எஸ்.ஐ., தலைக்கு குறி வைத்த இன்ஸ்பெக்டர்: சுக்கு நூறாக நொறுங்கிய "டேபிள் வெயிட்!'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம் : ரவுடிகள், "கழுத்து அறுப்பு' வழக்கில், "ஸ்டேட்மென்ட்' எழுதாத, சிறப்பு எஸ்.ஐ., தலையை குறி வைத்து, இன்ஸ்பெக்டர், "டேபிள் வெயிட்'டை தூக்கி எறிந்த சம்பவம், சேலம் பேர்லண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷனில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்பெக்டரின் நடவடிக்கையால், அங்குள்ள போலீசார், பயத்தில் உறைந்து போயுள்ளனர்.


சேலம் பேர்லண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக, சந்தோஷ்குமார் உள்ளார். ஏற்கனவே, பள்ளப்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது, தடியடி நடத்தியது உள்ளிட்ட புகார்களால், அங்கிருந்து, கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின், சூரமங்கலத்திலும், தொடர்ந்து, பேர்லண்ட்சிலும் நியமிக்கப்பட்டார்.அதே போலீஸ் ஸ்டேஷனில், சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, சிறப்பு எஸ்.ஐ., பணியாற்றி வந்தார். ஜூன் 26ம் தேதி, இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், பழனிச்சாமி தலையை குறிவைத்து, "டேபிள் வெயிட்'டை தூக்கியெறிந்தார். அவர் தலையை குனிந்து கொண்டதால், தலை தப்பியது. அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, மருத்துவ விடுப்பில், வேலையை விட்டு வெளியேறினார். நடந்த சம்பவம் குறித்து, போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், நுண்ணறிவு பிரிவு கமிஷனர் ஆகியோருக்கு, புகார் மனுவை, தபாலில் அனுப்பி உள்ளார்.
கொலை முயற்சி


சிறப்பு எஸ்.ஐ., பழனிச்சாமி கூறியதாவது:சேலத்தைச் சேர்ந்த ரவுடிகள், கோழி பிரகாஷ், ஜீவன் என்ற ஜீவானந்தம். முன்விரோதத்தில், சில ஆண்டுக்கு முன், கோழி பிரகாஷ் மற்றும் அவனுடைய கூட்டாளிகள், ஜீவன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தனர். அந்த சம்பவத்தில், ஜீவன் தப்பிவிட்டார். "கன்டிஷனல் பெயிலில்' வெளியில் வந்த கோழி பிரகாஷ், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திட்டு வந்தார்.கடந்த மாதம், 21ம் தேதி இரவு 7.45 மணியளவில், கோழி பிரகாஷ், அவனுடைய நண்பன் கணேசன் ஆகியோர், கோரிமேடு ஆத்துக்காடு மாந்தோப்பு பகுதியில், மது அருந்திக் கொண்டிருந்தனர். சரக்கு தீர்ந்து விட்டதால், கணேசன் கடைக்கு சென்றார். அப்போது, ஜீவன், அவனுடைய தம்பி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் என, ஆறு பேர், ஒரு வாகனத்தில் வந்தனர். அங்கு தனியாக இருந்த, கோழி பிரகாஷை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தனர். அவர் மயங்கி விழுந்ததால், இறந்து விட்டதாக கருதி தப்பியோடினர்.சரக்கு வாங்கிக் கொண்டு திரும்பிய கணேசன், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை தூக்கிக் கொண்டு வாகனத்தில் வந்தபோது, கோரிமேடு ஆத்துப்பாலத்தில், ஜீவன் தரப்பு நின்று கொண்டிருந்தது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். படுகாயமடைந்த நிலையில் இருந்த கோழி பிரகாஷை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


"ஸ்டேட்மென்ட்' எழுதவில்லை:கடந்த ஜூன் 22ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, சூரமங்கலத்தில் ஜீவனை மட்டும், பேர்லேண்ட்ஸ் போலீசார் கைது செய்தனர். விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் இருந்தார். அன்று இரவே, சேலம் ஜே.எம்.5 மாஜிஸ்திரேட் முன், ஜீவனை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக, "ஸ்டேட்மென்ட்' எழுதிக் கொடுக்க வேண்டும்.அதைத் தொடர்ந்து, போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்ததால், சிறப்பு எஸ்.ஐ.,யாகிய நான், பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டேன். 26ம் தேதி காலை 7.30 மணியளவில், ஸ்டேஷன் பணிக்கு வந்தேன். அப்போது, உள்ளே இருந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், என்னை அழைத்து, எதிரே இருக்கையில் அமர வைத்தார்.


"டேபிள் வெய்ட்'டால் குறி வைத்தார்:அப்போது, "ஸ்டேட்மென்ட் எழுத முடியாதா?' என, கேட்டபடி, டேபிளில் இருந்த கண்ணாடி டேபிள் வெயிட்டை, கையில் வைத்துக்கொண்டு மேலேயும், கீழேயும் தூக்கி எறிந்தபடி மிரட்டலாக பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அவருடைய செயல்பாடு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திடீரென ஆவேசமான இன்ஸ்பெக்டர், தலையை குறிவைத்து தூக்கியெறிந்தார். நான், தலையை குனிய, அங்குள்ள சுவரில், "டேபிள் வெயிட்' பட்டு, சுக்கு நூறாக நொறுங்கியது. வாசலில் நின்றிருந்த சென்ட்ரியும், துப்புரவு பணியாளரான வெள்ளச்சியும், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


விடுப்பில் இருக்கிறேன்:அதன்பின், "நீ ஸ்டேட்மென்ட் எழுதக்கூடாது' என, கூறினார். மாலை 2 மணியளவில், ஐந்து ரோடு பகுதியில் டிராபிக் பணிக்கு அனுப்பி விட்டார். பின், சேலம் மேற்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனரிடம் நடந்த விவரத்தை கூறினேன். அவர், மருத்து விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தினார். 27ம் தேதி முதல் விடுப்பில் இருக்கிறேன். போலீஸ் கமிஷனர் தரப்பில் எந்தவித விசாரணையும், என்னிடம் நடத்தப்படவில்லை. எனக்கு, 450 நாள் மருத்துவ விடுமுறை உள்ளது. நான், ஓய்வு பெற ஐந்து மாதமே உள்ளது. அதனால், என்னுடை பணியை விடுமுறையிலேயே கழித்து விடப் போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdul gafoor shaik - doha,கத்தார்
08-ஜூலை-201209:00:36 IST Report Abuse
abdul gafoor shaik இதில் பழம் பெருச்சாளியான பழனிசாமி பெயரில் தான் சந்தேகம் ஏற்படுகின்றது,தேர்வுபனிக்கு சென்றுவிட்டேன், ஸ்டேட்மென்ட் எழுவில்லை என்பதெலாம் சால்ஜாப்பு, எனக்கு, 450 நாள் மருத்துவ விடுமுறை உள்ளது. நான், ஓய்வு பெற ஐந்து மாதமே உள்ளது. அதனால், என்னுடை பணியை விடுமுறையிலேயே கழித்து விடப் போகிறேன் என்பதேல்லாம் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக.இந்த பழனிச்சாமிக்கு விடுமுறை கொடுக்காமல் பணிநீக்கம் செய்யவேண்டும். இந்த டேபிள் வெயிட்&39 கதையும் ஏதோ திரித்து விட்ட கதைபோல் தான் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-201204:33:38 IST Report Abuse
Matt P தறுதலை அதிகாரிகள் தவறுதலாக நடப்பது இந்தியநாட்டின் தலை எழுத்து..அதிர்ஷ்ட வசமாக மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். ..துரதிஸ்டவசமாக நேரகூடாதது நடந்து அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமாயின் 2 குடும்பங்கள் பாதிக்கபட்டிருக்கும். ..எய்தவ்ருக்கு உரிய தண்டனை அளித்து காவல் துறையின் மாண்பினை காப்பாற்ற வேண்டியது காவல் துறையை கையில் வைத்திருக்கும முதல் அமைச்சரின் கடமை...
Rate this:
Share this comment
maran - bootan,பெனின்
08-ஜூலை-201207:29:30 IST Report Abuse
maranஅந்த அதிகாரி பற்றி தெரியாமல் எழுதாதே அவர் திறமை நல்லவர் என ஏற்கனவே நேறையா செய்திகள் வந்துள்ளன சேலம் பஸ் நிலையத்தை ஒழங்கு படுத்தியவர் தெரிந்து குறை கூறும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்