மத்திய மந்திரிகள் அறிக்கை தர பிரதமர் கெடு: பொருளாதார தொய்வை மீட்க திடீர் நடவடிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லூதியானா: வளர்ச்சித் திட்டங்களை மூன்று மாதங்களில் நிறைவேற்றும் வகையில், முதல் தடவையாக, மத்திய அமைச்சர்களுக்கு கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், பிரதமர் அலுவலகம் உட்பட, மூன்று நிலையில் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், லூதியானாவுக்கு வந்திருந்த திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இத்தகவலை தெரிவித் தார். பொருளாதார நிலையில் தொய்வு ஏற்பட்டு, நாடு, வளர்ச்சியில் பின் தங்கி வருகிறது என்ற புகார், அதிக அளவில் எழுந்திருக்கிறது. பிரதமர், தன் பொறுப்பில் நிதித்துறையை வைத்துக் கொண்டு, சில பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வளத்தை அதிகப்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, சமீபத்தில் அறிவித்தார். ஆனால், அது எந்த அளவு செயல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. பிரதமரின் பொருளாதார ஆலோசகரான ரங்கராஜனை, பிரபல தொழிலதிபர் சந்தித்து, தங்கள் கருத்துகளையும், அதிருப்திகளையும் தெரிவித்த சமயத்தில், திட்ட ககமிஷன் துணை தலைவர் அலுவாலியா, நேற்று இத்தகவலைத் தெரிவித்தார்.

தாமதம்: மேலும், அவர் கூறியதாவது: நாடு முழுவதும், கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை துவக்குவதற்கு, அமைச்சகங்களிடம் இருந்து அனுமதி கிடைப்பதில், தாமதம் ஏற்படுவதாகவும், அதனால், திட்டங்களை நிறைவேற்றுவதில், முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதாகவும், புகார்


எழுந்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில், பிரச்னைகள் எழுந்துள்ளன. இதைச் சரி செய்வதற்கு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு: வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, காலாண்டு கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து, மின்சாரம், கட்டமைப்பு போன்ற துறைகளுக்கான திட்டங்களில், அதிக கவனம் செலுத்தப்படும். ஒவ்வொரு அமைச்சகமும், தங்களின் துறை சார்ந்த திட்டங்களை, இந்த காலத்திற்குள் நிறைவேற்றுகின்றனவா என, மூன்று நிலைகளில் கண்காணிக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்ட கமிஷன், அமைச்சரவை ஆகியவற்றின் கண்காணிப்புடன், பிரதமர் அலுவலகமும், இந்த பணிகளை ஒட்டுமொத்தமாக கண்காணிக்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களை நிறைவேற்றுவதில், ஏதாவது பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளை அழைத்து, பிரச்னைகளை தீர்க்கும்படி அறிவுறுத்தப்படும். இந்த விஷயத்தில், முக்கிய முடிவெடுப்பதில், பிரதமர் அலுவலகம் ஈடுபடும்.

மோசம்: கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது, மிகவும் மோசமான நிலை. இதில், மேலும் வீழ்ச்சி ஏற்பட்டால், நிலைமை மிகவும் மோசமாகும். ஒன்பது சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது, சாத்தியமற்றது. 6.5 சதவீத வளர்ச்சி என்ற நிலைக்கு, விரைவில் தள்ளப்படலாம். அன்னிய நேரடி முதலீடு, நாட்டை பாதுகாக்காது. உள்நாட்டு முதலீடு தான், பாதுகாக்கும்.

டீசல் மானியம்: டீசலுக்கு அளிக்கப்படும் மானியம் வாபஸ் பெறப்படுமா என கேட்கப்படுகிறது. பெட்ரோல் விலை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவைப் போல், டீசல் விலை தொடர்பாகவும், முடிவு எடுக்கப்பட வேண்டியிருக்கும். மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரை, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, எந்தவித தடையுமின்றி கிடைக்கும். இவ்வாறு, மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - theni,இந்தியா
09-ஜூலை-201205:20:28 IST Report Abuse
sam இனிமேலாவது சோனியா புத்தி படி நடக்காம சொந்த புத்தி படி நடந்தா சரி.
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
09-ஜூலை-201204:49:52 IST Report Abuse
Srinath ரொம்ப விசேஷம். நாளொன்றுக்கு ரூ. 28 ஊதியம் ஈட்டுபவராக இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்களாகக் கருதப்படுவர் என்ற ஒப்புயர்வற்ற சிந்தனை மத்திய அரசிடமே இருக்கும் பட்சத்தில் முதல் மன நல சிகிச்சை தேவைப்படுவது மத்திய அரசுக்கே.
Rate this:
Share this comment
Cancel
shyam - ALLENTOWN PA,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201203:45:31 IST Report Abuse
shyam உங்களுக்கு பதினெட்டு மாதங்கள் தான் கேடு. பிறகு ????
Rate this:
Share this comment
Cancel
Murali - Ettayapuram,இந்தியா
09-ஜூலை-201201:08:44 IST Report Abuse
Murali இந்த அறிக்கை வெறும் உதட்டளவில்தான் இருக்கும்.... செயலில் காட்ட முனைந்தால், இத்தாலிய அம்மணி இந்த மௌன சிங்கை உடனடியாகப் பதவியிலிருந்து தூக்குவது நிச்சயம்... அதற்கு இந்த ஊழல் கூட்டணியின் ஆட்சியில் நடந்துள்ள தில்லுமுல்லுகளே காரணம்....
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
09-ஜூலை-201200:41:15 IST Report Abuse
Thangairaja பெரும் தொழிலதிபர்களை திருப்தி படுத்துவதற்காகவே பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்றால் அது விழலுக்கு இறைத்த நீர் தான். அவர்கள் கொழுக்கவும் வலுக்கவுமே இன்னடவடிக்கை பயன்படும். மாறாக வேலைவாய்ப்பை வளப்படுத்தவும் மனித சக்தியை ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் நடவடிக்கை வேண்டும். நம்நாட்டில் எட்டுமணி நேர வேலையே தொழிலாளர்களுக்கு அதிகமாக தெரிகிறது. நூlறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் கூட சோம்பேறிகளை வளர்க்கத்தான் பயன் படுகிறது. இலவசங்களாலும் இது போன்ற திட்டங்களாலும் வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறது. கூலியும் ஐ டி பணியாளர்களை விட அதிகம் கேட்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bad Man - detroid ,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201200:28:38 IST Report Abuse
Bad Man மத்திய மந்திரிகள் : ஆலோ யாரு மன்மோகன் சிங்கா, அறிக்கை வேண்டுமா யாரு பேசறதுன்னு புரியலையே, நீங்க பிரதமர புரியமாடேகுதே .... ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்