Time magazine dubs Manmohan Singh as 'underachiever'‎ | "மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை': அமெரிக்க பத்திரிகை விமர்சனம்| Dinamalar

"மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை': அமெரிக்க பத்திரிகை விமர்சனம்

Updated : ஜூலை 09, 2012 | Added : ஜூலை 08, 2012 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

நியூயார்க்: பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர்' என, அமெரிக்காவின் பிரபல, "டைம்' பத்திரிகை கடுமையாக விமர்சித்திருக்கிறது.

முக்கியத்துவம்: இந்திய பிரதமராக, தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங்,79, கடந்த மூன்று ஆண்டுகளாக, மவுனமாகத் தான் இருக்கிறார். எதையும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை என, "டைம்' பத்திரிகை, தனது ஆசிய பதிப்பில், மன்மோகன் சிங்கை பற்றி, அட்டைப் பட செய்தியாக வெளியிட்டுள்ளது. பொது வாக, இப்பத்திரிகை வெளியிடும் அட்டைப் படம் தாங்கிய செய்திக்கு, உலக அளவில் அதிக முக்கியத்துவம் உண்டு.

அதில் கூறப்பட்டிருக்கும் விவரம் வருமாறு: சுரங்க ஊழல் போன்றவற்றில், மன்மோகனுக்கு சம்பந்தமுண்டு என, சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலால், ஏற்கனவே மன்மோகன் அரசின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. ஊழல் அமைச்சர்களை, இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் ஆட்சி யில், ரூபாயின் மதிப்பு குறைந்த விட்டது. பண வீக்கம் அதிகரித்துள்ளது.

சந்தேகம்: பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக உள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங், நிதிஅமைச்சர் இலாகாவை கூடுதலாக கவனிக்கிறார். இருப்பினும், இன்றைய சூழ்நிலையில், அவரால் சாதனை படைக்க இயலுமா என்பது, சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவுடன், அதிகாரப் பகிர்வு முறையில், மன்மோகன் சிங் செயல்படுவதால், அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன. டம்மி போல செயல்பட வேண்டிய நிலை உள்ளது. மற்றும் முக்கிய மந்திரிகளை எதிர்த்தும், அவரால் செயல்பட முடியவில்லை. இவர் ஆட்சியில், விலைவாசி உயர்வு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை, வரும் 2014ல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் எதிரொலிக்கும். இப்போது, சற்று விழிப்படைந்து அவர் செயல்பட்டாலும், அது அதிக பலன் தராது. அதிக வளர்ச்சியை எட்ட, தற்போது அவர் கூறும் தகவல்கள், தாமதமான முடிவுகள். இந்தியாவின் நொறுங்கிப் போன பொருளாதாரம், பிரதமருக்கு கவலை தரும் அம்சம். இவ்வாறு, டைம் பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது.

பா.ஜ., புகார்: பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிடுகையில், "டைம் பத்திரிகை சொன்னது போல, மன்மோகன் சிங் சாதனையாளரே இல்லை. அவர் சாதித்ததெல்லாம் ஊழல், மோசமான அரசியல் தான்' என்றார். டைம் பத்திரிகையின் விமர்சனத்தை மறுத்துள்ள, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி குறிப்பிடுகையில், "கடந்த எட்டு ஆண்டு காலமாக, பிரதமராக உள்ள மன்மோகன் சிங், அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தியுள்ளார். அவரது ஆட்சியில், சமூக நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச உறவுகள் பலப்பட்டுள்ளன. எனவே, டைம் பத்திரிகை குறிப்பிட்டுள் ளது, கற்பனையானவை' என்றார்.

லாலு ஆதரவு: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "அன்னா ஹசாரே குழுவினரின் தூண்டுதல் பேரில் தான், இந்த செய்தியை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்கள், பாராட்டுக்குரியவை. அமெரிக்காவின் பொருளாதார நிலையே நிலைகுலைந்துள்ளது. இதுபற்றி, அந்த பத்திரிகை என்ன சொல்கிறது?' என்றார். "நாட்டில் குழப்பதை ஏற்படுத்தியுள்ளார், பிரதமர் மன்மோகன் சிங்' என, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
09-ஜூலை-201207:19:26 IST Report Abuse
ஆரூர் ரங மவுனமாக இருப்பது எத்தனை கஷ்டம் தெரியுமா? அதனை ஆறு ஆண்டா பண்ற இவர் சாதனையலரில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Sivakumar S - singapore,இந்தியா
09-ஜூலை-201207:00:10 IST Report Abuse
Sivakumar S "டைம்" பத்திரிக்கை இந்த கட்டுரையை உங்கள் அரசியல்வாதிகளிடம் கொடுத்து "எடிட்" செய்துதானே வெளியிட்டீர்கள். ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல இது ஜனநாயக நாடு , அனைவருக்கும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் உரிமை கொடுக்கும் நாடு , பத்திரிக்கைகள் தாரளமாக எழுதுகிறது , ஊழல் , தவறு செய்பவர்களையும் எழுதுகிறது , அதனால் தான் தவறு செய்பவர்கள் அனைவரும் அடையாளம் காட்டப்படுகிறார்கள். மக்கள் தெரிந்து கொள்கிறார்கள் , ஆனால் மற்ற நாடுகளில் இது இல்லை. உங்கள் அரசியல் வாதிகள் சாதித்ததை முதலில் சொல்லுங்கள் . நன்றி, சிவா சிங்கப்பூர் .
Rate this:
Share this comment
Cancel
ganes - kl,மலேஷியா
09-ஜூலை-201206:36:29 IST Report Abuse
ganes மன்மோகன் ஒரு பொம்மை இது உலகறிந்த உண்மை .சோனியா +மன்மோகன் =ஊழல்
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
09-ஜூலை-201206:09:28 IST Report Abuse
T.R.Radhakrishnan இதே கருத்தைதான் எங்க ஊரு கண்ணனும், கருமாந்திரப்பட்டி கணேசனும், ஏமாந்தான்குளி ஏகாம்பரமும் சொல்றாங்கோ. (பொதுவாக குப்பன், சுப்பன் என்றுதான் சொல்லுவோம். சும்மா, ஒரு மாறுதலுக்காக. எப்பூடி)
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
09-ஜூலை-201205:52:35 IST Report Abuse
s.maria alphonse pandian உலகமே பொருளாதார சரிவை சந்தித்து... நிலை குலைந்தபோது ..இந்தியா மட்டும் ,தலை நிமிர்ந்து நின்றதற்கு மன்மொஹன்சிங்கே காரணம்....
Rate this:
Share this comment
மஞ்சள் துண்டு - கோபாலபுரம்,இந்தியா
10-ஜூலை-201201:55:46 IST Report Abuse
மஞ்சள் துண்டு  மரியா ரொம்ப சோம்பு அடிக்காதே....சோம்பு ஓட்டை ஆகி ரொம்ப நாளாச்சு.......
Rate this:
Share this comment
Srini Vasan - NewYork,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-201202:44:01 IST Report Abuse
Srini VasanEven now the world economy is down, we failed to utilize the opportunity, that is the fact. Failed to utilize because of corrupted ministers and dont know have broader vision and the Ex Finance minister failed to attract retain foreign investors :)...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201205:48:38 IST Report Abuse
மதுரை விருமாண்டி சிங்கு சும்மா இருந்தாலும், கொண்டைக்குள் நெறைய விஷயம் வைத்திருக்கிறார்... உள்ளூரில் (அமெரிக்காவில்) நோண்டுவதை விட்டு இந்தியாவை நோண்டி என்ன பயன் ?? இவனுங்க பேங்குகள் கிழிஞ்சு நார் நாராத் தொங்குது ... அது எப்ப வெடிக்கப் போகுதோ... QE 3 ன்னு இன்னொரு தபா எல்லா வெள்ளை அரசாங்கங்களும் நோட்டடித்து பேங்குகளுக்கு பணம் கொடுத்து நாசமாப் போகப் போகுது.. அந்த தில்லுமுல்லை பற்றி முன் அட்டையில் போடுவதை விட்டுட்டு அதைப் பத்தி கேள்வி கேட்கும் மன்மோகன் சிங்கை கிண்டலடிக்கும் டைம்ஸ் பத்திரிக்கைக்கு வேறு நல்ல செய்தி கிடைக்கவில்லையா ??
Rate this:
Share this comment
Srini Vasan - NewYork,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-201203:00:33 IST Report Abuse
Srini VasanLike in India, Banks in US are not nationalized. Look at the balance sheet of India nationalized banks, it will be worst if you compare with US banks. Banks in India are doing well, because people have savings tancies. How many non performed assests are seized by Indian nationalized banks, the US bank operation tem is different than Indian nationalized bank operations. US banks are like finance companies in India. Times commented about Mr Manmohan prime minister ss, not his economics ss. All ministers including ex finance ministers works under his supervision, he is the chief of all ministers, he should have advise or guide them, right ? but he fails to do. We have to accept the fact that we failed because of his efficiency in handling his ministers. He can be a good finance minister there is no doubt about it, but definitely not a capable prime minister (...
Rate this:
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
09-ஜூலை-201205:48:16 IST Report Abuse
Krish மௌன ராகம் படத்தில் மன்மோகன் நடித்திருந்தால், அன்றே Times இவரை புகழ்ந்திருக்கும்.. too late.. anyway thanks for this recognition
Rate this:
Share this comment
Cancel
sam - theni,இந்தியா
09-ஜூலை-201205:35:07 IST Report Abuse
sam மன்மோகன் சிங் சோனியாவின் கை பாவையாக செயல்பட்டு தனது சுய மரியாதையை தானே இழந்து விட்டார்.இனிமேல் இவர் தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானதையாவது காப்பாற்ற வேண்டும் என்றால் தனது பதவியை ராஜினாமா செய்து சோனியாவிடமே அப்பதவியை கொடுத்து விட்டு நிதி துறையை மட்டும் கவனித்து கொள்வது தான் இதற்கு ஒரேதீர்வு.
Rate this:
Share this comment
Cancel
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
09-ஜூலை-201204:43:47 IST Report Abuse
Mohd. Rias சோனியாவின் கை பொம்மையாக ஒரு பிரதமர் செயல் பட்டது சாதனை என்று சொல்ல முடியாது. அது இந்திய மக்களுக்கு வேதனை தரும் செயல்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஜூலை-201204:13:38 IST Report Abuse
Kasimani Baskaran நம்மிடம் உண்மைகளை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தைரியம் வேண்டும். Time பத்திரிக்கை நம்மூர் பத்திரிக்கை மாதிரி அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை