Who compell to drive worst buses? | ஓட்டை உடைசல் பேருந்துகளை ஓட்ட சொல்வது யார்?விபத்துகளின் பின்னணி குறித்து அதிர்ச்சி தகவல்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (18)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

"அண்ணா மேம்பாலத்தில், பேருந்து கவிழ்ந்த விபத்துக்கு, சரியான பராமரிப்பின்மையே காரணம்' என, தெரிய வந்துள்ளது. அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்தது; வடபழனியில், புதிய பேருந்து டயர் வெடித்து, விபத்துக்குள்ளானது; சென்னை விமான நிலைய மேம்பாலத்தில், பேருந்து மோதியது என, சில நாட்களாக, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள், விபத்துகளில் சிக்கின.
"டப்பா' பேருந்துகள்:மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் சிலர் கூறியதாவது:ஓட்டுனருக்கு தான் பேருந்தில் உள்ள குறைகள், பழுதுகள் தெரியும். அவை பற்றி பணிமனையில் உள்ள, "லாக் ஷீட்' புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும். இக்குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர்ந்து புத்தகத்தில் குறையை எழுத வேண்டும். பேருந்தில், "நட்டு, போல்டு' கழன்று விழுந்தால் கூட இந்த புத்தகத்தில் நாங்கள் அதை பதிவு செய்கிறோம். ஆனால், இதில் பல குறைகள் சரிசெய்யப் படுவதில்லை.இதனால் தான் பல பேருந்துகளில், ஓட்டுனர் இருக்கைகள், வாசல் கதவுகள், இன்ஜின் மேல்பாகம், தற்போது வரும் பேருந்துகளின் தானியங்கி கதவுகள், ஆகியவை கயிறு மூலம் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஆள் பற்றாக்குறை:சென்னையில் இயங்கும் 3,400க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில், "பவர் ஸ்டியரிங்' உள்ளது. ஆனால், "ஸ்டியரிங்' ஒழுங்காக

இயங்க உதவும் "ஏ.டி.எப்., ஆயில்' சரிவர ஊற்றப்படுவதில்லை. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 1,600 தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், 800க்கும் குறைவான ஆட்களே பணியாற்றுகின்றனர்.
தரமற்ற உதிரி பாகங்கள்:பெரும்பாலான உதிரி பாகங்களை அதிகாரிகள், பழைய இரும்புக் கடைகளில் வாங்குகின்றனர். இவை, சில நாட்கள் கூட, சரியாக இயங்காது. ஆனால், தரமான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து ரசீது வாங்கி விடுவர்.மோட்டார் வாகன சட்டப்படி, தரம் வாய்ந்த "டயர்களை' பயன்படுத்த வேண்டும். இந்த "டயர்'கள் 99 சதவீதம்வெடிக்காது. மூன்றாம் ரக "டயர்கள்', "ரீ பில்ட் டயர்கள்' வெடித்து, விபத்துக்கு வழிவகுக்கும். இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், மூன்றாம் ரக "டயர்'களையே அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
எங்களுக்கும் ஆபத்து: மழைக் காலங்களில், ஓட்டுனர் வண்டி ஓட்ட ஏதுவாக, தண்ணீரை விலக்கி விடும் "வைப்பர்' கருவி, 70 சதவீத வண்டிகளில் இயங்குவது கிடையாது. 50 சதவீத பேருந்துகளில், ஓட்டுனர்களின் இருக்கைகளும் பழுதடைந்துள்ளன.இயக்கவே முடியாது என்ற நிலையில் தான் பழுது பார்க்கின்றனர். விபத்துகள் நடந்தால், ஓட்டுனர்கள் மட்டுமின்றி, பேருந்துகளை பராமரிக்காத அதிகாரிகளும், விபத்துகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு ஓட்டுனர்கள்

Advertisement

தெரிவித்தனர்.பணிமனை அதிகாரிகள் சிலரிடம் இது குறித்து கேட்டபோது, ""ஒரு பணிமனைக்கு குறைந்தபட்சம் 200 பேருந்துகள் வீதம் உள்ளன. ஆனால், தொழில்நுட்ப பணியாளர்கள், 10 பேர், என்ற அளவிலேயே பணியில் உள்ளனர். இதனால், உடனுக்குடன் குறைகளை சரிசெய்து கொடுக்க முடிவதில்லை. உதிரி பாகங்கள் பற்றாக்குறையும் உள்ளது.பேருந்துகளை நிறுத்தாமல் இயக்க வேண்டும் என்ற உத்தரவால் எங்களுக்கும் வேறு வழியில்லை,''என்றனர்.
ஓட்டுனர்கள் உரையாடல்:வில்லிவாக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம் நோக்கி, தடம் எண் 27டி மாநகர பேருந்து, நேற்று காலை 11 மணிக்கு, புதுப்பேட்டை சாலையில் சென்ற போது, எதிரே அதே தடம் எண் கொண்ட பேருந்து வந்தது. எதிரே வந்த பேருந்து ஓட்டுனர், வில்லிவாக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம் சென்ற பேருந்தை வழிமறித்து நிறுத்தினார். அப்போது இரு ஓட்டுனர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்:
ஓட்டுனர் 1: ""இன்னாப்பா, இந்த வண்டியில கிளட்ச் சரியில்லயே...
நான் கூட எழுதி வச்சிருந்தேன்... சரி பண்ணிட்டாங்களா?''
ஓட்டுனர் 2: ""அட இல்லண்ணே, அப்படியே தான் இருக்குது.''
ஓட்டுனர் 1: ""பார்த்து போ... இது ஒரு ஏழரைய கூட்டிட போகுது.''
ஓட்டுனர் 2: ""எல்லாம் தலையெழுத்து பிரகாரம் நடக்கட்டும்.''
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Oruvan - Toronto,கனடா
15-ஜூலை-201212:07:48 IST Report Abuse
Oruvan ஒரு ஓட்டுனர் சொல்ல கேட்டது ரிப்பேர் செய்பருக்கும் பேருந்துகளை ஒதிக்கி தருபவர்களுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டுமாம் இல்லையென்றால் ஓட்டை வண்டிதான் மேலும் அரசியல் union பங்கும் உண்டாம் தி முக mechanic இருந்தால் அதிமுக ஓட்டுனருக்கு ஓட்டை வண்டிதான்
Rate this:
Share this comment
Cancel
Abdulkhader.s - chennai,இந்தியா
14-ஜூலை-201218:11:07 IST Report Abuse
Abdulkhader.s இது பொது மக்கள் உயிர் பாதுகாப்பு சமந்தப்பட்ட விஷயம். அரசு உடனே இதில் கவனம் செலுத்தி சரிசெய்ய வேண்டும் சரியான பராமரிப்பின்மையே காரணம் என்றால் நீதிமன்றம் உடனடியாக நிர்வாக இயக்குனரை துறை சார்ந்த நடவடிக்கை உத்தரவு இட வேண்டும் இந்த லட்சணத்தில் கட்டணம் என்ற பெயரில் அரசாங்கமே விரைவு பேருந்து சொகுசு பேருந்து என்ற பெயரில் கட்டணம் 7 ரூபாய் 15 ரூபாய் 20 ரூபாய் 25 ரூபாய் பெரும் கொள்ளை நடத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
11-ஜூலை-201205:34:06 IST Report Abuse
P. Kannan இது பொது மக்கள் உயிர் பாதுகாப்பு சமந்தப்பட்ட விஷயம். அரசு உடனே இதில் கவனம் செலுத்தி சரிசெய்ய வேண்டும். முடியாவிட்டால் சென்னை மாநகர பேருந்தை மட்டுமாவது தனியார் மயமாக்கி நகரமெங்கும் சூப்பர் டீலக்ஸ் பஸ்சை விடலாமே ? நல்ல விஷயங்களுக்கு வெளி நாட்டை பாருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
08-ஜூலை-201221:38:36 IST Report Abuse
Srinath அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கலையவள்ளது கணிப்பொறி மயமாக்குவதே. நகரில் ஓடும் எல்லாப் பணிமனைகளுக்கும், பேருந்துகளுக்கும் அடையாளக் குறியீடு உள்ளது. ஒவ்வொரு பேருந்துக்கும் தேவையான உதிரி பாகங்கள் வாங்கி மாற்றப்படுவதை கணிப்பொறியில் பதிவு செய்யலாம். மேற்கண்ட பேருந்துகளுக்குத் தேவையான அதே உதிரி பாகம் மீண்டும் குறுகிய காலத்தில் மாற்றப்பட வேண்டியிருந்தால், முன்னர் வாங்கிய பொருள் தரக்குறைவான பொருட்கள் என்று சுலபமாக அறிந்து கொள்ளமுடியும். அதேபோல ஒவ்வொரு பேருந்தின் வசூல், டீசல் அளவு மற்றும் பராமரிப்பு ஆகியவை சம்பந்தமான விபரமும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுவதன் மூலம், அவற்றின் பராமரிப்பும் சுலபமாவதுடன் முறைகேடுகளும் பெருமளவு தவிர்க்கப்படுகிறது. முறைகேடுகள் தவிர்க்கப்படுவதன் மூலம் அதிரடி கட்டண உயர்வும் தவிர்க்க முடியும்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201208:23:43 IST Report Abuse
மதுரை விருமாண்டிகணினி வந்து பஸ் ஓட்டப் போகுதா என்ன ?? லஞ்சம் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி, விரவி இருக்கும் போது கணினி மயமாக்கினால், அதை வாங்குவதிலும் ஒரு கமிஷன் பார்த்து விட்டு, அதையும் காயலான்கடையில் போடும்படி ஆக்கி விடுவார்கள்... அரசு ஆஸ்பத்திரிகளில் இல்லாத மெஷின்களா, முதல் வருடத்திற்குப் பிறகு ஏதாவது ஒழுங்காக வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா ? வாங்கும் போதே, எப்படி திருடி விக்கலாம் என்று திட்டம் போட்டுத் தான் வாங்குகிறார்கள்.. அதற்கு கோடிக்கணக்கில் திட்டம் போட்டுத் தருவது தானே ஆளும் கட்சியோட வேலை.....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-201221:31:47 IST Report Abuse
மதுரை விருமாண்டி "மேலிடம்" ஒவ்வொரு துறைக்கும் டார்கெட் போட்டு " கழக நிதி " வசூலிக்கும் போது இதெல்லாம் நடக்கிற வேலையா ?? எல்லாம் ஓட்டுப் போட்ட முட்டாள்களின் தலைவி(தி)ப்படி தான் நடக்கும்..
Rate this:
Share this comment
Cancel
murugesan - Perambalur,இந்தியா
08-ஜூலை-201218:23:03 IST Report Abuse
murugesan முன்னால் முதல்வர் கருணாநிதி தான் ஓட்ட சொன்னார்
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
08-ஜூலை-201214:15:33 IST Report Abuse
Srinath இதற்கெல்லாம் ஒரே வழி, மேற்படி பேருந்துப் பராமரிப்புகள் முழுவதையும் அவுட்சோர்சிங் செய்து, சம்பந்தப்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் கையிலேயே விட்டுவிடுவதே. பொதுவாகவே எந்தவொரு தயாரிப்பை விற்கும் நிறுவனமும் குறிப்பிட்ட காலம் வரை அந்தத் தயாரிப்புக்கான வாரண்டி, கேரண்டி மற்றும் Service Maintenance Contract (AMC) போன்ற உத்தரவாதம் தருவது இயற்கையே. அதேபோல இந்தப் பராமரிப்பு விஷயங்களையும் அந்தந்த நிறுவனத்திடமே விட்டுவிடலாம். மேலும் பெரும்பாலான வண்டிகள் சீக்கிரமே நாசமாவதற்குக் காரணம் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதும் கூட. இவற்றைச் சரி செய்தாலே விடிவுகாலம் கிடைக்கும். கடந்த இரு வாரம் முன்பு சென்னை வந்திருந்தபோது நகரில் ஓடும் வண்டிகளைக் கண்டு பரிதாபப் படவேண்டியிருந்தது. இந்த லட்சணத்தில் கட்டணம் என்ற பெயரில் அரசாங்கமே பெரும் கொள்ளை நடத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
08-ஜூலை-201212:58:54 IST Report Abuse
christ பேசாம நகர் பேருந்துகளை தனியாரிடம் விட்டு விடலாமே. பேருந்து சுத்தமாக இருக்கும் ,பேருந்து நல்ல நிலையில் இருக்கும் ( மற்ற ஊர்களில் உள்ள தனியார் பேருந்துகளை உதரணத்துக்கு பார்க்கலாம் கட்டணம் அரசு பேருந்துகளை விட குறைவாக இருக்கும் )
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
08-ஜூலை-201212:15:00 IST Report Abuse
Natarajan Ramanathan maintenance should be privatized with accountability. no compromise on spare parts quality.
Rate this:
Share this comment
Cancel
Anand GPM - Raslaffan Industrial City,கத்தார்
08-ஜூலை-201212:11:14 IST Report Abuse
Anand GPM போக்குவரத்து அமைச்சர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ? தன்னால் முடிய வில்லை என்றால் பதவிய ராஜினாமா செய்ய வேண்டியது தானே.... வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கொண்டு பந்தா பண்ண தேவை இல்லை..
Rate this:
Share this comment
Jackson Burrow - Chennai,இந்தியா
19-ஜூலை-201200:42:49 IST Report Abuse
Jackson Burrowதன்னால் முடிஞ்ச அளவுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார். லஞ்சம் இனி வாங்கமுடியாது என்ற பட்சத்தில், அவரே பதவிய ராஜினாமா செய்து விடுவார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.