கருத்தை பதிவு செய்ய
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருவதை தொடர்ந்து, தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எட்டு பேர் பலியாகியுள்ள நிலையில், ஆறு மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் பள்ளி மாணவி உட்பட, எட்டு பேர் இறந்துள்ளனர். இது பன்றிக் காய்ச்சல் தான் என்பதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவில்லை என்றாலும், இவர்கள், பன்றிக் காய்ச்சல் வார்டில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நாகர்கோவில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆறு பேருக்கு, மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களது ரத்தம் மற்றும் சளி, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.