து செய்யும் செயல்களை அவர் காவி உடை தரித்து செய்கிறார். அது தான் தவறு இந்த தவறுக்காக உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் ஆயிசு முழுவதும் சிறைவாசமே மிஞ்சும்...
Rate this:
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
08-ஜூலை-201207:43:29 IST Report Abuse
NavaMayamஆனா அவருக்கு கிடைத்தது எல்லாம் நமக்கு கிடைச்சு செய்ய முடியலேன்ன ஆதங்கம்தான்.......
Rate this:
Share this comment
Cancel
nagainalluran - Salem,இந்தியா
08-ஜூலை-201202:14:23 IST Report Abuse
nagainalluran எந்த பக்கத்துலேருந்து யார் எப்படி பந்து போட்டாலும் இவன் சிக்ஸர் அடிசுடரன்யா. கில்லாடி பாட்ஸ் மான். பந்து விளையாட்டில் எக்ஸ்பெர்ட். இவனை உங்களால் அவுட் ஆகவே முடியாது.
Rate this:
Share this comment
Panchu Mani - Chennai,இந்தியா
08-ஜூலை-201208:17:38 IST Report Abuse
Panchu Maniவிக்கெட் கீப்பர் பந்து போட்டா அவுட் ஆக்கலாம்......
Rate this:
Share this comment
Cancel
Thina Thee - Kualalumpur,மலேஷியா
08-ஜூலை-201202:08:19 IST Report Abuse
Thina Thee She is the pinaami of Ediyoorappa running trust ,associations,agencies in different locations in Bangalore,once black mailed a person in connection with a case priyanka 2010case still ping.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
08-ஜூலை-201201:22:41 IST Report Abuse
Thangairaja ஒரு மனுஷனுக்கு கெட்ட நேரம் வந்து விட்டால் என்னவெல்லாம் புகார் சொல்ல வருகிறார்கள். இவர்களெல்லாம் இவ்வளவு காலம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பார்கள் போலும்.
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
08-ஜூலை-201200:59:50 IST Report Abuse
Rss இவனுக்கு துபாய் சவுதி போன்ற அரபு நாட்டுல கொடுக்குற தண்டணைய கொடுத்தாதான் அடங்குவான்.
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
08-ஜூலை-201206:29:11 IST Report Abuse
K.Sugavanamஇருந்தா தானே தண்டனை....ஹீ..ஹீ.....
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
08-ஜூலை-201200:58:37 IST Report Abuse
Rss நா அன்னைக்கே சொன்ன இந்த போலி சாமிய சுட்டுகொல்லனும் னு ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்