கடந்த 2011 ஆம் ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரிகளுக்கான, தேசிய வேலைவாய்ப்பு
அறிக்கை, மத்திய தொலைத் தொடர்பு துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பி.டெக்., படிப்போரில், 8 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வேலை
பெறத் தகுதியானவர்கள் என, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
55 ஆயிரம் பேரிடம் ஆய்வு:ஐ.டி., நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு
செய்யும் தனியார் மென்பொருள் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, நாடு முழுவதும்
உள்ள, 250 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 2011 ஆம் ஆண்டு
தொழில்நுட்ப பட்டம் பெற்ற, 55 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு நடத்தியது.இந்த
ஆய்வில், மாணவர்களின் தொழில்சார்ந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் மென்திறன்
ஆகியவை சோதிக்கப்பட்டன.இவற்றை கண்டறிய, மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமை,
கணக்கிடும் திறமை, தர்க்கம் சார்ந்த சிந்தனை மற்றும் கணிப்பொறி புரோகிராம்
எழுதும் திறமை ஆகியவை அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
மென்திறன்கள்:பெரிய மற்றும் நடுத்தர ஐ.டி., நிறுவனங்கள் வளாக நேர்காணலில்,
மென்திறன் மற்றும் தொழில்நுட்ப திறன்களில், பயிற்சி அளிக்க தகுதியான
மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த
பயிற்சி குறைந்தது, 3 முதல் 6 மாதங்கள் வரை நடக்கும். அதன் பின்னர், தான்
அவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இந்த ஆய்வில், ஐ.டி., முடித்து
திரும்பும் மாணவர்களில், 17.5 சதவீத மாணவர்கள் மட்டுமே பயிற்சி அளிக்கும்
அளவிற்கு தொழில்நுட்பத் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 46
சதவீத மாணவர்கள் தொழில்நுட்ப அறிவு குறைவு காரணமாகவும், 54 சதவீத மாணவர்கள்
மென்திறன் குறைவு காரணமாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டவை:டில்லியில் படித்த மாணவர்களில், 40 சதவீதம்
பேருக்கும் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் படித்தவர்களில், 35
சதவீதம் பேருக்கு இரண்டாவது மூன்றாவது இடங்களிலும் உள்ளனர். கல்லூரிகளின்
எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு, பொறியியல் கல்வி தரம் உயரவில்லை.
தமிழ்நாட்டில்... : தமிழ்நாட்டில், 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில்,
1.50 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டு தோறும் படிப்பை முடித்து வெளியே
வருகின்றன.
தமிழ்நாட்டில் படித்தவர்களில், 10 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஐ.டி.,
நிறுவனங்களில் பணி பெறக்கூடிய திறமை உள்ளதாக ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் திறனில் தமிழகம், 16வது இடத்தில் அதாவது
கடைசியில் உள்ளது.ஆறு முக்கிய மெட்ரோ நகரங்களில், சென்னை மற்றும் புற
நகரில் உள்ள மாணவர்கள் தான் கடைசி இடத்தில் உள்ளனர்.
சென்னை தான் கடைசி:மெட்ரோ நகரங்களில் டில்லியில் இருந்து ஐ.டி., படித்து
வரும், 39.78 சதவீத மாணவர்களிடம் ஐ.டி., கம்பெனிகளில் பணி பெறுவதற்கான
திறமை உள்ளது. கோல்கட்டா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது
இடத்திலும் உள்ளது. சென்னை, 8.35 சதவீத திறனுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இது குறித்து, பிரபல மனிதவள நிறுவனம் மா பா கன்சல்டன்சி நிறுவன நிர்வாக
இயக்குனர் லதா கூறியதாவது:கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தரம்
குறைந்தது இதற்கு முக்கிய காரணம். கல்லூரி முடித்த மாணவர்கள் பல தனியார்
கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப் படுகின்றனர். பொறியியல் கல்லூரிகளின்
எண்ணிக்கை உயர்ந்து அளவிற்கு, கல்வியின் தரம் உயர்த்தப்படவில்லை.
மாணவர்களிடம் ஐ.டி., துறை குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
எனினும், தென்னிந்தியாவில் ஓரளவு நல்ல நிலையில் தான் ஐ.டி., துறையினர்
உள்ளனர். சேவைப்பணிகளான பி.பி.ஓ., பணிகளில் தான் நாம் பின்தங்கி உள்ளனர்.
இவ்வாறு லதா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ஒரு திறமையான மருத்துவராக இருப்பார். ஆனால் பெரும்பாலான பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் திறமையான பொறியாளராக இருப்பதில்லை. ஆசிரியத் துறைக்கு வந்தவுடன் அவர் ஒரு Typical ஆசிரியராக மாறி விடுகிறார். அவர் அந்தத் துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் Doctorate முடித்தாலும், அவருடைய கல்வி நிபுணத்துவம் கூடுகிறதே தவிர, பொறியியல் துறையின் நடைமுறை தேவைகளை அவர் அறிவதோ அதில் நிபுணத்துவம் பெறுவதோ இல்லை. உதாரணமாக எந்திரவியல் துறையின் துறைத் தலைவராக இருக்கும் ஒரு பேராசிரியருக்கு, அவருடைய மாணவர் ஒரு தொழில் கூடம் அமைக்க விரும்பினால் அவருக்கு வழிகாட்டி நடைமுறைப் படுத்த முடிவதில்லை. ஒரு நரம்பியல் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரை நரம்பியல் தொடர்பாக ஒரு வகுப்பு எடுக்கச் சொன்னால், அவருக்கும் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களுக்கும் ஒரு உடனடி தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் ஒரு பொறியியல் நிறுவனத்தின் G.M. அல்லது M.D. ஐ அவருடைய நிறுவனம் சார்ந்த படைப்புக்கு வகுப்பெடுக்கச் சொன்னால் கூட, அங்கு அவருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அந்த அளவுக்கு கல்லூரியில் போதிக்கும் பாடத்துக்கும் நடைமுறையில் ஒரு பொறியாளர் செய்யும் வேலைக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. உண்மையிலேயே பெரும்பாலான நமது பொறியாளர்கள் பணியிடத்தில் சேர்ந்த பின்தான் உண்மையான பயிற்சி பெறுகிறார்கள். கல்லூரிகள், தொழில் துறை மேதைகளை அழைத்து வகுப்பெடுக்கச் சொல்ல வேண்டும். பொறியியல் துறை ஆசிரியர்கள், அவர் சம்பந்தப் பட்ட துறை நிறுவனங்களுக்கு மற்றும் தொழில் கூடங்களுக்கு சென்று நடைமுறை விஷயங்களை, பிரச்சனைகளை அறிந்து அதனை வகுப்பறைகளில் மாணவர்களுடன் விவாதித்து தீர்வு காண வேண்டும். அந்த practical connection ஏற்பட்டால் மட்டுமே, பொறியியல் பட்டம் முடித்து வரும் மாணவர்கள் ஒரு நிறுவனத்துக்கு தேவையான தொழில் நுட்ப அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள்.
தெருவுக்கு தெரு பொறியியல் கல்லூரிகள் காளான்கள் போல் முளைத்து கிடைகின்றன...IT கம்பெனிகளில் பெரும்பாலோனோர் CSE,IT,ECE,EEE துறைகளில் படித்த மாணவர்கள் தான் அதிக அளவில் வேலைக்கு எடுக்கபடுகின்றனர். தமிழகத்தில் CSE/IT துறைகளில் பயிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம். பல தமிழக மாணவிகள் தாங்கள் எதற்காக இத்துறையை தேர்ந்தெடுத்தோம் ?? எதற்காக படித்தோம் ?? என்று தெரியாமலே நான்கு வருட படிப்பை எப்படியோ அதிக மதிப்பெண்களை குவித்து முடித்து விடுகின்றனர்.தமிழக மாணவர்களின் நிலை படு போசமாக உள்ளது. நான்கு வருட படிப்பை முடித்த பிறகு தான் எதாவது ஒரு பிரபல கம்ப்யூட்டர் Institute -இல் ௨௦௦௦௦ ருபாய் கு மேல் கட்டணம் செலுத்தி குறைந்தது ஒரு ஒரு மாதம் செல்கின்றனர். அவர்கள் இந்த அக்கறையை இரண்டாவது ஆண்டு படிக்கும் போதே காண்பித்து இருந்தால் நிச்சயமாக எதாவது ஒரு நல்ல IT கம்பனிகளில் தேர்வாக முடியும். தமிழகத்தில் பல கல்லூரிகள் பல பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகிறது. அனால் அந்த மாணவர்களின் ஆங்கில திறன், தொழில்நுட்பத் திறன் போன்றவை படு மோசமாகவே உள்ளது. இப்படியே நிலைமை சென்று கொண்டிருந்தால் எப்படி நம் தமிழக மாணவர்கள் சிறந்த வேலைவாய்ப்பை பெறுவர்?? இந்த பிரச்சனைக்கு நமது அரசும், அண்ணா பல்கலை கழகமும் இனைந்து ஒரு தீர்வை தர வேண்டும். மாணவர்கள் அனைவரும் தங்களது நான்கு வருட படிப்பில் வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படித்தால் வெற்றி நிச்சயம்.
பொறியியல் பட்டதாரிகளை ஏன் IT துறையில எடுக்கிறிங்க.என் நண்பனின் மகன் படித்தது என்னவோ சம்பந்தமே இல்லாத மெகானிகல் படிப்பு.ஆனால் செய்கின்ற தொழில் IT துறை.இப்படி சம்பந்தம் இல்லாதவர்களை நேர்முகத்தேர்வு நடத்தினால் அவர்களுக்கு IT துறையை பத்தி என்ன தெரியும்.அப்புறம் அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு கிடையாது சொன்னா எப்படி.
எல்லாம் இடஒதிக்கீடு படுத்தும் பாடு தான்.......பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு பின் கடின வேலையை ஏற்று செயல் பட வேண்டும் என்கிற உண்மை நிலையை முதலில் அவர்கள் அறிந்த கொள்ள வேண்டும்......பல பேர் இது தெரியாமலேயே படித்து விட்டு பின் தங்களால் கடினமாக உழைக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு இலகுவான வேலைய தேர்ந்தெடுகின்றனர்.....விளைவு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையை செய்யாமல் இலகுவான வங்கி,மார்கெடிங் போன்ற வேளைகளில் ஈடுபடுகின்றனர்.......பொறியாளர் என்பவர் மருத்துவரை போல அயராது மற்றும் கடின உழைப்பு கொண்டவராக இருந்தால் மட்டுமே சோபிக்க முடியும்..........மன வலிமை ,உடல் வலிமை,புத்திகூர்மை,எந்த சூழ்நிலையையும் கையாளுதல் போன்ற பக்குவங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்......
இதற்க்கு காரணம் இந்த கைநாட்டு அரசியல்வாதிகள் எல்லாம் பொறியியல் கல்லூரிகள் முதலாளிகள். அவர்களுக்கு படிப்புன்னா அதன் அருமை தெரியுமா. பணம் பண்ணும் வியாபாரக்கூடமாக மாறிவிட்டது. கையில் பணம் இருந்தால் இஞ்சினியரிங் பட்டம் வாங்கி விடலாம் என்ற எண்ணம் நடுத்தர மக்களுக்கு வந்து விட்டது. அறிவை வளர்க்க வேண்டிய வயதில் வேறு வழியில் நமது எண்ணங்கள் போய் விட்டதால் தான் இந்த நிலைமை. சீக்கிரம் நாம் தான் வல்லரசு என்று பனோர் எழுதி வைத்துக்கொண்டு அதன் கீழ் உட்கார வேண்டியது தான்
சேர ஆளில்லாமல் காற்றாடிக்கொண்டிருக்கும் தனியார் (அரசியல்வாதிகள் நடத்தும் ) கல்லூரிகளைக் காப்பாற்றவே இந்தக் கல்விக்கடன் புகுத்தப்பட்டுள்ளது குறைந்த மதிப்பெண் எடுத்து உருப்படாத கல்லூரியில் இடம் வாங்கிய ஒரு ஏழை விவசாயின் மகனுக்கு , நிலத்தை ஆதாரமாக வைத்து வங்கி கல்விக்கடன் வழங்குகின்றது அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காவிடில், கடனை அடைக்க முடியாது. ( 70 % அதுதான் நடக்கிறது) பிறகு வங்கி நிலத்தை ஏலம் விடும். அதனை அந்த கல்லூரி உரிமையாளராகிய அரசியல்வாதியே ஏலத்தில் எடுப்பார். அவருக்கு டபுள் லாபம். ஏழைப் பெற்றோருக்கு? சிந்தியுங்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.