புதுடில்லி: ""முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதியுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை வைத்துக் கொண்டு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, மீடியாக்கள் புழுதி வாரி தூற்றுகின்றன,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன்னுடைய வலைப்பூவில் கூறியுள்ளதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதியுள்ள புத்தகத்தில், குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு பின், தான் அங்கு செல்ல விரும்பியதாகவும், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், அதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் எழுதியுள்ளார். இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது, மீடியாக்கள் புழுதி வாரி தூற்றுகின்றன. இந்திய அரசியல் வரலாற்றிலேயே, மோடிக்கு எதிராகத் தான், அதிகமான செய்திகளை மீடியாக்கள் வெளியிட்டதாக நான் நினைக்கிறேன்.
வெளியிடாதது ஏன்? மோடியை விமர்சிப்பதற்காக, அப்துல் கலாமின் புத்தகத்தை பயன்படுத்தும் மீடியாக்கள், அந்த புத்தகத்தில், கலாம், மோடியை பாராட்டியுள்ளதை ஏன் வெளியிடவில்லை? குஜராத்துக்கு சென்றால், நரேந்திர மோடி, தன் வருகையை புறக்கணிப்பார் என, கலாம் நினைத்ததாகவும், ஆனால், அதற்கு பதிலாக, கலாமை, மோடி வரவேற்றதையும், அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததையும், அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். மோடியை பாராட்டி எழுதியதை, மீடியாக்கள் ஏன் வெளியிட மறுக்கின்றன. "இந்த நேரத்தில் நீங்கள் அவசியம் குஜராத்துக்கு செல்ல வேண்டுமா' என, கலாமிடம், வாஜ்பாய் யதார்த்தமாக கேட்டதை, மீடியாக்கள் பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுகின்றன.
பயங்கரவாதம்: தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை, பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், அந்த நாட்டுடனான, இந்தியாவின் உறவு பலப்படும். கடந்த வாரம், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலரை சந்தித்தபோது, அவரிடம் இதை வலியுறுத்தினேன். இவ்வாறு அத்வானி அதில் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.